Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


கனடாவில் கண்காணிப்பின் கீழ் போதை மருந்து நிலையம்!

Posted: 07 Feb 2017 07:46 AM PST

அதீத போதை மருந்துப் பயன்பாட்டினால் விளையும் மரணங்களையும், நோய்களையும் மேலும் இன்னோரன்ன பிரச்சினைகளையும் தவிர்க்கும் வகையில், கனடாவில், கண்காணிப்பின் கீழான போதை மருந்து பாவனையாளர் நிலையம் ஒன்று திறக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை கனேடிய சுகாதார அமைச்சர் ஜேன் ஃபில்பொட் வழங்கியுள்ளார். ஏற்கனவே கனடாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. வைத்தியர்கள் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில், சட்டவிரோதமாகக் கொள்வனவு செய்யப்படும் போதை மருந்தையும் போதைப் பொருள் பாவனையாளர்கள் பயன்படுத்தலாம். எனினும், […]

The post கனடாவில் கண்காணிப்பின் கீழ் போதை மருந்து நிலையம்! appeared first on TamilStar.com.

கேப்பாப்புலவு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்தல்

Posted: 07 Feb 2017 07:38 AM PST

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீள வழங்கு வதற்கு அரசாங்கம் முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றித்தில் இன்றைய தினம் சபை ஒத்திவைப்பு வேளை முற்குறித்த பிரச்சினை தொடர்பாக பிரேரணை சமர்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு உரையாற்றிய அவர், வட மாகாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகளை 2009 ஆம் ஆண்டிலே […]

The post கேப்பாப்புலவு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்தல் appeared first on TamilStar.com.

ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே காணிகள் விடுவிக்கப்படுமாம்!

Posted: 07 Feb 2017 07:34 AM PST

முல்லைத்தீவு- கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 8 நாட்களாக கேப்பாப்புலவு மக்களும், 5 நாட்களாக புதுக்குடியிருப்பு மக்களும் தமது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து மீட்டுத் தருமாறு கோரி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி, முன்னரே பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, மக்கள் தமது காணிகள் என உரிமைகொள்ளும் […]

The post ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே காணிகள் விடுவிக்கப்படுமாம்! appeared first on TamilStar.com.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாகிய பாதையில் பயணிக்கும் 17 ஆயுதக்குழுக்கள்

Posted: 07 Feb 2017 07:30 AM PST

வடக்கிலும், கிழக்கிலும் 17 ஆயுதக் குழுக்கள் செயற்பட்டுவருகின்றன, தமிழீழ விடுதலைப் போராட்டமும் இவ்வாறே உருவாகியதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச இன்று நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்டார். இவரை பார்ப்பதற்கு வருகைத்தந்திருந்த போதே விமலவீர திஸாநாயக்க இதை குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வடமாகாணத்திலும், கிழக்கிலும் 17 ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன. இதைப்போன்றே தமிழீழ விடுதலைப் போராட்டமும் […]

The post விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாகிய பாதையில் பயணிக்கும் 17 ஆயுதக்குழுக்கள் appeared first on TamilStar.com.

விமல் வீரவன்ச மீண்டும் சிறைக்கு!

Posted: 07 Feb 2017 07:27 AM PST

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை, எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரத்ன, இன்று உத்தரவிட்டார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 40 வாகனங்களை முறைக்கேடான முறையில் தமது உறவினர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் விமல் வீரவன்ச, கைதுசெய்யப்பட்டிருந்தார். இதேவேளை, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

The post விமல் வீரவன்ச மீண்டும் சிறைக்கு! appeared first on TamilStar.com.

மத்திய வங்கியால் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான பெறுபேறு

Posted: 07 Feb 2017 07:24 AM PST

இலங்கை மத்திய வங்கியும், அரசாங்கமும் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதி முதல் பின்பற்றும் நிலையான செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான பெறுபேறுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நிதிச்சபையின் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இக்கூட்டத்தின் போதே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியும், அரசாங்கமும் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதி முதல் பின்பற்றும் நிலையான செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான பெறுபேறுகள் இடம்பெற்றுள்ளது. தேவை ஏற்படின் முறையான நடவடிக்கைகளின் மூலம் வெற்றிகரமான பொருளாதார […]

The post மத்திய வங்கியால் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான பெறுபேறு appeared first on TamilStar.com.

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து மௌனம் காக்கும் பாதுகாப்பு அமைச்சு! – சம்பந்தன் விசனம்

Posted: 07 Feb 2017 07:20 AM PST

தமது நிலத்தை விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி, விமானப்படை முகாமின் முன்பாக எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் கேப்பாப்புலவு மக்கள், இன்று மாலைக்குள், தமது பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால், உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சு தமது கோரிக்கை குறித்து எந்தப் பதிலையும் வழங்காதிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விசனம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு இனியும் காலங்கடத்தாது உடன் நடவடிக்கை மேற்கொள்ள […]

The post கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து மௌனம் காக்கும் பாதுகாப்பு அமைச்சு! – சம்பந்தன் விசனம் appeared first on TamilStar.com.

கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்த றிசாட்

Posted: 07 Feb 2017 07:14 AM PST

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணிப்பிரச்சினையையும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிப்பிரச்சினையும் அவசரமாக தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் நேற்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். சுதந்திர தினத்தன்று அந்தப் பிரதேசத்துக்கு தான் சென்றபோது கேப்பாபுலவு மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது கேப்பாப்புலவு விமானப்படை முகாமுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். படையினர் வசமிருக்கும் தமது […]

The post கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்த றிசாட் appeared first on TamilStar.com.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் இல்லையாம்!

Posted: 07 Feb 2017 07:09 AM PST

இலங்கைக்கு எதிராக மற்றொரு யுத்தக் குற்றச்சாட்டு பிரேரணையொன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. அவ்வாறு எந்த ஒரு பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவோ அதனை பின்போட இலங்கை முயற்சி மேற்கொள்ளவோ இல்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார். இலங்கைக்கு பாதகமாக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதனை பின்போட வெளிவிவகார அமைச்சு முயல்வதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இவை முற்றிலும் பொய்யான தகவலாகும்.இலங்கைக்குக்கு எதிராக சர்வதேச சமூகம் எந்த […]

The post ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் இல்லையாம்! appeared first on TamilStar.com.

பிரதமருக்கு எதிராக கடும் எதிர்ப்பு! ரணிலின் கொடும்பாவி எரிப்பு

Posted: 07 Feb 2017 07:06 AM PST

சைட்டம் என்ற மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் இடம் பெற்று கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் உரிமைகள் என்ற அமைப்பு தம்புள்ளை பிரதேசப் பகுதியில் நேற்று விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தது. இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் சுதந்திர கல்வித் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றார் என எதிர்ப்பு கூறப்பட்டது. தம்புள்ளை பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னாள் இடம் பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் போது […]

The post பிரதமருக்கு எதிராக கடும் எதிர்ப்பு! ரணிலின் கொடும்பாவி எரிப்பு appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™