Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சசிகலா ஆதரவு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு... உதறல் தொகுதியில் தலைகாட்ட முடியாமல் போகுமோ என பயம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க முடிவு

Posted: 18 Feb 2017 05:38 AM PST

பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, சொந்த தொகுதிகளுக்கு செல்ல முடியாமல் போய் விடுமோ என, சசி ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது. அதனால், முழு போலீஸ் பாதுகாப்பு கேட்க, கூவத்துாரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னை யில், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரு பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகளில், சசிகலா அணியினர், எம்.எல்.ஏ.,க்களை கூவத்துார் சொகுசு விடுதியில், 10 நாட்களாக தங்க வைத்தனர். அங்கு, அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தனர். இவர்களில் சிலர், சசிகலா குடும்ப ...

5 ஆண்டு சிறையில் இருந்தாலும் சசிக்கு ரூ.10 கோடி அபராதம் உண்டு

Posted: 18 Feb 2017 05:53 AM PST

குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப் பட்டு, அபராதம் விதிக்கப்பட்டவர், அபராத தொகையை கண்டிப்பாக செலுத்தியே ஆக வேண்டும்; அபராதம் கட்டாமல், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்து விடலாம் என, தப்பிக்க முடியாது.

நான்கு ஆண்டு
சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு, தலா நான்கு ஆண்டுகளும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.அபராத தொகையை செலுத்த தவறினால், ...

மக்கள் விரும்பாத 'சசிகலா' அரசு அமைச்சர்களை வறுத்தெடுக்க திட்டம்

Posted: 18 Feb 2017 05:55 AM PST

சசிகலா ஆதரவு அமைச்சர்களிடம், நிலுவை யில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க, தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து, அரசு அலுவலக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்பதற்கு தான், மக்கள் ஓட்டளித்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார். அவர், குடிநீர், ஜல்லிக்கட்டு ஆகிய பிரச்னைகளில் சிறப்பாக செயல்பட்ட தால், மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தை வெளியேற்றி விட்டு, சசிகலா, அந்த பதவிக்கு ...

ஓட்டெடுப்பு செல்லாது பன்னீர்செல்வம் நம்பிக்கை

Posted: 18 Feb 2017 07:58 AM PST

''ஜனநாயகத்துக்கு விரோதமாக, எம்.எல்.ஏ.,க் களை அடைத்து வைத்து, ஓட்டெடுப்பு நடத்தியது செல்லாது,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு முடிந்த பின், பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:சட்ட சபையில், நாங்கள் இரண்டு கோரிக்கைகள் வைத்தோம். 15 நாட்களாக, கூவத்துார் விடுதியில் அடைத்து வைத்த, எம்.எல்.ஏ.,க் களை, மக்களை சந்திக்க விடுங்கள்; அவர்கள் தொகுதிகளுக்கு செல்லட்டும். மக்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ளட் டும். பின், ஓட்டெடுப்பு நடத்துங்கள். ஏனென் றால், 15 நாட்கள் வரை, கவர்னர் கால அவ காசம் கொடுத்துள்ளார். ஆனால், ...

இழப்பீடு அளிக்கும் சட்டத்துக்கு ஜி.எஸ்.டி., கவுன்சில்... ஒப்புதல் ... ஜெட்லி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

Posted: 18 Feb 2017 08:38 AM PST

உதய்பூர்,: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான சட்டத்துக்கு, ஜி.எஸ்.டி., கவுன் சில் ஒப்புதல் அளித்துள்ளது; இது தொடர்பான அடுத்த கூட்டம், மார்ச், 4, 5ம் தேதிகளில் நடக்கவுள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் நோக்கில், ஜி.எஸ்.டி., மசோதாவை, பார்லிமென்டின் இரு சபைகளி லும், மத்திய அரசு நிறைவேற்றியது. அதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு, ஏப்ரல், முதல், நாடு முழுவதும் அமல்படுத்த திட்ட மிடப்பட்டது. ஆனால், ஜி.எஸ்.டி., அமலால் ஏற்படும் இழப்பை, மத்திய அரசு ...

இடைப்பாடி அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது!: எம்.எல்.ஏ.,க்களை தொகுதிக்குள் விடாமல் தடுக்க ஆவேசம்:மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சிக்கு உதவியதால் எரிச்சல்: பொதுமக்களின் வெறுப்பை சாதகமாக்க தி.மு.க.,வும் வியூகம்

Posted: 18 Feb 2017 08:46 AM PST

இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள் ளது. மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சிக்கு உதவியதால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது எரிச்சல் அடைந்துள்ள மக்கள், அவர்களை தொகுதிக்குள் வர விடாமல் தடுக்கப் போவ தாக, ஆவேசமாக கூறியுள்ளனர். பொது மக்களின் வெறுப்பை தங்களுக்கு சாதகமாக்க, தி.மு.க.,வும் வியூகம் அமைத்து வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றா லும், கட்சியும், ஆட்சியும் தன் குடும்பத்தினரை விட்டு போய் விடக்கூடாது என, சசிகலா முடிவு செய்தார். அதனால், சிறை செல்வதற்கு முன், தன் அக்கா மகன் தினகரனை, ...

தி.மு.க.,வினரின் சட்டை கிழிப்பு; வேட்டி அவிழ்ப்பு :சட்டசபை அமளியில் அலங்கோலம்

Posted: 18 Feb 2017 08:51 AM PST

சென்னை, : சட்டசபையில், தி.மு.க.,வினரை வெளியேற்றிய போது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சிலரின் சட்டை கிழிந்தது; முன்னாள் அமைச்சரின் வேட்டி அவிழ்ந்தது.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, சட்டசபையை, நேற்று பிற்பகல், 1:00 மணியளவில் ஒத்திவைத்த சபாநாயகர், மீண்டும்,3:00 மணிக்கு கூடும் என, அறிவித்தார். ஆனால், சபையில் இருந்து வெளியேறினால், மீண்டும் அனுமதிக்க மாட்டர் என நினைத்த, தி.மு.க.,வினர், சபைக்குள் ளேயே இருந்தனர். இதற்கிடையில் சிலர், சபை வளாகத்தில் இருந்த கழிப்பறைக்கு சென்றனர். அப்படி சென்ற சேகர்பாபு, நந்தகுமார், மா.சுப்பிரமணியன் ...

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 பேரிடம் ரூ. 130 கோடி அபராதம் வசூலிக்க வழி என்ன

Posted: 18 Feb 2017 09:26 AM PST

மதுரை,:சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா உட்பட 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள 130 கோடி ரூபாய் அபராதத்தை, தீர்ப்பு வெளியான தேதியிலி ருந்து, 6 ஆண்டுகளுக்குள் வசூலிக்கும்நடவடிக்கையை முடிவுக்குகொண்டுவர, சட்டத்தில் வழிவகை உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 100 கோடி ரூபாய் அபராதம், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் ...

சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்:சட்ட நிபுணர்கள் கருத்து

Posted: 18 Feb 2017 09:48 AM PST

சட்டசபையில், முதல்வர் கோரிய நம்பிக்கை தீர்மானம் செல்லுமா என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சட்டசபையில் நேற்று, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். தி.மு.க., சார்பில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சபாநாயகர் சம்மதிக்கவில்லை. தி.மு.க.,வினரின் ரகளையை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து, சட்டசபையில் ...

தமிழக மக்கள் ஏற்று கொள்ளாத ஆட்சி! கவர்னருக்கு பறக்குது 'இ - மெயில்'

Posted: 18 Feb 2017 10:31 AM PST

கோவை : 'தமிழகத்தில், இடைப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர்; கவர்னர், தமிழகத்தை காக்க வேண்டும்' என, ராஜ்பவனுக்கு 'இ - மெயில்'கள் குவிகின்றன.
தமிழக சட்டசபையில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நேற்று தன் பலத்தை நிரூபித்து, ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.
சட்டசபையில் தங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க.,வினர் மனு அளித்தனர்.
இந்த பரபரப்பான சூழலில், 'கவர்னரின் ராஜ்பவன், இ - மெயில் ...

ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 10 பேர் பதவி பறிபோகுமா?

Posted: 18 Feb 2017 11:36 AM PST

நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிபோகுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது..
ஓட்டு
சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர்.
கட்சி கொறடா உத்தரவை மீறியதால், இவர்களின் எம்.எல்.ஏ., பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, சட்ட நிபுணர்கள் ...

மக்கள் கருத்தை கேட்டவர் சசிகலா அணிக்கு ஆதரவு

Posted: 18 Feb 2017 12:38 PM PST

மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.,வான தமீமுன் அன்சாரி, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியை ஆதரித்தார். அவர், நாகை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது, அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில் தலையிடாமல் இருந்து வந்தார். கூவத்துார் விடுதிக்கு அழைத்தும் செல்லவில்லை என, தொகுதியிலேயே தங்கினார்.
சில தினங்களுக்கு முன், யாருக்கு ஆதரவு தர வேண்டும் என, கருத்து கேட்க, தொகுதி அலுவலகத்தில் பெட்டி வைத்தார். இதில், 2,000 பேருக்கு மட்டும், கருத்து சொல்ல விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
'மக்கள் விருப்பப்படியே ஓட்டளிப்பேன்' ...

நம்பிக்கை ஓட்டெடுப்பு; வெளுத்து வாங்கிய 'நெட்டிசன்'கள்

Posted: 18 Feb 2017 01:37 PM PST

'இனி சட்டம், பெங்களூருவில் இருந்து, தன் கடமையை செய்யும்' என, சமூக வலைதளங்களில், 'நெட்டிசன்'கள் வெளுத்து வாங்கியுள்ளனர்.
நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து, சமூக வலைதளங்களில் வெளியான, 'கமென்ட்ஸ்'
* இந்த நேரம் பார்த்து, சபையில கேப்டன் இல்லாம போய்ட்டாரே!
* போதுமடா சாமி... ரீலு அந்து போச்சி
* இரண்டாவது சபதம் சக்சஸ்?
* சட்டை கிழிப்பு சபைன்னு மாத்திக்கலாமா?
* ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., - எம்.கே.எஸ்., இதில் யாருக்கும் வெற்றியல்ல, யு.பி.எஸ்., 122 பேருக்கும் கிடைத்த செல்வத்துக்கே வெற்றி
* தமிழக ...

சட்டசபை பரபரப்பு நிமிடங்கள்!

Posted: 18 Feb 2017 02:42 PM PST

தமிழக அரசியல் வரலாற்றில் பதிவுபெற்ற முக்கிய நாளாக நேற்று (18 ம் தேதி) இருந்தது. சட்டமன்ற வளாகத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் வந்ததது முதல் அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. அவற்றின் தொகுப்பு இதோ:

● காலை, 9:57 மணி: சட்டசபை கூட்ட அரங்கிற்கு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வந்தார். அவருக்கு, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக, அவர் வெளியே புறப்பட்டு சென்றார்.
● 10:08: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வரத் துவங்கினர்.
● 10:12: பன்னீர்செல்வம் ஆதரவு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™