Tamil News | Online Tamil News |
- லோக்சபா தேர்தலுக்கும் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி... தொடரும்!: நட்பு அணி என ராகுல், அகிலேஷ் யாதவ் பெருமிதம்
- தேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை
- தடை உத்தரவால் வெறிச்சோடிய மெரினா; குடும்பத்துடன் வந்தோர் குறைவு
- ஆதார் கார்டை பிளாஸ்டிக்கில் மாற்றி தருவது சட்டவிரோதம்
- காங்கிரசுக்கு மேனேஜர்கள் தான் தேவை: எஸ்.எம்.கிருஷ்ணா குமுறல்
- 'டெண்டர்' வசூல்: சசி சொந்தங்கள் அடாவடி
- நடராஜன், திவாகரனுக்கு எதிராக கையெழுத்து வேட்டை?
- குடிநீருக்காக யாரும் தவிக்கக் கூடாது என்பதில் முதல்வர் பன்னீர்... அக்கறை!:அரசு நிதியை வீணடிக்கக் கூடாது என உள்ளாட்சிகளுக்கு கண்டிப்பு:மக்கள் போராடினால் நடவடிக்கை என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
- பேனர்கள் வேண்டாம்: ஸ்டாலின் கண்டிப்பு
- பட்ஜெட்: தொழில் அமைப்புகள் எதிர்பார்ப்பு
- பதில் கிடைப்பதில் தாமதம்; எம்.பி.,க்கள் புகார்
- 'காஷ்மீர் பனிச்சரிவுக்கு பாக்., குண்டு வீச்சு காரணம்'
- ரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்
| Posted: 29 Jan 2017 07:54 AM PST லக்னோ:''காங்கிரஸ் - சமாஜ்வாதி இடையே யான கூட்டணி, உத்தர பிரதேச சட்டசபைக் கானது மட்டுமல்ல; அடுத்த லோக்சபா தேர்தலுக்கும் தொடரும். இது, இரு கட்சிகள் இடையேயான கூட்டணி அல்ல; நட்பு அணி,'' என, பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல், அகிலேஷ் கூறினர். உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநிலங்களுக் கான சட்டசபை தேர்தல், பிப்., - மார்ச் மாதத்தில் நடக்கிறது. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில், ஆளும் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.நீண்ட இழுபறிக்கு பின், இரு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்தன. ... |
| தேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை Posted: 29 Jan 2017 08:00 AM PST புதுடில்லி:''தேர்வுகளை, விழாவாக கருத வேண்டும்; மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷய மாக பார்க்கக் கூடாது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள், அதிகமாக புன்னகைக்க வேண்டும்,'' என, பிரதமர், நரேந்திர மோடி கூறியுள்ளார். 'மன் கீ பாத்' எனப்படும், 'மனதின் குரல்' ரேடியோ நிகழ்ச்சியில், நேற்று, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை:தேர்வு என்பதை, வாழ்க்கைக்கான சோதனை யாக மாணவர்கள் கருதக்கூடாது. தேர்வை, மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயமாக பார்க்காமல், மாணவர்களும், பெற்றோரும், விழாவாக நோக்க வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அதிகமாக புன்னகையுங்கள். மாணவர்கள், ... |
| தடை உத்தரவால் வெறிச்சோடிய மெரினா; குடும்பத்துடன் வந்தோர் குறைவு Posted: 29 Jan 2017 08:18 AM PST சென்னை:சென்னை, மெரினா கடற்கரையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், விடுமுறை தினமான நேற்று, கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, மெரினா கடற்கரையில் மாணவர் கள் நடத்திய போராட்டத்தில், சமூக விரோதி கள் ஊடுருவியதால் வன்முறை வெடித்தது. காவல் நிலையம் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக, 215க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.இந்நிலையில், சமூக வலைதளமான, 'பேஸ் புக்'கில், 'மெரினா கடற்கரையில் மீண்டும் ஒன்று கூடுவோம்; புது கட்சி துவக்குவோம்' என, 1.50 லட்சம் பேருக்கு தகவல் பரப்பப்பட்டு ... |
| ஆதார் கார்டை பிளாஸ்டிக்கில் மாற்றி தருவது சட்டவிரோதம் Posted: 29 Jan 2017 08:36 AM PST புதுடில்லி:பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கு வதாக, 200 ரூபாய் வரை வசூலிப்போருக்கு எதிராக, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ அடையாள அட்டை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பு, நாடு முழுவதும், ஆதார் அடையாள அட்டைகளை இலவசமாக வினியோகித்து வருகிறது. இந்த அட்டைகளை, பிளாஸ்டிக் அட்டையாகவோ அல்லது ஸ்மார்ட் அட்டையாகவோ மாற்றித் தருவதாக, சிலர், 50 முதல் 200 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து, யு.ஐ.டி.ஏ.ஐ., தலைவர் அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நேற்று கூறியதாவது:காகிதத்தில் வழங்கப்படும், ஆதார் அடையாள அட்டைகள், முற்றிலும் ... |
| காங்கிரசுக்கு மேனேஜர்கள் தான் தேவை: எஸ்.எம்.கிருஷ்ணா குமுறல் Posted: 29 Jan 2017 08:52 AM PST பெங்களூரு:''என் தன்மானம், கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதால் மிகவும் மன வேதனை யுடன் காங்கிரசிலிருந்து விலகியுள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கு, தலைவர்கள் தேவை யில்லை; மேனேஜர்கள் தான் தேவை,'' என, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர், எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான கிருஷ்ணா, 84, காங்கிரசிலிருந்து விலகுவதாக, நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள தன் வீட்டில், நேற்று நடந்த ... |
| 'டெண்டர்' வசூல்: சசி சொந்தங்கள் அடாவடி Posted: 29 Jan 2017 09:12 AM PST வசூலை கருத்தில் கொண்டு, அரசின் திட்ட பணிகளுக்கான, 'டெண்டர்' விடும் போது, எங்களை கலந்து ஆலோசிக்காமல், யாருக்கும் தரக்கூடாது என, மன்னார்குடி சொந்தங்கள் நெருக்கடி கொடுப்பதால், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது தோழி சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராகி உள்ளார். இதனால், அவரது மன்னார்குடி சொந்தங்கள், கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக் கம் செலுத்தி வருகின்றன. இந்த வரிசையில், அரசு திட்டங்கள், உள்ளாட்சி பணிகளுக்கான, டெண்டர் விடும் போது, எங்களை கலந்து ஆலோசிக்காமல், இறுதி செய்யக்கூடாது என, நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.மதுரை ... |
| நடராஜன், திவாகரனுக்கு எதிராக கையெழுத்து வேட்டை? Posted: 29 Jan 2017 09:28 AM PST ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட நடராஜன், திவாகரன் ஆகியோர், கட்சி விவகா ரங்களில் தலையிடகூடாது என, கையெழுத்து வேட்டை நடத்த வேண்டும்' என, முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமியிடம், அ.தி.மு.க., தொண்டர்கள் வலியுறுத்தி உள்ளனர். சமீபத்தில், சென்னையில் நடந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், பொதுச்செயலர், சசிகலா பேசுகையில், 'நான் எடுக்கும் எந்த ஒரு முடிவும் கட்சியின் நலன், தொண்டர்களின் நலன் சார்ந்து இருக்கும்; முழு ஆதரவு அளிக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். அவரது சூசகமான பேச்சு, எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சொத்து குவிப்பு ... |
| Posted: 29 Jan 2017 09:32 AM PST தமிழகத்தில், குடிநீருக்காக யாரும் தவிக்கக் கூடாது என்பதில், முதல்வர் பன்னீர்செல்வம் அதிக அக்கறை காட்டி வருகிறார். அதனால், 'அரசு ஒதுக்கும் நிதியை, குடிநீர் வினியோகத் திற்கு அதிகம் செலவிடுங்கள்; தேவையின்றி வேறு பணிகளுக்கு ஒதுக்கி வீணடிக்க வேண் டாம். குடிநீருக்காக மக்கள் போராடும் நிலை வந்தால், அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்' என, அவர் எச்சரித்துள்ளார். வழக்கமாக, தமிழகத்திற்கு கை கொடுக்கும் வடகிழக்கு பருவ மழை, இந்தாண்டு வஞ்சித்து விட்டது. இயல்பான அளவை விட, 62 சதவீதம் குறைவாகவே பெய்தது. இதனால், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. நிலத்தடி நீரும், அதல ... |
| பேனர்கள் வேண்டாம்: ஸ்டாலின் கண்டிப்பு Posted: 29 Jan 2017 09:42 AM PST சென்னை:'நான் பங்கேற்கும் விழாக்களில், பேனர்களை தவிருங்கள்; கட்சி கொடியை பயன்படுத்துங்கள்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: கோவை பொதுகூட்டத்திற்கு சென்ற போது, வழிநெடுக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இத்தகைய ஆடம் பரங்கள் முகம் சுளிக்கும் வகையில், அமைந்து விடக்கூடாது என, எச்சரிக்கும் பொறுப்பும், உரிமையும் எனக்கு இருக்கிறது. சாலையின் இருபுறத்திலும், சில நேரங்களில், சாலையின் நடுவிலும் பேனர்கள் அமைப்பதை கண்டிப்பாகதவிர்க்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகை யில், ... |
| பட்ஜெட்: தொழில் அமைப்புகள் எதிர்பார்ப்பு Posted: 29 Jan 2017 11:06 AM PST
கோவை: வரும் புதன்கிழமை பிப்.1 ல் மத்திய பட்ஜெட் தாக்கல் எப்படி இருக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்பினர் பல்வேறு எதிர்பார்ப்புகளை நோக்கியுள்ளனர். கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு நிறுவனங்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். சைமா , கிமா, இந்திய தொழில் வர்த்தக சபை , காட்மா, டேட், கோக்மா, காஸ்மோபேன் உள்ளிட்ட தொழில்துறை அமைப்பினர் பட்ஜடெ் எப்படி இருக்க வேண்டும் என கேட்ட போது சில விஷயங்களை இங்கு வெளியிட்டுள்ளோம். ... |
| பதில் கிடைப்பதில் தாமதம்; எம்.பி.,க்கள் புகார் Posted: 29 Jan 2017 12:40 PM PST
புதுடில்லி: மத்திய அரசு துறைகள் தாமதமாக பதில் அளிப்பதாக, எம்.பி.,க்கள் சிலர், பிரதமர் அலுவலகத்தில் புகார் கூறியுள்ளனர். விதிமுறை: பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனுப்பும் எத்தகைய கடிதத்தையும், அரசு துறைகள், 15 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களுக்குள் தக்க பதில் அனுப்பப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த நடைமுறையில் தாமதம் ஏற்படும் என தெரிந்தால், இடைக்கால பதில் ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும். அந்த பதிலில், சரியான தீர்வு எப்போது அளிக்கப்படும் என்பதற்கான தேதியை குறிப்பிட வேண்டும். எம்.பி.,க்கள் ... |
| 'காஷ்மீர் பனிச்சரிவுக்கு பாக்., குண்டு வீச்சு காரணம்' Posted: 29 Jan 2017 01:01 PM PST புதுடில்லி: ''உலகளாவிய வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாற்றங்கள், பாக்., ராணுவத்தினர் பீரங்கி குண்டுகளை வீசுவது உள்ளிட்ட காரணங்களால், ஜம்மு - காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது,'' என, ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி, 15க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அங்கு அவ்வப்போது பனிச்சரிவு ஏற்பட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது. அடிக்கடி தாக்குதல்: இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த ... |
| ரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம் Posted: 29 Jan 2017 02:46 PM PST புதுடில்லி: ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட்: மத்திய அரசின் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் சேர்த்து, வரும் பிப்., 1ம் தேதி, பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்குவது தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டாயம்: ரயில் பயணிகளில் மூத்த குடிமக்கள் உட்பட, 50 பிரிவினருக்கு, டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 30,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |