Tamil News | Online Tamil News |
- மஹாராஷ்டிராவில் பா.ஜ., அரசுக்கு...சிக்கல்!: கூட்டணியிலிருந்து வெளியேற சிவசேனா முடிவு?
- அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
- அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையினர்...அச்சம்!: 'ஆட்டம்' போட்டவர்களுக்கு பதவி தரும் சசி முடிவால் கலக்கம்: தீபா பக்கம் செல்வது பற்றி பெண் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை
- வன்முறையில் ஈடுபட்டோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை : சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
- காங்., ஒரு மூழ்கும் கப்பல்:பிரதமர் மோடி கடும் தாக்கு
- சோனியா, ராகுல் தொகுதிகளில் 'சீட்'டுக்காக போராடும் காங்.,
- 'மத்திய அரசின் நடவடிக்கைகளால் வரி வருவாய் உயரும்'
- ஜெ., பெயரை சொல்லலாமா? அ.தி.மு.க., - தி.மு.க., மோதல்
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2வது முறையாக தள்ளிவைப்பு
- 'செல்பி' எடுக்க தடை: கல்லூரிக்கு 'நோட்டீஸ்'
- சுஷ்மாவின் விரைவான செயல்; பிஞ்சு குழந்தைக்கு மறுவாழ்வு
- பெண் சாமியார் வீட்டில் கட்டுக்கட்டாக புது நோட்டு
- வரி ஏய்ப்பு தடுப்பு விதிகள் ஏப்.,1 முதல் அமல்
| மஹாராஷ்டிராவில் பா.ஜ., அரசுக்கு...சிக்கல்!: கூட்டணியிலிருந்து வெளியேற சிவசேனா முடிவு? Posted: 27 Jan 2017 07:38 AM PST மும்பை:மஹாராஷ்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில், ஆளும் பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா, தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், மாநில அரசின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், மும்பை உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்க வுள்ளது. இந்த தேர்தலில், தனித்துப் போட்டி யிடப் போவதாக,சிவசேனா நேற்றுஅறிவித்தது, மஹாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, மாநில ... |
| அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? Posted: 27 Jan 2017 08:30 AM PST சென்னை:'ஜெயலலிதா அரசு சிறப்பாக செயல் படுகிறது என, மக்களிடம் நல்ல பெயர்வாங்கும் வகையில்,எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட வேண்டும்' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சசிகலா அறிவுரை வழங்கி உள்ளார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, கட்சியின் தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலர் சசிகலா, நேற்று மாலை, 5:00 மணிக்கு கூட்டியிருந்தார். இது பற்றிய தகவல், நேற்று முன்தினம் தான், எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிவிக் கப்பட்டது. அதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உருவானது.இந்நிலையில் நேற்று மாலை, சட்டசபை முடிந் ததும் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல். ஏ.,க்கள்,கட்சி ... |
| Posted: 27 Jan 2017 08:43 AM PST அ.தி.மு.க.,வில், ஜெயலலிதாவால் உருவாக் கப்பட்ட, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். ஆட்டம் போட்டவர்களுக்கு மீண்டும் பதவி தரும் முடிவில், கட்சியின் பொதுச் செயலர் சசிகலா இருப்பதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, தீபா பக்கம் செல்வது பற்றி பெண் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.மறைந்த ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட மன்னார்குடி உறவுகள் கட்சியிலும், ஆட்சியி லும் கோலோச்சத் துவங்கி இருக்கின்றன. சசிகலாவின் அரவணைப்பில் உள்ள, அவரின் அக்கா வனிதாமணியின் மகன் ... |
| வன்முறையில் ஈடுபட்டோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை : சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பு Posted: 27 Jan 2017 08:44 AM PST சென்னை: ''அமைதியான போராட்டத்தை திசை திருப்பி, வன்முறையில் ஈடுபட்ட, தீயசக்தி களை கண்டறிந்து, அவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சட்டசபையில், முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டசபையில் நேற்று, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ''ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி, மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள், ஜன., 17 முதல், 22 வரை, அறவழியில் போராடினர். அந்த போராட்டம், 23ம் தேதி, போலீஸ் தடியடி, கண்ணீர் புகை வீச்சாக மாறியது ஏன் என, முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்,'' என்றார். இடையூறு : |
| காங்., ஒரு மூழ்கும் கப்பல்:பிரதமர் மோடி கடும் தாக்கு Posted: 27 Jan 2017 09:07 AM PST ஜலந்தர்:பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரத் தில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பேசிய, பிரதமர் நரேந்திர மோடி, ''காங்., ஒரு மூழ்கும் படகு; இனியும், அதை நம்பி யாரும் பயணிக்கமாட்டர்,'' என்றார். பஞ்சாபில், அகாலி தளத்தைச் சேர்ந்த, பிரகாஷ்சிங் பாதல், முதல்வராக உள்ளார். இங்கு, அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கி றது .இம்மாநிலத்தில், பிப்., 4ல், சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது ஜலந்தரில், நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: பஞ்சாப் இளைஞர்கள் வீரம் மிக்க ... |
| சோனியா, ராகுல் தொகுதிகளில் 'சீட்'டுக்காக போராடும் காங்., Posted: 27 Jan 2017 09:11 AM PST லக்னோ:காங்., தலைவர் சோனியாவின் ரேபரேலி மற்றும் துணைத் தலைவர் ராகுலின், அமேதி லோக்சபா தொகுதிகளில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளையும், தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென, காங்., போராடி வருகிறது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி உள்ள, உ.பி.,யில், பிப்., - மார்ச் மாதத்தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இங்கு, ஆளும் சமாஜ்வாதியுடன், காங்., கூட்டணி அமைத்து உள்ளது. மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின், மொத்தம் உள்ள, 403 தொகுதிகளில், காங்கிரசுக்கு, 105 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.ஏழு கட்டங்களாக நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ரேபரேலி மற்றும் அமேதி தொகுதி ... |
| 'மத்திய அரசின் நடவடிக்கைகளால் வரி வருவாய் உயரும்' Posted: 27 Jan 2017 09:14 AM PST விசாகப்பட்டினம்:''மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பும், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையும், நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன் தரக் கூடியவை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் கூட்டு உச்சி மாநாடு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில், நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி பேசியதாவது:மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத் தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் ... |
| ஜெ., பெயரை சொல்லலாமா? அ.தி.மு.க., - தி.மு.க., மோதல் Posted: 27 Jan 2017 09:21 AM PST சென்னை:சட்டசபையில், ஜெயலலிதா பெயரை சொல்லலாமா என்பது தொடர்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே மோதல் ஏற்பட்டது. தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் பேசுகையில், 'மறைந்த அம்மையார் ஜெயலலிதா' என, குறிப்பிட்டார். அதற்கு, அ.தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க.,வினரும் பதிலுக்கு கூச்சலிட்டனர். இதனால், சில நிமிடங்கள், சபை நிகழ்ச்சி பாதிக்கப்பட்டது.அப்போது, சபாநாயகர் தனபால், ''அவமரி யாதை தரும் வகையில், பெயரை சொல்லி பேசக்கூடாது,'' என்றார். அதற்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ''எங்கள் கட்சித் தலைவர் பெயரை, இங்கு, அ.தி.மு.க., உறுப்பினர்கள் முன் கூறிய போது, ... |
| அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2வது முறையாக தள்ளிவைப்பு Posted: 27 Jan 2017 09:25 AM PST மதுரை:மதுரை மாவட்டம் அலங்காநல்லுா ரில், 2வது முறையாக ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் கேட்டு கொண்டதால், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றியது. இதையடுத்து ஜன., 22ம் தேதி அலங்காநல்லுாரில் ஜல்லிக் கட்டு நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. இதில் பங்கேற்க முதல்வர் ஒ.பன்னீர் செல்வ மும் கலந்து கொள்ள மதுரை வந்தார். ஆனால் போராட்டக்காரர்கள் எதிர்ப்பையடுத்து ஜல்லிக் கட்டு ரத்தானது. பின் கிராம கமிட்டியினர் கூடி பிப்., 1ல் ஜல்லிக் கட்டு நடத்தப்படும் என அறிவித்தனர். பால மேட்டில் பிப்., 2, ... |
| 'செல்பி' எடுக்க தடை: கல்லூரிக்கு 'நோட்டீஸ்' Posted: 27 Jan 2017 10:44 AM PST
புதுடில்லி: 'செல்பி' எடுக்க, மாணவியருக்கு தடை விதித்த கல்லுாரியிடம் விளக்கம் கேட்டு, டில்லி பெண்கள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. தடை: டில்லியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி பல்கலையின் கீழ் இயங்கும் ஒரு கல்லுாரி, அங்கு படிக்கும் மாணவியர், கல்லுாரி வளாகத்தில், 'செல்பி' எடுக்கவும், கலைந்த தலைமுடியை சீவவும் தடை விதித்து உள்ளது. கல்லுாரி நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு, மாணவியர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புகார்: இது குறித்து, ... |
| சுஷ்மாவின் விரைவான செயல்; பிஞ்சு குழந்தைக்கு மறுவாழ்வு Posted: 27 Jan 2017 12:42 PM PST போபால்: சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எடுத்த உடனடி நடவடிக்கையால், பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு, மறுவாழ்வு கிடைக்க உள்ளது. இதய கோளாறு ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இங்குள்ள போபாலைச் சேர்ந்த, திவேஷ் சர்மா - வந்தனா தம்பதிக்கு, சமீபத்தில், ஆண் குழந்தை பிறந்தது.குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அதற்கு இதய கோளாறு இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக, அதிநவீன அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, குழந்தை உயிர் பிழைக்கும் என்றும் ... |
| பெண் சாமியார் வீட்டில் கட்டுக்கட்டாக புது நோட்டு Posted: 27 Jan 2017 01:43 PM PST பனஸ்கந்தா: குஜராத்தில், பெண் சாமியார் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில், 24 தங்கக் கட்டிகளும், 1.2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதிரடி சோதனை: குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த, பெண் சாமியார் ஜெய் ஸ்ரீகிரி, 45, மீது, உள்ளூர் தங்கநகை வியாபாரி அளித்த புகார் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 24 தங்கக் கட்டிகளும், 1.2 கோடி ரூபாய் மதிப்புள்ள, புதிய, 2,000 ரூபாய் ... |
| வரி ஏய்ப்பு தடுப்பு விதிகள் ஏப்.,1 முதல் அமல் Posted: 27 Jan 2017 02:32 PM PST புதுடில்லி: ஜி.ஏ.ஏ.ஆர்., எனப்படும், பொது வரி ஏய்ப்பு தடுப்பு சட்ட விதிகள், வரும், ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. ஜி.ஏ.ஏ.ஆர்.,: மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில், வரி ஏய்ப்பு நடைபெறுவதை தடுக்கும் நோக்கில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஜி.ஏ.ஏ.ஆர்., எனப்படும், பொது வரி ஏய்ப்பு தடுப்பு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமல்: திட்டமிட்டபடி, ஏப்., 1ல் துவங்கும், 2017 - 18ம் நிதியாண்டில், இது நடைமுறைக்கு வரும் என, மத்திய நேரடி வரி வாரியம், நேற்று தெரிவித்துள்ளது. இதனால், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 28,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |