ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நள்ளிரவில் மெரினா
- சாக்ரடீஸின் வதந்தி வடிகட்டிகள்
- பிப்ரவரி 6ல் அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம்
- புளோரிடாவில் மலைப்பாம்புகளை பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த 2 இருளர்கள் நியமனம்:
- புதிய வடிவில் மீண்டும் வருகிறது ரூ.1,000 நோட்டு?
- அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டர் அமைச்சர் எம்.சி.சம்பத்:
- படித்ததில் பிடித்தது :) -- வழக்கத்துக்கு மாறாக...
- உதவி நண்பர்களே
- மூளைக்குணவு
- எங்கே செல்கிறோம் நாம்?
- காரணமாயிரு
- கூரை வீட்டிலிருந்து மாளிகைக்கு...
- கட்செவி/ முகநூல் படங்கள்
- ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிக்கும் போகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
- 24 X 7 ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் வெள்ளை காண்டாமிருகம்! ஏன்?
- பெண் சாமியார் வீட்டில் கட்டுக்கட்டாக புது நோட்டு
- சென்னை அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதல்
- லாலு நிர்பந்தத்தாலேயே உ.பி. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவில்லை
- பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு
- விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: ஜனவரி 31-க்குள் தெரியப்படுத்த உத்தரவு
| Posted: 28 Jan 2017 10:22 AM PST நள்ளிரவில் மெரினா காரிருள் நிலைமாறி கடற்கரை மனிதனின் கைப்பேசிக் கண்கள் கனலாய்க் கொதித்தன மென்பொருள் வல்லுநர் மெல்லப் பேசாமல் மெருகேறிப் போய் மண்வளம் பேசினர் வன்பொருள் வல்லுநர் வணிகம் பேசாமல் வாட்டும் குளிரில் விவசாயம் பேசினர் மாணவ மணிகள் மாபெரும் புரட்சியாய் மாநிலம் முழுவதும் மாட்டை போற்றினர் காளையர் கன்னியர் காதலை மறந்து கடற்கரை மணலில் காளையை மீட்டனர் காவல் நண்பர்கள் கண்ணியம் மாறாது கடமைக்கு இடையில் காளையைப் போற்றினர் நல்லவர் பலரும் நிசப்தம் ... |
| சாக்ரடீஸின் வதந்தி வடிகட்டிகள் Posted: 28 Jan 2017 09:46 AM PST சாக்ரடீஸின் வதந்தி வடிகட்டிகள் தந்தி போல் வதந்தி முந்தி வந்தார் ஏந்தி நம்பும் மனம் மந்தி உண்மையா பொய்யா சிந்தி உண்மை தானா செய்தி கண்ணில் கண்ட செய்தி காதில் கேட்ட செய்தி தீர ஆய்தல் நியதி நண்பன் பற்றிய செய்தி நல்லது சொல்லும் செய்தி அல்லது சொல்லும் செய்தி அறவே வேண்டா செய்தி உறவைப் பற்றிய செய்தி உள்ளம் குளிரும் செய்தி புறம் கூறும் செய்தி புறந் தள்ளும் செய்தி தீமை தரும் செய்தி தீண்டக் கூடா செய்தி நன்மை தரும் செய்தி நாடி ஏற்கும் செய்தி ச.சந்திரசேகரன் |
| பிப்ரவரி 6ல் அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் Posted: 28 Jan 2017 09:45 AM PST திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 6ம் தேதி காலை 9.05 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. அதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்பட 9 கோபுரங்களின் மீதும் அமைக்கப் பட்டுள்ள கலசங்களுக்கு, புனித நீர் கொண்டு செல்ல தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோயில் முழுவதும் வண்ண சர விளக்குகளால் ... |
| புளோரிடாவில் மலைப்பாம்புகளை பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த 2 இருளர்கள் நியமனம்: Posted: 28 Jan 2017 09:29 AM PST புளோரிடாவில் மலைப்பாம்புகளை பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த 2 இருளர்கள் நியமனம்: 8 நாளில் 13 பாம்புகளை பிடித்ததால் அதிகாரிகள் ஆச்சரியம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத் தில் மலைப்பாம்புகளைப் பிடிக்க, தமிழகத்தைச் சேர்ந்த மலைவாழ் இருளர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 8 நாளில் 13 மலைப்பாம்புகளைப் பிடித்துக் கொடுத்ததால் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பர்மா மலைப்பாம்புகள் பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றன. முயல், மான் போன்ற விலங்குகள், ... |
| புதிய வடிவில் மீண்டும் வருகிறது ரூ.1,000 நோட்டு? Posted: 28 Jan 2017 09:19 AM PST புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 1,000 ரூபாய் நோட்டுகள், புதிய வடிவில் விரைவில் வெளியிடப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது: 'கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டை தடுக்கவும், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016 நவ., 8-இல் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிய, 500, 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளதாக புகார்கள் ... |
| அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டர் அமைச்சர் எம்.சி.சம்பத்: Posted: 28 Jan 2017 08:53 AM PST கடலூர் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழக தொழிற்துறை அமைச்சரான எம்.சி.சம்பத். இவருக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரை இன்று மாலை தமிழக முதல்வர் ... |
| படித்ததில் பிடித்தது :) -- வழக்கத்துக்கு மாறாக... Posted: 28 Jan 2017 08:45 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 28 Jan 2017 08:02 AM PST 4.7 GB DVD யில் எவ்வாறு 9 படங்கள் (9 in 1 ) மற்றும் 5 (5 in 1) படங்கள் ரைட் செய்யக் கூடிய மென்பொருள் வேண்டும். |
| Posted: 28 Jan 2017 07:48 AM PST ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 28 Jan 2017 07:31 AM PST முன்பு செய்திகள் என்பது செய்திகளை மட்டுமே சுமந்து வந்தன... ஆனால் இன்று ஒவ்வொரு செய்தியும் மறைமுகமாக யாரோ ஒருவருக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் சுமந்தே வருகின்றன. ஊடகங்கள் இந்த நிலைக்கு வந்த காரணம் என்ன? செய்தித்தாள்களும் சரி,முகநூல்,கட்செவி அஞ்சல்,தொலைக்காட்சிகள் என எவற்றிலும் செய்திகள் யாரோ ஒருவருக்காக திரிக்கப்பட்டு நம் மீது திணிக்கப்படுகின்றன என்பதே என் எண்ணம்... உங்கள் எண்ண ஓட்டத்தை பகிரவும். |
| Posted: 28 Jan 2017 06:55 AM PST காரணமாயிரு ஒருவரின் மகிழ்ச்சிக்கு காரணமாயிரு இகழ்ச்சிக்கல்ல ஒருவரின் இன்பத்திற்கு காரணமாயிரு துன்பத்திற்க்கல்ல ஒருவரின் உயர்வுக்கு காரணமாயிரு தாழ்வுக்கல்ல ஒருவரின் ஏற்றத்திற்குக் காரணமாயிரு இறக்கத்திற்கல்ல ஒருவரின் எழுச்சிக்கு காரணமாயிரு வீழ்ச்சிக்கல்ல ஒருவரின் சாதனைக்கு காரணமாயிரு வேதனைக்கல்ல ஒருவரின் சுகத்திற்கு காரணமாயிரு சோகத்திற்கல்ல ஒருவரின் வளர்ச்சிக்கு காரணமாயிரு தளர்ச்சிக்கல்ல ஒருவரின் ஊக்கத்துக்கு காரணமாயிரு ஏக்கத்துக்கல்ல ஒருவரின் உறவுக்கு ... |
| கூரை வீட்டிலிருந்து மாளிகைக்கு... Posted: 28 Jan 2017 06:22 AM PST -- தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரையும் நடிகரையும் உருவாக்கிய ஆணிவேர் இவர்தான்! ''சிதம்பரத்துலதான் நான் பிறந்து, வளர்ந்தேன். ரொம்ப சாதாரண குடும்பம். வரலட்சுமி நோன்பு அப்ப பிறந்ததால எனக்கு வரலட்சுமினு பெயர் வைச்சாங்க...'' சங்கோஜம் தென்பட்டாலும் கம்பீரமாகவே பேச ஆரம்பிக்கிறார் வரலட்சுமி மோகன். எடிட்டர் மோகனின் மனைவி. 'தனி ஒருவன்' மோகன் ராஜா, ஜெயம் ரவி ஆகியோரின் அம்மா என்றால் சட்டென்று அனைவருக்கும் இவர் யார் என்று புரிந்து விடும். அந்தளவுக்கு கிளை பரப்பி ... |
| Posted: 28 Jan 2017 05:35 AM PST கட்செவி/ முகநூல் படங்கள் முழுக்க முழுக்க ஆங்கில சொற்களுடன் கட்செவி /முகநூலில் வந்துள்ள சில படங்கள், ஈகரையில் மறுபதிவு செய்யப்படுகிறது. ஓரிரு சொற்கள் எனில் அவசியம் கருதியும், அதில் உள்ள நகைச்சுவை கருதியும் விட்டுவிடலாம் . முழுவதும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது எனில், ஈகரையில் பதிவிடுவது சரியில்லை என நினைக்கிறேன். பதிவர்கள் இதை மனதில் நினைவுகொள்ளவேண்டுகிறேன். ரமணியன் |
| ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிக்கும் போகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு! Posted: 28 Jan 2017 03:24 AM PST - அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதன் மூலம், தயாரிப்பாளராகவும் கவனம் பெறுகிறார் பிரபுதேவா. சமீபத்தில் நடித்து, தயாரித்து வெளியிட்ட "தேவி' வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து பிரபுதேவா தயாரித்துள்ள படம் "போகன்.' "ரோமியோ ஜூலியட்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லஷ்மண், ஜெயம் ரவி, ஹன்சிகா கூட்டணி இப்படத்திலும் இணைந்துள்ளது. "தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ... |
| 24 X 7 ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் வெள்ளை காண்டாமிருகம்! ஏன்? Posted: 27 Jan 2017 11:20 PM PST - கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவின் ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகம்தான் ஆடுகளம். ஆப்பிரிக்காவின் கை தேர்ந்த வேட்டைக்காரர்களின் பார்வை எப்போதும் இந்த காப்பகம் மீதுதான். கென்ய அரசு ராணுவம், சுற்றுசூழல் போராளிகள் ஆகியோரின் ஏக்கமும் இந்த காப்பகம் மீதுதான். இவை அனைத்திற்கும் காரணம், சூடான் என்னும் வெள்ளை காண்டாமிருகம். எந்நேரமும் வேட்டையாடப்படலாம் என்ற பயத்துடனும், அதே சமயம் ராணுவ வீரர்களின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்த ... |
| பெண் சாமியார் வீட்டில் கட்டுக்கட்டாக புது நோட்டு Posted: 27 Jan 2017 08:02 PM PST -- பனஸ்கந்தா: குஜராத்தில், பெண் சாமியார் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில், 24 தங்கக் கட்டிகளும், 1.2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதிரடி சோதனை: குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த, பெண் சாமியார் ஜெய் ஸ்ரீகிரி, 45, மீது, உள்ளூர் தங்கநகை வியாபாரி அளித்த புகார் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், 80 லட்சம் ரூபாய் ... |
| சென்னை அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதல் Posted: 27 Jan 2017 07:58 PM PST சென்னை : சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளன. சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் ஏற்றி வந்த கப்பலுடன் மற்றொரு சரக்கு கப்பல் மோதி உள்ளது. இரண்டு கப்பல்களும் துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இருந்து கொட்டிஃய எண்ணெயை அகற்றும் பணி நடந்து வருகிறது. 2 கப்பல்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலம் தொடர் ரோந்து செய்து கப்பல்களின் ... |
| லாலு நிர்பந்தத்தாலேயே உ.பி. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவில்லை Posted: 27 Jan 2017 07:50 PM PST - உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடாததற்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அளித்த நிர்பந்தமே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பிகார் மாநில பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிடப் போவதாக ஐக்கிய ஜனதா தளம் முதலில் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது துரித கதியில் அந்த முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது. பிகார் அரசில் ராஷ்ட்ரீய ... |
| பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு Posted: 27 Jan 2017 07:47 PM PST - பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் முதல்வர் பதவி வேட்பாளராக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பெயரை அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். பஞ்சாப் சட்டப் பேரவையில் உள்ள 111 இடங்களுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மஜிதாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பஞ்சாபை இந்த மாநில மக்கள்தான் ... |
| விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: ஜனவரி 31-க்குள் தெரியப்படுத்த உத்தரவு Posted: 27 Jan 2017 06:20 PM PST தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜனவரி 31) நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அது தொடர்பான அரசாணையை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்ததோடு, புதிய அறிவிப்பாணை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |