Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீண்ட வேண்டாம்: ஸ்டாலின் எச்சரிக்கை

Posted: 08 Feb 2017 08:20 AM PST

சென்னை: 'திராணி இருந்தால், முதல்வர் பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள்; தி.மு.க.,வை சீண்ட வேண்டாம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 'என்னை பார்த்து, முதல்வர் பன்னீர் செல்வம் சிரித்து பேசி கொண்டிருந்தார்' என, அ.தி.மு.க.,வின் அதிரடி வரவான, சசிகலா குற்றஞ்சாட்டி உள்ளார்.
அ.தி.மு.க.,வுக்குள் நடக்கும் கேலி கூத்துக்களுக்கும், அரசியல் கோமாளி தனங்களுக்கும், தி.மு.க.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை, சசிகலா அறிய ...

கிரிமினல்களை பாதுகாப்பதா? : உ.பி., அரசு மீது மோடி தாக்கு

Posted: 08 Feb 2017 08:35 AM PST

காஜியாபாத்: ''உ.பி.,யில், கிரிமினல்களை பாதுகாக்கும் அரசாக, அகிலேஷ் அரசு உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்ட சபை தேர்தல், ஏழு கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில், இன்றுடன் பிரசாரம் முடிகிறது. இந்நிலையில், காஜியாபாத்தில் நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி
பேசியதாவது: உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையில் ஆட்சி அமைந்த போது, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இளைஞர், படித்தவர், மாநிலத்தின் ...

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் கட்டுப்பாடு மார்ச் 13ல்... நீக்கம்!பிப்., 20 முதல் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் எடுக்கலாம்

Posted: 08 Feb 2017 09:32 AM PST

மும்பை:''வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு உள்ள கட்டுப்பாடு, மார்ச், 13ல் முழுவதுமாக நீக்கப்படுகிறது. தற்போது வாரத்துக்கு, 24 ஆயிரம் ரூபாயாக உள்ள பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு, வரும், 20 முதல், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் படுகிறது,'' என, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், ஆர்.காந்தி தெரிவித்தார்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, 2016, நவ., 8ல் வெளியானது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு காரணமாக, வங்கி, ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது, படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், ...

சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம்...விஸ்வரூபம்!: ஏவலாட்களாக மாறிய பேராசை புள்ளிகள் பதவி பறிப்பு: கட்சி பதவியும் பறிபோகும் அபாயத்தில் மந்திரிகள்: தாக்குப்பிடிக்க முடியாமல் மன்னார்குடி கும்பல் கலக்கம்

Posted: 08 Feb 2017 09:39 AM PST

ஆட்சியிலும், கட்சியிலும் கலகத்தையும், களங்கத்தையும் ஏற்படுத்தியவர்களை, முதல் வர் பன்னீர்செல்வம் களை எடுப்பதில் உறுதி யாக உள்ளார். அதே நேரம், தன்னைப் போல, சூழ்நிலைக் கைதிகளாக, மிரட்டி பணிய வைக்கப்பட்டவர்களை அரவணைக்கவும் தயாராக உள்ளார்.

தற்காலிக பொதுச் செயலராக சசிகலா தேர்ந் தெடுக்கப்பட்டதில் கட்சி விதிகள் பின்பற்றப் படவில்லை என, தலைமை தேர்தல் கமிஷன் கூறியுள்ள நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த செயல்பாடு கள், மன்னார்குடி குடும்பத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்து கொண்டிருக் கும் தகவலே ...

முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு

Posted: 08 Feb 2017 09:44 AM PST

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, நேற்று மாலை வரை, ஒரு பெண் எம்.எல்.ஏ., உட்பட, ஐந்து, எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு தெரிவித்துள்ள னர். இன்று, மேலும் பல, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிக்கலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

'சசி குடும்பத்தினரின் கட்டாயத்தில் தான், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்' என, முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் அதிரடியாக பேட்டி அளித்தார். இது, தமிழக அரசியலில், அதிர்வலைகளை ஏற் படுத்தி உள்ளது. பன்னீர்செல்வத்தின், துணிச் சல் முடிவுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதனால், ...

சசிகலாவின் பதவி ஆசையால் அரசு பணிகள் எல்லாம் முடக்கம்

Posted: 08 Feb 2017 09:49 AM PST

சசிகலாவின் பதவி ஆசையால், தமிழக அரசின் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன. பட்ஜெட் தயாரிப்பு, வறட்சி நிவாரண பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரண்டு முறை முதல்வராக இருந்த அனுபவம் காரணமாக, மூன்றாவது முறை முதல்வராக பொறுப்பேற்றதும், பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்படத் துவங்கினார்.
முதல்வராக முடியாது
தினமும் காலை, தலைமைச் செயலகம் வந்து, கோப்புகளை பார்த்தார். தன்னை சந்திக்க விரும்புவோரை சந்தித்து, அவர்களின் கோரிக் கைகளை கேட்டார்; இரவு வரை பணி செய்தார். விடுமுறை ...

அந்த 75 நாட்கள்.. இந்த 60 நாட்கள்... முழு உண்மையையும் உடைப்பாரா பன்னீர்

Posted: 08 Feb 2017 09:52 AM PST

ஜெ., சமாதி முன் அமர்ந்து, அவர் கண்களை மூடியிருந்த அந்த நிமிடங்களில், பல கோடி தமிழர்களின் விழிகள் மூடாமல் இருந்தன. அவர் எழுந்து வந்து, ஊடகங்களின் முன் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக, தமிழகமே செவிகளைத் திறந்து வைத்து காத்திருந்தது.

பரந்து விரிந்த கடலின் மையப் பரப்பில், ஒரு புள்ளியாக உருவெடுத்து, மெதுமெதுவாக வேகமெடுத்து, சூறைக் காற்றோடு சுழற்றியடிக்கும் புயலைப் போல இருந்தது, பன்னீர் செல்வத்தின் பேட்டி.என்ன சொல்லப் போகிறாரோ, எந்தெந்த உண்மைகளை உடைக்கப் போகிறாரோ என, ஏராளமான இதயங்கள் படபடத்துக் கிடந்திருக் கலாம். ஆனால், அவர் உண்மையை தான் ...

தற்காலிக பொ.செ., சசிகலாவுக்கு பன்னீரை நீக்க அதிகாரம் உள்ளதா?

Posted: 08 Feb 2017 09:53 AM PST

'பொதுச்செயலர் ஜெயலலிதாவால் நியமிக்கப் பட்ட பன்னீர்செல்வத்தை, பொருளாளர் பதவி யில் இருந்து நீக்க, தற்காலிக பொதுச்செயலர் சசிகலாவுக்கு அதிகாரமில்லை' என, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர், தமிழக முதல் வர் என, இரண்டு பதவிகளையும், ஜெயலலிதா வகித்து வந்தார். அவரது மறைவுக்கு பின், கட்சியின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார்.அ.தி.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்; இந்த விதியை மட்டும், மாற்றவோ, திருத்தவோ முடியாது எனவும், ...

கவர்னரிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை பன்னீர்செல்வம் வாபஸ் பெற முடியுமா?

Posted: 08 Feb 2017 09:57 AM PST

'ராஜினாமாவை வாபஸ் பெறுவது குறித்து, கவர்னர் பரிசீலிக்க வேண்டும் என்றால், முதல்வர் பன்னீர்செல்வம், அவரிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்க வேண்டும்' என, சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், முதல் கட்டமாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பொறுப்புக்கு, தற்காலிகமாக சசிகலா நியமிக் கப்பட்டார். அடுத்த கட்டமாக, ஆட்சிக்கு அவர் தலைமை ஏற்க வேண்டும் என்ற கோஷத்தை, கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் முன் வைத்தனர்.சட்டசபை கட்சி தலைவராகவும், சசிகலாவை தேர்ந்தெடுத்தனர். முன்னதாக, முதல்வர் பதவி யில் இருந்து, பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்; ...

பன்னீர் ஜல்லிக்கட்டை துவக்காதது ஏன்?: உதயகுமார், செல்லூர் ராஜூ சதி

Posted: 08 Feb 2017 11:56 AM PST

மதுரை: அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க, மதுரை வந்த முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர்கள் உதயகுமார், செல்லுார் ராஜூவால் அவமானப்படுத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
கடும் முயற்சி:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, தமிழக அரசு சார்பில், முதல்வர் பன்னீர்செல்வம் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இதன்விளைவாக, சட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தடை நீங்கியதும் 'அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு வாடிவாசலை நானே திறந்து வைப்பேன். காளைகள் துள்ளிக்கிட்டு ...

ஓ.பி.எஸ்.,சுக்கு ரஜினி 'வாய்ஸ்?'

Posted: 08 Feb 2017 01:10 PM PST

'சசிகலாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ள, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, நடிகர் ரஜினி வாய்ஸ் தருவார்' என, அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடி பேட்டி, தமிழக அரசியலில், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., தொண்டர்கள், அவர் வீட்டில் குவிந்து வருகின்றனர். மேலும், பல தரப்பில் இருந்தும், ஆதரவு குவிந்து வருகிறது. ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கும், பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் திரையுலகிலும், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.
நடிகர்கள் கமல், ...

சசிகலாவின் முதல்வர் கனவுக்கு யார் காரணம்?

Posted: 08 Feb 2017 02:32 PM PST

அ.தி.மு.க.,வில், எம்.பி.,யாக இருந்தவர் வலம்புரி ஜான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன், பழகிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை, 'வணக்கம்' என்ற தலைப்பில், ஒரு வார பத்திரிகையில் தொடராக, 1990களில் எழுதினார். இந்த தொடர், பின், தனி புத்தகமாகவும் வெளியானது.

இத்தொடரின், 43வது அத்தியாயத்தில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: எம்.ஜி.ஆர்., 1987ல், ஒரு நாள் ஜெயலலிதாவை அழைத்து, 'நீ என்ன வேண்டுமானாலும் செய், உடன்படுகிறேன்; ஆனால், சசிகலாவை மட்டும் உடன் வைத்துக் கொள்ளாதே' என, அழாத குறையாக கூறினார். சசிகலா என்ற பெண்மணியால், ஜெயலலிதா முற்றாக ஆட்டிப் படைக்கப்படுகிறார் என்ற செய்தி, ...

ஓ.பி.எஸ்., விளக்கமளித்த பின் என்ன முடிவு எடுப்பார் கவர்னர்?

Posted: 08 Feb 2017 03:44 PM PST

சென்னை: ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் பன்னீர் செல்வம் தெரிவித்தால், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, முதல்வர் பதவியில் ஓ.பி.எஸ்., நீடிக்க கவர்னர் அனுமதி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிறார் கவர்னர்:
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரை இன்று சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™