Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 06 Feb 2017 11:06 AM PST

என் முகவரி

muthusimpu@gmail.com

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 06 Feb 2017 10:25 AM PST

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

வித விதமான கோணத்துல செல்ஃபி எடுத்துட்டு இருந்தேன் சார்…!

Posted: 06 Feb 2017 09:53 AM PST

உங்க உடம்புல இருந்த நகைகளை திருடன் கழட்டற வரைக்கும் என்னம்மா, செஞ்சுட்டு இருந்த? – வித விதமான கோணத்துல செல்ஃபி எடுத்துட்டு இருந்தேன் சார்…! – வெ.ராம்குமார் ——————————— தலைவர் ஆவேசமா பீட்டா பத்தி பேசும்போது அங்க என்ன சலசலப்பு..? – பேசினபடி இன்னும் பேட்டா வரலையாம்! – பாலா சரவணன் – ————————————- – என்ன டாக்டர்…ஆஸ்பிட்டல் பில்லைப் பார்த்தாலே தலை சுத்துது…? – டோன்ட் ஒர்ரி…அதுக்கும் சேர்த்தே மாத்திரை எழுதி இருக்கேன்…! – ஆர்.லட்சுமி நாராயணன் – ———————————– –குங்குமம்

அமுத மொழிகள் - தொடர் பதிவு

Posted: 06 Feb 2017 09:49 AM PST

"என் ஓட்டு உனக்கில்லை.."

Posted: 06 Feb 2017 09:48 AM PST

"என் ஓட்டு உனக்கில்லை.." சென்னை: "என் ஓட்டு உனக்கில்லை.." என்ற பாடலுடன் போயஸ் கார்டன் நோக்கி பாடகி சோபியா அஷ்ரப் மற்றும் அவரது இசைக் குழுவினர் நடை பயணம் மேற்கொண்ட சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அதிருப்தியடைந்த சோபியா குழுவினர், போயஸ் இல்லம் நோக்கி பாடியபடியே பயணித்தனர். அவரது பேஸ்புக் பக்கத்தில் இது லைவாக காண்பிக்கப்பட்டது. Popular Videos 01:13 சசிகலா தகுதியற்றவர்-துக்ளக் குருமூர்த்தி ...

பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்!

Posted: 06 Feb 2017 09:47 AM PST

- சிரிக்கும் போது பற்கள் வெண்மையாக பளீரிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது! ஆனால் பெரும்பாலனவர்களுக்கு பற்கள் வெண்மையாக இருப்பதில்லை. இயற்கையில் பல் மருத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் மனிதப் பற்களின் நிறம் எப்போதுமே, யாருக்குமே பளீரிடும் வெண்மை நிறத்தில் இருப்பதில்லை என்பதே நிஜம். அவரவர் சார்ந்துள்ள நிலப்பகுதி, சீதோஷ்ண நிலை, அவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் கரைந்துள்ள மினரல்கள் அடிப்படையில் மனிதர்களுக்கு பற்களின் நிறங்கள் அமைகின்றன. இயற்கை பற்களின் ...

இந்திய சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேரு நினைவு தினம் இன்று!

Posted: 06 Feb 2017 09:45 AM PST

- 06.02.1920: இந்திய சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேரு நினைவு தினம் இன்று! – மோதிலால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரும், இந்திய சுதந்திர போராட்ட வீரரும் ஆவார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் தந்தையும் ஆவார். இவர் 1861ம் ஆண்டு மே மாதம் காஷ்மீரி பண்டித் குடும்பத்தில் பிறந்தார். ஜெய்ப்பூரில் வசித்து வந்த இவரது தந்தை, தில்லியில் காவலராக பணிபுரிந்தார். இவரது பாட்டனார், ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீஹிமன்றத்தில் வழக்கறிஞராயிருந்தவர். மோதிலால் ...

முகநூலால் உடல், மனநலனுக்கு பாதிப்பு!

Posted: 06 Feb 2017 09:45 AM PST

முகநூலால் உடல், மனநலனுக்கு பாதிப்பு! - முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளத்தை அதிக அளவில் பயன்படுத்துபவர்களுக்கு, உடல் மற்றும் மனநல பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடிமியாலஜி' ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சான் டியேகோ நகரின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சராசரியாக 48 வயதுடையவர்களின் முகநூல் பயன்பாடு குறித்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் ...

‘அத்தை பருவமே அதிக ஆனந்தம் தருகிறது..’ - நடிகை கரீஷ்மா கபூர் நெகிழ்ச்சி

Posted: 06 Feb 2017 09:39 AM PST

- கரீஷ்மா கபூர் இந்தி திரை உலகின் முன்னாள் கவர்ச்சிக் கன்னியாக இருந்தாலும், இப்போதும் அதே அழகு- ஆளுமை- தோற்றத்துடன் வலம் வருகிறார். குடும்பத்தலைவியாகி, பொறுப்புள்ள தாயாக தனது குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். அவர் தனது கணவர் சஞ்சயை கடந்த ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். மகள் சமீராவிற்கு 12 வயது. மகன் கியான் வயது 7. விளம்பர தூதர், விளம்பர படங்களில் நடிப்பவர், எழுத்தாளர், தொழிலதிபர் போன்ற பல நிலைகளில் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் அவரிடம் சில கேள்விகள்: நடிகையாக இல்லாத தற்போதைய ...

சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு

Posted: 06 Feb 2017 07:23 AM PST

புதுடெல்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அறிவிக்கும் வரை சசிகலாவுக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலாவை தலைவராக தேர்ந்தெடுத்து, அவரிடம் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்கவும் கோரிக்கை ...

உலகின் நீண்டதூர விமான சேவை

Posted: 06 Feb 2017 07:06 AM PST

தோகா: கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து வரை எங்கும் நிற்காமல் செல்லும் விமான சேவையை கத்தார் ஏர்வேஸ் நேற்று தொடங்கியது. 16 மணி நேரம் 20 நிமிட பயணத்துக்குப்பின் அந்த விமானம் ஆக்லாந்தை சென்றடைந்தது. இதுதான் தற்போது உலகின் நீண்ட தூரம் விமான சேவை. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் துபாயிலிருந்து, ஆக்லாந்து செல்ல எங்கும் நிற்காமல் செல்லும் விமான சேவையை கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கியது. துபாயிலிருந்து ஆக்லாந்துக்கு 14,200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செல்ல வேண்டும். ...

சீனாவில் மசாஜ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: தீயில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

Posted: 06 Feb 2017 06:30 AM PST

சீனா: மசாஜ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சீஜியாங் மாகானம் தைவூ நகரில் உள்ள மசாஜ் நிலையத்தில் இந்த தீ விபத்து நடந்துள்ளது. தரைத்தளத்தில் பற்றிய தீயானது அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் பரவியது. மாடிகளில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். கார்கள், இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின. காற்றின் வேகத்தால் பரவிய தீயின் உக்கிரத்தில் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த ...

இந்தியாவை அச்சுறுத்த 1,000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சீன தயாரிப்பு

Posted: 06 Feb 2017 06:22 AM PST

பெய்ஜிங், சீனாவில் தற்போது இளவேனிற்காலம் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பருவ காலத்தையும் சீனா வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி இளவேனிற்கால விழா தலைநகர் பெய்ஜிங் நகரில் அண்மையில் நடந்தது. அப்போது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தயாரித்த பல்வேறு புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. அதில் சீன ராணுவத்தால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் படைப் பிரிவின் வீடியோ காட்சி ஒன்றும் இடம் பெற்றது. அதில் ...

இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Posted: 05 Feb 2017 11:54 PM PST

நடராஜனுக்கு உடல் நலக்குறைவு - அப்பல்லோவில் அனுமதி
-

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நேற்று மாலை உடல்
நலக்குறைவு ஏற்பட்டது. உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக,
அவர் சோர்வடைந்ததாக கூறப்படுகிறது.

எனவே, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் தங்கி ஓரிரு நாட்கள் சிகிச்சை
எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.
-
வெப்துனியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Posted: 05 Feb 2017 07:03 PM PST

- டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த ராம்குமாரை கொண்டாடிய சகவீரர்கள். ----------------------------------------------------------- டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா – டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா 4-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியைத் தோற்கடித்தது. இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஆசிய-ஓசியானியா குரூப் 1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி புணேவில் கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இதில் முதல் நாளில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் ...

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது

Posted: 05 Feb 2017 06:56 PM PST

- திருப்பரங்குன்றம், தெப்பத்திருவிழா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 27–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி கடந்த 10 நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளி நகர்உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தெப்பஉற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி காலை 9 மணியளவில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் ...

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Posted: 05 Feb 2017 05:57 PM PST

- டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த ராம்குமாரை கொண்டாடிய சகவீரர்கள். -------------------------------------- டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா - டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா 4-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியைத் தோற்கடித்தது. இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஆசிய-ஓசியானியா குரூப் 1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி புணேவில் கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இதில் முதல் நாளில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் ...

சென்னையில் நாளை முதல் 28 வரை தடுப்பூசி சிறப்பு முகாம்

Posted: 05 Feb 2017 05:44 PM PST

சென்னை மாநகரில் தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் பிப்ரவரி 6 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் மேலும் கூறியதாவது:- மாநகரில் உள்ள 2,280 பள்ளிகள், 1336 அங்கன்வாடி மையங்களில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது சிறுவர்கள் வரை முகாம்கள் நடைபெறும். ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருந்தாலும், கூடுதலாக ஒரு தவணை தட்டம்மை-ரூபெல்லா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™