Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரியல் எஸ்டேட் சட்டத்தை அமல்படுத்துவதில்... அதிரடி!:மோசடிகளை தடுக்க மத்திய அரசு தீவிரம்

Posted: 14 Feb 2017 07:03 AM PST

வரும், மே, 1 முதல், ரியல் எஸ்டேட் சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ள நிலை யில், 'மாநில அளவிலான சட்டத்தை இறுதி செய்ய வேண்டும்' என, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும், இதற்கான ஒழுங்குமுறை ஆணையம், மேல்முறையீட்டு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.

ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் மோசடி களை தடுக்கவும், வீடு வாங்கும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், புதிய ரியஸ் எஸ்டேட் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது; இதற்கு, லோக்சபா மற்றும் ராஜ்யசபா, ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 2016 மே, ...

முதல்வரை துரோகியாக்கிய துணை சபாநாயகர்

Posted: 14 Feb 2017 07:07 AM PST

''பன்னீர்செல்வம் ஒரு துரோகி; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரைப் பற்றி, இனி பேசி பயனில்லை,'' என, கூறியிருப்பதன் மூலம், அனைத்து, எம்.பி.,க்களும் முகாம் மாறினாலும், தம்பிதுரை மட்டும் மாறமாட்டார் என, தெரிய வந்துள்ளது.

சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என, தீவிரமாகவும், வெளிப்படையாகவும் கூறி வந்தவர், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை. முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பிரச்னை ஏற்பட்ட பின், தனக்கு முக்கிய பதவி கிடைக்குமென, தம்பிதுரை நம்பினார். ஆனால், கட்சி நிர்வாகிகளை சசிகலா மாற்றியமைத்த போதும், தம்பிதுரையை கண்டு கொள்ளவில்லை.பொருளாளர், அவைத் தலைவர் என, ...

தீர்ப்பை முன்கூட்டியே உணர்த்திய சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி

Posted: 14 Feb 2017 07:20 AM PST

திருப்பூர்: சசிகலா வழக்கில் வெளியான தீர்ப்பை, முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான், சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி யில், இரும்பு சங்கிலி வைத்து பூஜிக்கப்பட்ட தாக, பக்தர்கள் கருதுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை யில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலின் சிறப்பு அம்சமாக, 'ஆண்டவன் உத்தரவு' பெட்டி உள்ளது. ஏதாவது, ஒரு பக்தரின் கனவில் தோன்றும் சிவன் மலை ஆண்டவர், குறிப்பிட்ட பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து, பூஜிக்கு மாறு கட்டளையிடுவார். உத்தரவு கிடைத்தபக்தர், கோவிலுக்கு ...

தகர்ந்தது சசிகலாவின் முதல்வர் பதவி கனவு தூள் தூள்!:சொத்து குவிப்பு வழக்கில்4 ஆண்டு சிறை:பதவிக்கு ஆசைப்பட்டவர் களி சாப்பிட போகிறார்:உடனடியாக பெங்களூரில் சரணடைய உத்தரவு:10ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது

Posted: 14 Feb 2017 09:37 AM PST

சொத்து குவிப்பு வழக்கில்,சசிகலாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இதனால், அவரது முதல்வர் பதவி கனவு துாள் துாளானது. அவர், உடனடியாக பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து, சிறைக்கு செல்ல வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிறையில் கழிக்க உள்ள நான்கு ஆண்டுகளு டன், அடுத்த ஆறு ஆண்டுகள் என, சசிகலா, 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.தமிழகத்தில், 1991 - 96ல், முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் ...

பன்னீர் பக்கம் போய் விடாதீர்கள்! எம்.எல்.ஏ.,க்களிடம் சசிகலா கண்ணீர்

Posted: 14 Feb 2017 09:41 AM PST

கூவத்துார் விடுதியில் தங்கிய சசிகலா, அங் குள்ள எம்.எல்.ஏ.,க்களிடம், 'பன்னீர் செல்வம் பக்கம் போய் விடாதீர்கள்' என, கண்ணீர் மல்க கெஞ்சிய தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் பதவியில் இருந்த பன்னீர் செல்வத்தை, ராஜினாமா செய்ய வைத்த சசிகலா, அந்த பதவியை பிடிக்க முயற்சித்தார். எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வம் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களை, கல்பாக்கம் அருகே, கூவத்துார் தனியார் சொகுசு விடுதியில் அடைத்து வைத்தார்.பிப்., 11 முதல், தினமும் போயஸ் கார்டனி லிருந்து கூவத்துார் விடுதிக்கு சென்று, எம்.எல். ஏ.,க்களை சந்தித்து பேசி வந்தார். நேற்று முன் தினம் ...

கொடூரமான நோயாக ஊழல் பரவியுள்ளது; சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வேதனை

Posted: 14 Feb 2017 09:45 AM PST

புதுடில்லி:'ஊழல் என்பது அனைத்து துறைகளி லும் கரைபுரண்டோடி கொண்டிருக் கிறது; மிகக் கொடூரமான நோயாக இது பரவியுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியது போல், ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும்' என, சொத்துக் குவிப்பு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில், சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதிகள், பினாகி சந்திர கோஷ், அமிதவ ராய் அடங்கிய அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது.வழக்கின் தீர்ப்புடன், ஏழு பக்கங்கள் அடங்கிய இணைப்பு தீர்ப்பையும் அமர்வு அளித்துள்ளது. அதில், இந்த தீர்ப்பு ...

சசிகலாவுக்கு சிறை: தலைவர்கள் கருத்து

Posted: 14 Feb 2017 09:48 AM PST

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவின் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழக கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

* தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன்:உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம், நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில், தற்போதைக்கு ஆட்சி அமைக்கும் எண்ணம், தி.மு.க.,வுக்கு இல்லை. ஆட்சி அமைக்க, யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம்.* தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், 21 ஆண்டுகளுக்கு பின், நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது.இந்த தீர்ப்பு, பொது வாழ்க்கையில் அரசியல்வாதிகள், ...

கசப்புகளை மறந்து ஒன்றுபடுவோம்: பன்னீர் அழைப்பு

Posted: 14 Feb 2017 09:52 AM PST

சென்னை:'ஜெ., விட்டு சென்ற பணிகளை, ஒற்றுமையுடன் தொடர, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:
என் நிலைப்பாட்டுக்கு, மாநிலம் முழுவதும், கட்சி வேறுபாடின்றி, அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கட்சி தொண்டர்கள், ஒட்டுமொத்தமாக ஏகோபித்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உங்கள் ஒத்துழைப்போடு, ஜெ., வழியில், இரு மாதங்களாக, அனைத்து தரப்பினரும் பாராட் டும் வகையில், ஜெ., ஆட்சியை, அவர் இல்லை என்ற குறை தெரியாதவாறு, தொடர்ந்து நடத்தி ...

முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

Posted: 14 Feb 2017 09:56 AM PST

முதல்வராக பன்னீர்செல்வம் நீடிப்பதை தடுக்கவும், தங்கள் அதிகாரத்தை தொடரவும், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, எடப்பாடி பழனிச்சாமியை, சசிகலா குடும்பத்தி னர் தேர்வுசெய்துள்ளனர்.

ஜெ., மறைந்ததும், முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அவரை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்து, முதல்வராக சசிகலா முயற்சி செய்தார். முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். அவருக்கு, கட்சியிலும் ஆதரவு அதிகரித்தது.இதனால், சசிகலா முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டது. முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் செல்வதை தடுக்க, எம்.எல்.ஏ.,க்களை, கூவத்துார் ...

ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கவர்னருடன் சந்திப்பு

Posted: 14 Feb 2017 11:25 AM PST

முதல்வரின் ஆதரவு எம்.பி., மைத்ரேயன், கவர்னரை சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாலை, 5:00 மணிக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
மாலை, 6:25 மணிக்கு, முதல்வரின் ஆதரவு எம்.பி.,யான மைத்ரேயன், முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர், கவர்னர் மாளிகை வந்தனர்; கவர்னரை சந்தித்து பேசினர்.
அப்போது, கூவத்துாரில் எம்.எல்.ஏ.,க்களை வெளியேற விடாமல், சசிகலா தரப்பினர் தடுப்பதாக, புகார் தெரிவித்துள்ளனர். மேலும், 'பெரும்பான்மையை நிரூபிக்க, ...

'பொறுமையின் சிகரம்' பன்னீருக்கு புது பட்டம்

Posted: 14 Feb 2017 12:25 PM PST

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, 'பொறுமையின் சிகரம்' என, அ.தி.மு.க.,வினர், புது பட்டம் அளித்துள்ளனர்.
அ.தி.மு.க., வினர், அக்கட்சியின் நிறுவனர், எம்.ஜி.ஆரை, 'புரட்சித்தலைவர்' என்றும்; ஜெயலலிதாவை, 'புரட்சித்தலைவி' என்று அடைமொழியுடன் அழைக்கின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார். அவருக்கு, அ.தி.மு.க., வினர் மட்டுமின்றி, மக்களிடமும் ஆதரவு காணப்படுகிறது.
இந்நிலையில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவை தொடர்ந்து, அ.தி.மு.க.,வினர், பன்னீர்செல்வத்தை, 'பொறுமையின் சிகரம், அண்ணன் ஓ.பி.எஸ்.,' என, ...

‛சிங்கத்தை' கூண்டில் அடைக்க உத்தரவு சமூக வலைதளங்களில் கொண்டாட்டம்

Posted: 14 Feb 2017 01:21 PM PST

சொத்து குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கிண்டல் பதிவுகள் பறந்தன. அவற்றில் சில
சிங்கம் என்று சொன்னதால் தான், இந்த தீர்ப்பை வழங்கினோம், ஏனெனில், சிங்கம் வெளியே திரிந்தால், மக்களை கடித்து கொன்று விடும். அதனால், கூண்டில் அடைக்க உத்தரவிட்டுள்ளோம்...
உண்மையாக கர்ஜித்த நீதியின் சிங்கம், குன்ஹா தான்
கனம் கோர்ட்டார் அவர்களே! மாண்புமிகு அம்மா இறந்து விட்டதால், அவரது இடத்தை நிரப்ப வந்த சின்னம்மாவுக்கே, அவருக்கான, நான்காண்டு தண்டனையையும் சேர்த்து கொடுக்க ...

பன்னீரின் ‛பிரைம் டைம்' பார்முலா; மக்கள் மத்தியில் உயர்ந்த செல்வாக்கு

Posted: 14 Feb 2017 02:42 PM PST

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வர் பன்னீர் கையாண்டு வரும் ‛‛பிரைம் டைம்'' பார்முலாவால் மக்கள் மத்தில் பன்னீர் செல்வத்தின் செல்வாக்கு புது உச்சத்தையடைந்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,கட்சியினர் சமூக வலைதளங்களையோ, ஊடகங்களையோ அதிகம் பயன்படுத்தியது இல்லை. அக்கட்சியினர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பையே பெரும்பாலும் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த டிச., 5ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்பு அ.தி.மு.க.,வில் பெரும் மாற்றங்கள் தென்பட துவங்கியது. சென்னையை வர்தா புயல் தாக்கிய போதே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™