Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'ஸ்மார்ட் வாட்ச், பெல்ட், ஷூ' அணிய...தடை ..! பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு

Posted: 25 Feb 2017 05:28 AM PST

பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது. மறுதேர்வு எழுதும் நோக்கில், விடைகளை தாமே அடித்தால், தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்கு கிறது. இதில், 6,737 பள்ளிகளைச் சேர்ந்த, 9.30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 4.18 லட்சம் மாணவர்கள்; 4.81 லட்சம் மாணவியர் மற்றும் ஒரு திருநங்கையும் அடங்குவர். மேலும், தமிழ் வழியில் படிப்போரில், 5.69 லட்சம் பேர் தேர்வில் ...

அ.தி.மு.க., சண்டைக்கு ஆர்.கே.நகர் முடிவு கட்டும்!

Posted: 25 Feb 2017 05:37 AM PST

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு கட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலா ஆதரவு அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில்,மற்றொரு அணியும் ,கச்சை கட்டுகின்றன. இரு பிரிவினரும், தாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க., என கூறி வருகின்றனர். சசிகலா தரப்பில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். பன்னீர்செல்வம் தரப்பில், குறைந்த அளவிலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், ...

யார் அந்த கறுப்பு ஆடு? கட்சியில் தேடுகிறார் ஸ்டாலின்

Posted: 25 Feb 2017 05:40 AM PST

சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடு குறித்த விபரங்களை, ஆளுங்கட்சி தரப்புக்கு, 'போட்டுக்' கொடுத்த, கறுப்பு ஆடு யாராக இருக்கும் என்ற விசாரணையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் துவக்கியுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனி சாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பெரும் பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் வித்யா சாகர் ராவ் உத்தரவிட்டார். தி.மு.க., நிலைப் பாடு குறித்து ஆலோசிக்க, சென்னையில், அக் கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், பிப்., 17ல் நடந்தது. இதில், பழனிசாமியை எதிர்த்து,

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் 1972ல் நடந்தது மீண்டும் திரும்புமா?

Posted: 25 Feb 2017 05:42 AM PST

சபாநாயகர் தனபால் மீது, தி.மு.க., கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டால், சட்டசபையில், 1972ல் நடந்த சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., வெளி யேற்றப்பட்ட நேரத்தில், 1972 டிசம்பர், 2ல், சட்ட சபை கூட்டம் கூடியது. கருணாநிதி தலைமை யிலான அமைச்சரவை மீது, நம்பிக்கை யில்லா தீர்மானத்தை,எம்.ஜி.ஆர்., கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக, சபாநாயகர் மதியழகன் செயல்பட்டார். எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில், 'முதல்வர் பதவியை, கருணாநிதி ராஜினாமா செய்யலாம்' என, மதியழகன் அறிவித்தார். ஆனால், ...

நாடு முழுவதும் 15 லட்சம் ஊழியர்கள்..வேலையிழப்பு? ஐ.டி., தகவல் தொடர்பு, வங்கி துறை முடங்கும்

Posted: 25 Feb 2017 06:09 AM PST

புதுடில்லி, :இந்தியாவில், கடந்த, 20 ஆண்டு களாக, வேலைவாய்ப்பை அள்ளி வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கித்துறை களில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில், 1991க்கு பின் பொருளாதார சீர்த்திருங்கள் மேற்கொள்ளப்பட்ட பின், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் வங்கித்துறைகளில், பெருமளவு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.'ஒயிட் காலர் ஜாப்' எனப்படும், உயர் கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறை கள் வளர்ச்சி கண்டன; இதனால் படித்து பட்டம் ...

சசிகலாவின் கைப்பொம்மை முதல்வரா? 'உயிரை விடுவேன்' என்கிறார் கட்ஜு

Posted: 25 Feb 2017 07:16 AM PST

புதுடில்லி, : 'சிறைப் பறவை சசிகலாவின் கைப் பொம்மையாக உள்ள,இடைப்பாடி பழனி சாமியை, தமிழக முதல்வராக ஏற்க முடியாது; அதற்கு பதில், நான் உயிரை மாய்த்துக் கொள் வேன்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், நீதிபதி மார்க் கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:சிறைப்பறவை சசிகலா வின் கைப்பொம்மை, இடைப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப் பட்டுள்ளார். இதைப் பார்த்து, தமிழக மக்கள், எதுவும் செய்யாமல் மவுனம் சாதிக்கின்றனர். சோழர், பாண்டியர், சேரர் உள்ளிட்ட மாபெரும் அரசர்களின் ...

உ.பி.,யில் கைகொடுக்குமா ஜாதி கணக்கு? 'பட்டையை' கிளப்பும் பா.ஜ., தலைவர்

Posted: 25 Feb 2017 07:36 AM PST

லக்னோ, : உ.பி., சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், ஜாதி கணக்கின் மூலம், திட்டமிட்டு செயலாற்றி வரும், அக்கட்சியின் மூத்த தலைவரை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி யில் உள்ளது. இங்கு, பிப்., 11ல் இருந்து மார்ச், 8 வரை, ஏழு கட்டங்களாக சட்ட சபைத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், ஆளும் சமாஜ்வாதி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடு கிறது; பா.ஜ., பகுஜன் சமாஜ் தனித்து போட்டி யிடுகின்றன. தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தீவிர பிரசாரம் செய்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு ...

மணிப்பூர் தேர்தலில் மோடி மந்திரம்... பலிக்குமா? ஆட்சியை பிடிக்க பா.ஜ., கடும் முயற்சி

Posted: 25 Feb 2017 07:38 AM PST

இம்பால், :சட்டசபை தேர்தலில் வீசும் மோடி ஆதரவு அலையால், வட கிழக்கு மாநிலங் களில் ஒன்றான மணிப்பூரில், நீண்ட காலமாக ஆட்சியில் உள்ள காங்கிரசை, அகற்றும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதை உறுதி செய்யும் வகையில், கூட்டணி கட்சிகளை புறந்தள்ளி, அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது.

வட கிழக்கு மாநிலங்களில், காங்., ஆட்சி நடக் கும் கடைசி மாநிலமாக, மணிப்பூர் திகழ்கிறது. இங்கு, காங்கிரசைச் சேர்ந்த, ஒக்ராம் இபோபி சிங், 2002ல், முதல்வராக பதவி ஏற்றார். தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்துள்ள அவர், நான்காம் முறையாக, ...

அ.தி.மு.க.,வை கைப்பற்ற ஓ.பி.எஸ்., அணியினர்...சுறுசுறுப்பு!: தேர்தல் கமிஷன் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பு: சசி பதவி பறிபோனால் பொதுக்குழுவை கூட்ட திட்டம்: மார்ச் 1ல் புதிய அறிவிப்பு வெளியாகலாம் என நம்பிக்கை

Posted: 25 Feb 2017 09:28 AM PST

தேர்தல் கமிஷன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணியினர், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிபோனால், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளனர். பன்னீர்செல்வம், மார்ச் 1ல், புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.அ.தி.மு.க.,வினர், சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என, இரண்டாக பிரிந்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க, பன்னீர்செல்வம் முடிவு செய்தார். ஆனால், சசிகலா தரப்பினர், எம்.எல்.ஏ.,க் களுக்கு ஆசை வார்த்தை ...

வாழ்வாதாரத்தை குலைக்கும் எந்தத் திட்டமும் பெரு நஷ்டமாகும் : நடிகர் கமல்

Posted: 25 Feb 2017 11:23 AM PST

சென்னை: நடிகர் கமலஹாசன் சமீப காலமாக தனது டூவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்னைகள், அரசியல் சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக தனது டூவிட்டர் பக்கத்தில் அவரது பாணியில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவத்த கருத்துக்கள்:
பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது ...

சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் தடுமாற்றம்

Posted: 25 Feb 2017 01:27 PM PST

சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள கெடு, நாளை முடிகிறது. ஆனால், 50 சதவீத மரங்களைக் கூட, அரசுத் துறையினர் அகற்றவில்லை.
கருவேல மரங்கள், அசுர வேகத்தில் வளர்ந்து, உள்ளூர் தாவரங்களை அழிப்பதுடன், நிலத்தடி நீரை உறிஞ்சி உயிர் வாழ்வதால், மனிதர்களுக்கும், பசுமை வளத்திற்கும்
அச்சுறுத்தலாக உள்ளன. அவற்றை அகற்ற, வழக்கு தொடரப்பட்டு, தமிழக அரசுத் துறைகளின் காலதாமதம் காரணமாக, வழக்கு நீண்டு கொண்டே போனது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கருவேல மரங்களை, பிப்., 27க்குள் அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் ...

தேர்தல் கமிஷன் தீர்ப்பு சாதகமாகும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நம்பிக்கை

Posted: 25 Feb 2017 02:26 PM PST

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ள, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தேர்தல் கமிஷன் வழங்கும் தீர்ப்பு, தங்களுக்கு சாதகமாக அமையும். கட்சி தங்கள் கட்டுப்பாட்டில் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும்
அ.தி.மு.க., சசிகலா குடும்பத்தினரின் கைக்குள் சென்று விடக் கூடாது என்பதற்காக, பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள், டில்லி சென்று, தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்தனர். அவரிடம், 'அ.தி.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலர் என்பவர், கட்சி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும்; ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™