Tamil News | Online Tamil News |
- ஆட்சிக்காக எதையும் ஏற்பார் அகிலேஷ்:பிரதமர் மோடி குற்றச்சாட்டு
- பா.ஜ.,வுடன் மீண்டும் இணைய நிதிஷ்குமார்...தயார்? :தாமரைக்கு வர்ணம் பூசியதால் எழுந்தது சர்ச்சை
- சசிகலா முதல்வரா? பொதுமக்கள் கொந்தளிப்பு
- அ.தி.மு.க., தொண்டர்கள் எதிர்ப்பை மீறி முதல்வராகிறார்... சசிகலா!:எம்.எல்.ஏ.,க்கள் ஏகமனதாக தேர்வு செய்ததாக அறிவிப்பு :பிடரியில் பின்னங்கால் பட, ஓ.பி.எஸ்., ஓட்டம்
- 10 மாதங்களில் 3வது முதல்வர்: சசி பதவியும் நித்திய கண்டம் தான்
- ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் பதவி சசிகலா முடிவால் மந்திரிகள் பலர் கலக்கம்
- முதல்வராக சசிகலா தேர்வு: கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு
- ஜெ., விசுவாசிக்கு அமைச்சர் 'கும்மாங்குத்து'
- அடுத்தகட்ட விசாரணையை சந்திக்க உள்ள சசி மீதான அன்னிய செலாவணி வழக்குகள்
- 'ஓட்டு போடாதவர்கள் அரசை விமர்சிக்க உரிமையில்லை'
- டிரம்ப் உத்தரவுக்கான தடையை நீக்க அமெரிக்க கோர்ட் மறுப்பு
- 3ல் ஒரு பங்கு மட்டுமே நிறைவேறிய அமைச்சர்களின் வாக்குறுதிகள்
- மகனை அமைச்சராக்குகிறார் சந்திரபாபு நாயுடு
| ஆட்சிக்காக எதையும் ஏற்பார் அகிலேஷ்:பிரதமர் மோடி குற்றச்சாட்டு Posted: 05 Feb 2017 07:41 AM PST அலிகார்:''ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற் காக, எந்த வகையில் உதவி கிடைத்தாலும், ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு, உ.பி., முதல்வர், அகிலேஷ் தள்ளப்பட்டுள்ளார்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், வரும், 11 முதல் மார்ச், 8 வரை, ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க வுள்ளது. இதற்காக, சமாஜ்வாதி, பா.ஜ., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகின்றன.நிர்பந்தம் இந்நிலையில், அலிகாரில் பா.ஜ., சார்பில் நடந்த பொது கூட்டத்தில்,பிரதமர் மோடி பேசிய ... |
| பா.ஜ.,வுடன் மீண்டும் இணைய நிதிஷ்குமார்...தயார்? :தாமரைக்கு வர்ணம் பூசியதால் எழுந்தது சர்ச்சை Posted: 05 Feb 2017 08:46 AM PST பாட்னா:பாட்னாவில் நடந்த புத்தகக் கண் காட்சியில், பா.ஜ.,வின் தேர்தல் சின்னமான தாமரைக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வர்ணம் பூசியது, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் மீண்டும் இணைவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே, நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., கூட்டணி அரசு அமைந்து உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக் ... |
| சசிகலா முதல்வரா? பொதுமக்கள் கொந்தளிப்பு Posted: 05 Feb 2017 09:06 AM PST சசிகலா நடராஜன், உடன் பிறவா சகோதரி, முதல்வரின் தோழி, சின்னம்மா என்று, அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்த சசிகலா, இப்போது, முதல்வரின்இருக்கையையும் தட்டி பறித்து விட்டார். இது குறித்து, தமிழகம் முழுவதும், மக்களின் கருத்துக்களை கேட்டோம். அதன் விபரம்:அரசியலுக்கு வருவதற்கான எந்த தகுதியும், சசிகலாவுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதாவுடன், 30 ஆண்டுகளாக இருந்தார் என்பது, பதவிக்கான தகுதியா? அவர் மீது நம்பிக்கை இருந்திருந்தால், ஏதாவது பொறுப்பையோ, பதவியையோ ஜெயலலிதா கொடுத்திருப்பாரே. -எம்.ஹேமந்த் குமார், 29, மென்பொறியாளர், திருவொற்றியூர்.எங்களை ... |
| Posted: 05 Feb 2017 09:15 AM PST தொண்டர்கள் எதிர்ப்பை மீறி, முதல்வராகிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா. அதற்கு வசதியாக, கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், சட்ட சபை குழு தலைவராக அவரை தேர்வு செய்துள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. எளிமையான முதல்வர் என, பெயர் எடுத்த முதல்வர் பன்னீர் செல்வம், பிடரியில் பின்னங்கால் பட, ஓட்டம் பிடித்துள்ளார். முதல்வராக இருந்த, அ.தி.மு.க., பொதுச் செய லர் ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்து வந்த, முதல்வர் பதவி மற்றும் அ.தி. மு.க., பொதுச் செயலர் பதவியை கைப்பற்ற, சசிகலா வும், அவரின் சொந்தங் களும் முயற்சி எடுத்த னர். முதல்வராகும் முயற்சிக்கு, மத்திய அரசு, உடனே முட்டுக்கட்டை ... |
| 10 மாதங்களில் 3வது முதல்வர்: சசி பதவியும் நித்திய கண்டம் தான் Posted: 05 Feb 2017 09:17 AM PST தமிழகம், 10 மாதங்களில், மூன்றாவது முதல்வரை சந்திக்கப் போகிறது. கடந்த, 2016, மே மாதத்தில், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயலலிதா; உடல் நலம் சரியில்லாமல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பின், அவரது உடல் தான், போயஸ் தோட்டத்துக்கு திரும்பியது.இரண்டு மாதங்கள் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து, 2016, டிசம்பர் 5 நள்ளிரவு, முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற் றது முதல், 'சசிகலா தான் முதல்வராக வர வேண்டும்' என, கட்சியின் முன்னணி தலைவர் கள், ஆளாளுக்கு பேட்டி கொடுத்து வந்தனர். ... |
| ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் பதவி சசிகலா முடிவால் மந்திரிகள் பலர் கலக்கம் Posted: 05 Feb 2017 09:20 AM PST சசிகலா முதல்வராக பதவியேற்கும் போது, தற்போதைய அமைச்சர்களில், சிலரின் பதவியை பறித்து, அவர்களுக்குப் பதிலாக தன் ஆதரவாளர்களை அமைச்சராக்க திட்டமிட்டுள் ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது, தற்போதைய, மந்திரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த வர்களே, பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப் பேற்ற போது,அவரது அமைச்சரவையில் இடம் பெற்றனர். ஜெ., அமைச்சரவை பட்டியலை மாற்ற, அவர் விரும்பவில்லை. இந்நிலையில், சசியின் நெருக்கடி காரணமாக, அவர் தன் முதல்வர் பதவியை துறந்துள்ளார்; புதிய முதல்வராக ... |
| முதல்வராக சசிகலா தேர்வு: கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு Posted: 05 Feb 2017 09:26 AM PST சென்னை:தமிழக முதல்வராக, அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலாவை தேர்வு செய்ததற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: சொத்து குவிப்பு வழக்கினால், ஜெயலலிதா பதவி விலகிய போதும் சரி, உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்ட போதும் சரி, பன்னீர்செல்வத்தை தான் முதல்வராக தேர்வு செய்தார். சசிகலாவிற்கு கட்சியில், எந்த பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் வழங்கவில்லை. சசிகலாவை, அ.தி.மு.க.,வினர் தேர்வு செய்தது, ஜெயலலிதா வின் விருப்பத்திற்கு எதிரானது. மக்கள் எண்ணத்திற்கு விரோதமான செயல். ... |
| ஜெ., விசுவாசிக்கு அமைச்சர் 'கும்மாங்குத்து' Posted: 05 Feb 2017 09:29 AM PST அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவின் போஸ்டரை கிழித்த, ஜெயலலிதாவின் விசு வாசியை, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சரமா ரியாக தாக்கிய சம்பவம், கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, அடையாறு, கிரீன்வேஸ் சாலை யில், முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர் கள், நீதிபதிகளின் பங்களாக்கள் உள்ளன. அப் பகுதியில், சசிகலாவை வாழ்த்தி, பல இடங் களில், கட்சியினர் போஸ்டர் ஒட்டியிருந்த னர்.போஸ்டரில் இருந்த, சசிகலா படத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசி ஒருவர், கிழித்துள்ளார். அப்போது, அவ்வழி யாக வந்த அமைச்சர். ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா ... |
| அடுத்தகட்ட விசாரணையை சந்திக்க உள்ள சசி மீதான அன்னிய செலாவணி வழக்குகள் Posted: 05 Feb 2017 09:43 AM PST சொத்து குவிப்பு வழக்கு கடைசி கட்டமாக, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்கிறது. அதே நேரத்தில், சசிகலா மீது மத்திய அமலாக்கப் பிரிவு தொடுத்த வழக்குகள்,சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணையை சந்திக்க உள்ளன. கொலை, கொள்ளை வழக்குகளை விட, பொருளாதார குற்ற வழக்குகள் கடுமையாக கருதப்படுகின்றன. இந்த குற்றங்கள், நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் என்பதால் நாட்டுக்கு எதிரான குற்றமாக சித்தரிக்கப் படுகின்றன.வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதத்தின் படி, இந்தியன் வங்கியிலிருந்து, சென்னையை சேர்ந்த, பரணி பீச் ... |
| 'ஓட்டு போடாதவர்கள் அரசை விமர்சிக்க உரிமையில்லை' Posted: 05 Feb 2017 11:49 AM PST புதுடில்லி:'தேர்தலில் ஓட்டு போடாதவர்கள், அரசை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.நாடு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, 'இந்தியாவின் குரல்' என்ற அரசு சாரா அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, 'நாடு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, மத்திய - மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என, அந்த ... |
| டிரம்ப் உத்தரவுக்கான தடையை நீக்க அமெரிக்க கோர்ட் மறுப்பு Posted: 05 Feb 2017 01:01 PM PST வாஷிங்டன்:ஈரான் உட்பட, ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கும், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் உத்தரவுக்கு கோர்ட் விதித்த தடையை நீக்க, மேல்முறையீட்டு கோர்ட் மறுத்துள்ளது.அமெரிக்க அதிபராக, சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள, டொனால்டு டிரம்ப், ஈராக், ஈரான்,சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஏமன் ஆகிய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள்,அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்தார்.இதற்கு அமெரிக்காவிலும், பல்வேறு நாடுகளிலும் கடும் எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்துள்ளது. இதற்கிடையில், டிரம்ப் அரசின் உத்தரவை ... |
| 3ல் ஒரு பங்கு மட்டுமே நிறைவேறிய அமைச்சர்களின் வாக்குறுதிகள் Posted: 05 Feb 2017 02:09 PM PST புதுடில்லி : மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் அமைச்சர்கள், பார்லிமென்ட்டில் அளித்த வாக்குறுதிகளில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குறுதிகள்: கடந்த, 2015 - 2016ம் ஆண்டுகளில், மத்திய அமைச்சர்கள், 1,877 வாக்குறுதிகளை பார்லிமென்ட்டில் அறிவித்துள்ளனர். இதில், 552 உறுதிமொழிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 392 உறுதிமொழிகள் கைவிடப்பட்டன; 893 உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன. ஆலோசனை: பார்லிமென்ட்டில் ... |
| மகனை அமைச்சராக்குகிறார் சந்திரபாபு நாயுடு Posted: 05 Feb 2017 03:15 PM PST ஐதராபாத்: சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, தி.மு.க., என, பல்வேறு கட்சி தலைவர்களின் மகன்களுக்கு மிகப் பெரிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டது போல, ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தன் மகனுக்கு அமைச்சர் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளார். வளர்ச்சி: சந்திரபாபு நாயுடுவின் மகனான லோகேஷ், 34, நீண்டகாலமாகவே, குடும்ப வியாபாரத்தை கவனித்து வருகிறார். 2013ல் அரசியலுக்கு வந்த அவர், கட்சியின் இளைஞர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். பின், மிக வேகமான வளர்ச்சியை அடைந்த அவர், தற்போது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 06,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |