Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 29 Jan 2017 12:55 PM PST

என் முகவரி

muthusimpu@gmail.com

புத்தகம் தேவை

Posted: 29 Jan 2017 12:14 PM PST

பாலகுமாரன் - இனிது  இனிது  காதல்  இனிது -பாகம் 1  & 2  கிடைத்தால் பதிவிடுங்கள் நண்பர்களே!!

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 29 Jan 2017 12:00 PM PST

தரவிறக்கம் செய்ய: Dropbox https://www.dropbox.com/sh/qfhyfmo98h4gz5u/AAC_ZfuoB-X5B_RnXbnUe-KIa?dl=0 Gdrive https://drive.google.com/open?id=0B2LeCZitCnbfWHpXbzRRQmcxTEU&authuser=0 பொன்னியின் செல்வன் - ஒலிப்புத்தகம் - இயக்கம்-பாம்பே கண்ணன் பதிவிறக்கம் இதில் ஐந்து பாகங்களும் உள்ளது. மொத்த கோப்புகளின் அளவு 10.5 ஜி.பி. ஆகும்.

என் அறிமுகம்

Posted: 29 Jan 2017 11:38 AM PST

பெயர்: சுஜாதா கார்த்திகேயன்
சொந்த ஊர்:திருச்சிராப்பள்ளி
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் தேடும்போது  கிடைத்தது
பொழுதுபோக்கு: புத்தகம் வாசித்தல் ,பாட்டு கேட்பது
தொழில்:இல்லத்தரசி
மேலும் என்னைப் பற்றி:பிராங்பேர்ட்டில்   கணவருடன் வசித்து வருகிறேன்

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

Posted: 29 Jan 2017 11:18 AM PST

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?..............பிளட்போர்ம் வாசிகளிடம், பிச்சைக்காரர்களிடம் என்று பிடுங்கித்தின்பது?................தூ!..............     இவர்களுக்கு சம்பளமெல்லாம் வரவேவராதா?.............எல்லோரும் அவரவர்கள் சம்பளத்தில் வாழும்போது இவர்கள் மட்டும் ஏன் இப்படி????????????? இவர்கள் இப்படி பிடுங்கித்தின்னும்போது அல்லது கவுரவ பிச்சை எடுக்கும்போது இவர்களின் வாரிசுகள் இவர்களை பார்த்தால் என்ன நினைப்பார்கள்????????? அப்புறம் அப்பா என்கிற மரியாதை எப்படி வரும்????? இப்படி பல கேள்விகள் ...

நல்மனம்

Posted: 29 Jan 2017 11:11 AM PST

நல்மனம்   கர்வம் கொள்வதோ மனம் கருணை கொள்வதே மனம் காட்டம் கொள்வதோ மனம் காதல் கொள்வதே மனம் கிறக்கம் கொள்வதோ மனம் கிறக்கம் தவிர்ப்பதே மனம் குற்றம் புரிவதோ மனம் குணம் கொள்வதே மனம் கூரான வாளோ மனம் கூடி மகிழ்வதே மனம் கெடுதல் நினைப்பதோ மனம் கெடுதல் தவிர்ப்பதே மனம் கேடு செய்வதோ மனம் கேடு தவிர்ப்பதே மனம் கைது செய்வதோ மனம் கைதி ஆவதே மனம் கொடுமை புரிவதோ மனம் கொடுத்து மகிழ்வதே மனம் கோபம் கொள்வதோ மனம் கோபம் தவிர்ப்பதே மனம் ச.சந்திரசேகரன்

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க...

Posted: 29 Jan 2017 11:10 AM PST

பழைய கணினி CRT  திரை ஊதாக் கதிர்களை வெளியிடுவதாக இருந்தன. தற்போது வரும் LCD,LED,Plasma  திரைகளில் அவற்றின் பாதிப்பு அதிகம் இல்லாவிட்டாலும், நீல ஒளிக்கதிர் கண்களுக்கு பாதிப்பை தரலாம்.இந்த நீல ஒளி கண்களுக்கும் மூளைக்கும்  சோர்வைத் தருவதுடன் கிட்டப்பார்வையையும் ஏற்படுத்துகிறது. தற்போது வரும் கணினிகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் வகையை சேர்ந்த கணினித் திரைகள்,  ஆயிரக்கணக்கான சிறிய பிக்சல்களை உருவாக்குகின்றன. நாம் திரையில் சாதாரணமாக பார்த்தாலும், நம் கண்கள் ஒவ்வொரு பிக்சலையும் தனியாக அவதானிக்க ...

கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !

Posted: 29 Jan 2017 11:08 AM PST



இடுக்கண் வருங்கால் நகுக…………..மற்றவர் துன்பம் கண்டு சிரிப்பதல்ல,நம் துன்பம் மறக்க சிரிப்பது…….



பேராசிரியர் சண்முகவடிவேலுவின் அனுபவங்கள்.

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....

Posted: 29 Jan 2017 11:08 AM PST

தோழி : என்ன இது ? பகல் நேரத்திலேயே வந்துவிட்டாயே ! தலைவன் : ஆமாம் ! என்னால் என் காதலியைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை ; அவளைப் பார்க்காமல்  உணவும் செல்லவில்லை ; உறக்கமும் வரவில்லை ! அவளை சீக்கிரம் வரச்சொல் . தோழி : நீ அவளைத் திருமணம் செய்துகொண்டால் , இப்படித் திருட்டுத்தனமாக வந்து சந்திக்கவேண்டிய அவசியம் வராது அல்லவா ? தலைவன் : அதெல்லாம் காலாகாலத்தில் நடக்கும் ; நீ போய் அவளை அழைத்து வா ! தோழி : நான் அழைத்து வருகிறேன் ; ஆனால் இந்த இடத்தில் நீங்கள் இருவரும் பேசவேண்டாம் ! தலைவன் ...

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்!

Posted: 29 Jan 2017 11:03 AM PST

சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் எத்தனையோ கதவுகளைத் திறந்திருக்கிறது. அவற்றில் ஒன்று, இளைஞர்கள் மத்தியில் கோலா பானங்களின் மேல் ஏற்பட்டிருக்கும் அசூயை. அவற்றின் மீதான மோகம் தவறு என்கிற புரிதல் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தாகத்தைத் தணிக்கவும் உடலைக் குளுமைப்படுத்தவும் நம்மூர் பாரம்பர்ய ஆரோக்கிய பானங்கள் பல இருக்கின்றன. அவற்றை அன்றாடம் பருகினால் ஏற்படும் நன்மைகள் பல. பாரம்பர்ய பானங்களில் முக்கிய இடம் வகிப்பது பானகரம். கோயில் திருவிழாக்களில் கோடை காலத்தில் நீர்மோர், பானகரம் வழங்கும் ...

அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம்

Posted: 29 Jan 2017 11:02 AM PST

அடுத்த வாரம் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம்.. நல்லா விட்ராங்கய்யா உடான்ஸு! நாசா: 2016WF9 என்ற பெயர் கொண்ட பெரிய சைஸ் விண்கல் ஒன்று பூமி மீது மோதி பூமியை அழிக்கப் போவதாக ஒரு பெரிய்ய வதந்தி கிளம்பி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். இந்த விண்கல்லானது நமது வளிமண்டலத்தை ஊடுறுவி உள்ளே வந்து பூமியை மிகப் பெரிய அளவில் தாக்கி பூமியை சுத்தமாக அழித்து விடும் என்பதுதான் பரவி வரும் செய்தியாகும். ராட்சத அணு குண்டுக்குச் ...

எனக்குப் பிடித்த பாடல் - இசைப்பிரியர்களுக்காக .

Posted: 29 Jan 2017 04:48 AM PST

பக்கம் பார்த்துப் பேசு - படித்ததில் பிடித்தது.

Posted: 29 Jan 2017 04:35 AM PST

நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை காதுகள்..! நாம் ஒருவரைப் பாராட்டிப் பேசினால் கண்டுகொள்ளாத  காதுகள், ஒருவரைத் தவறாகப் பேசும்போதுமட்டும்  முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றன. பேருந்திலோ, தொடர்வண்டியிலோ நாம்  செல்லும்போது நம் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ நம்  தனிப்பட்ட இன்ப துன்பங்களையோ, அலுவலகம் சார்ந்த  செய்திகளையோ நாம் பேசிக் கொண்டுவருவோம். நம் அருகே  பயணிக்கும் ஒருவர் நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதவராக  இருந்தாலும் தம் காதுகளைக் கூர்தீட்டிக்கொண்டு கேட்பார். சிலநேரங்களில் நம்மோடு கலந்து  ...

படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக…

Posted: 29 Jan 2017 04:29 AM PST

தாத்தா பாட்டி இன்று கதை சொல்வதில்லை.கதைசொல்லிகள் இன்று மிகக் குறைவு. அப்படி கதை சொல்லும் படங்கள் சில வருகின்றன.எழுத்துலகில் கதை சொல்லியாக கதைகளை நாவல்களை தந்த ஒரு எழுத்தாளர் எஸ்.ரா. (எஸ்.ராமகிருஷ்ணன்) அவரின் நூல்களில் யாமம், பதின் நான் சமீபத்தில் படித்தவை. பதின் நாவல் ( இந்த மாதம்-தை 2017-வெளியிடப்பட்ட 4 நூல்களில் ஒன்று) குழந்தைகளின் உலகை நாட்குறிப்பு போல்,குழந்தைகளின் குரலாக பதின் தருகிறது. நந்து,சங்கர் மறக்க முடியாத பாத்திரங்கள். ஒரு காட்சி.....குரு-சங்கர், நந்துவுக்கு (வயது 7,6 தான் ...

வட இந்திய சமையல்கள் - இராஜஸ்தானி கிச்சடி !

Posted: 28 Jan 2017 11:57 PM PST

முதலில் பானி பூரி பூரி செய்ய தேவயானவை : 1 கப் மைதா 1/4 கப் உளுந்துமாவு 1 கப் மெல்லிய ரவை தேவையான உப்பு கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் ...

சிற்றின்பமும் - பேரின்பமும் !

Posted: 28 Jan 2017 11:35 PM PST

சிற்றின்பமும் - பேரின்பமும் ! ~~~~~~ படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம். படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம். படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம். படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம். படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம். படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம். என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம். இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம். நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம். நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம். அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று ...

உர்வாருகமிவ பந்தனாத்.........

Posted: 28 Jan 2017 11:26 PM PST

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும். "த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம். உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்க்ஷீய  மாம்ருதாத்." இதில் 'உர்வாருகமிவ பந்தனாத்' என்ற வரிகளின் அர்த்தம், 'வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து  விடுபடுவதுபோல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும்' என்பதாக அமையும். எனக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம். எந்தப் பழமாயிருந்தாலும், பழுத்தவுடன், 'பட்'டென்று தன் கொடி, செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும்தானே ! இதில் ...

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Posted: 28 Jan 2017 11:05 PM PST

வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும். சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா… மஞ்சள், ...

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

Posted: 28 Jan 2017 10:55 PM PST

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... நெய் சாப்பிடாதீர்கள் என யாராவது சொன்னால் அவர்களை ஏளனமாக பாருங்கள். நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த ...

நாய்க்கறி விற்பனை அமோகம்!

Posted: 28 Jan 2017 10:27 PM PST

- நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகலாந்து தலைநகரம், கோஹிமாவில் நடக்கும் நாய் சந்தையில், உயிருள்ள நாய்களை மூட்டையாக கட்டி, விற்பனைக்கு கொண்டு வருவர். வாடிக்கையாளர்கள், நாய்களை தேர்வு செய்து, எடை போட்டு, பணத்தைக் கொடுத்தால், சில நிமிடங்களில் நாய் கறி தயார். நாய்களை திட்டினால் கூட குற்றம் என்பது போல, பா.ஜ.,கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, தினம் தினம் அறிக்கை விடும் நிலையில், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், நாய் கறியை ரசித்து ருசிக்கின்றனர், நாகாலாந்து ...

என்ன செய்தார் ராமானுஜர் .....

Posted: 28 Jan 2017 09:34 PM PST

என்ன செய்தார் ராமானுஜர் (1) சுமார் 950 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி,சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப்பொறுப்பு  கொடுத்து.. அத்துழாய், ஆண்டாள், பொன்னாச்சி, தேவகி, அம்மங்கி, பருத்திக் கொல்லை அம்மாள், திருநறையூர் அம்மாள், எதிராச வல்லி… என்று எத்தனை எத்தனை பெண்கள், அவர் அரங்கத்து குழாமில்! பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள் இராமானுசன் திருவடிகளே சரணம் !          

செய்திகள் என்ன சொல்லுது?

Posted: 28 Jan 2017 09:19 PM PST

செய்திகள் என்ன சொல்லுது? * 1. உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான " அமேசான் " அதன் கனடா நாட்டுப் பிரிவு இந்தியாவின் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவர்ண நிறத்தில் கால்மிதியடிகளைத் தயாரித்தற்காகக் கடுமையாக எச்சரிக்கபட்டு, மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டது. இந்தியாவில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம் கூட பதஞ்சலியின் பெயரில் கால்மிதியடிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றன என்கிறார்களே உண்மையா? அதற்கென்ன செய்யப் போகிறது இந்திய அரசு. 2. கம்பளா போட்டிக்கு அவசர சட்டம். கர்நாடக ...

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Posted: 28 Jan 2017 09:05 PM PST

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !



கறுப்பை வௌ்ளையாக்கத்தான் கட்சி! - முன்னாள் தலைமை தேர்தல் கமிஷன் கோபாலசுவாமி

Posted: 28 Jan 2017 04:46 PM PST

தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்ட இருநூறு கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, பட்டியலிலிருந்து நீக்குவது என்ற அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதுமட்டுமல்ல அந்த கட்சிகளின் நிதி நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இநத அதிரடி நடவடிக்கை தேர்தல் பக்கமே தலைவைத்துப் படுக்காத, லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்குப் பின்னணி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™