Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'காங்.,கிற்கு வளர்ச்சி குறித்த எதிர்கால பார்வை இல்லை'

Posted: 12 Feb 2017 07:48 AM PST

டேராடூன்:''உத்தரகண்ட் மாநிலத்தில், சுற்றுலா துறைக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தும் எதிர் கால வளர்ச்சி குறித்த பார்வை, காங்., அரசுக்கு இல்லை,'' என, பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில், காங்., கட்சியை சேர்ந்த, ஹரிஷ் ராவத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், சட்டசபை தேர்தல், 15ல், ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. உத்தரகண்ட், ஸ்ரீநகரில் நேற்று, பா.ஜ., சார்பாக நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுலா துறை, அது தொடர்பான துறைகளில் வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் ...

சசிகலா பிடியில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில்...புகைச்சல்!: பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாக புலம்பல்: மன்னார்குடி உறவுகள் ஆளாளுக்கு போடும் உத்தரவால் எரிச்சல்: தப்பிச்செல்ல முடியாத தீவில் சொகுசு விடுதி உள்ளதால் தவிப்பு

Posted: 12 Feb 2017 08:30 AM PST

தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷ மாக இருப்பதாக, சசிகலா கூறினாலும், அவர்கள் மத்தியில், பெரும் புகைச்சல் கிளம்பி உள்ளது.

கூவத்துார் விடுதிக்கு நேரில் வந்து, ஒவ்வொரு வரையும் தனித்தனியாக சந்தித்த சசிகலா, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியதாக, அவர்கள் புலம்புகின்றனர். 'மொபைல் போனில் பேசக் கூடாது; 'டிவி' பார்க்க கூடாது' என, மன்னார்குடி உறவுகள், ஆளாளுக்கு உத்தரவு கள் போடுவதாலும், எம்.எல்.ஏ.,க்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து, மனிதச் சங்கிலி போல, உயரமான, தடிமனான மனிதர்களை நிறுத்தி, இருட்டு இடத்தில் அடைத்து வைத்தி ருப்பதால், ...

சசி தந்த பட்டியல்; கவர்னர் சந்தேகம்!

Posted: 12 Feb 2017 08:32 AM PST

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமைச்சர் பாண்டியராஜன், ஆதரவு அளித்துள்ளதால், சசிகலா தந்த பட்டியல் குறித்து, கவர்னருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

முதல்வர் பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்து, 'எனக்கு, 64 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும், சசிகலா தரப்பினர் அடைத்து வைத்துள்ளனர். எனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க, வாய்ப்பு தாருங்கள்' என, கோரிக்கை விடுத்தார். கவர்னர் எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளார்.இந்நிலையில், சசிகலா கவர்னரை சந்தித்த போது, அவருக்கு ஆதரவாக, அமைச்சர் பாண்டியராஜனும் சென்றிருந்தார். ஆனால், நேற்று ...

சசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது?

Posted: 12 Feb 2017 09:04 AM PST

சென்னை:''சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம்,'' என, மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அவரை காபந்து முதல்வராக பதவியில் நீடிக்கும்படி, கவர்னர், வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார். அதன் பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா, முதல்வர் ஆவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், நிர்பந்தம் காரணமாவே பதவியை ராஜினாமா செய்ததாக, முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்ததால், தமிழக அரசியலில் பரபரப்பு ...

எம்.ஜி.ஆர்., - ஜெ.,க்கு பிறகு பன்னீருக்கே மவுசு: உளவுத்துறை அறிக்கையால் சசி அதிர்ச்சி

Posted: 12 Feb 2017 09:12 AM PST

'அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வுக்கு அடுத்து, மக்கள் அதிகம் நேசிக்கும் தலை வராக, முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளார்' என்ற, உளவுத்துறையின் அறிக்கை, சசிகலா மற்றும் அவரது உறவுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடியால், அ.தி.மு.க.,வில், திடீரென பொதுச்செயலரான, சசிகலாவின் முதல்வர் பதவி கனவு கேள்விக் குறியாகி உள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வம் பக்கம் ஓடாமல் இருக்க, அவர்களை சொகுசு விடுதியில், சசிகலா தரப்பினர் அடைத்துவைத்துள்ளனர்.இந்நிலையில், 'பன்னீர்செல்வம், சசிகலா இருவரில், யார் முதல்வராக வர ...

'சிங்கம்' என சசிகலா கூறுவது 'காமெடி' முதல்வர் பன்னீர்செல்வம் கிண்டல்

Posted: 12 Feb 2017 09:23 AM PST

சென்னை:''எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைக்க வில்லை என கூறும் சசிகலா, அவர்களை சுதந்திரமாக, வௌியே செல்ல அனுமதிக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், தொகுதிக்கு சென்று வந்தால் போதும்; மனசாட்சிப்படி நல்ல முடிவு எடுப்பர்,'' என, முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:'எம்.எல்.ஏ.,க்கள், சுதந்திரமாக உலா வருகின்ற னர்; பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்' என, சசிகலா கூறி உள்ளார். எம்.எல்.ஏ.,க்கள், அவரவர் தொகுதிக்கு சென்று, மக்களை சந்தித்து, மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், என்னை தொடர்பு கொண்டு, தங்கள் மனதில் உள்ளதை கூறிக் ...

தகுதி இல்லாதவருக்கு பெரிய பதவி: ஜெ., சொல்லியது சசிக்கு பொருந்தும்

Posted: 12 Feb 2017 09:25 AM PST

'தகுதி இல்லாதவருக்கு, பெரிய பதவி கிடைத் தால் நிலைக்காது' என, விஜயகாந்த் குறித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியது, சசிகலாவுக்கு பொருந்துகிறது என, அ.தி.மு.க., வினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வும், தே.மு.தி.க.,வும், கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில், இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, முதல்வராக ஜெயல லிதாவும்; எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந் தும் பதவி ஏற்றனர். சில மாதங்களுக்கு பின், சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, அமைச்சர்களை அடிக்கப் பாயும் வகையில், விஜயகாந்த் நடந்து கொண்டார்.அப்போது, ஜெயலலிதா பேசுகையில், 'தகுதி ...

சசிகலா, தினகரன் மீதான 'பெரா' வழக்குகள் துரிதப்படுத்த அமலாக்கத்துறை மனு தாக்கல்

Posted: 12 Feb 2017 09:31 AM PST

ஆட்சி அமைக்க உரிமை கோரும் சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்த, மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் மீதான வழக்குகளை, தினசரி அடிப் படையில் விசாரிக்கக் கோரி, எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றங்களில், சசிகலா மீது நான்கு வழக்கு கள்; டி.டி.வி.தினகரன் மீது, இரண்டு வழக்குகள்; பாஸ்கரன், சுதாகரன், நடராஜன் மீது, தலா ஒன்று, என, மொத்தம் ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன.வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர் அளித்த ...

வெளியூர் குண்டர்களை கைது செய்ய முடியவில்லை: சென்னை போலீசார் புலம்பல்

Posted: 12 Feb 2017 09:34 AM PST

'அரசியல் சார்பு ரவுடிகளிடம் விசாரிக்க அனுமதி கிடைத்தால் தான், குண்டர்கள் அனை வரையும் கைது செய்ய முடியும்' என, போலீசார் தெரிவித்தனர்.

தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த குண்டர்கள், 5,000 பேர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பண்ணை வீடுகள், விடுதிகள், திருமண மண்டபங்களில், உள்ளூர் அரசியல் சார்பு ரவுடிகளின் உதவியோடு பயங்கர ஆயுதங்களுடன் தங்கியுள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களிலும், வன் முறையை கட்டவிழ்த்து விடும் திட்டத்துடன் அவர்கள் மறைந்திருப்பதாக, டி.ஜி.பி., சென்னை கமிஷனர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ...

பன்னீர் - தீபா அணிகள் கைகோர்ப்பது எப்போது?

Posted: 12 Feb 2017 11:05 AM PST

முதல்வர் பன்னீர்செல்வம் - தீபா அணிகளை இணைக்கும் முயற்சியில், முன்னாள் அமைச்சர் ஈடுபட்டுள்ளதால், இரண்டு அணிகளும் கைகோர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், 'மாஜி' அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், நான்கு பேர் அடங்கிய குழுவினர், பன்னீர்செல்வம் - தீபா அணிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு அணிகளின் இணைப்பு குறித்து, நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, 'மாஜி' அமைச்சர் ஒருவர் கூறியதாவது:
அ.தி.மு.க.,வையும், ...

தொடர்பு எல்லைக்கு அப்பால் எம்.எல்.ஏ.,க்கள்! - சமூக வலைதளங்களை நாடும் வாக்காளர்கள்

Posted: 12 Feb 2017 12:10 PM PST

கோவை : எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொள்ள முடியாத விரக்தியில் உள்ள தொகுதி மக்கள், 'வாட்ஸ்அப்', 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், தங்கள் எச்சரிக்கை எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், ஒன்பது தொகுதிகள் அ.தி.மு.க., கைவசம் உள்ளது. இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
'சுவிட்ச்ஆப்'
மற்ற தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் எங்கு உள்ளனர் என மக்கள் தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ.,க்களின் மொபைல்போன்கள் எண்கள், 'சுவிட்ச்ஆப்' ...

பாசறையும் பன்னீர் பக்கமே!: சசிகலாவுக்கு தொடர் சறுக்கல்

Posted: 12 Feb 2017 02:05 PM PST

அ.தி.மு.க.,வில், பாசறை நிர்வாகிகள் பலர், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்க துவங்கியுள்ளனர்.
அ.தி.மு.க.,வில், 2008ல், அப்போதைய பொதுச் செயலர் ஜெ., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையை உருவாக்கினார். பாசறையின் மாநில செயலராக, சசிகலாவின் உறவினர் வெங்கடேஷை நியமித்த ஜெ., பின், அவரது செயல்பாட்டில் அதிருப்தியடைந்து, நீக்கினார். சட்டசபை தேர்தலில், ஊட்டி உட்பட பல தொகுதிகளில், பாசறை நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கினார். ஜெ., மறைவுக்கு பின், வெங்கடேஷ், மீண்டும், பாசறை நிர்வாகிகளை சந்தித்து பேசத் துவங்கினார்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட பாசறை ...

‛விரைவில் நல்ல முடிவு': ரோசய்யா வலியுறுத்தல்

Posted: 12 Feb 2017 03:04 PM PST

கோவை: ''தமிழகத்தில் நிலவும் குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், தமிழக கவர்னர், விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்,'' என, முன்னாள் கவர்னர் ரோசய்யா கூறினார்.
நல்ல முடிவு:
கோவையில், தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ரோசய்யா, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் பதவியை கைப்பற்ற, சசிகலா, பன்னீர்செல்வம் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, நிலவும் குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், கவர்னர் வித்யாசாகர் ராவ், விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™