Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்

Posted: 07 Feb 2017 09:15 AM PST

ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம் 


கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா 
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார். 
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .


ரமணியன்  

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Posted: 07 Feb 2017 09:07 AM PST

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் நாலு மணிக்கு எழுப்பச் சொல்வான் நானும் பாடம் படிக்கணும்பான் நாலு மணிக்கு எழுப்பிவிட்டா நடு ஹால்ல தூங்கிவிழுவான் அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்வான் அனைத்துப் பாடமும் படிக்கணும்பான் அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டா அப்புறமா எழுப்பு என்பான் ஆறு மணிக்கு எழுப்பச் சொல்வான் அல்ஜீப்ரா போடணும் என்பான் ஆறு மணிக்கு எழுப்பி விட்டா அப்பக் கூட படிக்க மாட்டான் மாலை நேரம் படிக்கச் சொல்லி மரியாதையாய் சொன்னாக் கூட மணிக்கணக்கா புத்தகத்தை ...

காதலிக்கு மஞ்சள் ரோஸ் குடுக்கலாமா?

Posted: 07 Feb 2017 08:46 AM PST

- ரோஜா தினத்தின் கதை என்ன?: கிரேக்கப் புராணங்களில், "ஈரோஸ்" என்பவர் காதல் கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவரின் காதல் துணையான வீனஸிற்கு பிடித்த மலர் சிவப்பு ரோஜா. காதல் கடவுளின் காதலிக்கே பிடித்த ரோஜாவை நாம் கொண்டாடாமல் இருந்திட முடியுமா?. இதன் காரணமாகவே மனித காதலில் ரோஜாக்கள் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. அந்த ரோஜாக்களை தினம் எடுத்து நாம் கொண்டாடுகிறோம். இந்த ரோஜா தினத்தில் என்ன செய்யலாம்? ஓர் அழகான சிவப்பு ரோஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் அழகான உறவை, ரோஜாவின் ...

பழமைவாத நாடான சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாட்டம்

Posted: 07 Feb 2017 08:36 AM PST

ரியாத்: பழமைவாத நாடான சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட தடை, ஓட்டுனர் உரிமம் பெற அனுமதி மறுப்பு, ஆண்கள் துணையின்றி வெளியே செல்ல தடை போன்ற கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கைக்கு பெண் உரிமை ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சவூதி அரசு அதை கண்டுகொள்ளவில்லை. மேலும், சர்வதேச அளவில் பாலின சமத்துவம் அடிப்படையிலான தரவரிசையில் 145 நாடுகளில் சவூதி 134வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், சவுதி தலைநகரான ரியாத்தில் முதல் முறையாக பெண்கள் ...

அழுதுகொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் காலை உடைத்த வார்டு பாய்

Posted: 07 Feb 2017 08:29 AM PST

புதுடெல்லி: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்து மூன்றே நாட்களேயான குழந்தையின் கால்களை, மருத்துவ ஊழியரே உடைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவமனை சிசிடிவியில் பதிவான அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளளது. மருத்துவர்கள் குழந்தையை சோதனை செய்து பார்த்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை புகார் அளிக்க, போலீசார் மருத்துவனை சிசிடிவி ...

எனை நனைத்த மழை: –

Posted: 07 Feb 2017 08:23 AM PST

– "எனை நனைத்த மழை" யே எனக்கொரு பயனுமில்லை விதைத்த வித்து முளைக்க விவசாயி உயிர் மிஞ்சுமே – எனை நனைத்த மழை யால் என் தாகம் தீராது ஆயினும் நெருப்பு அனைய உதவும் அதிலும் உளது நன்மைகள் – சிகரத்தில் உருவாகும் நதி சமுத்திரத்தை போய்ச்சேர எத்தனை தூரம் என்று யாரையும் கேட்பதில்லை – உன்னால் முடியுமென முன்னால் சொன்னாலதை தன்னால் முடியும் என்று என்னால் உணர முடியாது – மனம் குன்றிப்போகையில் தன்னம்பிக்கை ஒன்றே "எனை நனைத்த மழை" என வெற்றி கண்டேன் – ———————- ஆபிரகாம் வேளாங்கண்ணி கவிதைமணி

பூனைக்கு டாட்டூ ரொம்பவே அநியாயம்…

Posted: 07 Feb 2017 08:22 AM PST

ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் டாட்டூ கலைஞர். தன் உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார். அவரிடம் முடிகளற்ற ஸ்பின்ஸ் பூனை ஒன்று இருக்கிறது. இதுவரை அந்தப் பூனையின் உடலில் 4 டாட்டூக்களை வரைந்திருக்கிறார். "டாட்டூ மீது அளவுக்கு அதிகமான ஆர்வம். பலவிதங்களிலும் பல தோல்களிலும் டாட்டூ பரிசோதனை மேற்கொண்டு வருகிறேன். பூனைக்கு அனஸ்தீசியா கொடுத்து, மயக்க நிலையில் வைத்துதான் டாட்டூ போடுவேன். சிறிது நேரத்திலேயே மயக்கத்திலிருந்து விழித்துவிடும். மனிதத் தோலைப் போலவே இந்தப் பூனையின் ...

எனை நனைத்த மழை ; லட்சுமிபாலா

Posted: 07 Feb 2017 08:21 AM PST

பிறிதொரு நாள் ஆதவன் தன் கிரணங்களால் பூமிதாயை ஆரத்தழுவிக் கொண்டிருந்தான் மேலைநாட்டுச் சட்டை போட்ட செய்தி படிக்கும் தமிழச்சி வறண்ட வானிலை என படம் காட்டி மறைந்தாள் – மிளகாய் வத்தலும் தனியாவும் பொடியாக காய்ந்தன வாயில் கோலத்தில் சூரியனை வணங்கி குமரன் ஒருவன்ஆரம்பித்தான் தன் இளநீர் வியாபாரத்தை – குடையுடன் சென்ற கிழவரை நமுட்டுச் சிரிப்புடன் கடந்தேன் மெல்லிய தென்றல் ஒன்று உடல் தழுவ கதிரவனை புறந்தள்ளி பூமித்தாயை மெல்ல நனைக்க ஆரம்பித்தான் வருண தேவன் – நானும் நனைத்தேன் சொட்ட சொட்ட கிழவரின் ...

தவமாய் தவமிருந்து..

Posted: 07 Feb 2017 08:20 AM PST

அன்புக்குப் பணிந்து…

Posted: 07 Feb 2017 08:19 AM PST

பெய்யும் மழையின் அழகு…!

Posted: 07 Feb 2017 08:18 AM PST

பசுமைச் சுவர்கள்

Posted: 07 Feb 2017 08:17 AM PST

பசுமைச் சுவர்கள் பச்சை வண்ணம் தீட்டப்பட்ட சுவர்கள் அல்ல. அவை பசுமைத் தாவரங்களால் சூழப்பட்ட சுவர்கள். நினைத்தாலே இனிக்கும் இப்படியொரு ஐடியாவுக்கான காப்புரிமையைப் பெற்றவர் பாட்ரிக் ப்ளான்க் என்ற பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபல தாவரவியலாளர். இவர் காப்புரிமை பெற்றது நெடுக்கு திசை தோட்டம் என்பதற்காக. பண்டைய ஏழு அதிசயங்களில் ஒன்றான பாபிலோனியாவின் தொங்கும் தோட்டம் குறித்து நாம் கேள்விப் பட்டதுண்டு. நம்மில் சிலர் வீடுகளில் மணி பிளாண்ட் வளர்த்து வருவோம். அவை சுவர்களின் மீதும் படர்வது உண்டுதான். ...

ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை:

Posted: 07 Feb 2017 08:16 AM PST

- கிரே ஹெட்லேப் விங் பறவை -- விருதுநகர் மாவட்டம், ராஜபாளை யம் பகுதியில், தற்போது 268 அரிய வகை பறவையினங்கள் பல்வேறு இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது ராஜபாளையம். இந்த பருவகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல அரிய வகை நீர்ப் பறவைகள் மற்றும் காட்டுப் பறவைகள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் தஞ்சம் அடைவது வழக்கம். அதிக உயிர் பல்வகைத் தன்மை கொண்ட (தாவ ரம், விலங்குகள்) ...

விமானத்தில் கடத்திய சிறுமியை காப்பாற்றிய விமான பணிப்பெண்

Posted: 07 Feb 2017 08:10 AM PST

- அமெரிக்காவில் இயங்கி வரும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஷீலா பெர்டரிக்(49) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சீட்டில் நகரிலிருந்து விமானத்தில் பயணம் செய்தபோது 14 வயதுடைய சிறுமியை பார்த்துள்ளார். சிறுமிக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் நாகரீக உடையிலும், சிறுமி பழுதான ஆடையையும் உடுத்தியிருந்ததால் பணிப்பெண்ணிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தீர்த்துக்கொள்ள சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். ஆனால், சிறுமியிடம் ...

மாணவிகளை அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்ற தலைமை ஆசிரியை

Posted: 07 Feb 2017 08:07 AM PST

வாரனாசி உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இதன் தலைமை ஆசிரியை மீனா சிங். இந்த் பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவிகள் சிலர் வீட்டுப் பாடம் செய்யவில்லை இதனால் கோபம் அடைந்த மீனா சிங் மாணவிகளை அரை நிர்வாணபடுத்தி பொஅள்ளி மைதானத்தில் ஊர்வலமாக வரவைத்து உள்ளார். இந்த காட்சிகள் மொபைல் போனில் படமாகவும் எடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டுபாடத்தை ஒழுங்காக செய்யவில்லை என்றால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். இந்து ...

கிரிக்கெட் போட்டிகளுக்கான இலவச பாஸ்கள் எங்கு, யாருக்குச் செல்கின்றன?: லோதா கேள்வி

Posted: 07 Feb 2017 08:04 AM PST

- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பூடகமான செயல்களையும் ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லோதா கமிட்டி, கிரிக்கெட் வாரியங்கள் போட்டியில் டிக்கெட் வருவாய் மற்றும் இலவச பாஸ் விநியோக ஆகிய விவரங்களை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "இலவச பாஸ்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய டிக்கெட் அளவைக் குறைக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் டிக்கெட் விற்பனை மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டப்படுகிறது என்பதையும் மக்களுக்கு ...

என் அறிமுகம்

Posted: 07 Feb 2017 07:04 AM PST

பெயர்: சுஜாதா கார்த்திகேயன்
சொந்த ஊர்:திருச்சிராப்பள்ளி
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் தேடும்போது  கிடைத்தது
பொழுதுபோக்கு: புத்தகம் வாசித்தல் ,பாட்டு கேட்பது
தொழில்:இல்லத்தரசி
மேலும் என்னைப் பற்றி:பிராங்பேர்ட்டில்   கணவருடன் வசித்து வருகிறேன்

ஜோதிடம் என்பது அறிவியலா?

Posted: 07 Feb 2017 06:53 AM PST

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 07 Feb 2017 02:09 AM PST

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™