Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கோவா குழப்பத்திற்கு 10 காரணங்கள்

Posted: 14 Mar 2017 06:56 AM PDT

பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில், அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்கள் பெற்ற காங்கிரஸ் ஆட்சியை அமைக்க முடியாதது ஏன் என்பதற்கு 10 காரணங்கள் கூறப்படுகின்றன.எம்.எல்.ஏ.,க்களுக்கு கிராக்கி1. கோவா சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 40. பெரும்பான்மை அமைக்க, 21 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. தேர்தலில், காங்கிரசுக்கு, 17, பா.ஜ.,வுக்கு 13 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்து தொங்கு சட்டசபை நிலைமை உருவானது. எனவே, தலா மூன்று எம்.எல்.ஏ.,க்கள் வைத்துள்ள கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்த் கட்சி; மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், தேசியவாத காங்., எம்.எல்.ஏ., ஆகியோருக்கு நல்ல ...

தி.மு.க., வேட்பாளர் இன்று( மார்ச் 15-ல்)அறிவிப்பு : ஸ்டாலின்

Posted: 14 Mar 2017 07:31 AM PDT

சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் இன்று( மார்ச்15-ல்) அறிவிக்கப்படும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

யாரையும் போட்டியாக கருதவில்லை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின் தி.மு.க., வேட்பாளர் இன்று( 15-ம் தேதி)அறிவிக்கப்படும் . தேர்தலில் யாரையும் போட்டியாக கருதாமல் மக்களை சந்திக்க உள்ளோம்.
மக்கள் பாராட்டும் வகையில் செயல்பாடு
சட்டசபையில் மக்களின் பாராட்டு ...

உத்தர பிரதேசத்தின் அடுத்த முதல்வர்... யார்?: பதவியை பிடிக்க பா.ஜ.,வில் கடும் போட்டி

Posted: 14 Mar 2017 09:12 AM PDT

உ.பி., சட்டசபைத் தேர்தலில், சாதனை வெற்றியை பெற்றுள்ள பா.ஜ., புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவி ரமாக ஈடுபட்டுள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்ற, மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் முதல்வராக பதவி வகித்து வந்த, உ.பி.,யில், சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள, 403 இடங்களில், பா.ஜ., 312 தொகுதிகளைக் கைப்பற்றி, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. லோக்சபாவுக்கு, 2019ல், தேர்தல் வரவுள்ள நிலையில், நாட்டிலேயே அதிக, எம்.பி.,க்களை உடைய மாநிலமாக திகழ்வதால், உ.பி.,யின் புதிய முதல்வரை ...

தி.மு.க.,வில் சாமானிய வேட்பாளர்: ஜெ., பாணியில் ஸ்டாலின் முடிவு

Posted: 14 Mar 2017 09:37 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதியில், புதுமுக வேட்பாளரை நிறுத்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட, சிம்லா முத்துச்சோழன், காமராஜர் பேத்தி மயூரி, மருத கணேஷ் உட்பட, 17 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம் நேர்காணல் நடந்தது. அன்றே வேட்பாளர் அறிவிக்கப் படுவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்.
ஆனால், 'தி.மு.க., தலைவர் கருணாநிதி யிடம் ஆலோசித்து, வேட்பாளர் பெயர் அறிவிக் கப்படும்' என, ஸ்டாலின் கூறியிருந்தார்; நேற்றும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படவில்லை. ...

மணிப்பூரிலும் பா.ஜ., ஆட்சி: இன்று பதவியேற்பு

Posted: 14 Mar 2017 09:39 AM PDT

இம்பால்: எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சிகள் ஆதரவு டன், மணிப்பூரிலும், பா.ஜ., ஆட்சி அமைகிறது.

ஆட்சி அமைக்க, கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து, பீரேன் சிங் தலைமையிலான, பா.ஜ., அரசு இன்று பதவியேற்கிறது.
ஐந்து மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில், மணிப்பூரில் உள்ள,60 சட்டசபை தொகுதிகளில்,
காங்., 28 தொகுதிகளிலும், பா.ஜ., 21 தொகுதி களிலும் வென்றன. தனிப் பெரும்பான் மைக்கு தேவையான, 31 இடங் களை, இரு கட்சி களும் பெறவில்லை. மீதமுள்ள, 11 தொகுதிகளில் வென்ற, மற்ற கட்சிகளின் ஆதரவை பெற, பா.ஜ., முயற்சித் ...

கோவா விவகாரத்தில் காங்கிரசுக்கு சுப்ரீம் கோர்ட்... மூக்குடைப்பு!:தடை விதிக்க மறுத்ததால் முதல்வரானார் பரீக்கர் :மணிப்பூரிலும் காங்., முயற்சி தோல்வி; பா.ஜ., ஆட்சி

Posted: 14 Mar 2017 09:42 AM PDT

புதுடில்லி:கோவாவில், பா.ஜ., தலைமையி லான ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், பல் வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்ட சுப்ரீம் கோர்ட்,காங்கிரசின் மூக்கை உடைத்தது. பதவி யேற்புக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்ததால்,திட்டமிட்டப்படி, மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றது.

வடகிழக்கு மாநிலமான, மணிப்பூரிலும் ஆட்சி அமைக்கும், காங்., முயற்சி தோல்வியடைந் தது. அங்கும், பா.ஜ., தலைமையிலான அரசு, இன்று பதவியேற்கிறது.ஐந்து மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில், பா.ஜ., ...

மக்கள் தீர்ப்பை மதிக்கவில்லை : ராகுல் 'பகீர்' குற்றச்சாட்டு

Posted: 14 Mar 2017 09:44 AM PDT

புதுடில்லி: கோவா, மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்களில், மக்கள் அளித்த தீர்ப்பை, பா.ஜ., திருடி விட்டதாகவும், ஜனநாயக மாண்பை சீர்குலைத்து விட்டதாகவும், காங்., துணை தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கு, சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தல்களில், எந்த கட்சிக் கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த மாநிலங்களில், காங்., தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், பிற உதிரிக் கட்சி களின் ஆதரவுடன், பா.ஜ., ஆட்சி அமைக்கிறது.
இதுகுறித்து, டில்லியில், காங்., துணைதலைவர்
ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: கோவா, ...

டில்லியில் இன்று நசீம் ஜைதியை சந்திக்கிறார் பன்னீர்: பொது செயலர் விவகாரத்தில் இறுதி விசாரணை

Posted: 14 Mar 2017 09:47 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதியில், நாளை மனு தாக்கல் துவங்க உள்ளதால், அ.தி.மு.க., பொதுச் செயல ராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்பதை, விரைவாக அறிவிக்கும்படி, தலைமை தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து வலியுறுத்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், இன்று டில்லி செல்கிறார்.

அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, தேர்தல் நடத்தி, கட்சி உறுப்பினர்களால், பொது செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், சசிகலா அவ்வாறு தேர்வு செய்யப்படவில்லை. ஐந்து ஆண்டுகள்மேலும், பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுபவர், கட்சியில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அந்த ...

ஜெ., மரண சர்ச்சையில் சி.பி.ஐ., விசாரணை : லோக்சபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்

Posted: 14 Mar 2017 09:47 AM PDT

புதுடில்லி: 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சர்ச்சை கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும்' என, லோக்சபாவில், அ.தி. மு.க., - எம்.பி., வலியுறுத்தினார்.

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று லோக்சபாவில், முன்னாள்
முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான, அ.தி. மு.க., - எம்.பி., சுந்தரம் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனை யில், 75 நாட்கள் சிகிச்சை பெற்றார்.முதலில், நீர்ச் சத்து குறைவு, காய்ச்சல் என்றனர். ஆனால், திடீ ரென, அவருக்கு பல்வேறு நோய்கள் உள்ளதாகவும், மாரடைப்பு ஏற்பட்டு ...

பொதுச்செயலர் பதவியை தக்க வைக்க சசி கும்பல் தந்திரம்

Posted: 14 Mar 2017 10:07 AM PDT

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் வந்தால், வெற்றி பெற வசதியாக, புதிதாக, 20 லட்சம், அ.தி.மு.க., உறுப்பினர் அட்டைகள் அச்சிட, சசிகலா குடும்பத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.

சசிகலா, பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்க கோரி, பன்னீர் அணியினர், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளனர். அதை ஏற்று, சசிகலா நியமனம் செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவித்தால், பொதுச்செயலர் பதவிக்கு, தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பொதுச்செயலர் பதவிக்கு,பன்னீர் அணியினர் போட்டியிடுவர். அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, கட்சியில் உள்ள, 1.50 கோடி ...

கிடப்பில் போன ஜெ., அறிவிப்பு: தமிழக போலீசார் புலம்பல்

Posted: 14 Mar 2017 12:01 PM PDT

அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், போலீஸ் மானிய கோரிக்கையின் போது, ஜெயலலிதா அறிவித்த அறிவிப்புகள், இன்னும் அமலுக்கு வராமல் உள்ளன என, போலீசார் புலம்பி வருகின்றனர்.
கடந்த, 2016 ஆக., 22ல், சட்டசபையில், போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பதிலளித்த, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, துறை சார்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, அவர்களின் பதவி மற்றும் பணிப்பிரிவு அடிப்படையில், மாதம், 200 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாய் ...

புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் அதிகம்: ஐ.நா., தகவல்

Posted: 14 Mar 2017 12:59 PM PDT

நியூயார்க்: உலக அளவில் இந்தியர்கள் அதிகளவில் புலம் பெயர்ந்துள்ளனர், என ஐ. நா. சபை உலகளவில் புலம் பெயர்ந்தவர்களுக்கான ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

உலகளவில் 2015 ஆண்டு கணக்கு படி சுமார் 1.60 கோடி இந்தியர்கள் மற்ற நாடுகளில் குடியேறியுள்ளனர். இதில் 40 சதவீதம் இந்தியர்கள் குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டும் குடியேறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் சுமார் 30 லட்சம் இந்தியர்களும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தலா 20 லட்சம் புலம் பெயர்ந்த இந்தியர்களும் வசித்து வருகின்றனர்.
ஐக்கிய ...

தமிழக மாணவர் மரணம் ஏன்? - டில்லி போலீசார் விளக்கம்

Posted: 14 Mar 2017 01:44 PM PDT

புதுடில்லி : 'தற்கொலை செய்து கொண்ட, ஜே.என்.யு., எனப்படும், டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலையில் படித்து வந்த தமிழக மாணவர் முத்து கிருஷ்ணன், எந்த ஓர் அரசியல் சார்ந்த அமைப்பிலும் உறுப்பினராக இல்லை' என, டில்லி போலீசார், விளக்கம் அளித்துள்ளனர்.
டில்லியில் உள்ள ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில்., படித்து வந்த, சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக் கிருஷ் ணன், நண்பர் அறையில், நேற்று முன்தினம், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர், சமீபத்தில், சமூகவலை தளமான 'பேஸ்புக்' பக்கத்தில், 'பல்கலையில் சமத்துவம் இல்லை' என, ...

கோவாவில் அயர்லாந்து நாட்டு இளம் பெண் கொலை

Posted: 14 Mar 2017 02:32 PM PDT

பானாஜி: கோவா கடற்கரையில் அயர்லாந்து நாட்டு பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் விசாரி்க்கின்றனர்.கோவா மாநிலம் கேனாகோனா என்ற பகுதியில் தியோபாக் கடற்கரை உள்ளது.இங்கு நேற்று 25 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு பெண் பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் அயர்லாந்து நாட்டு பெண் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட அயர்லாந்து பெண் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™