Tamil Star |
- நேட்டோவின் நட்பு நாடுகளை கனடா காப்பாற்றும்
- பிரம்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவா…? சரிப்படுத்தும் முயற்சியில் இந்தியா
- ஜெனிவாவில் அரசுக்கு காலஅவகாசம் வழங்குவதை கூட்டமைப்பு எதிர்க்கிறது! – சிறிதரன்
- மங்கள வீட்டிற்கு சென்ற மைத்திரி!
- கூட்டமைப்பு பிளவுபடுவதற்கு செல்வம் அடைக்கலநாதனே காரணம்! – கஜேந்திரன் குற்றச்சாட்டு
- யாழ் விரையும் மைத்திரி! மக்கள் மத்தியில் பேசப்போவது என்ன? எதிர்ப்பார்ப்பில் வடக்கு மக்கள்
- பெண்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளின் பட்டியல் ஐ.நாவிடம் கையளிப்பு!
- விக்னேஸ்வரன் கூறினாலும் முடியாது : இராணுவ முகாம்களை அகற்றினால் அக்கிரமங்கள் தலைவிரித்தாடும்
- சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்திருக்கக் கூடாது! – நாமலுக்கு சுடலை ஞானம்
| நேட்டோவின் நட்பு நாடுகளை கனடா காப்பாற்றும் Posted: 21 Feb 2017 11:13 AM PST ரஷ்ய ஆக்கிரமிப்புக்களில் இருந்து நேட்டோவின் நட்பு நாடுகளை காப்பாற்ற கனடா தயாராக உள்ளதாக கனேடிய கடற்படைத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். நட்பு நாடுகளுக்கான பாதுகாப்பு தொடர்ந்து உறுதிப்படுத்தப்படும் என்று, கனேடிய கடற்படையின் உயர்நிலைத் தளபதிகளில் ஒருவரான றியர் அட்மிரல் ஜோன் நியூட்டன் தெரிவித்துள்ளார். கனேடிய கடற்படை தனது முன்னாள் போர்க் கப்பல்கள் சிலவற்றை சேவையில் இருந்து நீக்குகின்ற நிலையிலேயே இவ்வாறு கூறியுள்ள அவர், பழைய போர்க்கப்பல்கள் நான்கு கைவிடப்படுகின்ற போதிலும், போல்ட்டிக் பிராந்தியத்திற்கு வேறு போர்க் கப்பல்களை […] The post நேட்டோவின் நட்பு நாடுகளை கனடா காப்பாற்றும் appeared first on TamilStar.com. |
| பிரம்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி Posted: 21 Feb 2017 11:10 AM PST பிரம்டனில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஆண் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தங்கும் விடுதி ஒன்றிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று இரவு 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதனை பீல் பிராந்திய காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். Tomken வீதி மற்றும் Steelwell வீதிப் பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த விடுதி அமைந்துள்ளதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். முறைப்பாட்டை அடுத்து அந்த விடுதிக்கு தாங்கள் சென்றடைந்த போது, அங்கு ஆண் ஒருவர் மோசமான துப்பாக்கிச் சூட்டுக் […] The post பிரம்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி appeared first on TamilStar.com. |
| தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவா…? சரிப்படுத்தும் முயற்சியில் இந்தியா Posted: 21 Feb 2017 11:08 AM PST தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ளேயும் வெளியேயும் தமிழர்கள் தரப்பில் பிளவுகள் காணப்படுகின்றன. எனவே ஒற்றுமை மிகவும் அவசியமானது என இந்தியா வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைலமையிலான அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் தெரிவித்திருந்தார். மேலும், தமிழ் […] The post தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவா…? சரிப்படுத்தும் முயற்சியில் இந்தியா appeared first on TamilStar.com. |
| ஜெனிவாவில் அரசுக்கு காலஅவகாசம் வழங்குவதை கூட்டமைப்பு எதிர்க்கிறது! – சிறிதரன் Posted: 21 Feb 2017 11:04 AM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை. அதனை கடுமையாக எதிர்க்கின்றது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின்கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விமானப்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது சொந்த நிலங்களை கேப்பாபுலவு மக்கள் 22 நாளாகவும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். குறித்த விடயம் […] The post ஜெனிவாவில் அரசுக்கு காலஅவகாசம் வழங்குவதை கூட்டமைப்பு எதிர்க்கிறது! – சிறிதரன் appeared first on TamilStar.com. |
| மங்கள வீட்டிற்கு சென்ற மைத்திரி! Posted: 21 Feb 2017 11:02 AM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீரவின் பாணந்துறை வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் திரும்பி வரும்போது ஜனாதிபதி மங்கள சமரவீரவின் வீட்டிற்கு சென்றுள்ளார். மங்கள வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி அங்கு தேனீர் விருந்தொன்றில் கலந்து கொண்டுள்ளார். இந்த விஜயத்தில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் கலந்து கொண்டிருந்ததாககுறிப்பிடப்படுகின்றது. எப்படியிருப்பினும் அண்மைய நாட்களில் ஜனாதிபதிக்கும், அமைச்சர் மங்களவுக்கும்இடையில் பிரிவு ஏற்பட்டிருந்ததாக கட்டுக்கதைகள் வெளியாகியிருந்தமைகுறிப்பிடத்தக்கது. The post மங்கள வீட்டிற்கு சென்ற மைத்திரி! appeared first on TamilStar.com. |
| கூட்டமைப்பு பிளவுபடுவதற்கு செல்வம் அடைக்கலநாதனே காரணம்! – கஜேந்திரன் குற்றச்சாட்டு Posted: 21 Feb 2017 10:59 AM PST தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதனே காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். முப்படைகளையும் கொண்டிருந்த தமிழர்களால் சாதிக்க முடியாததை உடனடியாக சாதிக்க முடியுமா என செல்வம் அடைக்காலநாதன் கேள்வி எழுப்பியமை குறித்து ஊடகவிலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி […] The post கூட்டமைப்பு பிளவுபடுவதற்கு செல்வம் அடைக்கலநாதனே காரணம்! – கஜேந்திரன் குற்றச்சாட்டு appeared first on TamilStar.com. |
| யாழ் விரையும் மைத்திரி! மக்கள் மத்தியில் பேசப்போவது என்ன? எதிர்ப்பார்ப்பில் வடக்கு மக்கள் Posted: 21 Feb 2017 10:56 AM PST யுத்தத்திற்குப் பின்னர், வடக்கில் நிகழும் வன்முறைகளும், அசம்பாவிதங்களும் மக்களை ஒருவகையான அச்ச உணர்விற்கு உள்ளாக்கியிருக்கிறது. முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமாகாணம், மேலதிக பொலிஸாரின் முழு அவதானிப்பிலும், புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பிலும் கழுகுப்பார்வைக்குள் இருக்கிறது வடக்கு. இருந்தும் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் வன்முறைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி இல்லையா என்றும் மக்கள் யோசிக்கிறார்கள். இலங்கை ஜனாதிபதிகள் வரலாற்றில், வடக்கிற்கு அதிக தடவைகள் பயணம் செய்தவர் என்னும் பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்று இருக்கிறார். […] The post யாழ் விரையும் மைத்திரி! மக்கள் மத்தியில் பேசப்போவது என்ன? எதிர்ப்பார்ப்பில் வடக்கு மக்கள் appeared first on TamilStar.com. |
| பெண்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளின் பட்டியல் ஐ.நாவிடம் கையளிப்பு! Posted: 21 Feb 2017 09:49 AM PST இலங்கையில் பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பு ஒன்று, ஐ.நாவிடம் சமர்ப்பித்துள்ளது, இது தொடர்பான விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவை தலைமையகமாக கொண்ட இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது. ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை பிரதிநிதிகளை சந்திக்கும் பெண்களுக்கு […] The post பெண்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளின் பட்டியல் ஐ.நாவிடம் கையளிப்பு! appeared first on TamilStar.com. |
| விக்னேஸ்வரன் கூறினாலும் முடியாது : இராணுவ முகாம்களை அகற்றினால் அக்கிரமங்கள் தலைவிரித்தாடும் Posted: 21 Feb 2017 09:46 AM PST யார் எவ்வாறான அழுத்தங்களை கொடுத்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்றப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரான பிரதியமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களினால் எவ்வகையிலான அழுத்தங்களை கொடுத்தாலும் இராணுவ மகாம்கள் அகற்றப்படாது. அவ்வாறு வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் அக்கிரமங்கள் தலைவிரித்தாடும் என்று குறிப்பிட்டார். கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு […] The post விக்னேஸ்வரன் கூறினாலும் முடியாது : இராணுவ முகாம்களை அகற்றினால் அக்கிரமங்கள் தலைவிரித்தாடும் appeared first on TamilStar.com. |
| சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்திருக்கக் கூடாது! – நாமலுக்கு சுடலை ஞானம் Posted: 21 Feb 2017 08:32 AM PST முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா குண்டு தாக்குதலுக்கு இலக்காகியிருந்த போது தாமும் தமது குடும்ப உறுப்பினர்களும் போதி பூஜைகளை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான அடிப்படையில் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை எனவும், சட்ட ரீதியாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா தண்டிக்கப்பட்டார் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார். எவ்வாறெனினும் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும் […] The post சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்திருக்கக் கூடாது! – நாமலுக்கு சுடலை ஞானம் appeared first on TamilStar.com. |
| You are subscribed to email updates from TamilStar.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |