Tamil News | Online Tamil News |
- தினகரனுக்கு கட்சி; 6 மாதத்தில் திவாகரன் கையில் ஆட்சி; இறுதியாக கார்டனில் சசிகலா வகுத்த திட்டம் அம்பலம்
- அதிரடி தீர்ப்பால் ஆடிப்போன அமைச்சர்கள்!: அடுத்து உருளப்போவது யார் தலை?
- கவர்னர் முடிவு என்ன? பன்னீர், பழனி பதற்றம்
- ஜெ., சமாதியில் அடித்து சசி 'ஸ்டன்ட்'; எம்.ஜி.ஆர்., இல்லத்தில் தியானம்
- கைதி எண்: 3295: நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா சிறையில் அடைப்பு; கண்ணீர் மல்க 'உள்ளே' அனுப்பி வைத்தார் கணவர் நடராஜன்
- குன்ஹா - குமாரசாமி தீர்ப்புகள்: உச்ச நீதிமன்றம் அலசல்
- ஆட்சி அமைக்க தி.மு.க., திட்டமா? எம்.எல்.ஏ.,க்களுக்கு அவசர அழைப்பு
- செங்கோட்டையனை ஓரங்கட்டிய சிஷ்யன் :ஏறிய ஏணியை எட்டி உதைத்த 'எடப்பாடி'
- ஆளும் அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பு; ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு அதிகரிப்பு
- போயஸ் தோட்டத்தை விடக் கூடாது; தினகரனுக்கு சசிகலா அறிவுறுத்தல்
- 'எம்.எல்.ஏ.,க்களை அடைத்தது கேவலம்': பொன்.ராதாகிருஷ்ணன்
- 'எடப்பாடி' கார் டிரைவரின் தந்தை தற்கொலை ஏன்?
- சசிகலாவுக்கு தெலுங்கானாவில் 'நோட்டீஸ்'
| Posted: 15 Feb 2017 08:17 AM PST அ.தி.மு.க.,வை நிர்வகிக்கும் பொறுப்பு தினகரனுக்கும், அடுத்த ஆறு மாதத்தில் திவாகரனை முதல்வராக்கவும் திட்டம் வகுத்து கொடுத்து, சசிகலா போயஸ் கார்டனில் இருந்து சிறைக்கு கிளம்பியுள்ளார். ஜெ., மறைவுக்குப் பின், கட்சி, ஆட்சி, ஜெ., சொத்து என அனைத்தையும் வளைத்தது மன்னார்குடி கும்பல். சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த, 7 இரவு, ஓ.பி.எஸ்., தனியாக பிரிந்து, சசிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.இருப்பினும், அன்று இரவே, அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை கார்டனுக்கு வரவழைத்து, கூவத்துாரில் அடைத்தனர். ... |
| அதிரடி தீர்ப்பால் ஆடிப்போன அமைச்சர்கள்!: அடுத்து உருளப்போவது யார் தலை? Posted: 15 Feb 2017 08:40 AM PST கோவை:வருமானத்துக்கு அதிகமாக, முறை கேடான வழிகளில் சொத்து குவித்திருக்கும் தமிழக அமைச்சர்கள் பலரும், ஊழலுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் ஆடிப்போய்உள்ளனர். சட்டத்தின் பிடியில் சிக்கி, அம்மாவும், சின்னம்மாவுமே அல்லோலப்பட்டு விட்ட நிலையில், தங்களின் கதி என்னவாகுமோ என்ற அச்சம், இப்போதே அவர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தில், 1991 - 96ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், குற்றவாளியாக ... |
| கவர்னர் முடிவு என்ன? பன்னீர், பழனி பதற்றம் Posted: 15 Feb 2017 09:04 AM PST முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், நேற்று, கவர்னர் வித்யாசாகர் ராவை, தனித்தனியே சந்தித்து, தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி வலியுறுத்தினர். சட்டசபை, அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி, நேற்று முன்தினம், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை கொடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.நேற்று மாலை வரை, கவர்னரிடம் இருந்து அழைப்பு வராததால், இரவு, 7:57 மணிக்கு, எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் மாளிகைக்கு சென்றார். அவருடன், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, ... |
| ஜெ., சமாதியில் அடித்து சசி 'ஸ்டன்ட்'; எம்.ஜி.ஆர்., இல்லத்தில் தியானம் Posted: 15 Feb 2017 09:09 AM PST சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற, சசிகலா, அவரது அண்ணி இளவரசி ஆகியோர், போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., வீட்டில் இருந்து, நேற்று காலை, 11:45 மணிக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக, கண்ணீர் மல்க காரில் புறப்பட்டனர். ஒரு காரில், சசிகலா, இளவரசி இருந்தனர். காலை, 11:50 மணிக்கு, ஜெ.,யின் வளர்ப்பு மகன் சுதாகரன், அவரது மனைவி ஆகியோர், மற்றொரு காரில் புறப்பட்டனர். சசிகலாவின் உறவினர்கள் அழுதபடி, அவர்களை வழியனுப்பினர்.சசிகலா 'ஸ்டன்ட்' சசிகலாவின் கார் நேராக, ஜெ., நினைவிடத் திற்கு சென்றது. அங்கு மலர் துாவி சசிகலா வணங்கினார். பின், ... |
| Posted: 15 Feb 2017 09:20 AM PST பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு தண்டனை பெற்ற, சசிகலாவும், இளவரசியும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், நேற்று மாலை அடைக்கப் பட்டனர். சசிகலாவை, அவரின் கணவர் நடராஜன் கண்ணீர் மல்க, சிறைக்குள் அனுப்பி வைத்தார். சிறையில், சசிகலாவுக்கு, 3295 என்ற, கைதி எண் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., தற்காலிக பொது செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் விதித்த, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட், நேற்று முன் தினம் உறுதி செய்தது. 'அவர்கள், உடனே பெங்களூரு விசாரணை ... |
| குன்ஹா - குமாரசாமி தீர்ப்புகள்: உச்ச நீதிமன்றம் அலசல் Posted: 15 Feb 2017 09:21 AM PST சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தர வில் இருந்த குளறுபடிகளை, உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. அதன் விபரம்: * ஆந்திர மாநிலம், ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் இருந்து, விவசாயம் மூலம், 52.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாக, ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், 5.78 லட்சம் ரூபாயாக குறிப்பிடப்பட்ட வருமானத்தை பரிசீலித்த சிறப்பு நீதிமன்றம், விவசாய வருமானத்தை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தியது.ஆனால், ஜெயலலிதா ... |
| ஆட்சி அமைக்க தி.மு.க., திட்டமா? எம்.எல்.ஏ.,க்களுக்கு அவசர அழைப்பு Posted: 15 Feb 2017 09:29 AM PST தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சென்னைக்கு வரும்படி, அக்கட்சி தலைமை அழைத்துள்ளது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வில், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், 10 எம்.எல்.ஏ.,க்கள்; சசிகலா தலைமையில், 119 எம்.எல்.ஏ.,க்கள் பிரிந்து, தனித்தனியாக செயல்படுகின்றனர். இரு அணிகளில், எந்த அணிக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் அழைப்பு விடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.'இரு அணிகளுக்கும் ஆதரவு இல்லை' என, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சட்டசபை கொறடா சக்கரபாணி தொடர்பு கொண்டு, ... |
| செங்கோட்டையனை ஓரங்கட்டிய சிஷ்யன் :ஏறிய ஏணியை எட்டி உதைத்த 'எடப்பாடி' Posted: 15 Feb 2017 09:33 AM PST செங்கோட்டையனிடம் அரசியல் கற்று, அவர் மூலம், கட்சியில் படிப்படியாக வளர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது, செங்கோட்டையனை ஓரங்கட்டி, முதல்வர் பதவியை கைப்பற்ற உள்ளார். அ.தி.மு.க.,வில் சீனியர், எட்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், கொங்கு மண்டல கவுண்டர் சமுதாயம் மற்றும் இதர சமூக மக்களிடமும் செல்வாக்குள்ளவர், கோபி தொகுதியை சேர்ந்த செங்கோட்டையன். கடந்த, 1991 - 96ல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 2011ல் மீண்டும் அமைச்சராக்கப்பட்டாலும், ஓரே ஆண்டில், ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையனுக்கு, ஜெ., மறைவுக்கு பின் தான், முக்கியத்துவம் கிடைத்தது.சசிகலாவுக்கு ... |
| ஆளும் அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பு; ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு அதிகரிப்பு Posted: 15 Feb 2017 10:01 AM PST அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பதால், தமிழகத் தில், ஜனாதிபதி ஆட்சி வருவதற்கான சூழல் அதிகரித்து உள்ளது. அ.தி.மு.க.,வினர், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவாளர்கள் தனியாகவும் உள்ளனர். இதில், பன்னீர்செல்வத்திற்கு, ஒன்பது, எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஆனாலும், 'சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' என, கவர்னரை சந்தித்து, பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.அதே நேரம், சசிகலா சிறைக்கு போய் விட்ட தால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சட்டசபை கட்சி தலைவராக, சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்துள்ளனர். ... |
| போயஸ் தோட்டத்தை விடக் கூடாது; தினகரனுக்கு சசிகலா அறிவுறுத்தல் Posted: 15 Feb 2017 10:27 AM PST
ஜெயலலிதாவுக்குப் பின், அவர் வசித்த போயஸ் தோட்டத்தை நிர்வகித்து கொண்டிருந்தார் சசிகலா. தற்போது அவர் ஜெயிலுக்குப் போய்விட்ட சூழ்நிலையில், போயஸ் தோட்டத்தை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. யாருக்கு செல்லும்? இது குறித்து போயஸ் தோட்டத்து வட்டாரங்களில் கூறியதாவது: ஜெயலலிதா பெயரில் இருக்கும் போயஸ் தோட்டம் இல்ல பராமரிப்பை, இது நாள் வரையில் சசிகலா கவனித்து வந்தார். ஜெயலலிதா இறந்து போன நிலையில், போயஸ் தோட்டம் இல்லம் யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., வட்டாரத்திலும், பொது மக்களிடம் ... |
| 'எம்.எல்.ஏ.,க்களை அடைத்தது கேவலம்': பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 15 Feb 2017 11:55 AM PST
மதுரை: ''எம்.எல்.ஏ.,க்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருப்பது தமிழகத்திற்கு கேவலம்,'' என, மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார். கவர்னரின் பொறுமை: இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தற்போது எழுந்துள்ள பிரச்னையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் பொறுமையாக செயல்பட்டார்; இதை விட வேறு யாரும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது. ஐம்பது ஆண்டுகளாக, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தமிழகத்தை ஆட்சி செய்து அழித்து விட்டன. புதிய தேடலில் மக்கள் உள்ளனர். ... |
| 'எடப்பாடி' கார் டிரைவரின் தந்தை தற்கொலை ஏன்? Posted: 15 Feb 2017 01:12 PM PST சேலம் : அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் டிரைவரின் தந்தை தற்கொலை வழக்கை வேறு திசையில் எடுத்துச் செல்வதாக போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்கொலை: துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே, கோவில்பத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம், 61. இவரது மகன் மகாராஜன், 27. இவரை, சேலம், சூரமங்கலம் போலீசார், திருட்டு வழக்கில் தேடினர். இது தொடர்பாக, தனிப்படை போலீசார், சொக்கலிங்கத்திடம் விசாரித்தனர். இதனால், மனமுடைந்த சொக்கலிங்கம், விஷம் குடித்தார்; பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் இறந்தார். திசை ... |
| சசிகலாவுக்கு தெலுங்கானாவில் 'நோட்டீஸ்' Posted: 15 Feb 2017 02:21 PM PST திருப்பதி: அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலர் சசிகலாவுக்கு, தெலுங்கானா மாநில அரசு, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது. சசிகலா வீடு: கடந்த, 1990ல், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தெலுங்கானா மாநிலம் ஜிடிமெட்டில், கிராம பகுதியில் உள்ள விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி, அதற்கு, ஜெ.ஜெ., கார்டன் என பெயரிட்டார். இந்த விவசாய நிலம் வாங்கியபோது, அத்துடன் சேர்த்து, செகந்திராபாத்தில் உள்ள மாரேடுபள்ளி ராதிகா காலனியில், சசிகலா பெயரிலும் வீடு வாங்கப்பட்டது. நோட்டீஸ்: இந்த வீட்டிற்கு தொடர்பான சொத்து வரி, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 16,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |