Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வாய்ப்பில்லை! ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடக்க... தனி அதிகாரிகள் பதவிக்காலம் ஆறு மாதம் நீட்டிப்பு சட்டசபையில் தாக்கலான மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

Posted: 30 Jan 2017 08:47 AM PST

சென்னை:உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்பதால், தனி அதிகாரிகளின் பதவிக்காலம், மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்கான மசோதா, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட போது, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தலை, 2016 அக்டோபரில் நடத்த திட்டமிட்டு, அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, தேர்தலை ரத்து செய்த நீதிமன்றம், 2016 டிச., 31க்குள் தேர்தல் நடத்தும் வகையில், புதிய ...

இன்று துவங்கும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில். அனல் பறக்கும்1 கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார் ஜனாதிபதி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா?

Posted: 30 Jan 2017 08:55 AM PST

புதுடில்லி,: பல்வேறு பிரச்னைகள், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இன்று துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில், அனல் பறக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று உரை நிகழ்த்துகிறார்.

'உ.பி., உட்பட, ஐந்து மாநில சட்டசபைக்கு தேர்தல் நடப்பதால், இந்த மாநில மக்களை கவரும் வகையில், அறிவிப்புகள் இருக்கக் கூடாது' என, தேர்தல் கமிஷன் மற்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நிலையில், பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற கேள்வியும் ...

உ.பி.,யை கலக்கும் 'ஷோலே' போஸ்டர் சமாஜ்வாதி கட்சியினர் கடும் அதிருப்தி

Posted: 30 Jan 2017 09:10 AM PST

அலகாபாத், :காங்., துணை தலைவர் ராகுல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ஆகியோர் படங்களை இணைத்து, 'ஷோலே' இந்தி திரைப்பட போஸ்டரை போல், காங்கிரசார் அச்சடித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். உ.பி., உட்பட, ஐந்து மாநிலங்களுக்கு, பிப்., - மார்ச் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. உ.பி., சட்டசபைத் தேர்தலில், சமாஜ்வாதி - காங்., கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
'ஷோலே போஸ்டர்
இந்நிலையில், 1975ல் வெளியான,ஷோலே' மெகா ...

மற்றவர் கணக்கில் பணம்: பாய்ந்தது பினாமி சட்டம்

Posted: 30 Jan 2017 09:20 AM PST

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றவர் வங்கிக் கணக்கில், பணத்தை செலுத்தியவர்கள் மீது, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், மற்றவர்களுடைய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி, அதற்கு சிறு தொகையை கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக பலர் மாற்றினர்.
வருமான வரித்துறைக்கு அதிகாரம்
'இவ்வாறு மற்றவர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என,வருமான வரித்துறை எச்சரித்திருந்தது.கடந்த ...

யார் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை? * பன்னீர் - ஸ்டாலின் மோதல்

Posted: 30 Jan 2017 09:23 AM PST

சென்னை :ஜல்லிக்கட்டுக்கு யார் ஆட்சியில் தடை வந்தது என்பது குறித்து, தி.மு.க.,வினருக்கும், முதல்வருக்கும் இடையே, கடும் விவாதம் நடந்தது.

சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - மூர்த்தி: 2015ல், ஸ்டாலின், 'நமக்கு நாமே' பயணம் சென்ற போது, அலங்காநல்லுார் வந்தார். அங்கு பேசும் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்போம். இல்லையென்றால், உங்களுடன் இணைந்து, போராட்டம் நடத்துவோம்' என்றார். அதன்படி, 2016ல் உண்ணாவிரதம் அறிவித்தார்.அதன்பின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், ...

ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு: துவக்கி வைக்க பன்னீருக்கு அழைப்பு

Posted: 30 Jan 2017 09:29 AM PST

சென்னை: அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவினர், நேற்று சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க வரும்படி அழைப்பு விடுத்தனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம், அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் பகுதியில், அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.இந்த ஊர்களில், ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினர், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். பின், அவர்கள் கூறியதாவது:
முதல்வருக்கு அழைப்பு
...

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் நீக்கம்

Posted: 30 Jan 2017 09:32 AM PST

மும்பை,: பணத்தட்டுப்பாட்டால் தத்தளிக்கும், சிறு வர்த்தகர்கள், மக்களுக்கு உதவும் வகையில், ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை, ரிசர்வ் வங்கி, நேற்று விலக்கிக் கொண்டுள்ளது.

கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்தாண்டு, நவ., 8ல், செல்லாத நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய அவகாசம் தரப்பட்டது. செல்லாத நோட்டுகளுக்கு மாற்றாக, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி போர்க்கால அடிப்படையில்,வங்கிகளுக்கு சப்ளை செய்து வருகிறது.இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று ...

போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுங்க! சட்டசபையில் ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 30 Jan 2017 09:38 AM PST

சென்னை: ''சட்டசபையில், முதல்வர் பேசியதற்கு முரணாக, 'டிவி'க்கு பேட்டி அளித்த, போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ''அதிகாரியின் பேட்டி விபரம் பெற்று, விசாரணை நடத்தப்படும்,'' என, முதல்வர் பதில் அளித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: சட்டசபையில், 27ம் தேதி, முதல்வர் சில விஷயங்களை எடுத்துக்கூறி, சென்னையில் நடந்த, சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.பின், நானும், எங்கள் கட்சி, எம்.எல்.ஏ., அன்பழகனும், பாதிக்கப்பட்ட ...

அங்கீகாரமில்லாத மனை பதிவு தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

Posted: 30 Jan 2017 09:56 AM PST

சென்னை: அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் மற்றும் விளை நிலங்களை, மனைகளாக மாற்றும் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காணும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் மறுத்து விட்டது.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்தது; இந்த உத்தரவு, 2016 செப்., 9ல்பிறப்பிக்கப்பட்டது.
வரன்முறை :
தடையை நீக்கக் ...

வாக்காளர்களுக்கு மது கூப்பன் அதிர வைக்கும் பஞ்சாப் தேர்தல்

Posted: 30 Jan 2017 11:44 AM PST

சண்டிகர் : பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு, வார இறுதி நாட்களில், மதுபானங்கள் சப்ளை செய்ய ஏதுவாக, முன்கூட்டியே, கூப்பன்கள் வினியோகிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போதை பழக்கம் அதிகரிப்பு
பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமை யில், அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்கு, பிப்., 4ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில், மதுபானங்கள் மற்றும் போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து இருப்பது, முக்கிய தேர்தல் பிரச்னையாக எதிரொலிக்கிறது. ...

ஜல்லிக்கட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் 'கம்பாலா'

Posted: 30 Jan 2017 12:59 PM PST

பெங்களூரு: ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க, கர்நாடகா ஐகோர்ட் முடிவு செய்துள்ளதால், கம்பாலா எருது போட்டி மீதான தடை, மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நாட்டையே உலுக்கியது :
தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, சமீபத்தில் மாநிலம் முழுவதும் மாணவர்கள் நடத்திய போராட்டம், நாட்டையே உலுக்கும் வகையில் அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசின் உதவியுடன், தமிழக சட்டசபையில் சட்டம் ...

'ஒசாமா' படம் வைத்திருந்தது யார்? நாளை விபரம் வெளியிடுது அரசு

Posted: 30 Jan 2017 02:47 PM PST

சென்னை: ''மெரினா போராட்டத்தின் போது, பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் படத்துடன் கூடிய பதாகையை ஏந்தி சென்ற நபர் குறித்த விபரத்தை, என் பதிலுரையில் தெரிவிப்பேன்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, நேற்று நடந்த விவாதம்:
தமிமுன் அன்சாரி - ம.ஜ.க.,: சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டு போட்டிக்காக, மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், சில கரும்புள்ளிகள் உள்ளே புகுந்தன. அதனால், பிரச்னை பெரிதானது. அங்கு சிலர் முதல்வரை விமர்சித்தது கண்டிக்கத்தக்கது.
சில தினங்களுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™