Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எம்.எல்.ஏ.,க்களை திரும்ப பெறும் உரிமை? குதிரை பேரத்தால் மக்கள் எதிர்பார்ப்பு

Posted: 11 Feb 2017 05:16 AM PST

தமிழகத்தில், எம்.எல்.ஏ., க்களுக்கு நடக்கும் குதிரை பேரத்தால், ஓட்டுகளை திரும்ப பெறும் உரிமை கிடைக்காதா என, நடுநிலை வாக்காளர் கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திடீர் ஆட்சி மாற்றம் வரும் போது, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களை விலைக்கு வாங்கும், குதிரை பேரம், ஜனநாயகத்தின் உரிமைகளை கேள்விக் குறியாக்குகிறது. குதிரை பேரத்திற்கு, பீஹார் மாநிலம் மிக பிரபலமாக இருந்தது. அந்த நிலை தற்போது, தமிழகத்திலும் வந்து விட்டது.காசு, பணம், துட்டு, மணி... என, சொகுசுக்கும், ஆடம்பரத்துக்கும், ஆசைப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பலர், மக்களை தவிக்க விட்டு, சொகுசு விடுதி களில் களியாட்டம் ...

சசிகலாவின் செயல்பாடுகளால் ஜெ., விசுவாசிகள்... அதிர்ச்சி ..! கவர்னரை சந்திக்க தினகரன் எதற்கு என கேள்வி

Posted: 11 Feb 2017 05:24 AM PST

ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட, தன் உறவினர் தினகரனுடன் சென்று, அ.தி.மு.க., பொதுச் செயலராக, தன்னை அறிவித்துக் கொண்டுள்ள சசிகலா, கவர்னரை சந்தித்திருப்பது, கட்சியில் குடும்ப ஆதிக்கம் தொடர்வதை உறுதிப்படுத்தி உள்ளதாக, ஜெ., விசுவாசிகள் குமுறுகின்றனர். 'கட்சி உறுப்பினர்கள் இருக்கையில், உறவினரைக் கூட்டிச் சென்றது ஏன்?' என, கேள்வி எழுப்புகின்றனர்.

சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்ட கோபம் காரணமாக, அவரை இருமுறை வீட் டில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. கடந்த, 1996 தேர்தலில், அ.தி.மு.க., தோற்க, சசிகலா குடும்ப ஆதிக்கமும் முக்கிய காரணம். அப்போது, அவரை வீட்டை விட்டு ...

ஜெ., வசித்த வீடு யாருக்கு சொந்தம் உயில் குறித்து அதிகாரிகள் விசாரணை

Posted: 11 Feb 2017 08:54 AM PST

சென்னை, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள, 'வேதா இல்லத்தில்' ஜெயலலிதா வசித்து வந் தார். அவர் வசித்து வந்த இல்லத்தில், தற்போது சசிகலா, தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அதை விரும்பாத, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொது மக்கள், 'ஜெ., வசித்த வீட்டை, அவரது நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர். அதை ஏற்ற, முதல்வர் பன்னீர்செல்வம், 'ஜெயல லிதா வசித்த, வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும். அவர் பயன்படுத்திய, கார், நுாலகம் என, அனைத்தும் காட்சிப் பொருளாக் கப்படும்' என, அறிவித்தார். இதற்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களி டம், ...

குளியலறைக்குள் எட்டிப் பார்க்கும் பிரதமர் காங்., துணை தலைவர் ராகுல் சர்ச்சை பேச்சு

Posted: 11 Feb 2017 08:58 AM PST

லக்னோ, ''பிறர் குளிப்பதை ஓட்டை வழியாக பார்ப்பதில் பிரதமர், நரேந்திர மோடிக்கு அதிக ஆர்வம்; உ.பி., தேர்தல் முடிவுகள், அவரை கலங்கடிக்கும் வகையில் இருக்கும்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், ராஜ்யசபாவில் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி, 'நீரில் நனையாமல் இருக்க, மழைக் கோட்டு அணிந்து குளிக்கும் வித்தையை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கற்றுக் கொள்ள வேண்டும்' என கூறியது, காங்., வட்டாரத்தில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, ராஜ்யசபாவில் இருந்து, காங்., உறுப்பினர்கள் வெளிநடப்பு ...

உ.பி.,யில் முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு...63 சதவீதம் அசம்பாவிதமின்றி அமைதியாக நடந்து முடிந்தது

Posted: 11 Feb 2017 09:09 AM PST

லக்னோ, :உ.பி.,யில், நேற்று, 73 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட சட்டசபைத் தேர்தலில், 63 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஒரு சில இடங்களில் ஏற்பட்ட சிறு சம்பவங்களை தவிர, ஓட்டுப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்ததாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், 403 சட்ட சபைத் தொகுதிகளுக்கு, மார்ச், 8 வரை, ஏழு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சி யும், காங்.,கும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபக்கம், பா.ஜ.,வும், பகுஜன் சமாஜ் கட்சியும் ...

ஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை:அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

Posted: 11 Feb 2017 09:27 AM PST

''ஜெ., மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.

நாமக்கல் எம்.பி., சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார் ஆகியோர், நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஆதரவு தெரிவித் தனர். அப்போது, அவர்கள் பேசியதாவது:
நாமக்கல் சுந்தரம்: ஜெயலலிதா, 75 நாட்கள், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். மூத்த நிர்வாகிகள், இரவு பகலாக, அங்கு இருந்தோம். டிச., 5 இரவு, 11:30 மணிக்கு, ஜெ., உயிர் பிரிந்தது. ஜெ., இறந்ததும், சசிகலா பின்னால், 15 பேர் அணிவகுத்து வந்தனர். ஜெ., உடல் அங்கு உள்ளது. சசிகலா, ...

இனியும் பொறுமை கிடையாது என சசிகலா பகிரங்கம்... மிரட்டல்!:ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காததால் ஆத்திரம்:உடனே சந்திக்க கவர்னர் ராவுக்கு அவசர கடிதம் :'ஆள்பலம்' திரட்டுவதால் போலீஸ் உஷார் நிலை

Posted: 11 Feb 2017 09:44 AM PST

ஒரு வாரமாகியும் ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுக்காததால், ஆத்திரம் அடைந்துள்ள சசிகலா, 'இனியும் பொறுமை கிடையாது' என, பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

'எம்.எல்.ஏ.,க்களுடன் வந்து சந்திக்க, உடனே அனுமதி அளிக்க வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு, அவசர கடிதம் எழுதி யுள்ளார். இதற்கிடையில், ஆள் பலம் திரட்டு வதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்னை யில், போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.கடந்த,5ம் தேதி நடந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டசபை குழு தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதே நாளில், முதல்வர் ...

எம்.எல்.ஏ.,க்களை விடுவதாக இல்லை!

Posted: 11 Feb 2017 09:50 AM PST

ஜெயலலிதா மறைவிற்கு பின், தமிழகத்தில், பல்வேறு அரசியல் கேலிக்கூத்துக்கள் அரங் கேறி வருகின்றன. நேரடி அரசியல் களத்தில், ஒரு அனுபவமும் இல்லாத சசிகலா, நடை, உடை, பாவனையை மாற்றிக் கொண்டு, 'ஜெ., வழியில் கட்சியை நடத்துவேன்' எனக்கூறி, ஒன்றரை கோடி கட்சி தொண்டர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

புறத் தோற்றத்தை மாற்றினாலும், ஜெயலலிதா விற்கு ஈடாகுமா என, பெரும்பாலான அமைச்சர் களும், சட்டசபை உறுப்பினர்களும், உள்ளுக் குள் பொறுமினாலும், பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக, போயஸ் தோட்டத்தில் கை கூப்பி நிற்கின்றனர். 'நீங்கள் தான் பொதுச் செயலராக, முதல்வராக வர வேண்டும்' ...

சசிகலா வழக்கு என்னாகும்?

Posted: 11 Feb 2017 09:53 AM PST

இதுவரை, பன்னீர்செல்வம் பற்றி பேசாத வட மாநிலத்தவர், இப்போது பன்னீரைப் பற்றியே பேசுகின்றனர். மத்திய அரசு அலுவலகங்களி லும், பன்னீர் முதல்வராக பதவியேற்பாரா அல்லது சசிகலா முதல்வராவாரா என, பட்டிமன்றமே நடக்கிறது.

உ.பி., தேர்தல் நடக்கும் நிலையில், அதை பற்றி யாரும் பேசுவதில்லை; பன்னீர்... பன்னீர் என, தமிழக நிலவரத்தைப் பற்றித்தான் பேசுகின்ற னர். சசிகலாவைப் பற்றி, 'வாட்ஸ் ஆப்'பில் வரும் தமிழ், 'மீம்ஸ்'களை மொழிபெயர்த்துசொல்லும் படி,தமிழக பணியாளர்களை கேட்டு, விஷயத்தை புரிந்து, சிரித்து மகிழ்கின்றனர். அந்த அளவிற்கு, டில்லியை ஆக்கிரமித்து விட்டார், ...

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு

Posted: 11 Feb 2017 11:21 AM PST

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று நடக்க இருந்த ஜல்லிக்கட்டிற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் அமலுக்கு வந்தது.
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்
மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. புதுச்சேரியில் முதல் முறையாக, ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று, லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லுாரி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என, ...

சசி ஆட்சி அமைத்தால் இரு மாதங்களில் கலைந்து விடும்; சொல்கிறார் அரங்கநாயகம்

Posted: 11 Feb 2017 12:48 PM PST

''பன்னீர்செல்வம் தலைமையில், மீண்டும் ஆட்சி அமைந்தால், நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடைபெறும். சசிகலா ஆட்சி அமைத்தால், இரண்டு மாதங்களில் கலைந்து விடும்,'' என, முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் தெரிவித்தார்.
முதல்வர் பன்னீர்செல்வத்தை, நேற்று அவர் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
முதல்வர் பன்னீர்செல்வம், 'என்னை கட்டாயப்படுத்தி, ராஜினாமா கடிதம் வாங்கினர்; எனவே, அது செல்லாது' எனக் கூறி உள்ளார். அதை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல், கவர்னர் உள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில், அசாமில், பல ...

அமைச்சரை கண்டுபிடித்து தர கல்லூரி மாணவர் புகார்

Posted: 11 Feb 2017 01:45 PM PST

சென்னை: 'மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை காணவில்லை; அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கல்லுாரி மாணவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் நவீன்குமார்; கல்லுாரி மாணவர். இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனு:
சென்னை, ராயபுரம் தொகுதியில் வசித்து வருகிறேன். கடலில் படர்ந்துள்ள கச்சா எண்ணெய் முழுவதுமாக, இன்னும் அகற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு, சுவாச பிரச்னை மற்றும் வாழ்வாதார பிரச்னை ஏற்பட்டுள்ளது. ...

மக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் அவரை இடைத்தேர்தலில் தோற்கடிக்கட்டும் : சுப்பிரமணியன் சாமி

Posted: 11 Feb 2017 02:43 PM PST

சென்னை: ‛‛மக்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை என்றால் அவரை இடைத்தேர்தலில் தோற்கடிக்கட்டும்'' என கவர்னர் சந்திப்பிற்கு பின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தார். சந்திப்பிற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாக வெளியேறினார். மரியாதை நிமித்தமாகதான் சுப்பிரமணியன் சுவாமி கவர்னரை சந்தித்ததாக கவர்னர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இடைதேர்தலில் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™