Tamil News | Online Tamil News |
- அதிரடி! ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சாதித்த பன்னீர் மீண்டும்... 'நீட்' தேர்வுக்கு எதிராக சட்டசபையில் புதிய மசோதா தாக்கல் மார்க் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., சேர மாணவர்களுக்கு வாய்ப்பு
- மத்திய அரசின் அனைவருக்கும் வருமானம் திட்டம்... சாத்தியமா? வறுமையை ஒழிக்க ஆய்வறிக்கையில் பரிந்துரை
- மத்திய பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வருமா? ஏராளமான சலுகைகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு
- 'லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தணும்' பார்லிமென்டில் ஜனாதிபதி பிரணாப் உரை
- ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து விசாரிக்க கமிஷன்: முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
- புகழுரை அதிகரிப்பு தி.மு.க., எரிச்சல்
- ஜல்லிக்கட்டு புதிய சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
- அ.தி.மு.க., - தி.மு.க., கடும் மோதல் சட்டசபையில் அரை மணி நேரம் அமளி
- பதில் அளிக்க அமைச்சர்கள் தடுமாற்றம் : சட்டசபையில் சிரிப்பலை
- தென் மாவட்ட அ.தி.மு.க.,வை கரைப்போம்; ஸ்டாலினிடம் அனுமதி பெற்ற எம்.எல்.ஏ.,
- ஒரு கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம்; வரி ஏய்ப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி
- பார்லி., கூட்டத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் காலமானார்
| Posted: 31 Jan 2017 08:42 AM PST சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில், ஒரே நாளில் அவசர சட்டம் கொண்டு வந்து சாதித்த, முதல்வர் பன்னீர்செல்வம், மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில், புதிய சட்ட மசோதா, சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே உள்ளது போல, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர, இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தமிழ்நாடு தொழில் கல்வி நிறுவனங்கள் சட்டப்படி, பிளஸ் 2 தேர்வு ... |
| மத்திய அரசின் அனைவருக்கும் வருமானம் திட்டம்... சாத்தியமா? வறுமையை ஒழிக்க ஆய்வறிக்கையில் பரிந்துரை Posted: 31 Jan 2017 08:45 AM PST வறுமையை ஒழிக்கும் வகையில், அனைவருக்கும் குறைந்தபட்சம் வருமானம் கிடைக்கும் வகையிலான, 'பரவலாக்கப்பட்ட அடிப்படை வருமானம் திட்டத்தை செயல்படுத்தலாம்' என, மத்திய அரசுக்கு, பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது. ஆனால், அரசியல் காரணங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்குதடையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அதில், பரவலாக்கப்பட்ட அடிப்படை வருமான திட்டம் குறித்து கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டில் தற்போது உள்ள பல்வேறு மானிய திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ... |
| மத்திய பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வருமா? ஏராளமான சலுகைகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு Posted: 31 Jan 2017 08:47 AM PST புதுடில்லி,: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நான்காவது பட்ஜெட்டை, இன்று, பார்லி.,யில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல்வேறு சலுகைகள் இடம் பெறலாம் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடு முழுவதும், புழக்கத்தில் இருந்த கரன்சிகளில், 86 சதவீத பங்கு வகிக்கும், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் வகையில், அதிரடி அறிவிப்பை, 2016 நவ., 8ல், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.இதனால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தன் ... |
| 'லோக்சபா, சட்டசபைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தணும்' பார்லிமென்டில் ஜனாதிபதி பிரணாப் உரை Posted: 31 Jan 2017 08:54 AM PST புதுடில்லி,:''லோக்சபா, சட்டசபை தேர்தல்களை, ஒரே சமயத்தில் நடத்துவது குறித்து, ஆக்கபூர்வ விவாதம் நடத்தப்பட வேண்டும்,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, பார்லிமென்டில், இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:லோக்சபாவுக்கும், மாநிலங்களின் சட்டசபைகளுக்கும், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தலாம். இது தொடர்பாக, ஆக்கபூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும்இயல்பு வாழ்க்கை தேர்தலில், பண பலத்தை ஒழித்துக்கட்ட, தேர்தல் செலவு குறித்தும் ... |
| ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து விசாரிக்க கமிஷன்: முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு Posted: 31 Jan 2017 08:57 AM PST சென்னை,: ''ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தொடர்ச்சியாக ஏற்பட்ட, சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்படும்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார். சட்டசபையில், 110 விதியின் கீழ், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பு:ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேதமடைந்த, நடுக்குப்பம் மீன் சந்தையை, ஜன., 28ல், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்; பாதிக்கப்பட்ட மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.நடுக்குப்பம் மீன் சந்தை, முழுவதும் சேதமடைந்ததால், மீனவர்களின் வாழ்வாதாரம் ... |
| புகழுரை அதிகரிப்பு தி.மு.க., எரிச்சல் Posted: 31 Jan 2017 09:05 AM PST சட்டசபையில், அமைச்சர்கள் பதில் அளிக்கும் முன், ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு நீண்ட நேரம், புகழுரை வாசிப்பது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை எரிச்சலடைய வைத்துள்ளது. ஜெயலலிதா இருந்தவரை, அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் பேசும் போதும், முடிக்கும் போதும், ஜெயலலிதாவை புகழ்ந்து, சில நிமிடங்கள் பேசுவர். அது, கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.ஜெயலலிதா மறைந்த பின், இதுபோன்ற புகழுரைகள், சட்டசபையில் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக, தற்போது, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், பேச துவங்கும் முன், முன்னாள் ... |
| ஜல்லிக்கட்டு புதிய சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு Posted: 31 Jan 2017 09:10 AM PST ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்துக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்தது. அதே நேரத்தில், இது தொடர்பாக, 2016ல், வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற, மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது. மிகப் பெரிய அளவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து, தேசிய பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், ... |
| அ.தி.மு.க., - தி.மு.க., கடும் மோதல் சட்டசபையில் அரை மணி நேரம் அமளி Posted: 31 Jan 2017 09:29 AM PST சென்னை:சட்டசபையில், ஜெயலலிதா பெயரை கூறியது தொடர்பாக எழுந்த பிரச்னையால், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே, நேற்று கடும் மோதல் வெடித்தது. சபாநாயகரை முற்றுகையிட்டு, தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சபையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக, அமளி நிலவியது. சட்டசபையில், நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ஆழ்கடல் மீன் பிடிப்புக்காக, மத்திய அரசிடம் கேட்ட தொகையை, இன்னும் நீங்கள் பெறவில்லை.அமைச்சர் ஜெயகுமார்: அ.தி.மு.க., ஆட்சியில் தான், இலங்கை அரசின் பிடியிலிருந்த, தமிழக மீனவர்களின், 347 ... |
| பதில் அளிக்க அமைச்சர்கள் தடுமாற்றம் : சட்டசபையில் சிரிப்பலை Posted: 31 Jan 2017 10:06 AM PST சென்னை : எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு, யார் பதில் அளிப்பது என தெரியாமல், அமைச்சர்கள் தடுமாறியதால், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விருகை ரவி, ''விருகம்பாக்கம் தொகுதியில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா,'' என, கேள்வி எழுப்பினார். பதில் அளித்த, அமைச்சர் பாண்டியராஜன், ''மாநகராட்சியில் இடம் பெற்று தந்தால், உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும்,'' என்றார்.அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, ''வர்தாபுயலின் போது, ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு ... |
| தென் மாவட்ட அ.தி.மு.க.,வை கரைப்போம்; ஸ்டாலினிடம் அனுமதி பெற்ற எம்.எல்.ஏ., Posted: 31 Jan 2017 11:39 AM PST தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., தலைமை மீது அதிருப்தியுடன் இருக்கும் கட்சியினரை, தி.மு.க., பக்கம் பெரும் திரளாகக் கொண்டு வருவோம் என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனும், சமீபத்தில் அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு வந்தவருமான ஏ.எஸ்.ஆர்.ஜெகதீசும் உறுதி அளித்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது, அ.தி.மு.க.,வின் புதிய பொது செயலர் ஆகி இருக்கும் சசிகலாவுக்கு அரவே ... |
| ஒரு கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம்; வரி ஏய்ப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி Posted: 31 Jan 2017 01:03 PM PST புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பிறகு 1 கோடி வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில், 18 லட்சம் கணக்குகளில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வழக்கத்திற்கு மாறாக டிபாசிட் ஆகி உள்ளது. இதையடுத்து, வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வாபஸ்: கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவ.,8 ம் தேதி அறிவித்தார். கறுப்பு பணத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.அதிக டிபாசிட்: நாட்டை ... |
| பார்லி., கூட்டத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் காலமானார் Posted: 31 Jan 2017 02:29 PM PST
புதுடில்லி : பார்லி., கூட்டத்தில் பங்கேற்ற போது மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இருக்கையில் சரிந்த அகமது : பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள, எம்.பி.,யான, இ.அகமது, திடீரென தன் இருக்கையில் மயங்கி சரிந்து விழுந்தார். அருகிலிருந்த எம்.பி.,க்கள், மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அருகில் உள்ள, ஆர்.எம்.எல்., ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 01,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |