Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரூ.10 கோடி செலுத்தாவிட்டால் சசிகலாவுக்கு மேலும் 13 மாத சிறை

Posted: 21 Feb 2017 06:56 AM PST

பெங்களூரு:பெங்களூரு சிறையில், நான்கு ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வரும், அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலா, அவருக்கு விதிக்கப்பட்ட, 10 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்தா விட்டால், மேலும், 13 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தகவல் கிடைத்துள்ளது.

வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக் கில், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும், 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
ரூ.10 கோடி அபராதம்:
இதையடுத்து, இந்த மூவரும், கர்நாடக மாநில ...

மும்பை மாநகராட்சியை கைப்பற்ற பா.ஜ., - சிவசேனா... பலப்பரீட்சை!:முதன்முறையாக எதிர்த்து போட்டியிடுவதால் பரபரப்பு

Posted: 21 Feb 2017 08:18 AM PST

மும்பை:ஆசியாவின் மிகப்பெரிய மாநகராட்சி யான, பிருஹன் மும்பை மாநகராட்சி உட்பட, மஹாராஷ்டிராவில், உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்துள்ள நிலையில், நாட்டின் பெரும் பணக்கார மாநகராட்சியான, மும்பையை கைப்பற்றப் போவது யார் என்பதில், பா.ஜ., - சிவசேனா இடையே, பலப்பரீட்சை நடக்கிறது.

கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி யில் உள்ள இந்த கட்சிகள், தனித்தனியாக எதிர்த்து போட்டியிடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவ சேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த, 1966ல் உருவான சிவசேனா கட்சி, மஹாராஷ் டிராவில் மிகப்பெரிய ...

சசிகலாவின் முதல்வர் கனவு கலைத்த வழக்கின் பின்னணி

Posted: 21 Feb 2017 08:44 AM PST

கடந்த, 2013 வரை அமலில் இருந்த மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8 - 4ன் படி, மக்கள் பிரதிநிதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றாலும், 90 நாட்களில் மேல்முறையீடு செய்வதன் மூலம், பதவி இழப்பிலிருந்து தப்பிக் கலாம். இதனால், வழக்குகளில் தண்டனை பெற்ற பலர்,

பதவிகளில் தொடர்ந்தனர். வழக்குகளை இழுத்தடித்தனர். 2005ல் வழக்கறிஞர் லில்லி தாமஸ், சுக்லா ஆகியோர், இச்சட்டப் பிரிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம்,'மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8- 4, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோத மானது என்ப தால், அது ...

பொதுச்செயலர் பதவியில் சசிகலா நீக்கம் : பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்

Posted: 21 Feb 2017 08:46 AM PST

கோவை: 'அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலராக உள்ள சசிகலாவை நீக்கி விட்டு, பொதுவான நபரை தேர்வு செய்ய வேண்டும்' என, கோவையை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதிருப்தி : அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலராக சசிகலாவை, கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவித்தனர்; இதை அடிமட்ட தொண்டர்கள் ஏற்கவில்லை. பொதுமக்கள் மத்தியிலும்அதிருப்தியே நிலவுகிறது.கட்சி
விதிகளை மீறி துணை பொதுச் செயலராக, தினகரனை நியமித்ததை கட்சியினரும் விரும்பவில்லை.
கோவையை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது: சசிகலாசிறையில் உள்ளார்.இன்னும் நான்கு ...

சசி அடைபட்டுள்ள சிறை முன் அ.தி.மு.க.,வினர் தவம்... துவங்கியது!:அனுமதி மறுப்பால் காத்திருந்த மந்திரிகள் ஏமாற்றம்:அரசு நிர்வாகம் முடங்குவதாக நடுநிலையாளர்கள் எரிச்சல்

Posted: 21 Feb 2017 08:59 AM PST

சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறை முன், அவரால் பதவி பெற்ற, அ.தி.மு.க.,வினர், தவம் கிடக்க துவங்கி உள்ளனர்.

சசிகலாவை சந்திக்க, நேற்று, சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், காத்திருந்த அமைச்சர் கள் ஏமாற்றமடைந்தனர். சசிகலாவை சந்திப்ப தற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட, அ.தி.மு.க., வினர், இப்படி பெங்களூரு சிறை வாசலில் மணிக்கணக்கில் காத்து கிடப்பதால், தமிழகத் தில், அரசு நிர்வாகம் முடங்குவதாக, நடுநிலை யாளர்கள் எரிச்சலடைந்து உள்ளனர்.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு அடுத்த, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் ...

மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Posted: 21 Feb 2017 09:02 AM PST

சென்னை:'தமிழகத்தில், மே, 14க்குள், உள் ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என, மாநில தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல், 2016 அக்., 17, 19 தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடக்கும் என, மாநில தேர்தல் கமிஷன், செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கு முறை யான இட ஒதுக்கீடு செய்யவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.குற்ற பின்னணிமனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 'உள்ளாட்சி ...

தி.மு.க., வழக்கு: ஐகோர்ட் இன்று விசாரணை

Posted: 21 Feb 2017 09:33 AM PST

சென்னை:முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரத் தில், சபாநாயகரின் முடிவு செல்லாது என, அறிவிக்கக் கோரி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று( 22-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.

சட்டசபை, அ.தி.மு.க., தலைவராக, இடைப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, சிறப்பு கூட்டம், 18ம் தேதி கூடியது.
வெளியேற்றம்
நம்பிக்கை தீர்மானத்தை, முதல்வர் பழனிசாமி கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகள் ...

ஜெ., நினைவிடம் கட்டும் பணி சாத்தியமில்லை என்கிறது அரசு

Posted: 21 Feb 2017 09:36 AM PST

ஜெ., நினைவிடத்திற்கு, அவரது பிறந்த நாளான, 24ம் தேதி அடிக்கல் நாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு, ஜெயலலிதா விற்கு, தனியாக நினைவிடம் அமைப்பதற்கு, அரசு முடிவெடுத்துள்ளது.இதற்காக, தமிழக அரசு, 15 கோடி ரூபாயை செல விட திட்டமிட்டுள்ளது. கடற்கரையில், ஏதாவது கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். ...

எதிர்ப்பால் வீடுகளில் முடங்கிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்

Posted: 21 Feb 2017 09:39 AM PST

சேலம்:சேலம் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள், சொந்த ஊர் திரும்பிய போதும், மக்களிடம் இருந்து வரும் மிரட்டல்களால், வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

கடந்த மூன்று வாரங்களாக, சென்னையில் முகாமிட்டிருந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், நேற்று தங்களது தொகுதிகளுக்கு திரும்பினர்.சேலம் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் இருந்து, நேற்று காலை, ஊர் திரும்பினர். நேற்று முன்தினம் இரவே, எம்.எல்.ஏ.,க் கள் வீடு, அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல், அம்மாபேட்டை அரசு பள்ளியில் ஆய்வு மேற் கொள்வதாக இருந்தார். ...

'தொழில்நுட்பத்தை புகுத்த தவறினால் ஆபத்து'; வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Posted: 21 Feb 2017 10:40 AM PST

மும்பை : ‛வங்கிகள் பாரம்பரிய நடைமுறையில் இருந்து, மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு மாற தவறினால் ஆபத்து' என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
ஆபத்து:
இதுகுறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர், எஸ்.எஸ்.முந்த்ரா கூறியதாவது: வங்கிகள், நவீன மின்னணு தொழில்நுட்பத்தை தழுவாமல், இன்னும், பாரம்பரிய நடைமுறையை பின்பற்றினால், அவை, வங்கி வர்த்தகத்தில் இருந்தே காணாமல் போகும் ஆபத்து உள்ளது. பல்வேறு தொழில்களில் உள்ள நிறுவனங்கள், தற்போது, 'சிறிய வங்கி, பேமன்ட் வங்கி' என, நிதிச் சேவையிலும் கால் பதித்து வருகின்றன. ...

ஜல்லிக்கட்டில் மிருகவதை 'பீட்டா' மீண்டும் சீண்டல்

Posted: 21 Feb 2017 11:45 AM PST

புதுடில்லி: சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது, அதிக அளவில் காளைகள்
துன்புறுத்தப்பட்டதாக கூறியுள்ள, 'பீட்டா' அமைப்பு, இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆதாரங்களை தாக்கல் செய்யப் போவதாக கூறியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழகத்தில் தன் எழுச்சி போராட்டங்கள் நடந்தன.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, தமிழக சட்டசபையில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அலங்காநல்லுார், பாலமேடு உள்ளிட்ட இடங்களில், சமீபத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ...

ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு அதிகாரிகளை விரட்டிய கிராம மக்கள்

Posted: 21 Feb 2017 12:50 PM PST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் எடுக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஆய்வு செய்ய வந்த, வருவாய்த் துறை அதிகாரிகளை தடுத்து, கிராம மக்கள் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் உட்பட நாடு முழுவதும், 31 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க, கடந்த, 15-ல், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, திட்டம் தொடங்கப்பட்டால் நெடுவாசல், அதைச் சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் ...

டிஜிட்டல் பரிவர்த்தனை: 10 லட்சம் பேருக்கு பரிசு

Posted: 21 Feb 2017 01:50 PM PST

புதுடில்லி: ''டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், பரிசு அளிக்கும் திட்டத்தின் கீழ், 58 நாட்களில், 10 லட்சம் பேருக்கு, 153 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட்டு உள்ளது,'' என, 'நிடி ஆயோக்' அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், நேற்று கூறியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக, டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பரிசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இம்மாதம், 20 வரையில், 58 ...

உ.பி., தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றி உறுதி: வெங்கையா நாயுடு

Posted: 21 Feb 2017 03:12 PM PST

புதுடில்லி: ‛உ.பி., சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றி உறுதி' என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
வெற்றி உறுதி:
டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட அவர் தெரிவித்ததாவது: உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்காகவே, தேர்தலில் போட்டியிடுகின்றன. முதல்வர் அகிலேஷ் யாதவ், கழுதை போன்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி, பிரசாரம் செய்வது, அவரது அரசியல் நாகரிகம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™