Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வாக்குறுதியை லிபரல் மீறிவிட்டது – ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு

Posted: 12 Feb 2017 08:31 AM PST

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை ஆளும் லிபரல் கட்சி மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள கனேடியர்கள், நேற்றுச் சனிக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளனர். ரொரன்ரோவிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்துகொண்டதுடன்,பிரதமர் ஜஸ்டின் ரூடோவை விமர்சித்தும்,விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தியும் அவர்கள் பதாதைகளைத் தாங்கியிருந்தனர். சீர்திருத்தப்பட்ட புதிய தேர்தல் முறையிலேயே எதிர்வரும் 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று கடந்த தேர்தல் பிரசாரத்திலும்,வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றதன் பின்னரும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. […]

The post வாக்குறுதியை லிபரல் மீறிவிட்டது – ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு appeared first on TamilStar.com.

Cabbagetown பகுதியில் பெண்மீது கத்திக்குத்து

Posted: 12 Feb 2017 08:27 AM PST

ரொரன்ரோ Cabbagetown பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் காவல்த்துறையினருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்ததாகவும், அதில் Sherbourne மற்றும் Carlton பகுதியில் நபர் ஒருவர் கத்தியுடன் திரிவதாக கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த இடத்திற்கு காவல்த்துறையினர் சென்றடைந்த போது, பெண் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் கிடந்ததாக கூறப்படுகிறது. அவரின் முகத்தில் ஆபத்தான காயம் காணப்பட்ட நிலையில், அவர் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு […]

The post Cabbagetown பகுதியில் பெண்மீது கத்திக்குத்து appeared first on TamilStar.com.

பொறுப்புக்கூறலில் இருந்து பின்வாங்குகிறது அரசாங்கம்! – சம்பந்தன்

Posted: 12 Feb 2017 08:23 AM PST

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பான பொறுப்பு கூறல் விடயத்தில் அரசாங்கம் பின்வாங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிக்கு மாறான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த, அரசாங்கம் மேலும் 18 […]

The post பொறுப்புக்கூறலில் இருந்து பின்வாங்குகிறது அரசாங்கம்! – சம்பந்தன் appeared first on TamilStar.com.

நிதியமைச்சை பொறுப்பேற்கவுள்ளார் ரணில்!

Posted: 12 Feb 2017 08:18 AM PST

வரும் மார்ச்மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு துறைமுகங்கள் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், நிதியமைச்சை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசம் எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அர்ஜூன ரணதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜேதாச ராஜபக்ச, சந்திம வீரக்கொடி உள்ளிட்டவர்களின் அமைச்சுப் பொறுப்புகளிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது.

The post நிதியமைச்சை பொறுப்பேற்கவுள்ளார் ரணில்! appeared first on TamilStar.com.

புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை கோரும் ஜனாதிபதி

Posted: 12 Feb 2017 08:15 AM PST

புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை அடுத்த வாரம் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கு அறிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை துரிதப்படுத்துவதே ஜனாதிபதி நோக்கம் என தெரியவருகிறது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைய நியமிக்கப்பட்ட 6 குழுக்கள் தமது அறிக்கைகளை அரசியலமைப்புச் சட்டவாக்க சபையிடம் கையளித்துள்ளது. இது குறித்து கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த போதிலும் அது இன்னும் தாமதமாகி வருகிறது. இதனிடையே […]

The post புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை கோரும் ஜனாதிபதி appeared first on TamilStar.com.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இணங்கவில்லை : அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

Posted: 12 Feb 2017 08:11 AM PST

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தத்திங்கு மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடுவலை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் கூறி வருகின்றமை […]

The post சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இணங்கவில்லை : அமைச்சர் சுசில் பிரேமஜயந்த appeared first on TamilStar.com.

தீர்வுத் திட்ட அரசியல் முடிவுக் கட்டத்தில்! – சுமந்திரன்

Posted: 12 Feb 2017 08:07 AM PST

எமது மக்களின் அபிலாசைகள் மற்றும் புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் இருக்கின்றது. அது பலராலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வாக அமையும் என்பது எல்லோரினது எதிர்ப்பார்ப்பாக இருப்பதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் ரீதியான சட்டசபையின் உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாறிவரும் சமகாலத்தில் புதிய அரசியல் ரீதியான மாற்றத்திற்கு எதிர்காலத்தின் வகிபாகம் என்னும் கருப்பொருளில் […]

The post தீர்வுத் திட்ட அரசியல் முடிவுக் கட்டத்தில்! – சுமந்திரன் appeared first on TamilStar.com.

பசில் மீண்டும் இலங்கை திரும்புகிறார்

Posted: 12 Feb 2017 08:02 AM PST

நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளிநாடு சென்றிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த அரசாங்கத்தில் திவி நெகும திணைக்களத்திற்கு சொந்தமான 29 மில்லியன் ரூபா பணத்தை பயன்படுத்தி 50 லட்சம் நாட்காட்டிகளை அச்சிட்டமை சம்பந்தமான அவருக்கு எதிரான வழக்கில் ஆஜராகவே பசில் இலங்கை வருகிறார். இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது பசில் ராஜபக்ச வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி […]

The post பசில் மீண்டும் இலங்கை திரும்புகிறார் appeared first on TamilStar.com.

நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள், நாட்டுக்கு எதிரானவர்கள்! – ஜனாதிபதி

Posted: 12 Feb 2017 07:59 AM PST

நாட்டின் நல்லிணக்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைககள் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ளஇலங்கையர்களும் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படுபவர்கள், நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களாகவே கருதப்படுவர் என்று மைத்திரிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

The post நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள், நாட்டுக்கு எதிரானவர்கள்! – ஜனாதிபதி appeared first on TamilStar.com.

இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேசத் தயார்! வடக்கு முதலமைச்சர்

Posted: 12 Feb 2017 07:56 AM PST

தமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறையில் முஸ்லிம்களுக்கும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்தும் இல்லை. அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளையும் நாங்கள் இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும், வட – கிழக்கு இணைப்பு தொடர்பாக பேச கிழக்கு மாகாண முதல் அமைச்சர் முன் வந்தால் அவருடன் […]

The post இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேசத் தயார்! வடக்கு முதலமைச்சர் appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™