ஈகரை தமிழ் களஞ்சியம் |
- [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
- மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
- பொவான்டோ, பன்னீர் சோடாவையும் தவிர்ப்போம்...
- அறிமுகம் வஹிதா
- வைணவ இலக்கியங்களில் வல்லுநர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்!
- திட்டினாலும் தித்திக்கும் பாடல் பிறந்தது...
- திட்டினாலும் தித்திக்கும்
- கேடு கெட்டவனே !
- குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை
- பெற்றோரின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த எம்.பி.ஏ பட்டதாரி
- 33 போட்டிகளில் விளையாடி 1 ரன்கூட எடுக்காத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா
- காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
- கம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
- சிங்கம் 3: பிப்ரவரி 9-ல் வெளியீடு!
- மணி ரத்னத்தின் காற்று வெளியிடை: ஏப்ரல் 7-ம் தேதி வெளியீடு!
- பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்:
- ஜலதோஷம் நீங்க
- சமையல் குறிப்புகள்
- மன்னன் மகள்-சாண்டில்யன்-ஓவியங்களுடன் கூடிய தெளிவான மின்னூல்
- பளீர் டிப்ஸ் - விஜய் சீனிவாசன்
- ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
- மருத்துவ குறிப்புகள்
- பயனுள்ள தகவல்கள்
| [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Posted: 27 Jan 2017 02:57 PM PST அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை 1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha 2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas மிக்க நன்றி. |
| Posted: 27 Jan 2017 02:49 PM PST சிவன் சக்தி இருவருக்கும் நடக்கும் காதல் நிகழ்வுகள், மெலுஹா மக்களுக்காக சிவன் மேற்கொள்ளும் சாகசப் பயணங்கள், ஸ்வத்வீபத்தை அடைந்தவுடன் நீலகண்டர் என்று அழைக்கப்படுவது, நீலக் கழுத்துள்ள சிவன் குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கை, நாகர்களுடன் சிவன் போரிடும் சண்டைக் காட்சிகள் என்று மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கடந்த பல வருடங்களாகவே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்த நூலை படித்து முடித்தபோது ராஜமவுலி இயக்கத்தில் "பாகுபலி" ... |
| பொவான்டோ, பன்னீர் சோடாவையும் தவிர்ப்போம்... Posted: 27 Jan 2017 08:51 AM PST ஐயா ஃபேஸ்புக் விஞ்சானிகளே....... நீங்கள் கோக் பெப்ஸி புறக்கனிப்பதை வரவேற்கிறேன்............ - ஆனால் அதற்கு பதிலா பொவோன்டோ குடியுங்க, பன்னீர் சோடா குடியுங்கன்னு மட்டும் தவறா விளம்பரம் செய்யாதீர்கள் ஏன் என்றால்........... - 1. பொவொன்டோ உள் நாட்டு தயாரிப்பு என்பதால் அதன் விலை குறைவில்லை - மற்ற கோலா பானங்களை விட அதிகம். - 2. அன்னிய நாட்டு குளிர்பானங்கள் இயற்கை நீரை உறிஞ்சுகிறது..... இவர்கள் மட்டும் அல்ல அனைத்து உள்ளூர் / வெளியூர் பானங்களும் இதை தான் செய்கிறது. - 3. பொவொன்டோ ... |
| Posted: 27 Jan 2017 08:35 AM PST பெயர்: vahidha சொந்த ஊர்: trichy ஆண்/பெண்: female ஈகரையை அறிந்த விதம்: online பொழுதுபோக்கு: நாவல் padippadhu தொழில்: விமான டிக்கெட் விற்பனை முகவர் மேலும் என்னைப் பற்றி: |
| வைணவ இலக்கியங்களில் வல்லுநர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்! Posted: 27 Jan 2017 08:02 AM PST -- வைணவ இலக்கியங்களில் வல்லுநர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்! அஷ்ட பிரபந்தங்களான திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்துமாலை, திவரங்கக்கலம்பகம், திருவரங்கநாதர் ஊசல் திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி நூற்றியெட்டுத் திருப்பதி அந்தாதி எனும் பாசுரங்களைத் தமிழுக்கு அளித்தவர். திருவரங்கநாதன் மேல் தீராத காதல் கொண்டு திருப்பாவை அருளிச் செய்த திருவல்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் போலவே, இவரும் பக்தி கொண்டவர். பாடியே திட்டினாலும் தித்திக்கும் செந்தமிழ்ப்பாடல்கள் இவை: திரு ... |
| திட்டினாலும் தித்திக்கும் பாடல் பிறந்தது... Posted: 27 Jan 2017 07:29 AM PST நாடெங்கும் ஒளவையின் புகழ் கூடியது! ஔவையை கம்பர் ஒரு முறை சீண்டிப் பார்த்தார்! அரண்மனையில் வீற்றிருந்தபோது வெளியே கீரைக்காரியின் சப்தம்! புலவர்கள் ஒருவரையொருவர் வணிகர்கள் தங்கத்தை உரசிப் பார்த்து தரம் (மாற்று) கண்டுபிடிப்பது போல் உரசுவது வழக்கம். வாயைக் கொடுத்து விட்டு வாங்கிக் கட்டுவதும் உண்டு. புதிர் போடுவது போல் ஒளவையாரிடம் விடுகதையாகக் கம்பர் கூறியது: ஒரு காலடி! நான்கிலைப் பந்தலடி! என்பதுதான். - ஒளவையாரை உலகமே போற்றுகிறது! ஆனால் அடி! அடி! என அடியே! என்பது போலக் ... |
| Posted: 27 Jan 2017 07:15 AM PST "பொம்பளை சிரிச்சாப் போச்சு! புகையிலை விரிச்சா போச்சு!' என்றொரு பழமொழி தமிழகத்தில் நாட்டுப் புறங்களில் நிலவுகின்றது! - பலபேர் கூடியுள்ள இடங்களில் பலர் முன்னிலையில் பெண்கள் வாய்விட்டுச் சிரிக்கக் கூடாது என்பது பண்டைய நம்பிக்கை! - கண்ணபிரானின் அரக்கு மாளிகையின் தரை பளிங்குக் கற்களால் ஆனது. அதில் வழுக்கி விழுந்த துரியோதனனைக் கண்ட திரௌபதி கலகலவெனச் சிரித்துவிட்டாள். தனக்கு அது அவமானம் எனத் துரியோதனன் கருதியதால் கொண்ட வஞ்சமே, அரசசபையில் அவளைத் துகிலுரிந்து அவமானப்படுத்தியது என்பார்கள். ... |
| Posted: 27 Jan 2017 06:47 AM PST சண்டைகள் உச்சகட்டத்தை அடையும்போது " கேடு கெட்டவனே ! நீ நாசமாகப் போவாய் ; உன் குடும்பம் விளங்காது " என்ற வசவுகளைக் கிராமப்புறங்களில் கேட்கலாம் . " கேடு கெட்டவனே ! " என்று திட்டுவது சரியா ? " கேடு " என்ற சொல்லுக்கு அழிவு ,தீமை , துன்பம் என்பது பொருள் . அறிவுகெட்டவன் என்றால் என்ன ? அறிவு இல்லாதவன் என்றுதானே பொருள் . அதுபோல கேடு கெட்டவன் என்றால் தீமை இல்லாதவன் என்றுதானே பொருள் வரவேண்டும் . அதாவது " நல்லவன் " என்றுதானே பொருள் . கேடு , கெட்ட ஆகிய இரண்டு எதிர்மறை சொற்கள் சேர்ந்து ... |
| குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை Posted: 27 Jan 2017 06:34 AM PST புதுடெல்லி - டெல்லியில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையில், பாரிக்கர் உறங்கினார் என கோவா சுரக்ஷா மன்ச் தலைவர் ஞானஷ்யாம் ஷிரோத்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் கண்கள் மூடி, தலையை கவிழ்ந்தபடி இருந்த படம் இணையத்தில் வைரலானது. கோவாவுக்கே ... |
| பெற்றோரின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த எம்.பி.ஏ பட்டதாரி Posted: 27 Jan 2017 05:43 AM PST - ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மேகா, திருநங்கையான இவர் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். மேகாவுக்கு திருமணம் செய்து வைக்க இவரின் பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஈடுப்பட்டு வந்தார்கள். இந்நிலையில், மேகா வசிக்கும் பகுதியில் இருக்கும் பாசுதேவ் நாயக் என்னும் எம்.பி.ஏ பட்டதாரி மேகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் பாசுதேவின் விருப்பத்துக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதன் பின்னர் இரு வீட்டாரின் ... |
| 33 போட்டிகளில் விளையாடி 1 ரன்கூட எடுக்காத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா Posted: 27 Jan 2017 05:31 AM PST - - மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா 33 போட்டிகளில் விளையாடி இதுவரை 1 ரன் கூட எடுக்க முடியாமல் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இதுவரை 11 ஒருநாள், 22 டி20 என மொத்தம் 33 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும் இவர் மொத்தம் 5 முறை மட்டுமே பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளார். அந்த 5 போட்டியிலும் வெறும் 3 பந்துகள் மட்டுமே பும்ரா எதிர் கொண்டுள்ளார். அதில் ஒரு முறை ரன் அவுட், ஒரு முறை ... |
| காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு Posted: 27 Jan 2017 05:14 AM PST காஷ்மீர் பனிச்சரிவுகளில் சிக்கி பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம், குரேஸ் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே புதன்கிழமை நள்ளிரவு இரண்டு இடங்களில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு பனிச்சரிவில் சிக்கி 10 வீரர்கள் பலியாகினர். 4 பேர் மாயமானார்கள். இதையடுத்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், மாயமான 4 ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. இதனால் பனிச்சரிவுகளில் சிக்கி ... |
| கம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம் Posted: 27 Jan 2017 05:10 AM PST - கர்நாடகாவில் கம்பாலா விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா எனும் எருதுகளின் பந்தயத்திற்கு கடந்த ஆண்டு தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கம்பாலா போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், பீட்டாவை தடை செய்ய கோரியும் கர்நாடக மாநிலம் மங்களூருவில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ... |
| சிங்கம் 3: பிப்ரவரி 9-ல் வெளியீடு! Posted: 27 Jan 2017 04:46 AM PST - இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள எஸ் 3 (சிங்கம் 3) படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள். டிசம்பர் மாத இறுதியில் வெளியாக இருந்த சிங்கம் 3, ஜனவரி 26 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழலை முன்னிட்டு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்டூடியோ க்ரீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ... |
| மணி ரத்னத்தின் காற்று வெளியிடை: ஏப்ரல் 7-ம் தேதி வெளியீடு! Posted: 27 Jan 2017 04:44 AM PST - மணி ரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை வரும் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மணி ரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பாடல்கள் விரைவில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதல் பாடல் பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காற்று வெளியிடை படம் ஏப்ரல் ... |
| பத்ம விருது பெறும் கே.ஜே.ஜேசுதாஸ்: Posted: 27 Jan 2017 04:39 AM PST - 1940-ஆண்டு கேரளத்தில் பிறந்த கே.ஜே. ஜேசுதாஸ் 50 ஆண்டுகளை திரையிசை உலகில் நிறைவு செய்துள்ளார். ஜேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960-ஆம் ஆண்டில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வீணை எஸ்.பாலச்சந்தரின் பொம்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். "நீயும் பொம்மை, நானும் பொம்மை" என்ற இவரின் தமிழ் அறிமுகப் பாடல் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 1970-களில் ஹிந்தித் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். தமிழ், மலையாளம், ... |
| Posted: 27 Jan 2017 04:27 AM PST சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும் மாவு அரைக்கும்போது இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி போட்டு , ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிகை பூ மாதிரி மிருதுவாக இருக்கும் |
| Posted: 27 Jan 2017 04:11 AM PST நூடுல்ஸை தண்ணீரில் வேகவைக்கும்போது அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து வைக வைத்தால் அவை ஒன்றோடொன்று ஒட்டாது. - - இந்திரலட்சுமி, மதுரை. - ----------------------------------------------- இட்லி மாவில் சிறிது தேங்காய் எண்ணெய் வதக்கிய தேங்காய்த்துருவலைக் கலந்து வேகவைத்தால் மணமான தேங்காய் இட்லி தயார். - ------------------------------------------------- - காரட், பீன்ஸ், மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து, அதனுடன் சில்லி சாஸ் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். உருண்டைகளை ... |
| மன்னன் மகள்-சாண்டில்யன்-ஓவியங்களுடன் கூடிய தெளிவான மின்னூல் Posted: 27 Jan 2017 03:45 AM PST வாசக நண்பர்களே! இந்த பதிவு ஒரு மீள்பதிவாக வெளியிடப்படுகிறது. ஏற்கனவே ஓவியங்கள் இல்லாமல் வெளிவந்த மன்னன்மகள் இப்பொழுது ஓவியங்களுடன் வெளியாகிறது. இதற்கு ஓவியங்கள் கொடுத்து உதவிய நண்பர் ஞானகணேஷ் அவர்களுக்கும் வண்ண ஓவியங்களையும் இணைத்து மின்னூலாக வழங்கிய நண்பர் ஜீவா அவர்களுக்கும் தமிழ் வாசகர்கள் சார்பாக நன்றிகளை உரித்தாக்குகின்றேன். பதிவிறக்க: மன்னன் மகள்-சாண்டில்யன்-ஓவியங்களுடன் கூடிய தெளிவான மின்னூல் |
| பளீர் டிப்ஸ் - விஜய் சீனிவாசன் Posted: 27 Jan 2017 01:22 AM PST கேக்கில் ஐஸிங் செய்யும்போது கவனம் தேவை. - ஸ்பூனால் மொத்தமாக ஐஸிங்கை எடுத்துப் பரவலாக விடலாம். ஐஸிங் அதிக சூடாகவோ, குளிர்ந்தோ இருக்கக்கூடாது. வெது வெதுப்பாக இருக்க வேண்டும். ஐஸிங் செய்யும் முன் கேக்கின் மேல் பகுதிகளில் உள்ள துகள்களை எடுத்துவிட வேண்டும். முதலில் கேக்கின் மீது சர்க்கரைப்பாகைத் தடவிய பின்தான் ஐஸிங் செய்ய வேண்டும். - -------------------------------------------- |
| ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook Posted: 26 Jan 2017 10:19 PM PST ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக... The Secret Tamil Ebook தரவிறக்கம் செய்ய |
| Posted: 26 Jan 2017 04:58 PM PST சிறுநீரகக் கற்கள் கரைய ------------------------------ மக்காச்சோளப் பொடியைப் பணங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்கவைத்துக் காலையில் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநெருஞ்சி இலை, பூ, காய், வெட்டிவேர், பனங்கற்கண்டு சேர்த்துக் காலையில் குடித்து வந்தால், கற்கள் கரைந்துவிடும். நெருஞ்சி முள் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். முள்ளங்கியை பசையாக அரைத்து, அதனுடன் வாழைத் தண்டுச்சாறு மற்றும் மோர் கலந்து காலையில் ... |
| Posted: 26 Jan 2017 04:46 PM PST ஈக்களை விரட்ட ------------------ - வசம்பைத் தூள் செய்து தண்ணீரில் கலந்து ஈக்கள் அதிகமுள்ள இடங்களில் தெளித்தால் அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். - ---------------------------------------------- - கடுமையான தலைவலியும் நீங்க - இரண்டு வெற்றிலையுடன் இரண்டு கிராம்பு ஒரு துண்டு சுக்கு வைத்து பால் தெளித்து நைஸாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலியும் நீங்கும். - --------------------------------------------- கோலம் போட டிப்ஸ் ------------------- - கோலமாவில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |