Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மகள் மறந்த சீதனம்

Posted: 21 Feb 2017 03:24 PM PST

மகள் மறந்த சீதனம் மறுவீடு சென்ற மண மகளே மறந்து சென்ற மரப்பாச்சி இங்கே புகுந்தவீடு சென்ற பொன் மகளே   பிரிந்து சென்ற பொம்மை இங்கே பட்டம் படித்த புத்தகம் இங்கே சட்டம் பேசும் மொழிகள் அங்கே வாட்டம் கொண்ட உயிர்கள் இங்கே   நாட்டம் கொண்ட நங்கை அங்கே   தோட்டம் பூத்த மலர்கள் இங்கே தொடுத்து வைத்த மாலை இங்கே ஆட்டம் போடும் அழகி அங்கே அள்ளிச்சூடும் அருமை அங்கே சட்டைப் பையில் காசு இங்கே சட்டென எடுக்கும் கைகள் அங்கே அட்டைப் பெட்டியில் ஆடைகள் இங்கே அணிந்து மகிழ்ந்த அழகி அங்கே ...

எங்கிருந்தோ வந்தாள்

Posted: 21 Feb 2017 01:56 PM PST

எங்கிருந்தோ வந்தாள் என் அன்னைக்குச் சமமாக எங்கிருந்தோ வந்தாள் தன் அன்னையை விட்டுவிட்டு எனக்காக வந்தாள் நான் தந்தையாய் உருமாற எங்கிருந்தோ வந்தாள் தன் தந்தையை விட்டுவிட்டு எனக்காக வந்தாள் என் பெற்றோர் பணிவிடைக்கு எங்கிருந்தோ வந்தாள் தன் பெற்றோர் விடைபெற்று தங்கமகள் வந்தாள் என் சுற்றம் பேணிடவே எங்கிருந்தோ வந்தாள் தன் சுற்றம் அத்தனையும் தள்ளிவிட்டு வந்தாள் என் ரத்தம் கலந்திடவே எங்கிருந்தோ வந்தாள் தன் ரத்த உறவுகளை தவிர்த்துவிட்டு வந்தாள் நான் கூடப் ...

தயவுசெய்து மன்னிக்க – ஈகரை பன்னாட்டு கருத்தரங்கு-

Posted: 21 Feb 2017 12:00 PM PST

நேரம் கிடைக்காததால் படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போதும் விடுமுறை நாளிலும் படிக்க வசதியாக ஒன்று சேர்த்துள்ளேன். படித்து முடித்ததும் நீக்கி விடுகிறேன்.(தளத்தில் வைத்து ஒன்று சேர்ப்பது சுலபம்,ஒரு சில வினாடிகள்) இணையப் பொறுப்பாளர்கள் மன்னிக்கவும்.

கொத்தமல்லித்தழை கட்டுக்குள் பார்த்தீனியம்… உஷார்!

Posted: 21 Feb 2017 08:51 AM PST

பார்த்தீனியம் பார்க்க அவ்ளோ அழகு. வெண் மொட்டுக்கள் கண் திறந்தது போன்ற பூக்களால் தலை அசைக்கும். ஆனால், இந்தப் பார்த்தீனியம் பண்ணும் வேலையோ பயங்கரம். வயல்வெளி, வரப்புகள் என எங்கும் பறந்து விரிந்து வளர்ந்து நிற்கிறது இந்த நச்சு செடி. அப்புறப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து நிற்கும் - பார்த்தீனியத்தை ஒழிக்கும் அவசியம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒழிக்கும் வேலையோவெற்றிவேந்தன் பார்த்தீனியம் எங்காவது மட்டுமே நடக்கிறது. - இந்தப் பார்த்தீனியம் எங்கிருந்து ...

தமிழகத்தில் ஏப்ரல் 30க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 21 Feb 2017 08:48 AM PST

சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை, பள்ளித் தேர்வுகள் முடிந்த பிறகு, மே 15ம் தேதிக்குள் தான் நடத்த முடியும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஏப்ரல் 30ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் ...

வாசகிகள் கவிதைகள் - மங்கையர் மலர்

Posted: 21 Feb 2017 05:30 AM PST


-
–
வீதியில் ஒரே சண்டை
நமக்கேன் வம்பு
ஊரெங்கும் ஒரே ஆர்ப்பாட்டம்
நமக்கேன் வம்பு
நாட்டில் பல பிரச்னைகள்
நமக்கேன் வம்பு
–
நமக்கேன் வம்பு என்று
ஒதுங்கி விடாதீர்கள்
நமக்கும் வம்பு வரும்

–
————————–
உஷா ரகுநாதன்
மங்கையர் மலர்

கடவுளின் அபார சக்தி

Posted: 21 Feb 2017 05:18 AM PST

- * புல்லைப் படைக்கும் சக்தி கூட நமக்கு இல்லை. ஆனால் கடவுள் இவ்வளவு பெரிய உலகத்தை படைத்து தன் சக்தியை நிரூபித்திருக்கிறார் * பக்தியால் மனதிலுள்ள அழுக்கு எண்ணங்களைப் போக்க முடியும். அலையும் மனதை ஒருமுகப்படுத்தவும் முடியும். * வருமானம் குறைவாக இருந்தாலும், அதில் தர்மத்திற்காக சிறுபங்கு ஒதுக்குவது அவசியம். * செலவில் மட்டும் சிக்கனம் இருந்தால் போதாது. பேச்சிலும் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். – ———————————— – காஞ்சிப் பெரியவர்

எல்லோருக்கும் வாய்க்கிறது காதல்

Posted: 21 Feb 2017 04:59 AM PST

- உலகம் காதலால் ஆனது. காதலுக்காக ஆனது. இறைவன் தான் காதலிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே படைப்புகளை உண்டாக்கினான். உயர்திணை மட்டுமல்ல அஃறிணையும் காதலிக்கட்டும் என்பதற்காகவே எல்லாவற்றையும் ஆண் பெண்ணாகப் படைத்தான். கிரகங்களுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கிறதல்லவா. அதுவேறொன்றுமில்லை காதல் தான். உயிர்களும் அப்படித்தான் காதலால் இயங்குகின்றன. காதல் இல்லை என்றால் அவை இறந்துவிடும். – – கவிக்கோ அப்துல் ரகுமான். – ——————————————

நல்ல சமாரியனின் நாட்குறிப்பு

Posted: 21 Feb 2017 04:51 AM PST

முகமறியா வேண்டுதல்

Posted: 21 Feb 2017 04:49 AM PST

ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு

Posted: 21 Feb 2017 04:37 AM PST

மும்பை மும்பையில் நடந்த நிக்ழ்ச்சி ஒன்றில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2018 மார்ச் 31ஆம் தேதி வரை இலவச டேட்டா தொடரும்.இந்த சலுகை ஏற்கனவே இந்த சேவையில் சேர்ந்தவர்களுக்கும், வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் சேருபவர்களுக்கும் பொருந்தும். ஜியோ பயன்பாட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் 100 கோடி GB-க்கு அதிகமான டேட்டாவை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு நாளைக்கு 3.3 கோடி GB பயன்பாட்டுக்கும் அதிகமாகும். நாட்டில் உள்ள மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை ...

பெண் உண்மையில் சுதந்திரமுடன் தான் இருக்கிறாளா? - பன்னாட்டு கருத்தரங்கத்திற்கான கட்டுரை

Posted: 21 Feb 2017 03:19 AM PST

"நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிய போது அர்ஜுனனுடைய மனது திகைத்ததுபோலே, திகைக்கிறது. ஆண்மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத் தகாத காரியம். அது பற்றியே 'சாத்வீக எதிர்ப்பி'னால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று ...

தூங்க வைக்கும் ரோபோ தலையணை

Posted: 21 Feb 2017 02:55 AM PST

- "மெத்தை வாங்கினேன். தூக்கத்தை வாங்கலை' என்று சொல்பவர்கள், இனிமேல் இந்த ரோபோ தலையணையை வாங்கினால் தூக்கத்தை வாங்கி விடலாம். ஆம். இந்த வேர்க்கடலை வடிவிலான ரோபோ தலையணை தூக்கமின்மை நோயால் (இன்சோம்னியா) பாதிக்கப்பட்டவர்களை நன்றாகத் தூங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலையணையைப் பிடித்துக் கொண்டு படுத்துக் கொண்டால் தூக்கம் கண்களைச் சுழற்றும். இந்தத் தலையணையில் நூற்றுக்கணக்கான சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. போதுமான காற்று வரவில்லையா? தூங்குவற்கு இடைஞ்சலாக வெளிச்சம் ...

Golden Krithis Colours - ஜாகிர் உசேன் & குன்னக்குடியின் இசைச் சங்கமம்!

Posted: 21 Feb 2017 02:41 AM PST

Golden Krithis Colours - 1992-ல் வெளிவந்த இசை ஆல்பம். ஏ.ஆர்.ரஹ்மான் இதில் திலீப் என்ற பெயரில் கீபோர்ட் வாசித்துள்ளார். அநேகமாக இந்த இசை ஆல்பம்தான் இவரது முதல் ஆல்பமாக இருக்க வேண்டும். வயலின் புகழ் குன்னக்குடியும், தபலா புகழ் ஜாகிர் உசேனும் இணைந்துள்ளார்கள் என்றால் இசையின் மகத்துவத்தை கூறித்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை! இந்த இசை ஆல்பத்தில் உள்ள 5 பாடல்களிலும் வயலினுக்கும், தபலாவுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது! வயலின் : குன்னக்குடி வைத்தியநாதன் தபலா : ஜாகிர் ...

கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன்: தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி

Posted: 21 Feb 2017 01:06 AM PST

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நேற்றைய ஏலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவர், தமிழக வீரர் டி.நடராஜன். 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார். இவரது சொந்த ஊர் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி. உடன்பிறந்தவர்கள் 4 பேர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சேலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தினக்கூலி. தாயார் நடைபாதையில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்பவர். நடராஜன் தனது 20 வயது வரை டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் ...

பேல்பூரி

Posted: 21 Feb 2017 12:10 AM PST

- கண்டது • (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலுக்குப் பக்கத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்) குற்றம் பொறுத்தானிருப்பு - மு.பெரியசாமி, விட்டுக்கட்டி. - ------------------------------------ • (கோவை போத்தனூரில் ஒரு தொழிற்சாலையில் ஆண்களும் பெண்களும் இணைந்து பணிபுரியும் பகுதியில் ஓர் அறிவிப்புப் பலகையில்) நீ என் சகோதரி உன்னை எப்படிக் காதலிப்பது? எஸ்.ஆறுமுகம், கோயம்புத்தூர்-21. • (கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு டியூஷன் சென்டரில்) பார்த்துப் படி பார்த்தால் மட்டும் படிக்காதே. - க.சங்கர், நாகர்பாளையம். • ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 20 Feb 2017 11:50 PM PST

செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி

Posted: 20 Feb 2017 11:50 PM PST

- செங்கம்: செங்கம் அருகே இறந்து போன 64 வயது மூதாட்டியின் கண்கள் மற்றும் உடல் அவரது விருப்பப்படி தானமாக வழங்கப்பட்டது. தேக்கவாடி கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த மூதாட்டி ரத்தினம்மாள் தனது இறப்பிற்கு பின் கண்கள் மற்றும் உடலை தானமாக வழங்க முன்வந்து வேலூர் அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதிவு பெற்றிருந்தார். நேற்று அவர் மரணமடைந்ததையடுத்து ரத்தினம்மாளின் உறவினர்கள் மருத்துவர்கள் குழுவை வரவழைத்து கண்கள் மற்றும் உடலை ஒப்படைத்தனர். படிப்பறிவு இல்லாத ரத்தனம்மாளின் ...

எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

Posted: 20 Feb 2017 11:46 PM PST

- முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நூதன ஆர்ப்பாட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினர். | படம்: மு.லெட்சுமி அருண். ---------------------- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் ஆட்சியர் மு.கருணா ...

அஜித்தின் சிக்ஸ் பேக் உடலமைப்பு கிராபிக்ஸ் அல்ல: சிவா

Posted: 20 Feb 2017 11:01 PM PST

- அஜித்தின் சிக்ஸ் பேக் உடலமைப்பு கிராபிக்ஸ் வடிவமைப்பு அல்ல என்று அப்படத்தின் இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் 'விவேகம்' படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்டமாக பல்கேரியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் பிரதான காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள ...

ஜெயலலிதாவின் ஆவி கல்லறையிலிருந்து எழுந்து வருவதே சிறந்த கிளைமாக்ஸ்: ராம் கோபால் வர்மா

Posted: 20 Feb 2017 11:00 PM PST

சிறந்த இறுதிக்காட்சி ஜெயலலிதாவின் ஆவி கல்லறையிலிருந்து எழுந்து வருவதே என்று ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு 'சசிகலா' என்ற பெயரில் படம் இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார் ராம் கோபால் வர்மா. தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ளார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் சசிகலாவைப் பற்றியும், அவருடைய குடும்பத்தினரை பற்றியுல் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் ...

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Posted: 20 Feb 2017 10:55 PM PST

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை மற்றொரு பெரிய அமர்வுக்கு மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தேசித்துள்ளது. எனவே வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 41 நாள் கடும் விரதம் இருந்து இருமுடி சுமந்துவரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பல நூறு ஆண்டுகளாக ...

தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்

Posted: 20 Feb 2017 10:54 PM PST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், அது தமிழகம் நோக்கி வராததால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நிலப் பகுதியில் குளிர் சற்று அதிகமாக இருந்து வருகிறது. திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட அளவின் படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக தருமபுரியில் 17 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் குறைந்த ...

ஸ்டாலின் மனு மீது நாளை விசாரணை: பட்டியலில் இடம்பெறாததால் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

Posted: 20 Feb 2017 10:49 PM PST

இன்றைய வழக்கு விசாரணைப் பட்டியலில்
திமுக தொடர்ந்த வழக்கு இடம் பெறவில்லை.

இதனால், திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்
சண்முகசுந்தரத்திடம் மனு மீது நாளை (புதன்கிழமை)
விசாரணை நடைபெறும் என பொறுப்பு தலைமை
நீதிபதி ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன்
அடங்கிய முதலாம் அமர்வு தெரிவித்தது.
பட்டியலில் இடம் பெறாததால் ஸ்டாலின் வழக்கு விசாரணை
நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தி இந்து

சார் ஒரு நிமிடம் - மின்நூல் (ஈகரையில் வாசிக்க)

Posted: 20 Feb 2017 10:07 PM PST

சார்  ஒரு  நிமிடம் - மின்நூல் (ஈகரையில் வாசிக்க)

புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகள்..(தொடர் பதிவு)

Posted: 20 Feb 2017 09:45 PM PST

எல்லாமே படித்து சுவைத்ததுதான்...அசலாக பதிவிட்டவர்களுக்கு நன்றி... ------------------------- மாமியாருக்கும் சாமியாருக்கும் உள்ள வேற்றுமை என்ன? பெண்கிட்ட விளக்கேத்த சொல்லுவாங்க மாமியார். பெண்கிட்ட விளக்கை அணைக்க சொல்லுவார் சாமியார். - ---------------------------------- - பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?'' ""பொங்கலுக்கு லீவு விடுவாங்க; இட்லிக்கு லீவு விடமாட்டாங்க!'' .................................................. ................................. ""அவர் ...

பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை...!!

Posted: 20 Feb 2017 09:04 PM PST

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்

Posted: 20 Feb 2017 06:51 PM PST

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைவோர், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுவதையோ அல்லது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதையோ தடுப்பது தொடர்பான விதியை நீதிமன்றங்களால் வகுக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் சத்ய நாராயண் பிரசாத் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா ஒரு ஜனநாயக நாடாகும். இங்கு தலைவர்களை மக்கள்தான் தேர்வு செய்ய முடியும். ஆனால், பொதுத் ...

2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்

Posted: 20 Feb 2017 06:48 PM PST

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடுத்த வழக்கில் அதன் சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப் படுத்தினார். 2ஜி அலைக்கற்றை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்களுக்கு சிபிஐ தரப்பு வாதத்தை சிறப்பு வழக்குரைஞர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™