ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீகாகுளத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் இணைந்து ஏற்படுத்திய அசோக சக்கரம்
- தஞ்சை, நெல்லையில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
- நீண்ட காலத்துக்குப் பிறகு அரசு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு
- 'பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரிக்குள் நீங்கும்'
- வல்லரசு நாடுகள் பட்டியல்: 6-ஆவது இடத்தில் இந்தியா
- பின்வாசல் வழியாக ஓடிய ’பொறுக்கி’ புகழ் சு சாமி:
- தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
- பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
- மாதவி அணிந்திருந்த நகைகள் எத்தனை?
- தை அமாவாசை அற்புதம் !
- இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
- ஐந்து மடங்கு - ஒரு பக்க கதை
- குடியரசு தின சிறப்பு டூடுல்கள்
- வட இந்திய சமையல்கள் - இராஜஸ்தானி கிச்சடி !
- எனது அறிமுகம்---அருள்ராஜ்
- செய்திகள் என்ன சொல்லுது?
- மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம்: அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்
- அசோகசக்ரா விருது வழங்கினார் ஜனாதிபதி
- தொடத் தொடத் தொல்காப்பியம்(452)
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (189)
- தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம்
- ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
- ரகுராம் ராஜனின் ஆசிரியர்!
- தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!
- இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
- 27.1.2017....தை அமாவாசை சிறப்புகள்.......
- ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்
- கோட்டயம் புஷபநாதன் அவர்களின் கதைகள் வேண்டும்
| Posted: 26 Jan 2017 04:16 PM PST - தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து அசோக சக்கர வடிவில் மனித சங்கிலி அமைத்தனர். நாடு முழுவதும் 7-வது தேசிய வாக்காளர்கள் விழிப்புணர்வு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காகுளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மிகப் பெரிய அளவில் அசோகச் சக்கர வடிவிலான மனித சங்கிலியை உருவாக்கி சாதனை படைத்தனர். 5,571 மாணவர்கள் சேர்ந்து ... |
| தஞ்சை, நெல்லையில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி Posted: 26 Jan 2017 04:07 PM PST தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தமிழகத்தில் தஞ்சை, நெல்லை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு, தஞ்சை மற்றும் நெல்லைப் பகுதிகளில் போதிய மழை இல்லாமல், விவசாயம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், வடகிழக்குப் பருவ மழை காலம் முடிந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பெரிய அளவில் குடிநீர் பற்றாக்குறை தீராது எ ன்றாலும், பொய்த்துப் போன விவசாயத்துக்கு எந்த ... |
| நீண்ட காலத்துக்குப் பிறகு அரசு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு Posted: 26 Jan 2017 04:05 PM PST சென்னை: தமிழக அரசு சார்பில், சென்னை கடற்கரை சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுதின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கலந்து கொண்டனர். நீண்ட காலத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உள்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரசு விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பிரமுகர்கள் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் காலை 7.15 மணியளவில் குடியரசு தின விழா நடைபெற்ற ... |
| 'பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரிக்குள் நீங்கும்' Posted: 26 Jan 2017 04:03 PM PST வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் நீக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிய ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதையடுத்து, அதுதொடர்பான முடிவை ரிசர்வ் வங்கி விரைவில் எடுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் பணப் புழக்கம் வெகுவாகக் குறைந்தது. ஏடிஎம் மையங்களில் நாளொன்றுக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்று முதலில் மத்திய ... |
| வல்லரசு நாடுகள் பட்டியல்: 6-ஆவது இடத்தில் இந்தியா Posted: 26 Jan 2017 08:56 AM PST வாஷிங்டன்: உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்து அமெரிக்கப் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி அமெரிக்கன் இன்டரஸ்ட்' பத்திரிக்கை, உலகின் சக்தி வாய்ந்த முதல் 8 நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள, 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் 8 வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தப் பத்திரிகையில் தெரிவிக்க பட்டுள்ளதாவது: உலக ... |
| பின்வாசல் வழியாக ஓடிய ’பொறுக்கி’ புகழ் சு சாமி: Posted: 26 Jan 2017 08:54 AM PST பின்வாசல் வழியாக ஓடிய 'பொறுக்கி' புகழ் சு சாமி: விரட்டியடித்த அமெரிக்கத் தமிழர்கள்! சியாட்டல்(யு.எஸ்) தமிழர்களை 'பொறுக்கி' என்று விமரிசித்த பா.ஜ.க தலைவர் சுப்ரமணிய சாமி, தமிழர்களின் எதிர்ப்பைக் கண்டு பின்வாசல் வழியாக அரங்கத்திற்குள் ஓடினார். இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுப்ரமணியசாமி சியாட்டலுக்குக்கு வருகை தந்திருந்தார். தகவல் அறிந்த சியாட்டல் வாழ் தமிழர்கள் திரளாக திரண்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க குவிந்தனர். அரங்கம் அமைந்துள்ள சமாமிஸ் நகர தென் கிழக்கு ... |
| Posted: 26 Jan 2017 08:52 AM PST ![]() |
| Posted: 26 Jan 2017 08:50 AM PST டெல்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மீண்டும் மாற்றி கொள்ள அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கெடு கடந்த மாதத்துடன் முடிந்தாலும், ஏராளமானோர் பழைய நோட்டுகளை மாற்றாமல் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை மீண்டும் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்குமாறு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் குவிந்து ... |
| மாதவி அணிந்திருந்த நகைகள் எத்தனை? Posted: 26 Jan 2017 08:49 AM PST ![]() |
| Posted: 26 Jan 2017 07:02 AM PST தை அமாவாசை அற்புதம் ! திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார்.ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர். ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார். அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர்மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா ... |
| இன்றைய (அரசியல்) கார்ட்டூன்... Posted: 26 Jan 2017 06:48 AM PST ![]() |
| Posted: 26 Jan 2017 06:44 AM PST ![]() |
| குடியரசு தின சிறப்பு டூடுல்கள் Posted: 26 Jan 2017 06:28 AM PST அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். குடியரசு தின சிறப்பு டூடுல்களின் தொகுப்பு 2017 2016 2015 2014 2013 2012 2010 நன்றி:கூகுள் |
| வட இந்திய சமையல்கள் - இராஜஸ்தானி கிச்சடி ! Posted: 26 Jan 2017 06:27 AM PST முதலில் பானி பூரி பூரி செய்ய தேவயானவை : 1 கப் மைதா 1/4 கப் உளுந்துமாவு 1 கப் மெல்லிய ரவை தேவையான உப்பு கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் ... |
| Posted: 26 Jan 2017 06:18 AM PST பெயர்: அருள்ராஜ் சொந்த ஊர்: கும்பகோணம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்:மின்னூல் தேடும் பொழுது பொழுதுபோக்கு: இணையத்தில் உலாவுதல் மற்றும் புத்தகம் படிப்பது தொழில்: ஆசிரியர் மேலும் என்னைப் பற்றி: |
| Posted: 26 Jan 2017 04:03 AM PST 1. நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும் பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து. 1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு. 2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது ... |
| மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம்: அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார் Posted: 26 Jan 2017 03:46 AM PST வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில், மெக்ஸிக்கோ,அமெரிக்க எல்லையில் ஒரு சுவர் கட்டுவதற்கான ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு சென்ற டிரம்ப் வேலைகளை தொடங்குவதற்கான கோப்புகளில் உத்தரவிட்டார். வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி தென் பகுதியில் மிகப்பெரிய சுவரை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் படி ... |
| அசோகசக்ரா விருது வழங்கினார் ஜனாதிபதி Posted: 26 Jan 2017 03:41 AM PST - புதுடில்லி: டில்லியில் நடந்த குடியரசுதின விழாவில் ராணுவத்திற்கான உயரிய விருதான அசோக சக்ரா அசாமை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மனைவியிடம் வழங்கப்பட்டது. அசாமை சேர்ந்த ஹவில்தார் ஹங்பான்தாதா என்ற வீரர் காஷ்மீரில் 2016 ல் 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்று தன்னுயிரையும் நீத்தார். அவரை கவுரவிக்கும் வகையில் 2017 ம் ஆண்டுக்கான அசோகசக்ரா விருது அறிவிக்கப்பட்டது. இன்று டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் அவரது மனைவி ஷாசன்லாவாங் தாதா, ஜனாதிபதியிடமிருந்து விருதை பெற்று கொண்டார். - தினமலர் |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(452) Posted: 26 Jan 2017 03:40 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 26 Jan 2017 03:39 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| தெய்வத்தின் குரல்: கண்ணனே அனைத்திற்கும் ஆதாரம் Posted: 26 Jan 2017 03:36 AM PST - ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக் கடந்திருக்கிறது என்றால், அதெப்படி என்று தோன்றுகிறது; குழப்பமாயிருக்கிறது. கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல தினுசாகக் குழப்பிக் குழப்பி, பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார். 'நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன' என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ... |
| ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் Posted: 26 Jan 2017 03:30 AM PST புதுடெல்லி, அரசுக்கு நோட்டீஸ் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது நடைபெற்ற தடியடி சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து, தமிழக அரசின் தலைமை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது:- சென்னையில் நடைபெற்ற தடியடி சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஆணையம் கவனமாக பார்த்ததில், எவ்வித தூண்டுதலும் இன்றி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது. போலீசார் ... |
| Posted: 26 Jan 2017 03:29 AM PST - சிறு உதவி செய்துவிட்டாலே செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு லைக்ஸை அள்ள துடிக்கிறது டிஜிட்டல் மனது. இச்சூழலில் கடந்த 32 வருடங்களாக சத்தமே இல்லாமல் பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்ந்து வருகிறார் 64 வயதான அலோக் சாகர். ஒல்லியான தேகம். சவரம் செய்யாத முகம். மேலாடை இன்றி காட்சியளிக்கும் அலோக் சாகர், தில்லி ஐஐடியில் முதுகலை பட்டமும், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். - 80களில் ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்த இவரிடம் பாடம் ... |
| தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Posted: 26 Jan 2017 03:24 AM PST ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவெண்காடு, திருவாரூர், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில், கருங்குளம், அகரம், பவானி கூடுதுறை, திருப்புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணபுரம் என்று பல தலங்கள் இருக்கின்றன. முன்னோர் ஆராதனைக்காக மட்டுமின்றி, தை அமாவாசையன்று விசேஷமாக தரிசிக்க வேண்டிய தலங்களும் உள்ளன. இப்படி, தை அமாவாசையில் முன்னோர் ஆராதனைக்கும், சிறப்பு வழிபாட்டுக்கும் உகந்த சில திருத்தலங்கள் குறித்து அறிந்து கொள்வோம். - - ராமேஸ்வரம் இந்தியாவில் ... |
| இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் Posted: 26 Jan 2017 03:01 AM PST - ![]() |
| 27.1.2017....தை அமாவாசை சிறப்புகள்....... Posted: 26 Jan 2017 01:12 AM PST தை அமாவாசை சிறப்புகள்....... ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும் தட்சணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்தராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் ... |
| ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள் Posted: 25 Jan 2017 09:13 PM PST - ஈஷா யோகாவின் சத்குரு ஜக்கி வாசுதேவ், மறைந்த பத்திரிகையாளர் 'சோ' ராமசாமி, பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடிமக்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய கவுரவமான பத்ம விருதுகளை புதன்கிழமை மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும் இந்த விருதுகளை மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவிப்பார். திரையிசையில் பல்லாண்டுகளாக கோலோச்சி வரும் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு, ... |
| கோட்டயம் புஷபநாதன் அவர்களின் கதைகள் வேண்டும் Posted: 25 Jan 2017 07:09 PM PST என்னுடைய ஈகரை நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் உங்களிடம் கோட்டயம் புஷபநாதன் அவர்களின் கதைகள் இருந்தால் தயவு செய்து தந்து உதவவும் மோகினி / மந்திரங்கள் சார்ந்த கதைகள் எனக்கு வேண்டும் நன்றி |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
.jpg)
.jpg)

.jpg)
