Tamil Star |
- ரொரன்ரோ பாடசாலையில் கைபேசிக்கு தடை
- ஐரோப்பிய நாடாளுமன்றில் கனேடியப் பிரதமர் உரை
- இலங்கையில் தொடர்ந்தும் துன்புறுத்தல்கள் தொடர்கிறது : யஸ்மின் சூக்கா
- ‘சொத்து விபரங்களை சமர்ப்பித்த ஒரே ஜனாதிபதி மைத்திரி’ நீங்களும் தெரிந்து கொள்ளலாம்
- சிங்கப்பூர் சென்ற மஹிந்த நலமாக உள்ளாராம்…!
- இந்து சமுத்திரத்தில் அமைதியை நிலைநாட்ட தயாராகும் பிரதமர்
- விக்னேஸ்வரன் எத்தகைய போராட்டம் நடத்தினாலும் வடக்கு -கிழக்கு இணைப்பு நடக்காது! – ஹக்கீம்
- அரசாங்கம் கோரியுள்ள கால அவகாசத்தினை நீடிக்க கூடாது
- விகாரை நிர்மாணத்தில் மோசடி – கோத்தாவிடம் விசாரணை!
- மகிந்தவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு என்னை திருடி என்றது ஒரு ஊடகம்
| ரொரன்ரோ பாடசாலையில் கைபேசிக்கு தடை Posted: 17 Feb 2017 06:45 AM PST பாடசாலையினுள் கைபேசி பயன்படுத்துவதை ரொரன்ரோவில் உள்ள பாடசாலை ஒன்று தடை செய்துள்ளது. ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Earl Grey Senior Public School என்ற பாடசாலையே பாடசாலையினுள் கைபேசி பயன்படுத்துவதை தடை செய்வதாக அறிவித்துள்ளது. கைபேசி பயன்பாடுகளால் கவனச் சிதறல்கள் உச்ச அளவில் அதிகரித்துச் செல்வதாக பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் மேறகொள்ளப்பட்ட முறைப்பாடடினை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் வகுப்பறைகளுக்குள்ளும், வகுப்பறைகளுக்கு வெளியே உள்ள நடைபாதைகளிலும் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […] The post ரொரன்ரோ பாடசாலையில் கைபேசிக்கு தடை appeared first on TamilStar.com. |
| ஐரோப்பிய நாடாளுமன்றில் கனேடியப் பிரதமர் உரை Posted: 17 Feb 2017 06:43 AM PST ஐரோப்பாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள கனேடியப் பிரதமா ஜஸ்டின் ரூடோ, நேற்றைய நாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார். இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் உரையாற்றியுள்ள முதலாவது கனேடிய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் ஜஸ்டின் ரூடோ பெற்றுக் கொண்டுள்ளார். கடனாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து, நேற்றைய நாள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உரையாற்றிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இது ஐரோப்பிய ஒன்றியம் […] The post ஐரோப்பிய நாடாளுமன்றில் கனேடியப் பிரதமர் உரை appeared first on TamilStar.com. |
| இலங்கையில் தொடர்ந்தும் துன்புறுத்தல்கள் தொடர்கிறது : யஸ்மின் சூக்கா Posted: 17 Feb 2017 06:40 AM PST இலங்கையில் தொடர்ந்தும் கைதிகளுக்கு எதிரான துன்புறுத்தல் அதிகரித்திருப்பதாக சர்வதேச மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த ஊடகத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில், இலங்கையில் சித்திரவதைகளை முற்றாக நீக்குவதற்கு மிகப்பரந்த அளவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ஜோன் மெண்டிஸ் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெற்றுவருகின்றமை குறித்து […] The post இலங்கையில் தொடர்ந்தும் துன்புறுத்தல்கள் தொடர்கிறது : யஸ்மின் சூக்கா appeared first on TamilStar.com. |
| ‘சொத்து விபரங்களை சமர்ப்பித்த ஒரே ஜனாதிபதி மைத்திரி’ நீங்களும் தெரிந்து கொள்ளலாம் Posted: 17 Feb 2017 06:37 AM PST எனது மொத்த சொத்து விபரத்தை அறிய வேண்டுமாயின் தேர்தல் ஆணையாளர் நாயகத்தை அணுகி பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமையை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி அரச சார்பற்ற அமைப்பொன்று எனது சொத்து விபரங்கள் கோரியுள்ளது, எனது சொத்து விபரங்களை மறைக்க வேண்டிய எந்தவொரு […] The post ‘சொத்து விபரங்களை சமர்ப்பித்த ஒரே ஜனாதிபதி மைத்திரி’ நீங்களும் தெரிந்து கொள்ளலாம் appeared first on TamilStar.com. |
| சிங்கப்பூர் சென்ற மஹிந்த நலமாக உள்ளாராம்…! Posted: 17 Feb 2017 06:35 AM PST முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அப்பா நலமாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயம் காரணமாக மஹிந்த சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் அவருக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் மலேசியா விஜயத்தில் ஈடுப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அந்த நாட்டில் வசிக்கும் தமிழர்கள் சிலரினால் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடன் சென்ற பிரதிநிதிகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் […] The post சிங்கப்பூர் சென்ற மஹிந்த நலமாக உள்ளாராம்…! appeared first on TamilStar.com. |
| இந்து சமுத்திரத்தில் அமைதியை நிலைநாட்ட தயாராகும் பிரதமர் Posted: 17 Feb 2017 06:32 AM PST இந்து சமுத்திரத்தில் அமைதி மற்றும் சுதந்திரமான கப்பல் பயணங்களை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் சகல தரப்பினரையும் அடக்கிய மாநாடு ஒன்றை கூட்டுவதற்கு இலங்கை தயாராக உள்ளது. இதனை தலைமை ஏற்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் இராணுவ கப்பல்களுக்கு ஒழுக்க நெறி கோவை ஒன்றை உருவாக்குவதுடன், ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிறந்த வழி எனவும் அவர் கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழத்தின் சட்டப் பீடத்தின் விசேட அழைப்பாளர்களின் […] The post இந்து சமுத்திரத்தில் அமைதியை நிலைநாட்ட தயாராகும் பிரதமர் appeared first on TamilStar.com. |
| விக்னேஸ்வரன் எத்தகைய போராட்டம் நடத்தினாலும் வடக்கு -கிழக்கு இணைப்பு நடக்காது! – ஹக்கீம் Posted: 17 Feb 2017 06:29 AM PST வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், வடக்கையும், கிழக்கையும் இணைப்பது சாத்தியமாகாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். " கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வட,கிழக்கு ஒன்றிணைக்கப்பட்டதாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி உதயமானது. இரண்டு மாகாணங்களையும் இணைப்பதற்கு முஸ்லிம் மக்கள் இன்றும் எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், அவ்வாறு இருமாகாணங்களையும் இணைக்க வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெறும்பான்மையைப் பெற வேண்டும் என்று தெரிவித்த […] The post விக்னேஸ்வரன் எத்தகைய போராட்டம் நடத்தினாலும் வடக்கு -கிழக்கு இணைப்பு நடக்காது! – ஹக்கீம் appeared first on TamilStar.com. |
| அரசாங்கம் கோரியுள்ள கால அவகாசத்தினை நீடிக்க கூடாது Posted: 17 Feb 2017 06:27 AM PST ஐ.நாவில் அரசாங்கம் கோரவுள்ள 2 வருட கால அவகாசத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்க வேண்டும் என ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் கால அவகாசம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில், எதற்காக கால அவகாசம் கோரப்படுகின்றது. கால அவகாசம் கோருவது அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கான வழிமுறையே ஆகும். கால அவகாசம் […] The post அரசாங்கம் கோரியுள்ள கால அவகாசத்தினை நீடிக்க கூடாது appeared first on TamilStar.com. |
| விகாரை நிர்மாணத்தில் மோசடி – கோத்தாவிடம் விசாரணை! Posted: 17 Feb 2017 06:23 AM PST பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், கொழும்பு நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இன்றும் விசாரணை மேற்கொண்டனர். அநுராதபுரம் சந்தஹிரு சாய விகாரையின் நிர்மாணப் பணிகளின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவே, அவரிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. The post விகாரை நிர்மாணத்தில் மோசடி – கோத்தாவிடம் விசாரணை! appeared first on TamilStar.com. |
| மகிந்தவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு என்னை திருடி என்றது ஒரு ஊடகம் Posted: 17 Feb 2017 06:22 AM PST இலங்கையில் உள்ள பிரபல ஊடகம் ஒன்று நான் ஆட்சியில் இருக்கும் போது என்னிடம் இருந்து சகலவற்றையும் பெற்றுக்கொண்டு நான் ஆட்சியை விட்டு சென்றதும் மகிந்த ராஜபக்சவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு என்னை திருடி எனக் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சந்திரிக்காவின் கணவரான விஜயகுமாரதுங்கவின் சிரார்த்த தின நிகழ்வு கட்டுநாயக்கவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். விஜயகுமாரதுங்க இன்று உயிருடன் இருந்திருந்தால், நாட்டின் நிலைமை முற்றாக […] The post மகிந்தவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு என்னை திருடி என்றது ஒரு ஊடகம் appeared first on TamilStar.com. |
| You are subscribed to email updates from TamilStar.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |