Tamil News | Online Tamil News |
- பத்து நாட்களில் உளவுத்துறை ஐ.ஜி., மாற்றம் ஏன்?
- ஜெ., மரணத்தை விசாரிக்க துவங்கியதும் பதவி பறிபோனது! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
- தொண்டர்களே இல்லாமல் ஜெ., பிறந்த நாள் விழா
- தொற்று நோய்களை கட்டுப்படுத்த அரசு...அதிரடி! பொது சுகாதார அவசர நிலை மசோதா தயார்
- பேரவை துவக்கம்; கொடி அறிமுகம்; அரசியல் பயணம் துவக்கினார் தீபா
- யோகா கலையை காப்பாற்ற வேண்டியது அவசியம்! 'ஆதியோகி' பிரதிஷ்டை விழாவில் பிரதமர் வலியுறுத்தல்
- ஜெ., பிறந்த நாள் விழாவில் பன்னீர் அணியினர்... உற்சாகம்!:மாநிலம் முழுவதும் விமரிசையான விழாக்கள்:சசி குடும்பத்தின் பிடியிலிருந்து கட்சியை மீட்க சூளுரை:அதுவரை தர்மயுத்தம் தொடரும் என்கிறார் ஓ.பி.எஸ்.,
- அரசு செலவில் ஜெ., விழாவா? ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
- முதல்வர் மாவட்டத்தில் பலம் காட்டிய பன்னீர் ஆதரவாளர்கள்
- கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்த சோனியா
- பள்ளி வாகனங்களில் 'சிசிடிவி'; சி.பி.எஸ்.இ., அதிரடி உத்தரவு
- உ.பி., 5ம் கட்ட தேர்தலில் 117 கிரிமினல்கள்
| பத்து நாட்களில் உளவுத்துறை ஐ.ஜி., மாற்றம் ஏன்? Posted: 24 Feb 2017 07:57 AM PST தமிழக காவல் துறையில், உளவுத்துறை, ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்ட, 10 நாட்களில், டேவிட்சன் தேவாசீர்வாதம், அப்பதவியில் இருந்து துாக்கி அடிக்கப்பட்டுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அம்ரேஷ் பூஜாரி, கண்ணப்பன், டேவிட்சன் தேவாசீர்வாதம், சத்தியமூர்த்தி ஆகியோர், அடுத்தடுத்து, உளவுத்துறை, ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்தனர். ஜெ., மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போதும், சத்திய மூர்த்தியே, உளவுத்துறை, ஐ.ஜி.,யாக நீடித்தார்.திடீரென, பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக, போர்க்கொடி உயர்த்தியதால், காபந்து அரசு நடத்தும் ... |
| ஜெ., மரணத்தை விசாரிக்க துவங்கியதும் பதவி பறிபோனது! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி Posted: 24 Feb 2017 08:04 AM PST ''ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் குறித்து, விசாரணை நடத்த, பூர்வாங்க நடவடிக்கை மேற்கொண்டதால் தான், என் முதல்வர் பதவியை பறித்தனர்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:ஜெ., அண்ணன் மகள் தீபா, புதிய கட்சி துவக்க உள்ளாரே?அவர் எப்போது வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.ஜெ., அண்ணன் மகன் தீபக், நேற்று அளித்த பேட்டி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?அவரது உள்ளத்தில் உள்ளதை தெரிவித்து உள்ளார்.வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை, நீங்கள் வெளியிடப்போவதாக, தகவல் வெளியாகி உள்ளதே; என்ன அறிவிப்பு?அ.தி.மு.க.,வை, எம்.ஜி.ஆர்., ... |
| தொண்டர்களே இல்லாமல் ஜெ., பிறந்த நாள் விழா Posted: 24 Feb 2017 08:08 AM PST அ.தி.மு.க., அலுவலகத்திற்கு, தொண்டர்கள் வராததால், ஜெ., பிறந்த நாள் விழா, உற்சாகமின்றி பெயரளவிற்கு கொண்டாடப் பட்டது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சசிகலாவுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கியதும், பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள், அவர் பின்னால் அணிவகுத்துள்ளனர்.சசிகலா சிறைக்கு சென்ற பின், அவரது அக்கா மகன் தினகரன், துணை பொதுச் செயலராகி, கட்சியை தன் வசம் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில், ... |
| தொற்று நோய்களை கட்டுப்படுத்த அரசு...அதிரடி! பொது சுகாதார அவசர நிலை மசோதா தயார் Posted: 24 Feb 2017 08:31 AM PST பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட, வேகமாக பரவும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தவும், நுண்ணுயிரிகளை ஏவி, மக்களை கொல்லும் பயங்கரவாதத்தை தடுக்கவும், மாநில அரசுகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில், அதிரடியாக உருவாக்கப்பட்டுள்ள புதிய மசோதா, விரைவில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள், அவ்வப்போது வேகமாக பரவி, பலர் உயிரிழக்க காரணமாக அமைகின் றன. இதை கட்டுப்படுத்துவது; கிருமி தாக்கு தலுக்கு உள்ளானவர்களை தனிமைப் படுத்தி கட்டாய சிகிச்சையளிப்பது; நோய் கிருமிகள் பரவ காரணமானவர்கள் மீது,கடும் ... |
| பேரவை துவக்கம்; கொடி அறிமுகம்; அரசியல் பயணம் துவக்கினார் தீபா Posted: 24 Feb 2017 09:01 AM PST ஜெ., அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற புதிய அமைப்பை துவக்கி, தனி கொடியையும், நேற்று அறிமுகப்படுத்தி னார். அமைப்பின் பொருளாளராக செயல்பட போவதாகவும் அறிவித்துள்ளார். அப்போது, அவர் பேசியதாவது: ஜெ.,யின் அரசியல் வாரிசாக, நான் இருக்க வேண்டும் என, தொண்டர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பணிகளை தொடர உள்ளேன். என் தலை மையை ஏற்றுள்ள, அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டர்களுடன் சேர்ந்து போராடி, இரட்டை இலையை மீட்போம் என, உறுதி ஏற்கிறேன்.ஜெ., கனவை நிறைவேற்ற, அவர் இடத்தில் இருந்து, அவர் விட்டு சென்ற பணிகளை, நான் தொடர்வேன். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை ... |
| யோகா கலையை காப்பாற்ற வேண்டியது அவசியம்! 'ஆதியோகி' பிரதிஷ்டை விழாவில் பிரதமர் வலியுறுத்தல் Posted: 24 Feb 2017 09:05 AM PST கோவை:''பாரம்பரிய யோகா கலையை, அதன் ஆத்மார்த்தமான சாராம்சத்துடன் காப்பாற்ற வேண்டியது அவசியம்,'' என, பிரதமர் மோடி, கோவை ஈஷா யோக மைய விழாவில் பேசினார். கோவை அருகே பூண்டி வெள்ளியங்கிரியில், 'ஈஷா யோகா மையம்' சார்பில், 112 அடி உயர பிரம்மாண்ட ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி, 'மகா யோகா யக்ஞம்' நிகழ்ச்சியில், பங்கேற்று, சிலை பிரதிஷ்டையை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஜக்கி வாசுதேவ் எழுதிய, 'ஆதி யோகி - யோகத் தின் மூலம்' என்ற, புத்தகத்தை வெளியிட்டார்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 'எல்லோருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி, தொடர்ந்து, ... |
| Posted: 24 Feb 2017 09:26 AM PST சென்னை:ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை ஒட்டி, நேற்று மாநிலம் முழுவதும் விமரிசையான ஏற்பாடுகளை செய்திருந்த, பன்னீர்செல்வம் அணியினர், ஆர்.கே.நகர் விழாவில், களைகட்டிய தொண்டர் கூட்டத்தை பார்த்து, பெரும் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசி குடும்பத்தின் பிடியில் இருந்து, கட்சியை மீட்பேன் என்றும், அதுவரை தர்மயுத்தம் தொடரும் என்றும் சூளுரைத்தார்.மறைந்த ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாளை ஒட்டி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் பழனிசாமி மற்றும் ... |
| அரசு செலவில் ஜெ., விழாவா? ஸ்டாலின் கடும் எதிர்ப்பு Posted: 24 Feb 2017 09:30 AM PST சென்னை:'குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுள்ள ஜெயலலிதாவின் பிறந்த நாளில், அரசு சார்பில் மரம் நடும் விழா நடத்தியவர்கள் மீது, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: சொத்து குவிப்பு வழக்கில், குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்ட நிலை யில், ஜெயலலிதா பெயரில், மரம் நடும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. அதை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்துள்ள தன் மூலம், குற்றவாளி சசிகலாவின் பினாமி அரசு, சமுதாயத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி உள்ளது.மரம் நடும் விழாவிற்கு, ... |
| முதல்வர் மாவட்டத்தில் பலம் காட்டிய பன்னீர் ஆதரவாளர்கள் Posted: 24 Feb 2017 09:39 AM PST சேலம்:சேலத்தில், பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள் மற்றும் தீபா பேரவையினர் நேற்று நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர். முதல்வரின் சொந்த மாவட்டத்தில் அவருக்கு எதிராக பலரும் திரண்டதால், சசிகலா ஆதரவு கும்பல், 'கிலி'யில் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் கொண்டாடப் பட்டது. பன்னீர்செல்வம் ஆதரவு, அ.தி.மு.க., வினர் மற்றும் தீபா பேரவையினர் சார்பில், நேற்று சேலத்தில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சேலம் பட்டைக்கோவில் அருகில், காலை, 10:00 மணி முதலே, மாவட்டத்தின் பல பகுதி களில் இருந்தும், அ.தி.மு.க., ... |
| கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்த சோனியா Posted: 24 Feb 2017 11:09 AM PST
தி.மு.க., தலைவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து, காங்., தலைவர், சோனியா நலம் விசாரித்ததாக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் நேற்று, டில்லியில் காங்., தலைவர் சோனியாவை அவர் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, காங்., துணைத் தலைவர் ராகுலும் உடன் இருந்தார். பின், சென்னைக்கு கிளம்பியபோது, நிருபர்களிடம், ஸ்டாலின் கூறியதாவது: காங்., தலைவர் சோனியாவை, மரியாதை நிமித்தமாக சந்திக்க அவர் இல்லத்திற்கு, நேரில் சென்றிருந்தேன். அவர் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அப்போது, தி.மு.க., ... |
| பள்ளி வாகனங்களில் 'சிசிடிவி'; சி.பி.எஸ்.இ., அதிரடி உத்தரவு Posted: 24 Feb 2017 01:17 PM PST
புதுடில்லி: 'பள்ளி வாகனங்களில், 'சிசிடிவி' கேமரா, ஜி.பி.எஸ்., வசதி மற்றும் வேகக் கட்டுப்பாடு கருவி இருப்பது அவசியம்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய பள்ளிக் கல்வி வாரியம் உத்தரவிட்டு உள்ளது. பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் வகையிலும், மாணவர்களின் நலன் கருதியும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வேகக் கட்டுப்பாடு கருவி: இது குறித்து, சி.பி.எஸ்.இ., பிறப்பித்துள்ள உத்தரவு: அனைத்து ... |
| உ.பி., 5ம் கட்ட தேர்தலில் 117 கிரிமினல்கள் Posted: 24 Feb 2017 02:50 PM PST
லக்னோ : உ.பி., சட்டசபைக்கு, ஐந்தாம் கட்டமாக தேர்தல் நடைபெறும், 52 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில், 117 பேர் கிரிமினல் பின்னணி உடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. உ.பி.,யில், முதல்வர், அகிலேஷ் யாதவ் தலை மையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த அரசின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, இங்கு, பிப்., 11ல் இருந்து, மார்ச் 8 வரை, ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே, நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வரும், 27ல், 52 தொகுதிகளில், ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும், வேட்பாளர்களின் பின்னணி குறித்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 25,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |