Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் சசிகலா: முதல்வர் பன்னீர்செல்வம் ஆவேசம்

Posted: 09 Feb 2017 08:42 AM PST

''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தவர்களுடன் கைகோர்த்து, சசிகலா கபட நாடகம் ஆடுகிறார்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க., அவைத் தலைவரும், மூத்த நிர்வாகியுமான மதுசூதனன், பன்னீர் செல்வத்தை நேற்று நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். அவரை வரவேற்று, கட்சித் தொண்டர்கள் மத்தியில், பன்னீர்செல்வம் பேசியதாவது:
அச்சுறுத்தல் :
அ.தி.மு.க.,வையும், தமிழகத்தையும் காப்பாற்ற நடக்கும் அறப்போராட்டத்தில், முதல் சிப்பாயாக மதுசூதனன் இணைந்துள்ளார். கருணாநிதியிடம் இருந்து, எம்.ஜி.ஆர்., பிரிந்து, ...

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு

Posted: 09 Feb 2017 08:44 AM PST

அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார்.

சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அ.தி.மு.க., வில் ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ராஜ்யசபா எம்.பி., மைத் ரேயன், ஐந்து எம்.எல்.ஏ.,க் கள், ஏராளமான முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க் கள், அவர் பக்கம் வந்துள்ளனர்.
அந்த வரிசையில், கட்சியின் அவைத் தலைவர்
மதுசூதனனும், நேற்று முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து, ஆதரவு ...

அ.தி.மு.க., கட்சியை முதல்வர் பன்னீர்செல்வம்... கைப்பற்றுகிறார்!: நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பதால் உற்சாகம்: அணி தாவினார் அவைத்தலைவர் மதுசூதனன்: சசிகலா தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு

Posted: 09 Feb 2017 09:38 AM PST

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவு காரணமாக, உற்சாகம் அடைந்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், விரைவில் அ.தி.மு.க.,வை கைப்பற்றுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது.

கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான, அவைத் தலைவர் மதுசூதனன், நேற்று உடனடியாக அணி மாறியதால், சசிகலா தரப்புக்கு, அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவு நிர்வாகிகள், சசிகலாவின் நியமனத்தை எதிர்த்து வருகின்றனர். கட்சி விதிகளின் படி, பொதுச்செயலரை, ...

ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க மறுப்பு; மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் கவர்னர்

Posted: 09 Feb 2017 09:43 AM PST

'பெரும்பான்மையை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என, முதல்வர் பன்னீர்செல்வமும்; ஆட்சி அமைக்க, அழைப்பு விடும்படி சசிகலா வும், தமிழக கவர்னரை சந்தித்து, மனு கொடுத்தனர்.

இரு தரப்பு கோரிக்கையையும் கேட்ட கவர்னர், மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். அவர் எந்த பதிலும் தெரிவிக்காததால், தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.இம்மாதம், 5ம் தேதி நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மறுநாள், கவர்னர், தமிழகம் வருவார்; அவரை சந்தித்து, கடிதத்தை கொடுத்து, முதல்வராக ...

எம்.எல்.ஏ.,க்கள் யார் பக்கம்? அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு

Posted: 09 Feb 2017 09:48 AM PST

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், சசிகலாவுக்கு ஆதரவாக, எத்தனை பேர் உள்ளனர்; பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, எத்தனை பேர் உள்ளனர் என்பது தெளிவாகாததால், ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், குழப்பம் நீடிக்கிறது.

சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 234; ஜெ., மறைவு காரணமாக, ஒரு பதவி காலி யாக உள்ளது. மொத்தம், 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், அ.தி.மு.க., - 135; தி.மு.க., - 89; காங்கிரஸ் - 8; முஸ்லிம் லீக் - 1 எம்.எல்.ஏ., உள்ளனர்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களில், மூன்று பேர் கூட்டணி கட்சியினர். இரட்டை இலையில்போட்டியிட்டு, வெற்றிபெற்றதால், அ.தி.மு.க., கணக்கில் சேருகின்றனர்.கடந்த, 5ம் ...

கவர்னர் நல்ல முடிவை அறிவிப்பார்: பன்னீர் நம்பிக்கை அ.தி.மு.க., அதிகார போட்டியில் வெல்லப் போவது யார் ஒட்டு மொத்த தமிழக மக்களும் ஆவலோடு காத்திருப்பு

Posted: 09 Feb 2017 09:52 AM PST

சென்னை:''அ.தி.மு.க.,வில் நடக்கும் அனைத்து விபரங்களையும், கவர்னரிடம் தெரிவித்தோம்; அவர் நல்ல முடிவை அறிவிப்பார். நமக்கு நல்லதே நடக்கும்,'' என, கவர்னரை சந்தித்த பின், முதல்வர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவும், கவர்னரை சந்தித்து பேசியுள்ளார். எனவே, இரு தரப்புக்கும் இடை யிலான இந்த அதிகாரப் போட்டியில், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
ஆளும், அ.தி.மு.க.,வில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில், சசிகலா தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு ...

பலப்பரீட்சையில் சசி தோற்றால் அடுத்தது என்ன? சட்டசபையை முடக்க கவர்னர் உத்தரவிட வாய்ப்பு

Posted: 09 Feb 2017 09:58 AM PST

தமிழகத்தில், 1988க்குப் பின், தற்போது, ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, சசி தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ தவறினால், கவர்னர் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.

சட்டசபையில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 234. ஒருவர் நியமன உறுப்பினர்; அவருக்கு ஓட்டுரிமை இல்லை. ஆட்சி அமைக்க, மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யில், பாதிக்கும் மேல் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவை. அதாவது, 118 எம்.எல்.ஏ.,க் களின் ஆதரவு வேண்டும். சசிகலா, தனக்கு, 120க்கும் மேற்பட்ட எம்.எல். ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், ஒவ்வொருவராக ...

அரசியல் நாகரிகத்திற்கு சசிகலா வைத்த வேட்டு!

Posted: 09 Feb 2017 10:01 AM PST

தமிழக அரசியல் கட்சிகளிடையே, ஜெயலலிதா மறைவிற்கு பின், அரசியல் நாகரி கம் துளிர்விடத் துவங்கியிருந்தது. சட்டசபை யில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை பார்த்து, முதல்வர் சிரித்ததை விமர்சித்திருப் பதன் மூலம், அதற்கு சசிகலா வேட்டு வைத்துள்ளார்.

ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்ற பின், எதிர்க்கட்சிகளுடன், அ.தி.மு.க.,வினர் பேசு வதை நிறுத்தி விட்டனர். குறிப்பாக, சட்டசபை உறுப்பினர்கள், நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்தனர். யாராவது தப்பித் தவறி, சைகை காட்டினாலோ, பேசிக் கொண்டாலோ, சந்தேகக் கண்ணோடு விசாரிக்கப்பட்டனர்.எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த காலம் ...

சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 09 Feb 2017 10:08 AM PST

சென்னை:'சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி, ஜனநாயக மாண்பை காத்திட வேண்டும்' என, செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
தமிழகத்தின் அரசியல் சூழல், நிலையற்ற தன்மையுடனும், ஜனநாயக மாண்புகளுக்கு எதிராகவும் உள்ளது. காபந்து முதல்வராக நீடிக்கும் பன்னீர்செல்வம், 'என்னிடம் கட்டாயப் படுத்தி, ராஜினாமா கடிதம் வாங்கினர்' என, தன் கட்சி தலைமை மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், அவரது ராஜினாமா கவர்னரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை சொகுசு பஸ்களில் ஏற்றிச் சென்று, நட்சத்திர விடுதிகளில் ...

எம்.எல்.ஏ.,க்களை காணோம்; போலீசில் குவியும் புகார்

Posted: 09 Feb 2017 10:47 AM PST

'ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.,வும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை' என, ஆரணி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அம்பேத்கர் நகர் பகுதி மக்கள், நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஆரணி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், ஆரணி டவுன் காவல் நிலையத்திற்கு சென்று, 'அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை; அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என, புகார் அளித்தனர். போலீசார், புகாரை பெற்று, அதற்கான ரசீது மட்டும் கொடுத்து ...

சசிகலா உத்தரவுகள் சட்டப்படி செல்லாது!

Posted: 09 Feb 2017 11:58 AM PST

சென்னை: அ.தி.மு.க.,வில் சசிகலா முறைப்படி கட்சி உறுப்பினர்களின் ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தேடுக்கப்படாததால் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலாவின் உத்தரவுகள் சட்டப்படி செல்லாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., கட்சி விதிகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் கூறியதாவது:
அ.தி.மு.க.,வின் கொள்கை மற்றும் சட்ட விதி, 20ன் கீழ், அ.தி.மு.க., பொதுச்செயலரை, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அந்தமான் தீவுகளில் செயல்படும், அ.தி.மு.க.,வின் அனைத்து பிரிவு உறுப்பினர்களின் ...

அதிகார மையங்களின் தலையீடு இருக்காது!; பன்னீரை ஆதரிக்கும் அதிகாரிகள்

Posted: 09 Feb 2017 01:02 PM PST

சசிகலா முதல்வரானால், அவரது குடும்பத்தினரின் தலையீடு அதிகம் இருக்கும் என்பதால், உயர் அதிகாரிகள், முதல்வராக பன்னீர்செல்வம் நீடிப்பதை விரும்புகின்றனர்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி, முதல்வர் பன்னீர்செல்வத்தை, ராஜினாமா செய்ய வைத்தனர். அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். எனவே, சசிகலா முதல்வராகி விடுவார் என, எதிர்பார்த்த நிலையில், அவருக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம், போர்க்கொடி துாக்கி உள்ளார். அவருக்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும், ஆதரவு பெருகி ...

முதல்வருக்கு அச்சுறுத்தல்: நடவடிக்கை பாயுமா?

Posted: 09 Feb 2017 02:09 PM PST

'முதல்வருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பதோடு, மிரட்டியோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அச்சுறுத்தல்:
'சசிகலா மற்றும் அவரது சொந்தங்களின் நெருக்கடியால், ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது' எனக்கூறிய முதல்வர் பன்னீர்செல்வம், 'தன் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளார்.
கூடுதல் பாதுகாப்பு:
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™