Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நெருடல்

Posted: 08 Feb 2017 08:51 AM PST

எதிர்பார்ப்பும் காத்திருப்பும் குறைந்துவிட்டது ஓடிவந்து ஒட்டிக்கொள்வதும் நடப்புகளை விவரிப்பதும் காணாமல் போனது இவளின் எங்கம்மா சலுகையில் என்னருகே வருவதேயில்லை அவன் ஓரிரு முறை எனக்கும் அம்மா தான் போடி என்றாலும் விலகியே நிற்கிறான் மனதால் அவளின் குலை நடுங்கும் அழுகையில் அவன் மருளும் ஒவ்வொரு முறையும் நினைப்பதுதான் குழந்தைகளை அடிக்கவோ பேசவோ கூடாதென்று கட்டுப்பாடற்ற வார்த்தையிலும் செயலிலும் அவர்கள் வயதைவிட இறங்கிப் போகிறேன் கதை சொல்வதில்லை விளையாடுவதில்லை சிரிப்பதில்லை இப்படி ...

விடுப்பு கடிதம் -அய்யாசாமி ராம்

Posted: 08 Feb 2017 07:46 AM PST


-
அன்பு உறவுகளே....
-
உறவினர் திருமணங்களுக்கு பாண்டி மற்றும்
சென்னை செல்வதால், நான்கு நாட்களுக்கு
ஈகரைக்கு வருகை தர இயலாது....
-
மீண்டும் வரும் திங்களன்று வருகை இருக்கும்
-
அன்புடன்
அ.இராமநாதன்

இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

Posted: 07 Feb 2017 04:59 PM PST

முதல்வராக தொடரும் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுசெயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக நேற்று இரவு அளித்த பேட்டி, தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதையடுத்து அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து உடனடியாக பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு, புதிய பொருளாராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அதிமுக எம்.எல்.ஏக்கள் போயஸ்காடனில் குவிந்தனர். இது ஒருபக்கம் இருக்க, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சில முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து, அவரது இல்லத்தில் சந்தித்து வருகின்றனர். ...

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே...

Posted: 07 Feb 2017 04:51 PM PST

சிறுகதை:விநாயக முருகன் , ஓவியங்கள்: ஸ்யாம் ---- செம்பட்டை முடியுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர், இரண்டு கைகளால் நாகஸ்வரத்தை ஏந்தி, தனது வெற்றிலைக் கறை படிந்த உதடுகளில் சீவாளியை வைத்து வாசிக்கத் தொடங்கினார். இவர்களையே ஆர்வமாகப் பார்த்துக்கொ ண்டிருந்த ராவின் உடல், மின்சாரம் பாய்ந்ததுபோல ஒரு கணம் குலுக்கிப்போட்டது. கண்களை மூடினார். எட்டு வயதில் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு பெரிய கோயிலில் இருந்து திரும்பி வரும்போது, மேடையில் ஒருவர் நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார். ...

ரூ.2.6 கோடிக்கு வருமான வரி - பா.ஜ., நிர்வாகி ஒப்புதல்

Posted: 07 Feb 2017 04:41 PM PST

- தமிழக, பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், 2.6 கோடி ரூபாய்க்கு வருமான வரி செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, 'செக்கர்ஸ்' நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் வினோஜ் பி.செல்வம். இவர், திரைப்பட தயாரிப்பாளர் பன்னீர்செல்வத்தின் மகன்; தமிழக, பா.ஜ., இளைஞரணி தலைவர். அவரது வீடு மற்றும் அலுவலகத்தில், சில வாரங்களுக்கு முன் சோதனை நடந்தது. அதுபற்றி, வருமான வரித்துறையினர் கூறியதாவது: வினோஜ் செல்வம், தன்னிடம் உள்ள செல்லாத ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™