Tamil News | Online Tamil News |
- மக்களுக்காக கழுதையாக உழைப்பேன் ; அகிலேஷ் கிண்டலுக்கு மோடி பதில்
- புகைப்படம் வெளியிட ஜெ., விரும்பவில்லை:ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை பதில்
- வெற்றி! மஹா., உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., அபாரம்: படுதோல்வியை சந்தித்து காங்., பரிதாபம் : மும்பையில் சிவசேனாவை நெருங்கியது பா.ஜ.,
- ரகசிய ஓட்டெடுப்பு: ஜனாதிபதியிடம் ஸ்டாலின் மனு
- உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்டுவாரா பன்னீர்
- 'கைதி'க்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு : ஜெ., பிறந்த நாள் பேனரில் சசி படத்துக்கு 'தடா'
- டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் கூடாரம் காலி ; போட்டி தேர்வுகள் அறிவிப்பதில் சிக்கல்
- சசிகலா குடும்ப ஆதிக்கத்தை ஏற்க முடியாது! தினகரனுக்கு எதிராக தீபக் போர்க்கொடி
- முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தினகரன்... சரண்டர்!: மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் என கெஞ்சல்: ஆட்சியை அழிக்க தி.மு.க., திட்டமிடுவதாக அலறல்: தங்கள் குடும்ப ஆதிக்கம் இருக்காது எனவும் உறுதி
- தினகரன் பதவி ஏற்றது சட்ட விரோதம்; முன்னாள் அமைச்சர் முனுசாமி முணுமுணுப்பு
- பீட்டாவிற்கு தக்க பதிலளிப்போம்: சிவசேனாபதி
- 1,810 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு; மின் வாரியத்துக்கு திடீர் நெருக்கடி
- மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை?
- 'வாட்ஸ் ஆப்' ஆசிரியர்களுக்கு தடை
| மக்களுக்காக கழுதையாக உழைப்பேன் ; அகிலேஷ் கிண்டலுக்கு மோடி பதில் Posted: 23 Feb 2017 08:15 AM PST பாய்ராச்:'குஜராத் கழுதைகள்' என, உ.பி., முதல் வர் அகிலேஷ் செய்த கிண்டலுக்கு பதிலளிக் கும் வகையில், ''கழுதையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இரவு, பகல் பாரா மல் மக்களுக்காக கழுதைகள் போல் ஓய்வில் லாமல் உழைப்பேன்,'' என, பிரதமர், நரேந்திர மோடி தெரிவித்தார். முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், மார்ச், 8 வரை, ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், குஜராத்தில் உள்ள காட்டு கழுதைகள் பூங்கா ... |
| புகைப்படம் வெளியிட ஜெ., விரும்பவில்லை:ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை பதில் Posted: 23 Feb 2017 08:23 AM PST சென்னை:'என் புகைப்படங்களை வெளியிடக் கூடாது' என, மறைந்த முதல்வர் ஜெயலலிதா விருப்பம் தெரிவித்திருந்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், பதில் மனு தாக்கல் செய்துஉள்ளது. சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., உறுப்பினர் ஜோசப் தாக்கல் செய்த மனு:உடல்நலக் குறைவால், 2016 செப்., 22ல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். 75 நாட்களுக்கு பின், டிச., 5ல் அவர் இறந்தார். ஜெ., மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து, விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் ... |
| Posted: 23 Feb 2017 08:36 AM PST மும்பை:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் நடக்கும், உ.பி., உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுக்கு முன்னோட்டமாக, மஹாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும், பா.ஜ., அமோக வெற்றியை பெற்றது. செல்லாத ரூபாய் நோட்டு, 2016 நவ., 8ல் வெளியானது. இதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உ.பி., உட்பட, ஐந்து மாநிலங் களுக்கு சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இந்த மாநிலங்களில், செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையை முன்வைத்தே, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.இதற்கிடையில், மஹாராஷ்டிராவில், மும்பை ... |
| ரகசிய ஓட்டெடுப்பு: ஜனாதிபதியிடம் ஸ்டாலின் மனு Posted: 23 Feb 2017 08:38 AM PST ''உ.பி., ஜார்க்கண்ட் மாநிலங்களை முன் மாதிரியாக வைத்து, தமிழக சட்டசபையிலும், அரசின் நம்பிக்கை தீர்மானத்தின் மீது, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்தினார். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று மாலை டில்லியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அவருடன், தி.மு.க., - எம்.பி.,க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் உடன் சென்றனர். அப்போது, பிரணாப் முகர்ஜியை சந்தித்து, 'தமிழக சட்டசபை யில், அரசின் நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய ஓட்டெடுப்பு ... |
| உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்டுவாரா பன்னீர் Posted: 23 Feb 2017 08:46 AM PST மதுரை:தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை, வரும் மே 14க்குள் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சசிகலா அணி மீதான பொதுமக்கள் அதிருப்தியை ஓ.பி.எஸ்., அணி அறுவடை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். சிறப்பாக செயல்பட்ட அவரை சசிகலா குடும் பத்தினர் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பன்னீர்செல்வம் பதவியை இழந்தாலும், பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவை பெற்றார். அதுவரை அ.தி.மு.க.,வை எதிர்த்து வந்தவர்கள் கூட, பன்னீர்செல்வத்தை ஆதரிக்க துவங்கினர்.தற்போது அவருடன் ... |
| 'கைதி'க்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு : ஜெ., பிறந்த நாள் பேனரில் சசி படத்துக்கு 'தடா' Posted: 23 Feb 2017 09:08 AM PST பெங்களூரு சிறை கைதி சசிகலாவுக்கு, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொண்டர்களை திருப்திபடுத் தும் வகையில், ஜெ., பிறந்த நாள் பேனர்களில், சசிகலா படமின்றி, அச்சிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க., பொது செயலர் பதவியை சசிகலா கைப்பற்றினார். இதற்கு, கட்சியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு அதிகரித்தது. குறிப்பாக, பெண்கள், ஜெயலலிதாவின் மரணத்துடன் சசிகலாவை ஒப்பிட்டு பேசத் துவங்கினர்.'சதி'கலா இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு, நான்கு ... |
| டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் கூடாரம் காலி ; போட்டி தேர்வுகள் அறிவிப்பதில் சிக்கல் Posted: 23 Feb 2017 09:16 AM PST தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி.,யில், உறுப்பினர்கள் கூடாரம், ஒட்டு மொத்தமாக காலியாகி விட்டதால், போட்டி தேர்வுகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., அமைப்பானது, தலைவர் மற்றும், 14 உறுப்பினர்களை கொண்டது. கல்வி, சட்டம், பொருளாதாரம் உட்பட, பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர்கள், உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, அருள் மொழி நியமிக்கப்பட்டார். பின், 11 உறுப்பினர்கள் புதிதாகநியமிக்கப்பட்டனர்.உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் ... |
| சசிகலா குடும்ப ஆதிக்கத்தை ஏற்க முடியாது! தினகரனுக்கு எதிராக தீபக் போர்க்கொடி Posted: 23 Feb 2017 09:18 AM PST ''சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்து வதை, ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்,'' என, ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா; மகன் தீபக். 1995 அக்டோபரில், ஜெயக்குமார் மறைந்தார். அவரது மறைவுக்கு பின், அவரது குழந்தைகளால், ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை; நெருங்க விடாமல், சசிகலா தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.ஜெ., உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, சசிகலா குடும்பத்தினர், ... |
| Posted: 23 Feb 2017 09:31 AM PST அ.தி.மு.க.,வில், சசிகலா எதிர்ப் பாளர்களை அணி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம், திடீரென, 'சரண்டர்' அடைந்துள்ளார் தினகரன். ஆட்சியை அழிக்க, தி.மு.க., திட்ட மிடுவதாக, புகார் கூறிய அவர், 'கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், மீண்டும் வர வேண்டும்' என்றும் அழைப்பு விடுத்தார். 'கட்சியிலும், ஆட்சியிலும் தங்கள் குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது' என்றும், அவர்களுக்கு உறுதி அளித்தார்.சிறை செல்லும் முன், கட்சியை வழிநடத்தும் பொறுப்பை, தன் அக்கா மகன் தினகரனிடம் ஒப்படைத்தார் சசிகலா. அவரால், துணை பொதுச்செயலராக ... |
| தினகரன் பதவி ஏற்றது சட்ட விரோதம்; முன்னாள் அமைச்சர் முனுசாமி முணுமுணுப்பு Posted: 23 Feb 2017 10:36 AM PST அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டதே செல்லாது என்ற நிலையில், பதவியேற்பு விழா நடத்தி, தன்னையே கட்சியின் பிதாமகன் போல, டி.டி.வி.தினகரன் காட்டிக் கொண்டிருப்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என, முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி: ஜெயலலிதா எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தவர்த்து வந்தாரோ, அதையெல்லாம், அவருடைய நிழல் என சொல்லி, அவர் வகித்து வந்த கட்சியின் பொதுச் செயலர் பதவியை சட்ட விரோதமாக அபகரித்துக் கொண்டிருக்கும் சசிகலா, ... |
| பீட்டாவிற்கு தக்க பதிலளிப்போம்: சிவசேனாபதி Posted: 23 Feb 2017 11:30 AM PST கோவை: ஜல்லிக்கட்டு வழக்கில் பீட்டாவிற்கு தக்க பதிலளிப்போம் என சிவசேனாபதி கூறினார். கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி மைய தலைவர் சிவசேனாபதி பேசுகையில்: ‛‛ஜல்லிக்கட்டு வழக்கில் பீட்டாவின் பதிலை பார்த்து விட்டு தக்க பதில் அளிப்போம், தமிழகத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த எந்த வித தடையும் இல்லை '' என கூறினார். ... |
| 1,810 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு; மின் வாரியத்துக்கு திடீர் நெருக்கடி Posted: 23 Feb 2017 12:48 PM PST தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, திருவள்ளூர் மாவட்டத்தில், வட சென்னை என்ற பெயரிலும், துாத்துக்குடியில் துறைமுகம் அருகிலும், அனல் மின் நிலையங்கள் உள்ளன. அதேநேரத்தில், மத்திய அரசுக்கு, திருவள்ளூர் - வல்லுார்; துாத்துக்குடியில், என்.டி.பி.எல்., என்ற பெயரில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. உற்பத்தி நிறுத்தம்: வட சென்னை மின் நிலையத்தில், 600 மெகாவாட் திறன் உள்ள ஒரு அலகில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று முன்தினம் இரவு, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. துாத்துக்குடி மின் நிலையத்தில், 210 மெகாவாட் ஒரு அலகில், 'பாய்லர் டியூப் ... |
| மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை? Posted: 23 Feb 2017 01:51 PM PST சென்னை: மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் கடும் வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கன மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில் தமிழக மக்கள் பல நாட்களாக மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த ... |
| 'வாட்ஸ் ஆப்' ஆசிரியர்களுக்கு தடை Posted: 23 Feb 2017 03:44 PM PST
'பிளஸ் 2 தேர்வு நாட்களில், ஆசிரியர்கள், அதிகாரிகள், 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது. இந்த தேர்வை, மாநிலம் முழுவதும், 9.30 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வை எந்தவித முறைகேடுகளுக்கும் இடமின்றி நடத்துவதற்கு, தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மூலம், மாவட்ட வாரியாக நடக்கும் கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. - ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 24,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |