Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோவுக்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை

Posted: 10 Feb 2017 08:05 AM PST

ரொரன்ரோ உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகப் பகுதிகளில் தொடர்ச்சியான பனிப்பொழிவு ஏற்படும் என்று முன்னுரைப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவிலிருந்து ரொரன்ரோ உள்ளிட்ட பெரும்பாக பகுதியில் பனிப்பொழி ஆரம்பித்துள்ள நிலையில், இன்று பிற்பகலுக்கு பின்னர் பனிப்பொழிவின் தீவிரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரொரன்ரோ மற்றும் ரொரன்ரோ பெரும்பாகத்திற்கான சிறப்பு வானிலை எச்சரிக்கையினை கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் பிறப்பித்துள்ளது. அந்த வானிலை எச்சரிக்கையில், இன்று மதியத்திற்கு பின்னர் அதிகரிக்கும் பனிப்பொழிவானது சுமார் 10 சென்ரிமிட்டர் வரையில் பதிவாகக்கூடும் […]

The post ரொரன்ரோவுக்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை appeared first on TamilStar.com.

சமூக வலைத்தளத்தில் தலைகுனிந்த நாமல்! ஏமாற்றமளித்த சர்வதிகாரம்

Posted: 10 Feb 2017 07:52 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், இளம் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சட்டத்தரணி ஆவார். எனினும் அவர் சட்டம் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட முறை தொடர்பில் இன்றும் சர்ச்சை நிலை நீடிக்கிறது. இந்நிலையில் சட்டத்தரணிக்கான பரீட்சையில் தான் எத்தனையாவது இடத்தை பெற்றேன் என்பது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை நாமல் குறிப்பிட்டுள்ளார். பிபிசி சிங்கள சேவைக்காக பேஸ்புக் ஊடாக வழங்கிய நேர்காணலில் நாமல் இதனை குறிப்பிட்டுள்ளார். நாமல் ராஜபக்ச சட்டத்தரணிக்காக எழுதிய பரீட்சையில், அவர் முதலிடத்தில் உள்ளதாக விடயம் […]

The post சமூக வலைத்தளத்தில் தலைகுனிந்த நாமல்! ஏமாற்றமளித்த சர்வதிகாரம் appeared first on TamilStar.com.

எழுக தமிழை முடக்கும் முயற்சிகள் தோல்வி! – சுரேஸ் பிரேமசந்திரன்

Posted: 10 Feb 2017 07:47 AM PST

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணியை நடத்த விடாமல் முடக்குவதற்கு பலர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களே எழுக தமிழ் பேரணிக்கு எதிராக செயற்பட்டனர். அத்துடன் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் […]

The post எழுக தமிழை முடக்கும் முயற்சிகள் தோல்வி! – சுரேஸ் பிரேமசந்திரன் appeared first on TamilStar.com.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான சாவுமணி! – கஜேந்திரகுமார்

Posted: 10 Feb 2017 07:42 AM PST

ஒற்றையாட்சி முறையிலான புதிய அரசியலமைப்பையே அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாகவும், ஒற்றையாட்சி அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாவு மணியாக அமையவுள்ளது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘தமிழ் தேசத்தின் அடையாளத்தை அழிப்பதை நோக்காக கொண்டே அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. இதனால் தமிழ் தேசத்தின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தி, தேசத்தின் நிலப்பரப்பை உறுதிப்படுத்தி, கலாச்சார மொழியை பாதுகாக்க வேண்டும். […]

The post ஒற்றையாட்சி அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான சாவுமணி! – கஜேந்திரகுமார் appeared first on TamilStar.com.

தகவலறியும் உரிமை சட்டம்! ஜனாதிபதி – பிரதமருக்கும் சிக்கல்

Posted: 10 Feb 2017 07:38 AM PST

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் அசையும் அசையா சொத்து விபரங்களை கோரியுள்ளதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசேகா ஒபேசேகர தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கைக்கு அமைய தகவல் தரப்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் தமது சொத்து விபரங்கள் குறித்து அறிவிக்க ஜனாதிபதியும் பிரதமரும் 14 நாட்கள் […]

The post தகவலறியும் உரிமை சட்டம்! ஜனாதிபதி – பிரதமருக்கும் சிக்கல் appeared first on TamilStar.com.

உலகளவில் இலங்கையை மூன்றாவது இடத்தில் நிலைப்படுத்திய கனடிய நிறுவனம்!

Posted: 10 Feb 2017 07:33 AM PST

உலகில் தகவல் அறியும் சட்டத்தை வலுப்படுத்திய நாடுகளில், இலங்கை மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளதாக கனேடிய அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் உரிமையானது உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது உயர்மட்டத்தில் இருப்பதாக கனேடிய சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்காக நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தரப்படுத்தலில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரப்படுத்தலுக்கு அமைய மெக்சிகோ 136 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் சேர்பியா 135 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் […]

The post உலகளவில் இலங்கையை மூன்றாவது இடத்தில் நிலைப்படுத்திய கனடிய நிறுவனம்! appeared first on TamilStar.com.

வடகிழக்குக்கு வெளியே வாழும் 16 இலட்சம் தமிழ் மக்களின் 10 இலட்சம் வாக்குகள் எங்களுக்கு உரித்தானது – தமுகூ தலைவர் அமைச்சர் மனோ கணேசன்

Posted: 10 Feb 2017 07:26 AM PST

ஜனாதிபதி அவர்களே, கிமு 543ல் விஜயன் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தார். மலையக மக்கள் 1823லிருந்து இந்நாட்டுக்கு வரத்தொடங்கினார்கள். ஆகவே, ஜனாதிபதி அவர்களே, எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் இங்கே வந்துள்ளோம். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்திய நிலப்பரப்பில் இருந்து இங்கே வந்துள்ளோம். இப்படி வந்து இந்நாட்டில் இன்று வாழும் 16 இலட்சம் மலையக தமிழர்களில், சுமார் 6 இலட்சம் பேர் தோட்டங்களில் வாழ்கிறார்கள். இரண்டு இலட்சம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களுமாக இம்மக்கள் தோட்டங்களில் வாழ்கிறார்கள். […]

The post வடகிழக்குக்கு வெளியே வாழும் 16 இலட்சம் தமிழ் மக்களின் 10 இலட்சம் வாக்குகள் எங்களுக்கு உரித்தானது – தமுகூ தலைவர் அமைச்சர் மனோ கணேசன் appeared first on TamilStar.com.

சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி மூடப்பட வேண்டும்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க

Posted: 10 Feb 2017 07:20 AM PST

சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டத்தை வழங்குவதை தான் எதிர்ப்பதாகவும் அதனை உடனடியாக மூட வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்தில் மருத்துவப் பட்டத்தை பெறும் மாணவர்கள் தகுதி சம்பந்தமான பிரச்சினை இருக்கின்றது. இதனால், சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் மருத்துவப் படிப்புக்காக நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் 20 வீதமாக அதிகரிக்க வேண்டும். மருத்துவப் படிப்புக்கு […]

The post சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி மூடப்பட வேண்டும்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க appeared first on TamilStar.com.

புலிகளின் ஓடுபாதையைப் புனரமைக்கவே கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் அபகரிப்பு! – முதலமைச்சர் குற்றச்சாட்டு

Posted: 10 Feb 2017 07:16 AM PST

விடுதலைப் புலிகள் உருவாக்கிய விமான ஓடுபாதையை புனரமைத்து அதற்கான பாதை ஒன்றை அமைப்பதற்காகவே, கேப்பாப்புலவு மக்களுடைய காணிகளை விமானப்படையினர் ஆக்கிரமித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனாலேயே கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை வழங்க முடியாது என்று விமானப் படையினர் தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் 84 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, கேப்பாபிலவு, பிலவுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் […]

The post புலிகளின் ஓடுபாதையைப் புனரமைக்கவே கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் அபகரிப்பு! – முதலமைச்சர் குற்றச்சாட்டு appeared first on TamilStar.com.

மகிந்த அரசு செய்யாத மோசமான செயலை மைத்திரி அரசு செய்கிறது!

Posted: 10 Feb 2017 07:13 AM PST

புதிய அரசியலமைப்பு திருத்தம் பற்றி பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றஅதிகாரங்களையும் பறிக்கின்ற நிகழ்ச்சி நிரலுக்குள் இந்த அரசுசென்றுக்கொண்டிருக்கிறது. நான் இந்தஅரசியலில் இருக்கின்றவன் என்ற அடிப்படையில் வெளிப்படையாகவே கூறுவேன். மகிந்தராஜபக்ஸ அரசாங்கம் தன்னுடைய அரசாங்கத்தில் போர்தான் தொடுத்தார். சத்தங்களும்,வெடிச்சத்தங்களும்தான் முழங்கிக்கொண்டிருந்தன. ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களில் இவ்வாறான அதிகார பறிப்புக்கள் ஆதாவது மாகாணசபைகளுக்கோ, தமிழ் மக்களுக்கோ இருக்கின்ற அதிகாரங்களை பறிக்கின்ற நிகழ்ச்சிநிரல்கள்இவ்வாறு இடம்பெறவில்லை. இன்று மிகவும் நாசுக்கான முறையில் இனிப்பு தடவியநஞ்சுக்களாக அபிவிருத்தி என்று சொல்லி சொல்லி எங்களிடம் இருக்கின்ற அத்தனைஅதிகாரங்களையும் பறிக்கின்ற […]

The post மகிந்த அரசு செய்யாத மோசமான செயலை மைத்திரி அரசு செய்கிறது! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™