Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சசிகலா பதவியேற்பு தொடர்பான கவர்னர் அதிகாரத்தில்... முரண்பாடு!:இரு வேறு கருத்துக்கள் நிலவுவதால் தொடரும் குழப்பம்

Posted: 07 Feb 2017 08:52 AM PST

தமிழக முதல்வராக, சசிகலா பதவியேற்பது தொடர்பாக, எந்த உறுதியான தகவலும் வெளியாகாத நிலையில், பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து முடிவெடுக்க, அவகாசம் எடுத்துக் கொள்ள, கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், பல்வேறு தரப்பினர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதால், குழப்பம் தொடருகிறது.

அ.தி.மு.க., பொதுச் செயலராக பதவியேற்றுள்ள சசிகலாவை, கட்சியின் சட்டசபை தலைவராக ஏற்பதாக, கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, தமிழக முதல்வராக, சசிகலா, 9ல் பதவியேற்பார் என, கூறப்பட்டது. ஆனால், தமிழக கவர்னராக கூடுதல் ...

ஏழைகள் நலனுக்கான திட்டம்: பிரதமர் மோடி பெருமிதம்

Posted: 07 Feb 2017 08:58 AM PST

புதுடில்லி:செல்லாத நோட்டு திட்டம், மிகச் சரியான சமயத்தில் அமல்படுத்தப் பட்டுள்ள தாக, பிரதமர், நரேந்திர மோடி, லோக்சபாவில் கூறிஉள்ளார்.

லோக்சபாவில் நேற்று, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத் தில், பிரதமர், நரேந்திர மோடி அளித்த பதில்:நாட்டின் பொருளாதாரம் மிக வலுவான நிலையில் உள்ளது. செல்லாத நோட்டு திட்டம், மிகச்சரியான தருணத்தில் அமல்படுத்தப் பட்டுள் ளது. பொருளாதாரம் வலிமை குன்றி இருந்தால், செல்லாத நோட்டு திட்டத்தை, வெற்றிகரமாக அமல்படுத்தி இருக்க முடியாது. ஒரு டாக்டர், அறுவை சிகிச்சை செய்யும் முன், நோயாளியின் ...

ஜெ., ஆதரவு அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா ஏன்?

Posted: 07 Feb 2017 09:09 AM PST

ஜெ.,வால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருவது, அரசு வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., முதல்வராக இருந்த போது, தலைமைச் செயலராக பணியாற்றி, ஓய்வு பெற்ற ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கடரமணன், முதல்வர் அலுவலக செயலராக பணியாற்றினார்.மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, ஜெ.,க்கு எடுத்துரைத்து, அவருக்கு பெயர் கிடைக்க வழிவகுத்த, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக ...

சசிகலா அவசரம்: எம்.எல்.ஏ.,க்கள் கோபம்

Posted: 07 Feb 2017 09:18 AM PST

முதல்வர் பதவியை பிடிக்க, சசிகலா மேற்கொண்ட அவசர நடவடிக்கை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., மறைந்ததும், அ.தி.மு.க., பொதுச் செயலர் மற்றும் முதல்வர் பதவிக்கு, கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டது. ஜெ., இருந்த போதே, இரு முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார்.பொதுச் செயலர் பதவியில், சசிகலாவை அமர வைக்க, அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். அதற்காக, கட்சி நிர்வாகிகளை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எதிர்த்தவர்களுக்கு, முக்கிய பதவி வழங்கப்படும் என, வாக்குறுதி வழங்கப்பட்டது. பலர் ...

எம்.எல்.ஏ.,க்களை கண்காணிக்க சசிகலா உறவினர்கள் ஏற்பாடு

Posted: 07 Feb 2017 09:36 AM PST

சசிகலா முதல்வராவதை விரும்பாத, அ.தி. மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திசை மாறாமல் இருக்க, அவர்களை, சசிகலாவின் உறவினர் கள், ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமனம் செய்யப்பட்ட சசிகலா, முதல்வராக முடிவு செய்தார். அதன்படி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், சட்டசபை குழு தலைவராக, அவரை தேர்வு செய்தனர். பெரும்பாலானோர், விருப்ப மின்றி, சசிகலா உறவினர்களின் நெருக்கடியால் சம்மதித்துள்ளனர்.சசிகலா மீது அதிருப்தியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர்பன்னீர்செல்வம் உட்பட முக்கிய நிர்வாகிகள் யாரேனும், போர்க்கொடி துாக்கினால், அவர்கள் பக்கம் ...

அலங்காநல்லூரில் ஆளுங்கட்சி மல்லுக்கட்டு : கிராம மக்கள் சார்பில் புதிய விழா குழு

Posted: 07 Feb 2017 09:37 AM PST

அலங்காநல்லுார்: 'அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை, சசிகலா தலைமையிலான ஆளுங்கட்சி தான் நடத்த வேண்டும்' என, சசிகலா ஆதரவாளர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், புதிய விழாக் குழு ஒன்றை உருவாக்கினர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரில் ஒரு பிரிவினர், 'ஆளுங்கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்' என்றும், மற்றொரு பிரிவினர், 'கட்சி கலப்படம் இல்லாமல் நடத்த வேண்டும்' என்றும் விரும்புகின்றனர். இந்த முரண்பாட்டை போக்க, நேற்று கிராம மக்கள் கூட்டம் நடந்தது.
இதில், 'ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டை, ஆளுங்கட்சி தான் ...

நிச்சயமாக தேர்தலில் போட்டி: தீபா அறிவிப்பு

Posted: 07 Feb 2017 09:50 AM PST

சென்னை: ''ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், மர்மம் உள்ளது,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவருக்கு அளிக்கப்படும், சிகிச்சை குறித்த விபரங்களை கேட்டு வருகிறேன். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், மர்மம் உள்ளது என்பதை, நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஜெ., மறைந்து, இரண்டு மாதங்களுக்கு பின், நிருபர்களை சந்தித்து, மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்; அது ஏற்புடையதாக இல்லை. குடும்பத்தாரிடம் சிகிச்சை குறித்து தெரிவித்ததாக, மருத்துவர்கள் கூறியுள்ளனர்; ...

ஜெ., மரணம் இயற்கையானதல்ல என பி.எச்.பாண்டியன்...'குண்டு!' போயஸ் கார்டனில் கைகலப்பில் கீழே விழுந்ததாக புகார்: சொத்துக்களை மக்களுக்கே சொந்தமாக்க வலியுறுத்தல்: முதல்வராக சசிகலாவக்கு தகுதியில்லை என ஆவேசம்

Posted: 07 Feb 2017 10:04 AM PST

சென்னை:''ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல; போயஸ் கார்டனில் நடந்த கைகலப்பில் கீழே தள்ளி விடப்பட்டு, துாக்கி விடக்கூட ஆள் இல்லாமல், மயக்கம் அடைந்துள்ளார். அதன்பிறகே, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்,'' என, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ள பரபரப்பு புகார், அ.தி.மு.க., வட்டாரத்தில், அதிர்ச்சி குண்டை வெடிக்க செய்துள்ளது.

'முதல்வராவதற்கு, சசிகலாவுக்கு எந்த தகுதியும் இல்லை' என ஆவேசமாக பேசிய, பி.எச்.பாண்டியன், 'மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்களை, அவரின் விருப்பப்படி, மக்களுக்கே சொந்தமாக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தி உள்ளார்.சென்னை, அண்ணா ...

அ.தி.மு.க., பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பி.எஸ்., நீக்கம்

Posted: 07 Feb 2017 11:00 AM PST

சென்னை: அ.தி.மு.க., பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓ.பி.எஸ்., நீக்கம்:
ஜெ., சமாதிக்கு முன் தியானம் செய்த பன்னீர் செல்வம், தொடர்ந்து அளித்த அதிரடி பேட்டியை அடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் அவசரக்கூட்டம் போயஸ் கார்டனில் கூடியது. கூட்டத்துக்கு பின் அ.தி.மு.க., பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் போயஸ் ...

முதல்வர் பன்னீர் வழிகாட்டுதலில் அ.தி.மு.க., மறுமலர்ச்சி!:

Posted: 07 Feb 2017 11:31 AM PST

கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா செய்த சதியை, ஜெயலலிதா சமாதி முன், முதல்வர் பன்னீர்செல்வம் போட்டுடைத்தார். அவரிடம் இருந்து, முதல்வர் பதவியை பறிக்க, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதையும், அவர் அம்பலப்படுத்தினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், மன்னார்குடி கும்பல் நடத்திய தில்லாலங்கடி வேலைகளை யும், பகிரங்கமாக அவர் பட்டியலிட்டார். மக்கள் விரும்பும் ஒருவரே, கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை ஏற்க வேண்டும் என, ஆவேசமாக அறிவித்த பன்னீர்செல்வம், அதற்காக தன்னந்தனியே போராடுவதற்கும் தயார் என, சூளுரைத்தார். இதையடுத்து, முதல்வர் பன்னீர் ...

சென்னையில் காலை 10 மணிக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

Posted: 07 Feb 2017 11:39 AM PST

சென்னை : சென்னையில் இன்று(புதன் கிழமை) காலை 10 மணிக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ்., நீக்கம்:
ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டியை தொடர்ந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அவசரக்கூட்டம் போயஸ் கார்டனில் நடந்தது. கூட்டத்துக்கு பின் அ.தி.மு.க., பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்:
இதனை தொடர்ந்து இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு அ.தி.மு.க., ...

ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர்: தம்பிதுரை

Posted: 07 Feb 2017 11:44 AM PST

சென்னை: ‛பன்னீர் செல்வம் முதல்வராக இருக்க தகுதியற்றவர். அவரின் பின்னால் தி.மு.க., இருக்கிறது.' என தம்பிதுரை குற்றம்சாட்டி உள்ளார்.இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டி:பன்னீர் செல்வத்தின் பின்னால் தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க தி.மு.க., நடத்தும் நாடகம் தான் இது. ஸ்டாலின் அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளதிலிருந்தே தி.மு.க.,வின் பின்னணியை அறிந்து கொள்ளலாம்.3 முறை முதல்வராக இருந்தவர் நிர்பந்தத்தால் ராஜினாமா செய்ததாக கூறினால் அவர் முதல்வராக இருக்க தகுதியற்றவர். 134 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு சசிகலாவிற்கு ...

ஓ.பி.எஸ்., பின்னணியில் தி.மு.க., : சசிகலா குற்றச்சாட்டு

Posted: 07 Feb 2017 11:58 AM PST

சென்னை: ‛பன்னீர் செல்வத்தின் பின்னணியில் தி.மு.க., இருக்கிறது. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்'. என சசிகலா தெரிவித்தார்.இதுகுறித்து, சசிகலா போயஸ் தோட்டத்தில் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வில் எந்த பிரச்னையும் இல்லை. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள்.

ஓ.பி.எஸ்., பின்னணியில் தி.மு.க.,
பன்னீர்செல்வத்துடன் சுமூகமான உறவு இருந்தது.பன்னீர் செல்வத்தின் பின்னால் தி.மு.க., இருக்கிறது. காரணம், சட்டசபை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும், முதல்வர் பன்னீர் செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்து ...

என்னை யாரும் நீக்க முடியாது: ஓ.பி.எஸ்., பதிலடி

Posted: 07 Feb 2017 12:31 PM PST

சென்னை: ‛என்னை யாரும் நீக்க முடியாது' என பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு பதிலடி அளித்துள்ளார்.
அ.தி.மு.க., பொருளாளர் பதவியிலிருந்து நீக்கிய பின், செய்தியாளர்களை பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
மன நிறைவு:
அப்போது அவர் தெரிவித்தாவது: 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா என்னை பொருளாளர் பதவியில் நியமித்தார். பணியை நிறைவாக செய்திருக்கிறேன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது. ஸ்டாலினை பார்த்து சிரித்தது மிகப்பெரிய குற்றமாகாது. மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியும்; மிருகங்களால் சிரிக்க ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™