Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நகை செய்யுங்கள்

Posted: 22 Feb 2017 10:48 AM PST

- கொடுப்பதற்கு என்ன இருக்கிறது என்ற கவலை இருந்து கொண்டேதான இருக்கிறது – இருப்பு இல்லாத கவலையால் இருப்புக்கொள்ளவில்லை மனம் – தங்கம் வைரம்தான் கொடுப்பதற்கு அழகா – தலையைக் கொடுக்க வந்தான் குமணன் தசையைக் கொடுத்தான் சிபி – நாம் அன்னதானம் ஆடைதானம் இரத்த தானம் இன்னும் எளிதாய் இருக்கைதானம் செய்யலாம் – அள்ளாமலும் இழப்பு இல்லாமலும் கொடுக்கலாம் – எப்படி? – புன்னகை செய்யுங்கள் புன்னகை செய்யவையுங்கள் – சேதாரம் செய்கூலி இல்லாத நகை புன்னகைதான்! – ———————— பிச்சினிக்காடு ...

மரியாதைக்குரிய தோல்வி

Posted: 22 Feb 2017 10:46 AM PST

-- இவ்வளவு பலவீனமான நம்மை பலப்படுத்த நினைத்தது தவறுதான் – ஒரு நியாயம் ஒரு நியாயமாற்றம் நம் பலவீனங்களால் தோற்கிறது தோற்றது – தோற்கிற ஒன்றைத்தான் சிலர் தூக்கி நிறுத்த ஆயுளைக் கழித்தார்கள – நிலை நிறுத்த வேண்டிய அவசியத்திற்காத் தோல்வியுற்றார்கள் தோல்வியை வெற்றியாக கருதினார்கள – அதனால்தான் அவர்கள் ஆற்றோடு போகிறவர்கள் இல்லை – காற்றோடு பறக்கிறவர்களும் இல்லை – ஊரோடும் அவர்கள் ஒருவரில்லை – ஆனால்… காதலர்கள் அதை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள மீறியிருக்கிறார்கள தோற்கடித்திருக்கிறார்கள – சமூகமும் அவர்களைத் ...

பதில் சொல்லுங்க சசிகலா...; தேர்தல் ஆணைய நோட்டீஸ் ஒப்படைப்பு

Posted: 22 Feb 2017 07:30 AM PST

[size=19]பதில் சொல்லுங்க சசிகலா...; தேர்தல் ஆணைய நோட்டீஸ் ஒப்படைப்பு[/size] பெங்களூரு: பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக, தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசை பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். நோட்டீஸ்: அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு செல்லாது என தேர்தல் ஆணையத்தில் ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா மற்றும் மைத்ரேயன் ஆகியோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக கடந்த வாரம் தேர்தல் ஆணையம் விசாரணை ...

மாட்சிமைமிகு ஜனநாயக சோசலிசக் குடியரசு..!

Posted: 22 Feb 2017 06:53 AM PST

மாமன்னரின் அறிவுரைகளை உண்டு
காலை பசியாறினோம்.

மாண்புமிகு அமைச்சர்களின் போதனைகளை
மதிய உணவாக்கிப் புசித்தானந்தித்தோம்

மகாகனம் பொருந்திய கனவான்களுக்கு
ஒரு பணிவான விண்ணப்பம்

கடும் பொய்களைத் தாங்கிக் கொள்ளாத
இலகு வயிறுடைய எம் குழந்தைகள்
வயிற்றுப் போக்கால் பேரவதி கொள்கிறார்கள்
இன்றிரவாவது ஆளுக்கொரு
தோசை வழங்கி ஆசீர்வதிக்கக் கூடாதா ?
–
————————————–
-நிஷா மன்சூர்
குங்குமம்

புனைபெயரே…!

Posted: 22 Feb 2017 06:50 AM PST

- – வித்தியாசமாக நடக்கத் தெரியவில்லை குயில்களுக்கு – அரிய வாய்ப்பிருந்தும் உலகம் அறியும் வாய்ப்பிருந்தும் தவறவிட்டன வித்தியாசத்தை – காக்கையும் குயிலும் கறுப்புதான் வித்தியாசப்படுத்த வேண்டியது வித்தியாசப்பட வேண்டியது குயில்களல்லவா? – காக்கைக்கும் குயிலுக்கும் குரலின் நிறமும் கறுப்பென்றால் வித்தியாசத்திற்கிடமில்லை – வித்தியாசம் தேடி அலைவதாய் அலட்டிக்கொள்ளும் குயில்கள் குரலின் தரத்தைக் காட்டவேண்டாமா? – குயில்கள் கும்மி கொட்டுவதெல்லாம் இப்படிக் குரலின் நிரமிழந்து போவதற்குத்தான் என்பது ...

சினிமா துளிகள் - தொடர் பதிவு

Posted: 22 Feb 2017 06:42 AM PST



-
ராணாவின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி
இருக்கும் 'காஸி அட்டாக்' திரைப்படத்தை பாலிவுட்
நடிகை கரீனா கபூர் வெகுவாக புகழ்ந்திருக்கிறார்.
-
-

request for invite

Posted: 22 Feb 2017 06:41 AM PST

தமிழ் நேசன் அவர்களுக்கு ..தங்கள் தளத்திற்கு எனக்கு அழைப்பு அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.மெயில் id -gopalrpg71 @gmail .com .நன்றி

தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது

Posted: 22 Feb 2017 05:14 AM PST

புதிய விமான சேவை - - தூத்துக்குடி–சென்னை இடையே தினமும் காலை மற்றும் மாலையில் 'ஸ்பைஸ் ஜெட்' தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழில் நகரமாக உருவாகி உள்ளதால், விமான சேவையை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி–சென்னை இடையே புதிதாக 'ஏர்கார்னிவெல்' என்னும் நிறுவனம் புதிய விமானத்தை இயக்க முடிவு செய்தது. அதன்படி இந்த விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் 'ஏர்கார்னிவெல்' நிறுவனத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 22 Feb 2017 04:49 AM PST

என் முகவரி

muthusimpu@gmail.com

அரிய புத்தகங்கள்

Posted: 22 Feb 2017 04:49 AM PST

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

கோவில் திருவிழாவில் 65 அடி உயர தேர் கவிழ்ந்து

Posted: 22 Feb 2017 04:30 AM PST

கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் 65 அடி உயர தேரை இழுத்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை

Posted: 22 Feb 2017 04:13 AM PST

ஹரிஷ்சந்திரேஷ்வர் கோவிலுக்கு அருகில் கேதாரேஷ்வர் குகைக்குள் உள்ள சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இந்த தூண்கள் உணர்த்தும் உண்மையை பார்க்கலாம். யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை மகாராஷ்டிராவில் உள்ள மால்ஷேஜ் காட் என்ற பகுதியில், வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை இருக்கிறது. இந்த கோட்டையானது கடல் மட்டத்தில் இருந்து 1424 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிகரத்தை சுற்றுலாப் பயணிகள் தவறவிட்டு விடக்கூடாது. ஏனெனில் இந்தச் சிகரப் பகுதியில் ...

பாராகிளைடரை உருவாக்கி கிராம இளைஞர் சாதனை:

Posted: 22 Feb 2017 03:03 AM PST

பாராகிளைடரை உருவாக்கி கிராம இளைஞர் சாதனை:  கடும் முயற்சிக்கு பின் நிறைவேறிய பறக்கும் கனவு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதும், தனது விடா முயற்சி யால் பாராகிளைடரை உருவாக்கி பறந்து சாதனை படைத்துள்ளார் ஒரு கிராமத்து இளைஞர். பழநி அருகே உள்ள வய லூரைச் சேர்ந்தவர் அ.ராஜா ஞானப்பிரகாசம்(35). இவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தந்தை அருள்பிரகாசத்திற்கு உதவியாக விவசாயம் செய்யத் தொடங்கினார். வீட்டில் இருந்தவாறு தொலைதூரக் கல்வியில் படித்து எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்றார். வானில் ...

காதல் தோற்றதே இல்லை!

Posted: 22 Feb 2017 02:37 AM PST

- – காதல் தீமிதியில் கண்வைக்காத நாத்திகர்கள் இல்லை – காதல் பொதுவுமைக்கட்சியில் உறுப்பினராகாத முதலாளிகள் இல்லை – மதம் சாதி காதலர்களைத் தண்டித்திருக்கலாம் கண்டித்திருக்கலாம் தடுக்க முடிந்ததில்லை – காதலர்கள் தோற்றிருக்கிறார்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள காதல் தோற்றதே இல்லை – காதல் எல்லார்க்குமான சமரச சன்மார்க்கம் – தேடுதுறை கூடுதுறை ஓடுதுறை வாடுதுறை பாடுதுறைதான் காதல்துறை – காதல்துறையில் கவனம் தவிர்ப்போம் துறைதோறும் துறைதோறும் காதல் செய்வோம் சிகரங்கள் ...

முஸ்லிம்கள் மீதான கொடூரம்.கண்டுகொள்ளாத ஆங் சான் சூச்சி

Posted: 22 Feb 2017 02:32 AM PST

ஆட்சி கைக்கு வந்ததும் பதவி ஆசை,மத-இன வெறி தலைக்கேறி விடுவதை எங்கும் காணலாம். இந்த நிலையில் மியன்மாரில் ஆட்சிக்கு வந்த அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற ஆங் சான் சூச்சி உம் தன்னை மாற்றிக் கொண்டு விட்டார். அவரின் சூழ்ச்சியும் கொடூரமும் உலக நாடுகளில் மனித உரிமை ஆர்வகளிடமும் கேள்விகளை வைத்துள்ளது. 'தி லேடி' என்று மியான்மரில் அழைக்கப்படும் ஆங் சான் சூ சி, 1990-களில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாக அறியப்பட்டு பிரபலமானவர். ரங்கூனில் ராணுவத்தால் கட்டாய வீட்டுச் சிறை வைக்கப்பட்ட ...

நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக மனு மீதான விசாரணை 27 ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Posted: 21 Feb 2017 11:29 PM PST

தமிழக சட்டசபையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் கடந்த 18-ந் தேதி வெற்றி பெற்றது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார்.இதுபோல் பாமக சார்பிலும் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. திமுக மற்றும் பாமக மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இதுதொடர்பாக உரிய வீடியோ காட்சி ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அத்துடன், ...

சிவராத்திரி நான்கு ஜாம பூஜைகள் - அபிஷேகம்

Posted: 21 Feb 2017 10:31 PM PST

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்திலும் செய்யப்படும் அபிஷேக, அர்ச்சனைகளைப் பார்க்கலாம். சிவராத்திரி நான்கு ஜாம பூஜைகள் - அபிஷேகம் மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். அப்போது ஒவ்வொரு ஜாமத்தின் போதும், அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஜாமத்திலும் செய்யப்படும் அபிஷேக, அர்ச்சனைகளைப் பார்க்கலாம். முதல் ஜாமம்: பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் ...

தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''

Posted: 21 Feb 2017 10:27 PM PST

- • "தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...'' "எந்த முட்டாள் சொன்னது?'' "எங்க வீட்டு கன்றுக்குட்டிதான்!'' எம்.அசோக்ராஜா, - -------------------------------------- • "மாடு வாங்க லோன் கேட்குறீங்களே, எப்படிக் கட்டப் போறீங்க..?'' "எல்லாம் கயிறு போட்டுத்தான்!'' லக்ஷ்மி பாரதியன், - -------------------------------------- - • "வாராவாரம் புதுசு புதுசா கண் மை டப்பா வாங்கிட்டுப் போறீங்களே, எதுக்கு சார்?'' "என் மனைவி புது"மை' விரும்பிங்க!'' வி.ரேவதி, - ------------------------------------------- -

வணக்கம்

Posted: 21 Feb 2017 10:25 PM PST

Message bodyநான் கமல் ஏகா.

30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிய எனது தந்தை ஆட்டோ ஓட்ட வேண்டிய அவசியம் இருக்காது: முகமது சிராஜ்

Posted: 21 Feb 2017 10:24 PM PST

30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிய எனது தந்தை இனி ஆட்டோ ஓட்ட வேண்டிய தேவை இருக்காது என ஐதராபாத்தை சேர்ந்த முதல்தர கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் கூறினார் எனது தந்தை ஆட்டோ ஓட்ட வேண்டிய அவசியம் இருக்காது: முகமது சிராஜ் ஐதராபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ஐதராபாத்தை சேர்ந்த முதல்தர கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் ரூ.2.6 கோடிக்கு விலை போனார். அவரை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மகிழ்ச்சி ததும்ப கூறியதாவது:- ஏலத்தில் எடுக்கப்பட்டதும் அடுத்த ...

நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு

Posted: 21 Feb 2017 04:58 PM PST

- நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் (ஹெலிபோர்ட்), தேசியத் தலைநகர் தில்லியில் அடுத்த வாரம் திறக்கப்பட இருக்கிறது. "பவான் ஹன்ஸ்' பொதுத் துறை நிறுவனத்தால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்காக ரூ.100 கோடி முதலீட்டில் இந்த ஹெலிகாப்டர் நிலையம் கட்டமைக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான பி.பி.சர்மா, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது: வடக்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் கட்டமைக்கப் பட்டுள்ள நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையத்தை, மத்திய ...

'தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'

Posted: 21 Feb 2017 04:55 PM PST

'தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்' - தாயை பெருமைப்படுத்துவதைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பு.பிரகாசம் வலியுறுத்தினார். உலக தாய் மொழி தின விழா சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் அவர் பேசியது:- மொழி, கலாசாரப் பன்முகத்தன்மை, பன்மொழி அறிவை ஒரு ஆக்கமாகப் பயன்படுத்தி அமைதியையும், நிலையான வளர்ச்சியையும் ஏற்படுத்த யுனெஸ்கோ நிறுவனத்தால் ...

கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா

Posted: 21 Feb 2017 04:51 PM PST

கலை என்பதே சங்கமம்தான் என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். மத்திய வருமான வரித் துறையின் விளையாட்டு, கலாசாரம் தென் மண்டல வாரியம் சார்பில், 30-ஆவது அகில இந்திய கலாசாரப் போட்டி "கலா சங்கமம்' எனும் பெயரில் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நாடு முழுவதிலும் பங்கேற்றுள்ள வருமான, சுங்கம், கலால் வரித் துறைகளின் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு மன்டல, மாநில அளவில் இசை, நடனம், நாடகம் உள்பட 13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப் படுகின்றன. இந்தப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™