Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு... எச்சரிக்கை!:கொள்கையை விமர்சித்தால் நடவடிக்கை

Posted: 06 Feb 2017 08:11 AM PST

புதுடில்லி:'அரசின் கொள்கைகள், நடவடிக்கை களை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்' என, மத்திய அரசு ஊழியர்களுக்கு, மத்திய நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை கொண்டு வர, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக எடுக்கப்பட்ட சில கொள்கை முடிவுகளை எதிர்த்து, சுங்கம் மற்றும் கலால் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர் சங்கங்கள் விமர்சனம்
அதைத் தொடர்ந்து, ஊழியர் சங்கங்களுக்கு, நிதி அமைச்சகம் சார்பில் ஒரு கடிதம் ...

'ஜெ., உடலில் இருந்து கால்களை அகற்றவில்லை' லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே விளக்கம்

Posted: 06 Feb 2017 08:45 AM PST

சென்னை:''அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, அவரது உடலில் இருந்து, எந்த உறுப்பையும் அகற்றவில்லை,'' என, டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப் பட்டன. அதனால், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, சென்னை, நுங்கம் பாக்கம், தனியார் ஓட்டலில், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே, நேற்று விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:நோய் தொற்று காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே, சர்க்கரை நோய், ரத்த ...

ஜெ., வீட்டில் வேலை செய்த சசிகலாவை எப்படி ஏற்றுக்கொள்வர்? அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் முனுசாமி ஆவேசம்

Posted: 06 Feb 2017 09:05 AM PST

கிருஷ்ணகிரி:''ஜெயலலிதா வீட்டில் வேலை செய்த சசிகலாவை, மக்கள் எப்படி முதல்வராக ஏற்று கொள்வர்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

காவேரிப்பட்டணத்தில் அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., சட்டசபை உறுப்பினர்கள், சட்டசபை குழு தலைவராக சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளனர். 'ஜெயலலிதா இல்லத்தில் வேலை செய்கிறேன்' என்ற போர்வையில், சசிகலாவும் நடராஜனும் ஜெயலலிதாவின் பதவியை கைப்பற்ற திட்டம் தீட்டி வந்துள்ளது நன்றாகவே புலப்படுகிறது.ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்றால், அவர்கள் பிராயச்சித்தம் தேடியே ஆக ...

கலசம் வழங்கி பதவியை இழந்த ஓ.பி.எஸ்., தொடரும் தி.மலை கோவில் 'சென்டிமென்ட்'

Posted: 06 Feb 2017 09:10 AM PST

திருவண்ணாமலை:அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலசம் வழங்கிய, முதல்வர் பன்னீர்செல்வம், பதவியை இழந்துஉள்ளதால், 'சென்டிமென்ட்' தொடர்வதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு அரசியல்வாதிகள் வந்து சென்றால் பதவி பறிபோகும் என்பதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இந்த கோவிலுக்கு வருவதை தவிர்த்து வந்தார்.கடந்த, 2011 அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக, 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி பதவியேற்ற முதல் ஆண்டு, அருணாச்சலேஸ்வரர் கோவில் தீபத்திற்கு வந்து சென்றார். மறு ஆண்டு தீபத் திருவிழா வருவதற்குள், அவர் அமைச்சர் பதவியை இழந்து, ...

சசிகலாவை விரும்பாத 40 எம்.எல்.ஏ.,க்களால் அ.தி.மு.க., உடையும்!:தனி அணியாக செயல்பட்டு தி.மு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு :நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஆட்சியை கவிழ்க்க திட்டம் :வாய்ப்பை சாதகமாக்க மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

Posted: 06 Feb 2017 09:19 AM PST

முதல்வராக சசிகலாவை விரும்பாத, 40 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டு, திமு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர். 'இந்த வாய்ப்பை சாதகமாக்கி, நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னரிடம் அனுமதி கேட்க தயாரா வோம்' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து, பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். எளிமையான முதல்வராக, மக்கள் விரும்பும் வகையில், செயல்பட்டு வந்தார். அவரே, முதல்வராக தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் இருந்தது.பன்னீருக்கு ...

சொத்து வழக்கில் சசி கூட்டம் தப்பிக்குமா?:அடுத்த வாரத்தில் தீர்ப்பு

Posted: 06 Feb 2017 09:23 AM PST

'மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா அவரது தோழி, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, அடுத்த வாரம் அளிக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக் கின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என, தற்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு நடந்து வருகிறது.
ஒத்திவைப்பு
இந்த வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி, ஜான் மைக்கேல் டி குன்ஹா, 2014, ...

கவர்னர் தமிழகம் வருகை ரத்து: சசிகலா 'அப்செட்!'

Posted: 06 Feb 2017 09:24 AM PST

கவர்னரின் தமிழகம் வருகை ரத்து செய்யப் பட்டது, சசிகலா மற்றும் அவரது உறவினர் களிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, உடனடியாக முதல் வராக பதவியேற்க முடிவு செய்தார். பதவி யேற்பு விழாவிற்காக, சென்னை பல் கலையில் உள்ள, நுாற்றாண்டு விழா அரங்கை தயார் செய்யும் பணி, நேற்று காலை துவக்கப்பட்டது.தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று காலை, கோவை பாரதியார் பல்கலையில் நடை பெறும் விழாவில் பங்கேற்க வருவதாக இருந்தது. விழா முடிந்து, சென்னை திரும்பியதும், இன்று மாலை, பதவியேற்பு விழா நடைபெறும் என, ...

சசிகலா தலைமையில் ஜல்லிக்கட்டா: கொதிக்கும் போராட்ட இளைஞர்கள்

Posted: 06 Feb 2017 09:28 AM PST

மதுரை:''அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு, சசிகலா தலைமையில் நடந்தால், நாங்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களில் ஒருவர் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்,'' என, ஜல்லிக் கட்டு போராட்ட இளைஞர்கள் மதுரையில் தெரிவித்தனர்.

மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடு பட்ட மகேஸ்வரி, கரிகாலன், வசீர், கிஷோர், நிவாஸ், ரமேஷ் கூறியதாவது: 'சசிகலா முயற்சியில் தான் ஜல்லிக்கட்டு நடக்கிறது' என, ஆளும்கட்சியினர் தவறாக பிரசாரம் செய்து வருகின்றனர். இது, ஒட்டுமொத்த தமிழர்களின் முயற்சிக்கு கிடைத்தவெற்றி; இந்த வெற்றியை சொந்தம் கொண்டாட, எந்த அரசியல் வாதிக்கும் உரிமை ...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது?:அரசு பதிலளிக்க உத்தரவு

Posted: 06 Feb 2017 09:32 AM PST

மதுரை:'அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிப் படி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும்?' என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாய் பீடி சுற்றும் தொழிலாளி. அவரிடம் மது அருந்த பணம் கேட்டு சக்திவேல் தொந்தரவு செய்தார். மறுத்ததால் தாயை கத்தியால் குத்தியதாக, சக்திவேல் கைது செய்யப்பட்டார்.ஜாமின் கோரி உயர்நீதிமன்றக் கிளையில் சக்திவேல் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார்.'மனுதாரர் இரு வாரங்களுக்கு போலீசில் ஆஜ ராகி ...

பெங்களூரு 'ஏர் ஷோ'வை தகர்க்க சதி?

Posted: 06 Feb 2017 10:42 AM PST

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற உள்ள 'ஏர் ஷோ'வை தகர்க்க சதி நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விமான சாகசங்கள்:
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பெங்களூரு கிழக்கு மண்டல, போலீஸ் அதிகாரி, ஹரீஷ், நிருபர்களிடம் கூறியதாவது : எலஹங்கா விமானப்படை பயிற்சி நிலைய மையத்தில், 14 முதல், 18 வரை விமான கண்காட்சி மற்றும் விமான சாகசங்கள் நடக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகளில் பலர் பணியாற்றி வருகின்றனர்.
சந்தேகம்:
உத்தர ...

கவர்னர் மாளிகை முன்பு கூடுதல் பாதுகாப்பு

Posted: 06 Feb 2017 11:14 AM PST

சென்னை : கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகை முற்றுகையிட வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு:
சென்னை-கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையான ‛ராஜ்பவன்' முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையை முற்றுகையிட வாய்ப்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு:
சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் ...

பிப்., இறுதி வரை குளிர் நீடிக்கும்

Posted: 06 Feb 2017 01:07 PM PST

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து, ஜன., 5 முதல், குளிர்காலம் நிலவுகிறது. துவக்கத்தில் குளிர் குறைவாக இருந்தது. பின், படிப்படியாக அதிகரித்து, வெப்பநிலை குறைந்துள்ளது.
இதில் ஊட்டியில், வெப்பநிலை, 8 டிகிரி செல்சியசாக குறைந்து, கடும் குளிர் வாட்டுகிறது. அதே போல, தர்மபுரியில், 16; வேலுாரில், 16; சேலத்தில், 17 டிகிரி செல்சியஸ் என, வெப்பநிலை இயல்பான அளவை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து, அதிகாலை நேரங்களில் பனிக்காற்று வீசுகிறது. மதுரையிலும், காலை நேரத்தில் வெப்பநிலை குறைந்து, நேற்று குறைந்தபட்சமாக, 19 டிகிரி செல்சியஸ் பதிவானது.
சென்னை, ...

தேவையில்லாத 1,159 சட்டங்கள் நீக்கம்

Posted: 06 Feb 2017 02:07 PM PST

புதுடில்லி : தற்போதைய காலகட்டத்துக்குப் பொருத்தமில்லாத 1,159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பார்லி.,யில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

சட்டங்கள் நீக்கம்:
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்ததாவது: நடைமுறைக்கு உதவாத, பயன்பாட்டில் இல்லாத 1,159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் 400 சட்டங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரகசிய ஆவணங்கள்:
நேதாஜி சுபாஷ் ...

அசாம் சட்டசபை விவாதத்தை ஒளிபரப்பிய எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்'

Posted: 06 Feb 2017 02:59 PM PST

கவுகாத்தி : சட்டசபையில் நடந்த விவாதத்தை, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், நேரடியாக ஒளிபரப்பிய, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, ஏ.ஐ.யு.டி.எப்., கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,வான, அமினுல் இஸ்லாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நேரடி ஒளிபரப்பு:
அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபை கூட்டத்தில், தான் பங்கேற்ற விவாதத்தை, ஏ.ஐ.டி.யு.எப்., - எனப்படும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,வான அமினுல் இஸ்லாம், பேஸ்புக் சமூக வலைதளத்தில் நேரடியாக ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™