Tamil News | Online Tamil News |
- விரைவில் உயர் அதிகாரிகள் மாற்றம்
- செல்லாத ரூபாய் நோட்டை மாற்ற முடியுமா?: ரிசர்வ் வங்கியில் தினமும் குவியும் மக்கள்
- எம்.எல்.ஏ., விடுதியில் அறை ஒதுக்கவில்லை வாடகை வீடு தேடுகிறார் பன்னீர்செல்வம்
- நெருப்பாய் கொதிக்கும் தொகுதி மக்கள்; நெருங்க முடியாத எம்.எல்.ஏ.,க்கள்
- ராஜாவின் பதிலடியால் கிடுகிடுத்த கோர்ட்
- 'பினாமி' ஆட்சியை அகற்றும் வரை போராட்டம்:திருச்சியில் ஸ்டாலின் திட்டவட்டம்
- தமிழக அரசு அலுவலகங்களில் ஜெ., படம்...அகற்றப்படுமா?: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்:தண்டனை பெற்றவர் படத்தை வைக்க எதிர்ப்பு
- முதல்வர் மாவட்டத்தில் ஆள் இழுப்பு வேலை பதவி, பண ஆசை காட்டி நிர்வாகிகளுக்கு வலை
- நிவாரணம் அறிவித்தார் பன்னீர் கிடப்பில் போட்டார் பழனி
- பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வருகை
- 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா ; 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல்
- 'சிசேரியன்' முறையில் குழந்தை: இரண்டாம் இடத்தில் தமிழகம்
- அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை
| விரைவில் உயர் அதிகாரிகள் மாற்றம் Posted: 22 Feb 2017 06:23 AM PST தலைமை செயலர் உட்பட, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், பெருமளவில் மாற்றப் பட உள்ளதாக வெளியான தகவல், அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பின், புதிய முதல்வராக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் தோழியான, சசிகலா குடும்பத்தினரின் விசுவாசியான, இடைப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். சசிகலா ஆதரவு, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், முக்கிய பதவிகளை பிடிக்க, சசிகலா குடும்பத்தினர் உதவியை நாடியுள்ளனர்.எனவே, தலைமை செயலர் உட்பட, பல்வேறு துறை செயலர்கள் மாற்றப்பட உள்ளதாகதகவல் வெளி யானது. புதிய தலைமைச் ... |
| செல்லாத ரூபாய் நோட்டை மாற்ற முடியுமா?: ரிசர்வ் வங்கியில் தினமும் குவியும் மக்கள் Posted: 22 Feb 2017 07:15 AM PST தமிழகம் முழுவதும் இருந்து, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற, சென்னை, ரிசர்வ் வங்கி முன் குவியும் மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். செல்லாத ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு, 2016, நவ., 9ல் இருந்து, வங்கிகளில் மாற்றி கொள்ள, மத்திய அரசு அனுமதித்தது.ஏமாற்றம் அப்போது, 'டிச., 30க்கு பின், வங்கிகளில் மாற்ற முடியாது; ரிசர்வ் வங்கியில், மார்ச், 31 வரை மாற்றி கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், டிச., 31க்குப் பின், சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.'நவ., 8 முதல், டிச., வரை, வெளிநாடு சென்றிருந்தோர் மட்டுமே, மார்ச், 31 வரை, செல்லாத ரூபாய் நோட்டுகளை ... |
| எம்.எல்.ஏ., விடுதியில் அறை ஒதுக்கவில்லை வாடகை வீடு தேடுகிறார் பன்னீர்செல்வம் Posted: 22 Feb 2017 07:23 AM PST அரசு வீட்டை காலி செய்யும்படி, பொதுப்பணித் துறை உத்தரவிட்டு உள்ளதால், வீடு தேடும் பணியில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார். கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. ஜெ., முதல்வரானார். அவரது அமைச்சரவையில், நிதி அமைச்சராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். அவருக்கு, சென்னை, கிரீன்வேஸ் சாலையில், பொதுப் பணித் துறைக்கு சொந்தமான அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.ஜெ., சொத்து குவிப்பு வழக்கில், சிறைக்கு சென்ற போது, பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போதும், அதே வீட்டில் குடியிருந்தார். 2016 சட்டசபை தேர்தலில், மீண்டும், அ.தி.மு.க., ... |
| நெருப்பாய் கொதிக்கும் தொகுதி மக்கள்; நெருங்க முடியாத எம்.எல்.ஏ.,க்கள் Posted: 22 Feb 2017 07:42 AM PST தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் அவரது போட்டோ வுடன் விமர்சனம் வந்துள்ளது.செங்கோட்டையன் படத்தின் மேல், 'கண்ணீர் அஞ்சலி' என, குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 'செங்கோட்டையன், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின், வேலைக் காரனுக்கு ஆதரவாக ஓட்டளித்த தால், தொகுதி மக்களின் சார்பாக, அரசியல் வாழ்வில் அகால மரணம் அடைந்து விட்டதை கோபத்துடன் தெரிவித்து ... |
| ராஜாவின் பதிலடியால் கிடுகிடுத்த கோர்ட் Posted: 22 Feb 2017 08:39 AM PST '2ஜி' வழக்கல், நீதிபதியின் சரமாரியான கேள்விகளால், திணறிய, சி.பி.ஐ., வழக்கறிஞர், ''அதிர்ஷ்டம் இருப்பவர்கள் வெற்றி பெறட்டும்,'' என, கூறியதும்,''ஆவணங்களையும், சட்டத் தையும் நம்புகிறேன்; அதிர்ஷ்டத்தை அல்ல,'' என, தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ராஜா பதிலடி தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர் பாக, சி.பி.ஐ., தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பிலும், வாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், டில்லி பாட்டியாலா கோர்ட்டில், இறுதிகட்டமாக, சுருக்கமான வாத பிரதிவாதங் கள், துவங்கியுள்ளன.நேற்று நடந்த ... |
| 'பினாமி' ஆட்சியை அகற்றும் வரை போராட்டம்:திருச்சியில் ஸ்டாலின் திட்டவட்டம் Posted: 22 Feb 2017 09:13 AM PST திருச்சி: ''தமிழகத்தில், 'பினாமி' ஆட்சியை அகற்றும் வரை, போராட்டம் தொடரும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார். நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, சட்டசபையில் நடந்த சம்பவங்களை கண்டித்து, தி.மு.க., சார் பில், நேற்று தமிழகம் முழுவதும், உண்ணா விரதம் நடந்தது. திருச்சியில் நடந்த போராட்டத் தில், செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில், 'பினாமி' ஆட்சியை அப்புறப் படுத்தவே இந்த போராட்டம். தேர்தலில், ஜெயலலிதா முதல்வர் ஆவதற்காகவே மக்கள் ஓட்டு போட்டனர். இந்த ஆட்சி அமைவதற்காக அல்ல. இந்த குற்றவாளிகளின் ஆட்சியை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.மக்களை போல, ... |
| Posted: 22 Feb 2017 09:18 AM PST சென்னை: உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படங்களை, அரசு திட்டங்களில் இருந்து நீக்கவும், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவும் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், 2016 டிச., 5ல் மறைந்தார்.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு ... |
| முதல்வர் மாவட்டத்தில் ஆள் இழுப்பு வேலை பதவி, பண ஆசை காட்டி நிர்வாகிகளுக்கு வலை Posted: 22 Feb 2017 09:24 AM PST சேலம்:சேலம் மாநகர, அ.தி.மு.க.,வில், பணம், பதவி ஆசை காட்டி, வார்டு செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், முதல்வர் அணிக்கு இழுக்கப்படுகின்றனர். சேலம் மாநகரில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமிக்கு எதிராக, 21, 'மாஜி' எம்.எல்.ஏ.,க் கள் அணிவகுத்துள்ள நிலையில், அவர்களுடன் பெரும்பாலான நிர்வாகிகள் கைகோர்த்துள்ள னர். சென்னையில் முகாமிட்டி ருந்த அ.தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், சேலம் திரும்பிய நிலையில், நேற்று முன் தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 35 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.இதனால், அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள், சேலம் மாநகர் முழுவதும், 60 வார்டுகளில் உள்ள செயலர் ... |
| நிவாரணம் அறிவித்தார் பன்னீர் கிடப்பில் போட்டார் பழனி Posted: 22 Feb 2017 09:29 AM PST 'வறட்சி காரணமாக, உயிரிழந்த விவசாயி களுக்கு நிவாரணம் வழங்கப்படும்' என, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அறிவித் தார். அதை, இடைப்பாடி பழனிசாமி கிடப்பில் போட்டுள்ளதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'தமிழகத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட, 32.3 லட்சம் விவசாயிகளுக்கு, அரசு நிவாரணம் வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். அதே நேரத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்டு, இதுவரை, 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்களில் சிலர், தற்கொலை செய்துள்ளனர்.அவர்களின் குடும்பங்களுக்கு,தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு ... |
| பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வருகை Posted: 22 Feb 2017 10:15 AM PST
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா சிறைக்குச் சென்றதால், அவர் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் அனைத்தையும், அவரது அக்கா மகன் டி.டி.வி.தினகரனிடம் ஒப்படைத்துச் சென்றார். இதற்காக, அவரை கட்சியில் உடனடியாக இணைத்தவர், அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலராகவும் நியமித்தார். கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருந்து, தினகரன், சசிகலாவின் விருப்பப்படி, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி, நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற வைத்தார். பதவி ஏற்பு: இதற்கிடையில், பெங்களூரு ... |
| 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா ; 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் Posted: 22 Feb 2017 10:56 AM PST
வாஷிங்டன்: ‛பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்ததாகவும், இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது' என நாசா அறிவித்துள்ளது. 7 புதிய கோள்கள்: சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்சர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய மைல் கல்: |
| 'சிசேரியன்' முறையில் குழந்தை: இரண்டாம் இடத்தில் தமிழகம் Posted: 22 Feb 2017 01:28 PM PST
புதுடில்லி: ''தகுந்த மருத்துவ காரணம் இன்றி, 'சிசேரியன்' எனப்படும், குழந்தை பிறப்புக்கான அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்களின் பெயர்களை வெளியிட்டு, அவர்களை அவமதிக்க வேண்டும்,'' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா கூறியுள்ளார். புகார்கள்: இயற்கையாக குழந்தை பிறப்பதை தவிர்த்து, சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 'சேஞ்ச்.ஆர்க்' இணையதளத்தில் புகார்கள் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், மேனகா, ... |
| அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை Posted: 22 Feb 2017 02:21 PM PST
புதுடில்லி: அதிக 'டிபாசிட்' குறித்து இரண்டாம் கட்ட ஆய்வில், மூத்த குடிமக்கள் செய்த முதலீடுகள் குறித்து விசாரிக்கப்பட மாட்டாத என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 'வங்கிகளில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்பட்டுள்ள டிபாசிட்டுகள் குறித்து, இரண்டாம் கட்ட ஆய்வில் முக்கியத்துவம் தரப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை நேற்று அளித்துள்ள விளக்கம்: மூத்த குடிமக்களுக்கான, 70 வயதுக்கு மேற்பட்டோர் செய்துள்ள முதலீடுகள் குறித்து விசாரிக்கப்படாது. அதே நேரத்தில், 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 23,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |