Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க...சதி!:அசாம், மணிப்பூரில் குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

Posted: 26 Jan 2017 07:12 AM PST

கவுகாத்தி:குடியரசு தின விழா கொண்டாட்டங் களை சீர்குலைக்கும் வகையில், அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில், தீவிரவாதி கள் நடத்திய குண்டு வெடிப்புதாக்குதல்களால், அந்த மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டது. இரு மாநிலங்களிலும், ஏழு இடங்களில்,அடுத் தடுத்து குண்டுகள் வெடித்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

நாட்டின், 68வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. டில்லியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தேசிய கொடி ஏற்றி வைத்து, ராணுவத் தினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி, பிரதமர், ராணுவ ...

பணம் எடுக்க கட்டுப்பாடு: பிப்ரவரி இறுதியில் நீங்கும்?

Posted: 26 Jan 2017 07:29 AM PST

புதுடில்லி,: வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள், பிப்ரவரி இறுதியில், முழுமையாக நீங்கி விடும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதமர், நரேந்திர மோடி, கடந்தாண்டு, நவ., 8ம் தேதி, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார்.இதையடுத்து, வங்கிகள், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க, ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஏ.டி.எம்., களில், ஒரு நாளைக்கு, 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது. பின், இந்த வரம்பு, 2,500 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல், வங்கியில், ஒரு வாரத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என விதிக்கப் பட்டிருந்தது. பின், 24 ஆயிரம் ...

வெளிப்படை தன்மை 'ஆப்சென்ட்' :பரிதாப நிலையில் இந்தியா

Posted: 26 Jan 2017 07:38 AM PST

புதுடில்லி,: சர்வதேச அளவில், வெளிப்படைத் தன்மை இல்லாமை மற்றும் ஊழல் தொடர் பான வருடாந்திர குறியீட்டில், 40வது இடம் பிடித்துள்ளதன் மூலம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில், இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க, உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள், ஊழலின் எண்ணிக்கை, நாட்டின் பரவலான பொருளா தார வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில், வெளிப்படைத் தன்மை இல்லாமை மற்றும் ஊழல் தொடர்பான வருடாந்திர குறியீடு வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், உலக நாடுகள் வரிசைப் படுத்தப்படுகின்றன. இதில், பெரும்பாலான ஆசிய நாடுகளில், ...

ரூ.1,000 கோடி 'நிர்பயா' நிதி: 3 வது ஆண்டாக வீண்

Posted: 26 Jan 2017 07:39 AM PST

புதுடில்லி, :பெண்களின் பாதுகாப்புக்காக ஒதுக் கப்படும், 1,000 கோடி ரூபாய், 'நிர்பயா' நிதி யிலிருந்து, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, ஒரு பைசா கூட செலவு செய்யப்படவில்லை.

டில்லியில், 2012 டிசம்பரில், மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2013 - 14ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த, 'நிர்பயா நிதி' என்ற பெயரில்,1,000 கோடி ரூபாய் ...

சர்க்கரைக்கு மானியம் ரத்து செய்ய அரசு முடிவு?

Posted: 26 Jan 2017 07:43 AM PST

புதுடில்லி, : பொது வினியோகத்துறை மூலம் வழங்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ள தாக தெரிகிறது.

மாநில அரசுகள், சர்க்கரையை, சந்தையில் வாங்கி, அதை மக்களுக்கு, பொது வினியோகத் துறை மூலம், ஒரு கிலோ, 13.5 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இதற்காக, மாநில அரசு களுக்கு, மத்திய அரசு, ஒரு கிலோவுக்கு, 18.5 ரூபாய், மானியமாக வழங்கி வருகிறது. ரூ.4,500 கோடி இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு, 4,500 கோடி ரூபாய் செலவாகிறது.இந்நிலையில், மாநில அரசுகளுக்கு வழங்கப்படும், சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு ...

பன்னீர் துணிச்சல் முடிவு: அ.தி.மு.க.,வினர் உற்சாகம்

Posted: 26 Jan 2017 08:39 AM PST

குடியரசு தின விழாவில், முதல்வர், தன் மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுடன் பங் கேற்றது, அ.தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வரான புதிதில், எந்த முடிவாக இருந்தாலும், அ.தி.மு.க., பொது செயலாளர் சசிகலாவை ஆலோசித்தார் பன்னீர். சமீப காலமாக, முதல்வர் பன்னீர்செல்வம், தன்னிச் சையாக செயல்பட துவங்கி உள்ளார். ஆந்திராவுக்கு சென்று, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்கும்படி கோரிக்கை விடுத்தது; டில்லி சென்று, பிரதமரை சந்தித்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, சட்டம் கொண்டு வந்தது உட்பட, பல முக்கிய ...

மத்திய அரசுடன் மோதல் போக்கு: தம்பிதுரை பேச்சால் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி

Posted: 26 Jan 2017 08:49 AM PST

சென்னை: லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அரசுக்கு எதிரான மோதல் போக்கை தொடர்வது, அ.தி.மு.க.,வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, அ.தி. மு.க., - எம்.பி.,க்களுடன், பிரதமரை சந்திக்க, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை முயற்சித்தார். ஆனால், முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்த பிரதமர், தம்பி துரையை சந்திக்க மறுத்து விட்டார்.இதனால், அதிருப்தி அடைந்த அவர், 'மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க, பிரதமர் மறுக்கிறார்' என, டில்லியில் குற்றம் சாட்டினார். தமிழக அரசுக்கு இணக்கமாக, மத்திய அரசு நடந்து வரும் நிலையில், தம்பிதுரை மட்டும் ...

முதல்முறை!:குடியரசு தின விழாவில் கொடியேற்றினார் முதல்வர் பன்னீர்:மனைவி, பேரக்குழந்தைகளும் துணிச்சலாக பங்கேற்றனர்:முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று உற்சாகம்:கூட்டம் வராமல் தடுக்க முயன்ற சசி கும்பல் சதி அம்பலம்

Posted: 26 Jan 2017 09:19 AM PST

குடியரசு தின விழாவில், முதல் முறையாக, முதல்வர் பன்னீர்செல்வம் தேசியக் கொடியேற்றி, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பொது நிகழ்ச்சிகளில், இதுவரை தலை காட்டாத, அவரது மனைவி மற்றும் பேரக்குழந்தைகளும், துணிச்சலாக பங்கேற்றனர். விழாவுக்கு கூட்டம் வரக்கூடாது என்பதற்காக, சசிகலா ஆதரவு கும்பல் செய்த சதியும் அம்பலமாகி உள்ளது.

சென்னையில், ஆண்டுதோறும், மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே, குடியரசு தின விழா கொண்டாடப்படும். கவர்னர், தேசியக் கொடியேற்றுவது வழக்கம். தற்போது, தமிழகத்திற்கென தனி கவர்னர் இல்லை; மஹாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ், ...

கலவர பின்னணியில் ஏழு அமைப்புகள் ஆதாரத்துடன் பட்டியல் தயார்

Posted: 26 Jan 2017 09:32 AM PST

சென்னை:''ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் நடத்திய அமைதி போராட்டத்தில், ஏழு சமூக விரோத அமைப்பு கள் புகுந்து வன்முறை ஏற்படுத்தினர்,'' என போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

முதல் ஆறு நாட்களும் போராட்டம் அமைதி யாக நடந்தது. ஆனால், போராட்ட களம் சிறிது சிறிதாக திசை மாறியது. ஏழு சமூக விரோத அமைப்புகள் புகுந்து கலகம் செய்ய துவங்கின. மாணவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமே பேசினர்.போராட்டத்தில் சமூக விரோதிகள் குறித்து வீடியோ எடுத்து மாணவர்களே எங்களிடம் கொடுத்துள்ளனர். ஜன.,23 காலை 6:௦௦ மணிக்கு மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை அமைதியான வழியில் ...

சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர இளைஞர்கள் எழுச்சி

Posted: 26 Jan 2017 11:04 AM PST

விசாகப்பட்டினம்:ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, விசாகப்பட்டினம் கடற்கரையில் அமைதிப் பேரணி நடத்த முயன்ற, தெலுங்கு நடிகர் சம்பூர்னேஸ் பாபு உட்பட, நுாற்றுக்கணக்கானோர் நேற்று கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலம் உருவாக்கப்பட்டதை அடுத்து, ஐதராபாத், தெலுங்கானாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. இதனால், விஜயவாடா அருகே, ஆந்திராவுக்கான புதிய தலைநகர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவுக்கு ...

பா.ஜ.-சிவசேனா கூட்டணியில் விரிசலா? உத்தவ் பேட்டி

Posted: 26 Jan 2017 11:16 AM PST

மும்பை: மகாராஷ்டிராவில் பா.ஜ. சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பா.ஜ.-சிவசேனா கூட்டணிஆட்சி நடக்கிறது. முதல்வராக பா.ஜ.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இம்மாநிலத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந் நிலையில் கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. செல்லாத நோட்ட விவகாரத்தில் மோடியை சிவசேனா அவ்வப்போது விமர்சித்துவந்தது. நேற்றுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவசேனாவின் உத்தவ் தாக்கரே கூறுகையில், இனி எதிர்காலத்தில் பா.ஜ.வுடன் கூட்டணி கிடையாது,வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து ...

உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்: அமெரிக்க பத்திரிக்கை தகவல்

Posted: 26 Jan 2017 12:30 PM PST

வாஷிங்டன்: உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பிரபல அமெரிக்க மாதாந்திர பத்திரிக்கையான அமெரிக்கன் பாரின் பாலிசி, 2017 ம் ஆண்டுக்கான உலகின் எட்டு வல்லரசு நாடுகள் பட்டியலை தயாரித்தது. அப்பத்திரிக்கை நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஆறாம் இடம் கிடைத்துள்ளது.
மற்ற நாடுகள்
அமெரிக்கன் பாரின் பாலிசி என்ற அந்த அமெரிக்க மாதாந்திர பத்திரிக்கை நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2017 ம் ஆண்டிற்கான வல்லரசு நாடுகளில் ...

'ரேக்ளா ரேஸ்' நடத்த முடியுமா?

Posted: 26 Jan 2017 01:45 PM PST

சென்னை: தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தில், ரேக்ளா பந்தயம் பற்றிய தகவல் விடுபட்டிருப்பதால், அதை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சட்டத்திருத்தம்:
தமிழகத்தில், காளை மாடுகள் பங்கேற்புடனான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த, 1960ல், விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, சட்டசபையில், ஜன., 23ல், நிரந்தர சட்டம் நிறைவேறியது. எனினும், அதில், இரண்டாவது சட்டத்திருத்தத்தில், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருதுவிடும் விழா போன்றவை மட்டுமே இடம் ...

மத்திய அரசின் நடவடிக்கையை சந்திக்க தயார்: விஜய் மல்லையா

Posted: 26 Jan 2017 02:33 PM PST

மும்பை : ‛பங்கு சந்தை முறைகேடில் நான் ஈடுபட்டதாக செபி கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானால், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையை சந்திக்க தயார்' என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
செபி குற்றச்சாட்டு:
வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்ற கிங் பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பங்கு சந்தையில் இருந்து ரூ.1,881 கோடி மாற்றிய விவகாரத்தில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு செபி தடை விதித்து உள்ளது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™