Tamil News | Online Tamil News |
- வருமான வரி விலக்கு உச்சவரம்பு... உயருமா? :துவங்கி விட்டது பட்ஜெட் பரபரப்பு
- அரசியல் பிரவேசம் எப்போது? தீபாவுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி
- அமைதி புரட்சியில் வன்முறை தீ * மெரினா கலவரத்தின் பகீர் பின்னணி
- ஓ.பி.எஸ்.,க்கு எதிராக உள்ளடி செய்த மந்திரிகள்! அலங்காநல்லூரில் அம்பலமான சதி
- சசிகலாவுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் நெருக்கடி : தம்பிதுரை முயற்சியை முறியடிக்க திட்டம்
- ராகுல், அகிலேஷ் இணைந்து பேரணி களை கட்டும் உ.பி., தேர்தல் பிரசாரம்
- உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடத்திய சர்வேயால் சசிகலா தரப்பு... அதிர்ச்சி!: அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு குறையும் என்பதால் கலக்கம்:பன்னீருக்கே ஆதரவு அதிகம் உள்ளதால் பிரசார களமிறங்க தயக்கம்
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்: பா.ஜ., தேர்தல் அறிக்கையில் அமித் ஷா உறுதி
- அவசர சட்டத்திற்கு பின்னால் நடந்த கூத்து!
- ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கமாட்டோம்: விலங்குகள் நல வாரியம்
- மாடுகளை கொல்ல தடை கோரும் மனு நிராகரிப்பு
| வருமான வரி விலக்கு உச்சவரம்பு... உயருமா? :துவங்கி விட்டது பட்ஜெட் பரபரப்பு Posted: 28 Jan 2017 05:37 AM PST பிப்., 1ல், மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. முதன்முறையாக, ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் ஆகிய இரண்டும் கலந்த ஒருங் கிணைந்த பட்ஜெட், தாக்கலாக உள்ளது; இதில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப் படுமா என்ற எதிர்பார்ப்பு, மாத ஊதியதாரர் களிடையே ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில், என்னென்ன விஷயங்கள் இடம் பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு, இப்போதே துவங்கி விட்டது. வழக்கம் போல், மாத ஊதிய தாரர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட, பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள், இந்த பட்ஜெட்டில், தங்களுக்கு சாதகமான அம்சங்கள் வந்துவிடாதா என, ஆவலுடன் காத்திருக்கின் றனர். கடந்த சில ... |
| அரசியல் பிரவேசம் எப்போது? தீபாவுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி Posted: 28 Jan 2017 06:21 AM PST அரசியல் நடவடிக்கையை, விரைவில் துவக்கும்படி, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவிற்கு, அவரது ஆதரவாளர்கள், நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவி காலியானது. அப் பதவியை பிடிக்க, கட்சியில் போட்டி எழுந்தது. ஆனால், சசிகலா குடும்பத்தினர், பல்வேறு உத்திகளை கையாண்டு, சசிகலாவை பொதுச் செயலராக நியமித்தனர்.அவர் பொதுச் செயல ரானது, தொண்டர்களுக்கு பிடிக்க வில்லை. அவர்கள், சசிகலா போஸ்டரை கிழித்து, தங்கள் எதிர்ப்பை காண்பித்தனர். அவருக்கு மாற்றாக, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அரசிய லுக்கு வர வேண்டும் என, ... |
| அமைதி புரட்சியில் வன்முறை தீ * மெரினா கலவரத்தின் பகீர் பின்னணி Posted: 28 Jan 2017 06:35 AM PST சென்னை, மெரினாவில் கலவரத்தை ஏற்படுத்த, சமூக விரோதிகள் திட்டமிட்டதை அறிந்து, அதை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்; அதை அறியாமல், சமூக விரோதிகளுக்கு கடலோர மக்கள் அடைக்கலம் கொடுத்தது தான் கலவரம் வெடிக்க காரணமாகி உள்ளது. மெரினா, விவேகானந்தர் இல்லம் எதிரே, ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரி, ஜன., 17 காலையில், சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என, பலரும் பங்கேற்றனர். ஜன., 22 வரை, இரவு பகலாக நடந்த தொடர் போராட்டத்தில், சிறு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.மெரினாவில் குவிந்த கூட்டத்தை பயன்படுத்தி, குடியரசு ... |
| ஓ.பி.எஸ்.,க்கு எதிராக உள்ளடி செய்த மந்திரிகள்! அலங்காநல்லூரில் அம்பலமான சதி Posted: 28 Jan 2017 06:38 AM PST முதல்வருக்கு எதிராக, அமைச்சர்கள் செயல்படுவது, அ.தி.மு.க.,விலும், அரசியல் வட்டாரத்திலும், பெரும் பரபரப்பை உள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, முதல்வ ராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை, முதல்வர் பதவியில் இருந்து, ஜெ., விலக நேரிட்ட போது, முதல்வ ராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதன் பின் மீண்டும், ஜெ., பதவியேற்கும் சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் பதவியை துறந்து, தன் விசுவாசத்தை நிரூபித்தார். எனவே, ஜெ., மறைவுக்கு பின், மீண்டும் அவர் முதல்வ ரானது, மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்த வில்லை.மக்கள் ஆதரவு எளிமையானவர், அனைத்து ... |
| சசிகலாவுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் நெருக்கடி : தம்பிதுரை முயற்சியை முறியடிக்க திட்டம் Posted: 28 Jan 2017 06:46 AM PST அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறும் முயற்சியில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஈடுபட்டுள்ளார். அதற்கு எதிராக, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா மற்றும் தீபா ஆதரவாளர்கள், தேர்தல் கமிஷனிடம் மனுக்களை வழங்கி, சட்ட ரீதியாக நெருக்கடி கொடுப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:அ.தி.மு.க.,வில், 1.50 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். கட்சி விதிப்படி, உறுப்பினர்களின் ஓட்டு எண்ணிக்கை மூலம், சசிகலாவை பொதுச் செயலராக தேர்வு செய்யவில்லை. எனவே, அ.தி.மு.க., ... |
| ராகுல், அகிலேஷ் இணைந்து பேரணி களை கட்டும் உ.பி., தேர்தல் பிரசாரம் Posted: 28 Jan 2017 08:05 AM PST லக்னோ,: லக்னோவில் இன்று நடக்கும் தேர்தல் பேரணியில், காங்., துணை தலைவர் ராகுலும், மாநில முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான, அகிலேஷ் யாதவும் இணைந்து, பங்கேற்க உள்ளனர். ஏழு கட்டங்கள் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இங்கு, அடுத்த மாதம் முதல், மார்ச், 8 வரை, ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, சமாஜ்வாதி - காங்., கூட்டணி ஒரு அணியாகவும், பா.ஜ., மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வெவ்வேறு அணியாகவும் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள, 403 சட்டசபை தொகுதிகளில், 298 இடங்களில் சமாஜ்வாதியும், 105 ... |
| Posted: 28 Jan 2017 09:03 AM PST உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடத்திய, 'சர்வே' முடிவுகளால், சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அதில், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு குறையும் என கூறப்பட்டுள்ளதால், அவரது ஆதரவு வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது. மேலும், தொண்டர்களிடத்திலும், பொது மக்களிடத்தி லும், முதல்வர் பன்னீருக்கு தான் ஆதரவு அதிகம் என்பதால், பிரசார களமிறங்கவும், சசிகலா தயங்குவதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மறைவால், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்றார். அதற்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் தவிர, மற்றவர்களிடம் அதிருப்தி நிலவுகிறது. ... |
| அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்: பா.ஜ., தேர்தல் அறிக்கையில் அமித் ஷா உறுதி Posted: 28 Jan 2017 09:29 AM PST லக்னோ:உ.பி., சட்டசபை தேர்தலுக்கான, பா.ஜ., தேர்தல் அறிக்கையை, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று வெளியிட்டார். விவசாயி கள், பெண்கள், மாணவர்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்பு களுடன், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்ற வாக்குறுதியும், இதில் இடம்பெற்றுள்ளன. சமாஜ்வாதியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கும், உ.பி.,யில், பிப்., - மார்ச், 8 வரை, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களை கவரும் வகையிலான, பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நேற்றுவெளியிட்டார். ... |
| அவசர சட்டத்திற்கு பின்னால் நடந்த கூத்து! Posted: 28 Jan 2017 09:39 AM PST ஜல்லிக்கட்டு நடப்பதற்கு அவசர சட்டம் வெளியாகி, இப்போது, தமிழக சட்டசபை ஒரு மனதாக இதற்கான மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதி அனுமதிக்காக அனுப்பியுள்ளது. ஆனால், கடந்த வாரம், இந்த அவசர சட்டம் வெளியாகுமா, கவர்னர் வித்யாசாகர் ராவ் கையெழுத்திடுவாரா என, தமிழக முதல்வரே தடுமாறிப் போயிருந்தார் என்றால், யாராவது நம்புவரா; ஆனால், உண்மை அது தான். அவசர சட்டத்தை, தமிழக கவர்னருக்கு அனுப்பிய சிறிது நேரத்தில், தமிழக அரசே ஆடிப் போனது; காரணம், அவசர சட்டத்தில் கையெழுத்திட, கவர்னர் தயங்கினாராம். போராட்டக்காரர்களிடம், அவசர சட்டம் உடனே கையெழுத்தாகிவிடும் ... |
| ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கமாட்டோம்: விலங்குகள் நல வாரியம் Posted: 28 Jan 2017 12:08 PM PST
புதுடில்லி:தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக் கட்டு சட்டத்தை எதிர்க்க மாட்டோம் என்று விலங்குகள் நல வாரியம் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தமிழக அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6ந் தேதி மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.இந்த அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் ... |
| மாடுகளை கொல்ல தடை கோரும் மனு நிராகரிப்பு Posted: 28 Jan 2017 03:04 PM PST புதுடில்லி: மாடுகளை கொல்வதற்கு முழுமையான தடை விதிக்கக் கோரும் மனுவை, சுப்ரீம் கோர்ட், நிராகரித்தது.மாடுகளை கொல்வதற்கு முழு தடை விதிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர், நீதிபதி, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், பரிசீலனைக்கு வந்தது. சீராக இல்லை மனுதாரர் வினீத் சஹாய் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் வாதிட்டதாவது:மாடுகளை கொல்வது தொடர்பான சட்டம், நாடு முழுவதும் சீராக இல்லை. தமிழகம், ஆந்திராவில் மாடுகளை கொல்ல தடை உள்ளது. ஆனால், கேரளாவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 29,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |