Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் திமுக கோரிக்கை

Posted: 23 Feb 2017 04:00 PM PST

- குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வியாழக்கிழமை சந்தித்து மனு அளிக்கும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின். ------------------ தமிழக சட்டப்பேரவையில் ஆளும் அதிமுகவிற்கு உண்மையிலேயே பெரும்பான்மை உள்ளதா என்பதை அறிய ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட மாநில ஆளுநரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 20 நிமிட சந்திப்பு: ...

சிவன்மலை பெட்டியில் மஞ்சள், குங்குமம் !

Posted: 23 Feb 2017 03:58 PM PST

காங்கேயம்:சிவன்மலை, ஆண்டவர் உத்தரவு பெட்டியில், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்படுவதால், தடைபட்ட அனைத்து மங்கள காரியமும் கை கூடும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடக்க இருப்பதை முன் கூட்டியே உணர்த்தும் விதமாக, ஆண்டவர் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் வந்து தனக்கு இந்த பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். உத்தரவு பெற்ற பக்தர், கோவில் நிர்வாகத்தை அணுகி, தமது ...

அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்

Posted: 23 Feb 2017 03:44 PM PST

அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம். 1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை, இன்ப விஸ்வாசம், - இவைகளிலெல்லாம் 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும், கலகல வென்னும் – கைம்மணியாமே 3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும், அன்பில்லையானால் - அதிற்பயனில்லை 4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும், பணிய அன்பில்லால் – பயனதிலில்லை 5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும் போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள 6. புகழிறு மாப்பு, - பொழிவு பொறாமை, பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா 7. சினமடையாது, - தீங்கு ...

நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்…

Posted: 23 Feb 2017 03:41 PM PST

தொடத் தொடத் தொல்காப்பியம்(452)

Posted: 23 Feb 2017 10:42 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

வாட்ஸ் ஆப் கலக்கலும் சில கருத்துகளும்.

Posted: 23 Feb 2017 10:36 AM PST

வாட்ஸ் ஆப்பில் வந்த சில கருத்துப் படங்களுடன் இணையத்தில் படித்த சில கருத்துகளையும் இணைத்து தரப்பட்டுள்ளது.சிந்திக்கலாம். முழுதாக  தெரியாவிட்டால்  Full Screen  mode இல் செல்லவும். நன்றி-வாட்ஸ் ஆப் + இணையம்

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 23 Feb 2017 10:35 AM PST

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

நரை கூறிய அறிவுரை

Posted: 23 Feb 2017 10:30 AM PST

கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத் திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன் தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான். - அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது; இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,  -  மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ  பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்  கன்ன மூலத்தினில் கழற வந்தென  மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!  -  என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம் புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை மகனிடம் ஒப்படைப்பாய்' ...

விழுந்தவர்களின் வரலாறு...!

Posted: 23 Feb 2017 10:29 AM PST

ஒரு முறை, என் கணவரை படாதபாடு படுத்தி, என் தூரத்து உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றேன். உண்மையாகவே தூ..ரத்து உறவினர் தான், சுமார் 15 கிமீ சென்னைக்குள்ளேயே பயணிக்க வேண்டும். போனதும், வாங்க, வாங்க என்று அன்போடு அழைத்து அமரச்செய்து, காபியும் கொடுத்தார்கள். காபியை வாங்கிய என் கணவர், பாதியாக ஆற்றி, மீதியை தரையில் வைக்க பக்கவாட்டில் சாய்ந்தார். அது வரை தான் பார்த்தேன். அடுத்தக்காட்சியில் கீழே விழுந்து கிடக்கிறார். மேலே காபி அபிஷேகம். கீழே விழுந்தால் அடிபடவில்லை என்பதை விடவும், யாரும் கவனிக்கவில்லை என்பது ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 10:10 AM PST

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! அன்று தொண்டு இன்று துட்டு அரசியல் ! மாறின கால்கள் மாறவில்லை விழுபவர்கள் அரசியல் ! காற்றில் பறந்தன சுயமரியாதைக் கொள்கை அரசியல் ! கொள்கையானது குறுக்குவழி கொள்ளையடிப்பு அரசியல் ! அழிந்து நாளானது நம்பிக்கை நாணயம் அரசியல் ! அன்று மக்களுக்காக இன்று தன் மக்களுக்காக அரசியல் ! வழக்கொழிந்து விட்டன நீதி நேர்மை அரசியல் ! நம்பிக்கைத் துரோகம் நாளும் அரங்கேற்றம் அரசியல் ! நாற்றம் தோற்றது கூவம் அரசியல் ! முழுவதும் ...

சமூக விழுமியம் – மயிர்

Posted: 23 Feb 2017 10:01 AM PST

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பதிவை இடுகிறேன். தொடர் - ௫ சமூக விழுமியம் – மயிர் தொடர் 5 (ஐங்குறுநூற்றிலிருந்து) முன்தொடர் சுருக்கம் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இருக்கிறது என்றாலும் அது செயற்கை மணம் ஊட்டப்பெறுகின்ற போதுதான் மற்றவர் மனம் விரும்பும் வகையில் இருப்பதனைக் குறுந்தொகைப் பதிவிலிருந்து கண்டோம். இனி………………. தொடர் – 5 ஐங்குறுநூற்றில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கிறது. ஐங்குறுநூற்றில் இடம்பெறும் ஐவகை நிலம் சார்ந்த பாடல்கள் ...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்!

Posted: 23 Feb 2017 09:21 AM PST

மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஒவ்வொருவரும், விடுமுறை நாள் வராதா? ஒரு நாள் முழு ஓய்வு கிடைக்காதா? என எண்ணும் அளவுக்கு, நவீன உலகம் மாறி விட்டது. தினமும், வீட்டில் இருப்பவர்களிடமே முழுமையாக இரண்டு வார்த்தை பேச நேரமில்லாமல், பம்பரமாய் சுற்றுகிறோம். ஒரே வீட்டுக்குள் இருந்தும், 'ஷிப்ட்' அடிப்படை வேலையால், அண்ணனும், தங்கையும் பார்த்தே, ஒரு வாரமாகி விடுகிறது. இச்சூழலால், குடும்ப உறுப்பினருக்கும், நமக்கும் இருக்கும் பிணைப்பு பிளவடைகிறது. ஏதோ உறவினர்கள் போல், 'நல்லா இருக்கியா? சாப்பிட்டாச்சா?' ...

தீபக் போர்க்கொடி: சசிகலா அதிர்ச்சி

Posted: 23 Feb 2017 09:18 AM PST

சென்னை: சசிகலாவுக்கு எதிராக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் போர்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பெங்களூரு சிறையில் உள்ள ச சிகலா அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு ஆங்கில சேனலில் வெளிவந்த தகவல்: சசிகலா வாரிசு அரசியலில் ஈடுபட்டுள்ளது ஜெ., அண்ணன் மகன் தீபக்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வின் துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனம் செய்யப்பட்டது எப்படி என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை, போயஸ் கார்டன் பகுதியில் ...

உலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்!

Posted: 23 Feb 2017 09:16 AM PST

திராட்சையில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இதில் எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. குறிப்பாக, அல்சர் என்ற குடல்புண் நோய்க்கு, திராட்சை அற்புதமான மருந்தாகும். காலையில் திராட்சைப்பழச்சாறு குடித்து வந்தால், வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும், கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். தலைச்சுற்றல், மலச்சிக்கல், கை கால் எரிச்சல் உள்ளவர்களும் ...

படித்ததில் பிடித்தது - II :) -- கல்யாணப் பரிசு!

Posted: 23 Feb 2017 09:12 AM PST

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

தெரிஞ்சுக்கோங்க!......

Posted: 23 Feb 2017 09:11 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

சிவராத்திரி ஸ்பெஷல்!

Posted: 23 Feb 2017 09:03 AM PST

எண் குணத்தான்சிவபெருமானுக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று, எண் குணத்தான். அவை:பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, வினையின்மை, குறைவில்லா அறிவுடைமை மற்றும் கோத்திரம் இன்மை.*பார்வதி தேவி, நீரில் லிங்கம் அமைத்து, சிவனை வழிபட்ட தலம், திருவானைக்காவல். சிவலிங்கத்தின் வகைகள்:தானே தோன்றியது, சுயம்பு லிங்கம்; கரிமுகன் மற்றும் ஆறுமுகன் போன்ற கணங்களால் தோற்றுவிக்கப்பட்டது, கண லிங்கம்; தேவர்களால், ஸ்தாபிக்க பெற்றது, தெய்வீக லிங்கம்; முனிவர்களால், ஸ்தாபிக்கப் பெற்றது ஆர்ஷிக ...

ரூ.30 ஃபேண்டா, இப்போது ரூ.10. இருப்பினும் வாங்க ஆளில்லை....

Posted: 23 Feb 2017 08:46 AM PST

சென்னை மெரீனாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் வெற்றியாக இல்லாமல் வெளிநாட்டு குளிர்பானங்களை குடிப்பது தேக ஆரோக்கியத்துக்கு கெடுதல் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டது. இதனால் பல திரையரங்குகள், வணிக வளாகங்கள் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என அறிவித்தன. மேலும் தமிழக வணிகர் சங்கமும் வரும் மார்ச் 1முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்ய போவதில்லை என்று அறிவித்தது. இந்நிலையில் கடந்த மாதம் ...

வராத படம் -காற்று வெளியிடை - பாடல் -வைரமுத்துவின் வரிகள்.

Posted: 23 Feb 2017 08:35 AM PST

படம் -காற்று வெளியிடை ,இயக்கம்- மணிரத்தினம், இசை -ஏ.ஆர்.ரஹுமான். வரிகள் -வைரமுத்து , பாடியவர்-சாஷா திருபாத்தி வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மர்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகில் நிமிர்வான் தொலைவில் பணிவான் கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் * என்னோடி ருந்தால் எவளோ நினைவான் அவளோடி ருந்தால் எனையே நினைவான் என்னைத் துறவான் என்பேர் மறவான் என்னை மறந்தால் தன்னுயிர் விடுவான் கண்கள் கவிழ்ந்தால் வெளிபோல் விரிவான் கண்கள் திறந்தால் கணத்தில் ...

எனக்குப் பிடித்த பாடல் - இசைப்பிரியர்களுக்காக .

Posted: 23 Feb 2017 08:02 AM PST

ராஜா தேசிங்கு திரைப்பட பாடல் வரிகள்

Posted: 23 Feb 2017 07:56 AM PST

ஊருக்கு நீ உழைத்தால் உன்னருகே அவன் இருப்பான் -- திரைப்படம்:ராஜா தேசிங்கு இசை:ஜி.ராமநாதன் இயற்றியவர்:உடுமலை நாராயணகவி பாடகர்கள்:சீர்காழி கோவிந்தராஜன் - ---------------------------- ஊருக்கு நீ உழைத்தால் உன்னருகே அவன் இருப்பான் உண்மையிலும் அன்பினிலும் ஒன்றாய்க் கலந்திருப்பான் பசித்தவர்க்கு சோறிடுவோர் பக்கத்தில் அவன் இருப்பான் கருணையுள்ள நெஞ்சினிலே தினமும் குடியிருப்பான் ஆஆஆஆ..ஆஆஆஆ... ஆதி கடவுள் ஒன்றேதான் அதைக் காண முடியாது ஆண்பெண் ஜாதி இரண்டுதான் இதில் பேதம் கிடையாது உயர்வு ...

சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 23 Feb 2017 05:54 AM PST

- சூரிய ஒளி மின்சார உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது. பிப்ரவரி 23, 04:38 AM புதுடெல்லி, சூரிய ஒளி மின்சார உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது. மந்திரிசபை கூட்டம் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ...

அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை

Posted: 23 Feb 2017 05:45 AM PST

புதுடில்லி: அதிக 'டிபாசிட்' குறித்து இரண்டாம் கட்ட ஆய்வில், மூத்த குடிமக்கள் செய்த முதலீடுகள் குறித்து விசாரிக்கப்பட மாட்டாத என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 'வங்கிகளில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்பட்டுள்ள டிபாசிட்டுகள் குறித்து, இரண்டாம் கட்ட ஆய்வில் முக்கியத்துவம் தரப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை நேற்று அளித்துள்ள விளக்கம்: மூத்த குடிமக்களுக்கான, 70 வயதுக்கு மேற்பட்டோர் செய்துள்ள முதலீடுகள் குறித்து விசாரிக்கப்படாது. அதே ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 23 Feb 2017 05:03 AM PST


-

-
-

7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா

Posted: 23 Feb 2017 04:32 AM PST

வாஷிங்டன்: ‛பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்ததாகவும், இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது' எ ன நாசா அறிவித்துள்ளது. 7 புதிய கோள்கள்: சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்சர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய மைல் கல்: புதிதாக ...

பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்

Posted: 23 Feb 2017 04:20 AM PST

புதுடில்லி: பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து, புதிய மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்துக்குப் பின், அந்த மசோதா நிறைவேறியது. அந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில், பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய சட்டத்தின் கீழ் 71 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ...

டில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு

Posted: 23 Feb 2017 04:10 AM PST

புதுடில்லி : டில்லியின் சங்கம் விகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ., ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன .ரோஹித் குமார் என்ற இளைஞர், தனியார் நிறுவனம் ஒன்றில் கஸ்டமர் கேர் எக்சிக்யூடிவாக பணியாற்றி வருகிறார். இவர் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்.,ல் ரூ.8000 பணம் எடுத்துள்ளார். ரூ.2000 நோட்டுக்களாக எடுக்கப்பட்ட பணம் அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. அந்த போலி ரூ.2000 நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முத்திரைக்கு பதிலாக சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என முத்திரை இடம் பெற்றிருந்தது. ...

தங்கம் கடத்திய காங்., தலைவர் கைது

Posted: 23 Feb 2017 03:58 AM PST

சென்னை: ராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவர் ‛குட்லக்' ராஜேந்திரனை, தங்கம் கடத்திய விவகாரத்தில், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவராக இருப்பவர் குட்லக் ராஜேந்திரன். திருச்சி - புதுக்கோட்டைக்கு இடையே லட்சுமணப்பட்டி சுங்கசாவடியில், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த குட்லக் ராஜேந்திரனுக்கு சொந்தமான காரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கடந்த, 22ம் தேதி சோதனை செய்தனர். 12 கிலோ தங்கம் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.50 ...

உறவும் உலகமும்

Posted: 23 Feb 2017 03:13 AM PST

உறவாலே உலகம் என்றும் தொடர்கிறது , பகையாலே அவைகள் என்றும் அழிகின்றது! ஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே, சுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே! நல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை, மன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை! நல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை, விட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை ! உறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும். இரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:28 AM PST

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! கழிவறை சுத்தம் செய்வதை குடித்து மகிழும் அவலம் குளிர்பானம் ! தண்ணீருக்குப் பதிலாக அருந்திடும் கொடுமை குளிர்பானம் ! நடிகர் விளம்பரத்தில் ஒரு முறை நாம் பலமுறை குடிக்கிறோம் குளிர்பானம் ! இரண்டு நாள் போட்டால் பல்லையும் கரைக்கும் குளிர்பானம் ! அயல்நாட்டில் தடை நம்நாட்டில் தாராளம் குளிர்பானம் ! விலை கொடுத்து வாங்குகிறோம் உடல் நலம் கெடுக்கும் குளிர்பானம் ! வழங்காதீர் விழாக்களில் விருந்தினருக்குத் துன்பம் குளிர்பானம் ! ...

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:27 AM PST

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு ! கவிஞர் இரா .இரவி ! உலகம் தோன்றியபோதே தோன்றிய உலகின் முதல்மொழி நம் தமிழ்மொழி ! உலகின் முதல் மனிதன் பேசிய ஒப்பற்ற உயர்ந்த மொழி தமிழ்மொழி ! பன்மொழி அறிஞர்கள் பலரும் வியந்து பாராட்டி மகிழ்ந்திடும் மொழி தமிழ்மொழி ! மண் தோன்றும் முன்பே இந்த மண்ணில் தோன்றிய தமிழ்மொழி ! திருக்குறள் என்ற இணையற்ற நூலை தரணிக்கு வழங்கிய மொழி தமிழ்மொழி ! காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி கவிஞர்களை முக்காலமும் ...

என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:25 AM PST

என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் ! கவிஞர் இரா .இரவி ! பெரிய கருப்பன் என்ற இயற்பெயர் துறந்து பெரிய தமிழண்ணலாக உயர்ந்து காட்டியவர் ! தமிழண்ணல் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல தமிழின் அண்ணல் காரணப் பெயரானது ! தமிழுக்கு யார் தீங்கு செய்தாலும் உடன் தயங்காமல் தட்டிக்கேட்ட நெஞ்சுரம் மிக்கார் ! தமிழ்வழிக்கல்விக்காக உண்ணாவிரதம் இருந்தவர் தமிழை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் ! நெற்குப்பை எனும் சிற்றூரில் பிறந்து நெல்மணியாய் தமிழ்மணியாய் சிறந்தவர் ! நாகசாமி என்பவரின் பொய்யுரைக்கு ...

மனிதநேய மாமணி பழனியப்பன் வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:23 AM PST

மனிதநேய மாமணி பழனியப்பன் வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி ! நினைவுதினம் மட்டும் நினைக்கப்படுபவன் அல்ல நீ ! நீங்காத நினைவை என்றும் நெஞ்சில் தந்தவன் நீ ! ஈர இதயம் பெற்றவன் நீ ! ஆண் தெரசாவாக வாழ்ந்தவன் நீ ! பார்வையற்றோரின் பார்வையானாய் நீ ! பாரினில் உன்னத வாழ்வு வாழ்ந்தாய் நீ ! தன்னலம் மறந்து பொதுநலம் புரிந்தாய் நீ ! தன் குடும்பத்தையும் ஈடுபடுத்தினாய் நீ ! இறுதி மூச்சு வரை இயங்கியவன் நீ ! என்றும் பார்வையற்றோருக்காக வாழ்ந்தவன் நீ ! இரத்ததானம் தந்து முகாம் ...

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! புதிய டைரி ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:22 AM PST

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! புதிய டைரி ! கவிஞர் இரா .இரவி ! எழுதப் பழகுவோம் நாட்குறிப்பு எழுதினால் மறக்காது நினைவுகள் ! நல்லது கெட்டது இரண்டும் எழுதுங்கள் நாள் தோறும் மறக்காமல் எழுதுங்கள் ! கடந்து வந்த பாதையை அசைபோடலாம் கடந்த காலத்தையும் காட்சிப்படுத்தும் ! மலரும் நினைவுகளை எந்நாளும் மலர்விக்கும் ஆற்றல் உண்டு அதற்கு ! எந்த நாளில் என்ன நடந்தது என்று எழுதிவந்தால் வருங்காலத்திற்கு உதவும் ! நடந்தவைகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் நடக்கவேண்டியதையும் ...

பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:21 AM PST

பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி ! தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கண்ட காலமிது தனித்தமிழ் காக்க தமிழர்கள் அணி வகுப்போம் ! தமிங்கிலம் பேசிடும் அவலத்தை நிறுத்துவோம் தனித்தமிழ் பேசாவிடினும் தமிழாவது பேசுவோம் ! வடசொல் கலப்பின்றி பேசிப் பழகுவோம் வந்திட்ட ஆங்கிலக் கலப்பின்றி பேசுவோம் ! ஊடகங்களின் தமிழ்க்கொலைக்கு முடிவு கட்டுவோம் உணர்வோடு நல்ல தமிழில் பேசி மகிழ்ந்திடுவோம் ! நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவைகளை தமிழுக்கு ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:21 AM PST

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! நடிப்பில் வென்றனர் நடிகர் திலகத்தை அரசியல்வாதிகள் ! வந்தார் நேர்மையான அரசியல்வாதி கண்டது கனவு ! பேசினார் பொதுநலம் அருகில் தேர்தல் ! மனிதனாகச் சாதிக்க விலக்கு மது ! கேளிக்கை அல்ல கேடிகளுக்கானது மது ! மகிழ்ச்சி என்று தொடங்கி துன்பத்தில் முடியும் மது ! வன்முறை வளர்க்கும் நட்பை அழிக்கும் மது ! வாரம் ஒரு நாள் தொடக்கம் தினமும் என்றாகும் மது ! ஓசியில் தொடங்கி திருட்டில் முடியும் மது ! வெறும் வாசகமல்ல ...

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி

Posted: 23 Feb 2017 01:18 AM PST

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி ஏறுதழுவுதல் என்பது தமிழர்களிடையே இன்றல்ல என்றும் நடைமுறையில் உள்ளது ! எதற்காக தடை செய்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தால் விளங்கியது சதி ! உலகமயம் என்ற அரக்கனின் வேலை உள்ளூர் நாட்டு மாடுகள் அழிப்பு வேலை ! மேலோட்டமாகப் பார்த்தால் இத்தடை மாடுகள் காப்புப் போலத்தான் தெரியும் ! உள்குத்து வேலை ஆராய்ந்தால் புரியும் ஒருவழியாக காளை இனத்தை அழித்தல் ! காட்டு விலங்கு அல்ல காளை வீட்டு உறுப்பினர் ...

மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:17 AM PST

மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி ! நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார் நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை ! ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால் ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் ! கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள் கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது ! தோன்றின் புகழோடு தோன்றுக என்று திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் ! மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர் மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர் ! நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி ...

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:15 AM PST

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி ! தன் சதையை அறுத்து நீதி வழங்கிய தன்னிகரில்லா வரலாறு இங்கு உண்டு ! தன் மகனை தேர் ஏற்றிக் கொன்று நீதிக்கு தலை வணங்கிய வரலாறு இங்கு உண்டு ! தவறான தீர்ப்பு வழங்கிய மன்னன் தன் உயிர் நீத்த வரலாறு இங்கு உண்டு ! பட்டப்பகலில் விளக்குடன் மனிதனைத் தேடிய புகழ் பெற்ற பாடல் பலரும் கேட்டதுண்டு ! உச்ச நீதி மன்றத்தில் நீதியைத் தேடி உலகம் அலையும் அவலம் நேர்ந்தது ! நடிகரின் வழக்கு என்றால் விரைவாக நீதி வழங்கிய ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:14 AM PST

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! பொங்கலுக்குள் அனுமதித்து இருந்தால் பொங்கி இருக்க மாட்டார்கள் மாணவர்கள் ! உச்ச நீதிமன்றம் உச்சம் இழந்தது அவமானமே மிச்சம் ! மக்கள் எழுச்சியால் மண்டியிட்டது பீட்டா ! அயல்நாட்டுக் குளிர்பானம் விரட்ட உதவிய பீட்டாவிற்கு நன்றி ! இப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா மிரட்சியில் அரசியல்வாதிகள் ! ஏறு தழுவுதல் என்பதை மிருகவதை என்போர் மூடர் கூட்டம் ! ஆட்டம் கண்டது ஓட்டம் எடுத்து பீட்டா !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Feb 2017 01:13 AM PST

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! உலகமே உற்று நோக்கியது தமிழர்களின் போராட்டம் கனவு நனவாகியது ! தலைவன் இல்லாத போராட்டம் அல்ல தமிழே தலைவன் ! சென்னையின் சாலைகள் யாவும் மெரீனாவை நோக்கி மிரண்டது இந்தியா ! பொறுத்தது போதும் பொங்கினான் தமிழன் புரிந்தது இந்தியாவிற்கு ! ஐம்பது பேரில் தொடங்கி லட்சத்தைத் தாண்டியது லட்சியம் வென்றது ! சென்னை மட்டுமல்ல தமிழகமே பொங்கியது புரிந்தது ஆற்றல் ! உலகத்தமிழர் யாவரும் உணர்வை உணர்த்தினர் தமிழன்டா ! வெற்றி ! ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™