Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட

Posted: 14 Mar 2017 09:31 AM PDT

ஆபிஸ்பைல்களானவேர்ட்.எக்ஸெல்.எச்டிஎம்எல்.பிடிஎப்.டாக்குமெண்ட்.இமேஜஸ் போன்றவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு சுலபமாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.எம்.பி.கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் மாற்றவிரும்பிய பைலினை தேர்வு செய்யவும்.பின்னர் நீங்கள் உங்களிடம் உள்ள பைலினை எந்த பார்மெட்டுக்கு மாற்றவிரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும்.பிடிஎப் பார்மெட்டாக மாற்றவிரும்பினால் ...

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1

Posted: 14 Mar 2017 07:31 AM PDT

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1 ---அண்ணாமலை சுகுமாரன் சித்தர்கள் என்றாலே இப்போதெல்லாம் பெரும்பாலோரின் மனச் சித்திரிப்பு, உண்மைக்கு மாறான புரிதலுடன் கூடியதாகத்தான் இருக்கிறது. தாடி வைத்து, சுலபத்தில் புரியாமல் பேசினால் அவரைச் சித்தர் என ஒரு பொதுப் பெயர் சூட்டிப் பாராட்டிவிடுவது, இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது. சித்தர்களில் தலை சிறந்த திருமூலர், "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்கிறார். சித்தர்கள் என்போர் அமுதூறும் தமிழில் ...

மலேசிய அரசைப் பின்பற்றுமா தமிழக/இந்திய அரசு.

Posted: 14 Mar 2017 05:44 AM PDT

பொதுமக்கள்  பொய்யான    செய்திகளைக்  கண்டுபிடிக்க    உதவும்    இணையத்தளமொன்றை  மலேசிய   அரசாங்கம்    தொடங்கியுள்ளது. ஒரு  செய்தி   உண்மையானதா,  பொய்யானதா   என்பதைத்    தெரிந்து  கொள்ளும்   ஓர்   இடம்   அது…….sebenarnya பொய்யான   செய்திகள்   நாடெங்கிலும்   பரவிக்  கிடக்கின்றன.   தப்பான    செய்திகள்   வந்துள்ளனவா  என்பதை   இந்த   இணையத்தளத்தின்   உதவியுடன்   தெரிந்து   கொள்ளலாம் என தொலை தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்    சாலே   சைட்   செருவாக்   கூறினார். இது   அரசாங்கத்துக்குச்  சொந்தமான   ...

சூத்திரங்கள் மாறவேண்டாம் !

Posted: 14 Mar 2017 05:28 AM PDT

பாத்திரங்கள் மாறலாம் ; பழுதில்லை ஆனால் சூத்திரங்கள் மாறினால் எல்லாம் சூன்யமே ! கணிதத்தில் மட்டுமல்ல காவியங்களிலும் சூத்திரங்கள் மாறக்கூடாது ! ஒருவனுக்கு ஒருத்தி என்ற சூத்திரம் மாறியதால்தான் சிலம்பு உதயமாயிற்று ! பிறன்மனை நோக்காதே என்ற சூத்திரம் மாறியதால்தான் இராமாயணம் உதயமாயிற்று ! அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற சூத்திரத்தை மறந்தவர்கள்தான் இன்று பரப்பன அக்கிரகாரத்தில் ஊதுவத்திகளை உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . காசுக்கு ஓட்டு என்ற திருமங்கலம் formula ...

காரடையான் நோன்பு அடை !

Posted: 13 Mar 2017 09:37 PM PDT

* வெல்ல அடை செய்யும் முறை* நாங்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி இது. தேவையான பொருட்கள்: வறுத்த பச்சரிசி மாவு 1 கப் காராமணி 1/4 கப் தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது  - அரை கப் ( துருவியும் போடலாம் ) வெல்லம் (பொடித்தது) 1 கப் ஏலக்காய் பொடி  1 டீ ஸ்பூன் தண்ணீர் 2 கப் நோன்பு அடை செய்முறை: காராமணியை நாகு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் ...

இன்று 14.3.2017 காரடையான் நோன்பு !

Posted: 13 Mar 2017 09:26 PM PDT

இன்று  14.3.2017 காரடையான் நோன்பு ! 14.3.2017  4 to 5 pm  (பாம்பு பஞ்சாங்கம் படி)* மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து தயாரிப்பதே காரடை ...

சூத்திரங்கள் மாறட்டும்

Posted: 13 Mar 2017 08:58 PM PDT

பொருத்திருந்து இகழ்தல்
அறிவின்மைதானே
அறிவின்மை நீயே
பொறுமையின் காத்திருப்பில்
நற்குணம் நின்று காப்பாயாக
பிறப்பின் சூத்திரம் தலையெழுத்தாய்
மாற்றுவதுதானே மனிதகுணம்
சூத்திரம் மாற்ற வந்தவன் நீ
நல்லகம் மாறாமல் கொடும்புறம் மாற்றிடு
காத்திருப்பின் நேரங்களில்
சூத்திரங்கள் இனி மாறட்டும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™