Tamil News | Online Tamil News |
- மாணவர் போராட்டத்தால் மிரண்ட அமெரிக்க நிறுவனங்கள்!:கள நிலவரம் அறிய ஆய்வாளர்கள் தமிழகம் வருகை
- குறுகிய கால பயிர் கடனுக்கான வட்டி தள்ளுபடி ரூ.660 கோடி!:மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
- ஜல்லிக்கட்டு அரசாணை: மத்திய அரசு 'வாபஸ்'
- தேன் எடுத்தது ஒருத்தர்: புறங்கையை நக்குறது ஒருத்தரா? : ஜல்லிக்கட்டிற்கு மல்லுகட்டிய மாணவர்கள் கொதிப்பு
- தீவிர அரசியலில் களமிறங்குகிறார் பிரியங்கா? : 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டம்
- ஜெ., பிறந்த நாளில் புதிய கட்சி; தீபா அணி ஆலோசனை
- இந்தியாவின் 'ரொக்கமில்லா புரட்சி' பாடம் கற்க அமெரிக்காவுக்கு அழைப்பு
- ஜல்லிக்கட்டு பொதுக்கூட்டம் பன்னீர் - ஸ்டாலின் பங்கேற்பு
- ஆளாளுக்கு பதவி கேட்டு சசியின் மன்னார்குடி சொந்தங்கள்... குடுமிப்பிடி!: சொத்து குவிப்பு வழக்கு பயம் காட்டி நாடகமாடும் உறவுகள்: ஆதிக்கம் செலுத்தும் தினகரனை வெளியேற்றும்படி நெருக்கடி
- ‛பினாகா' ராக்கெட் சோதனை வெற்றி
- ஜல்லிக்கட்டு: 'பீட்டா' தலைவி கமலுக்கு பதில்
- பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார் டிரம்ப்
- காவல்துறையில் 5.42 லட்சம் காலி பணியிடங்கள்: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி
- பள்ளி பாடத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை
| மாணவர் போராட்டத்தால் மிரண்ட அமெரிக்க நிறுவனங்கள்!:கள நிலவரம் அறிய ஆய்வாளர்கள் தமிழகம் வருகை Posted: 24 Jan 2017 08:48 AM PST கோவை:ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஆடிப்போனது மத்திய, மாநில அரசுகள் மட்டு மல்ல; அமெரிக்க நிறுவனங்களும் தான். குளிர்பான விற்பனையில், 25 சதவீதம் வரை சரிவு ஏற்பட என்ன காரணம் என ஆராய, கள ஆய்வாளர்களை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில், கல்லுாரி மாணவர்களால் துவக் கப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், 'பீட்டா' மீது பாய்ந்து, அமெரிக்க நிறுவன தயாரிப்பு பொருட்களுக்கு எதிரானதாக திசை மாறியது.'பீட்டா'வின் பூர்வீகம் அமெரிக்கா என்பதால், அந்த நாட்டு நிறுவனங்களின் தயா ரிப்புகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என, ... |
| குறுகிய கால பயிர் கடனுக்கான வட்டி தள்ளுபடி ரூ.660 கோடி!:மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் Posted: 24 Jan 2017 08:52 AM PST புதுடில்லி:குறுகிய கால பயிர்களுக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை, தள்ளுபடி செய்ய,மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, 660.50 கோடி ரூபாய் மதிப்பிலான,வட்டி தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. பல்வேறு முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவைக் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. விவசாயிகள், குறுகிய கால ... |
| ஜல்லிக்கட்டு அரசாணை: மத்திய அரசு 'வாபஸ்' Posted: 24 Jan 2017 08:55 AM PST புதுடில்லி:தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக, 2016, ஜன., 8ல் பிறப்பித்த அரசாணையை திரும்பப் பெறுவதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் போராட்டம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட், 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு , மனுக் களையும், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக, 2016, ஜன., 8ல், மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்டவழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ... |
| Posted: 24 Jan 2017 08:55 AM PST தஞ்சாவூர்: 'ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியது சசிகலா தான்' என்கிற விதத்தில், தஞ்சாவூர் பகுதிகளில் ஒட்டப் பட்டுள்ள போஸ்டர் மாணவர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டை நடத்த நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும்' என வலியுறுத்தி, கல்லுாரி மாணவ - மாணவியர், தமிழகம் முழுவதும், ஒரு வாரமாக போராட்டம் நடத்தினர். அனைத்து தரப் பினரும், பாராட்டியதோடு, அரசியல்கட்சிகளையும், வாய்ப்பந்தல் போடும் அரசியல்வாதிகளையும் கதி கலங்கச்செய்தனர்.இதையடுத்து அவசர சட்டம் சட்டசபையில் ஏகமனதாக ... |
| தீவிர அரசியலில் களமிறங்குகிறார் பிரியங்கா? : 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டம் Posted: 24 Jan 2017 09:04 AM PST புதுடில்லி: உ.பி.,யில், காங்., - சமாஜ்வாதி இடையே, கூட்டணி அமைப்பதில், சூத்திரதாரி யாக செயல்பட்ட, காங்., தலைவர் சோனியா வின் மகள் பிரியங்கா, விரைவில், நேரடி அரசியலில் ஈடுபட உள்ளார். 2019 லோக்சபா தேர்தலில், சோனியாவின் ரேபரேலி தொகுதி யில், அவர் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சமாஜ்வாதியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கும், உ.பி.,யில், பிப்., முதல் மார்ச் வரை, ஏழு கட்டங்களாக, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.மாநிலத்தில்,ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில், சமாஜ்வாதியும், பா.ஜ.,வை தோற்கடிப்பதோடு, கணிசமான ... |
| ஜெ., பிறந்த நாளில் புதிய கட்சி; தீபா அணி ஆலோசனை Posted: 24 Jan 2017 09:06 AM PST தீபா ஆதரவாளர்களின் ரகசிய கூட்டம், சென்னை, அயனாவரத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாளன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் கட்சி துவங்குவது என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அன்று, ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா, தீவிர அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். தன் அரசியல் பயணம் குறித்த, அடுத்தகட்ட நடவடிக்கையை, ஜெ., வின் பிறந்த நாளான, அடுத்த மாதம், 24ல் அறிவிப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், தீபா ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்துள்ளது. இக்கூட்டத் தில், ... |
| இந்தியாவின் 'ரொக்கமில்லா புரட்சி' பாடம் கற்க அமெரிக்காவுக்கு அழைப்பு Posted: 24 Jan 2017 09:12 AM PST வாஷிங்டன்:''ரொக்கமில்லா சமூகத்துக்கு மாறுவதில், இந்தியா மேற்கொண்டு வரும் புதிய நவீன தொழில்நுட்ப முயற்சிகள் குறித்து அமெரிக்கா பாடம் கற்க வேண்டும்,'' என, அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிபுணர் விவேக் வாத்வா கூறியுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில், பிரபல தொழில் நுட்பத் துறை பேராசிரியரும், நிபுணரான, விவேக் வாத்வா, 'ரொக்கமில்லா சமூகத்தை நோக்கி முன்னேறும் இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா என்ன கற்றுக் கொள்ள வேண்டும்' என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ரொக்கமில்லா சமூகத்தை ... |
| ஜல்லிக்கட்டு பொதுக்கூட்டம் பன்னீர் - ஸ்டாலின் பங்கேற்பு Posted: 24 Jan 2017 09:18 AM PST கோவையில், இன்று நடைபெறவுள்ள, வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில், சென்னை யில் நடந்த வன்முறை சம்பவங்களை மையப் படுத்தி பேச, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அவரது பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், தென் சென்னையில், இன்று நடைபெறும், அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், முதல்வர் பன்னீர்செல்வம் பேச முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில், வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள், இன்று நடக்கின்றன. தி.மு.க., சார்பில்செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக் கூட்டம், கோவையில் நடக்கிறது. அதில், ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக நடந்த, மாணவர் போராட்டத்தில் ... |
| Posted: 24 Jan 2017 09:26 AM PST ஆட்சியிலும் கட்சியிலும் ஆளாளுக்கு பதவி கேட்டு மன்னார்குடியை சேர்ந்த சசிகலாவின் சொந்தங்கள் குடுமிப்பிடி சண்டை போடும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து, சசிகலாவுக்கு பயம் காட்டி நாடகமாடும் உறவுகள், போயஸ் தோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் தினகரனை வெளியேற்றும்படியும், நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆளும் கட்சி யான, அ.தி.மு.க.,வின் முழு கட்டுப்பாடும், சசிகலா கைக்கு வந்து விட்டது. முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தாலும், சசிகலா சொல் படி செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தான் ... |
| ‛பினாகா' ராக்கெட் சோதனை வெற்றி Posted: 24 Jan 2017 10:21 AM PST
பாலாசோர்: ராணுவ பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும், அதிநவீன, 'பினாகா ராக்கெட் மார்க் 2' வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. வெற்றி: ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள, சண்டிபூர் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, அதிநவீன, 'பினாகா ராக்கெட் மார்க் 2' நேற்று(24-01-17) பிற்பகல், 12:45க்கு, சோதனை முறையில் ஏவப்பட்டது. ராணுவ பயன்பாட்டில், எதிரியின் இலக்கை துல்லியமாக கணிப்பது, இலக்கை மாற்றுவது உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளில் இவ்வகை ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும். வாழ்த்து: இந்த நிகழ்ச்சியில், ராணுவ உயர் ... |
| ஜல்லிக்கட்டு: 'பீட்டா' தலைவி கமலுக்கு பதில் Posted: 24 Jan 2017 11:31 AM PST
சென்னை : ஜல்லிக்கட்டு விவகாரத்தில், பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி, பூர்வா ஜோஷிபுரா நடிகர் கமலுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: இங்கு, ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதை விடுத்து, அமெரிக்காவில் காளைகள் மீது அமர்ந்து நடைபெறும், 'புல் ரைடிங்' போன்ற விளையாட்டுகளை தடை செய்ய, பீட்டா முயற்சிக்க வேண்டும் என, கமல் கூறியுள்ளார். 'பீட்டா இந்தியா' என்பது, இந்தியாவை மையமாக கொண்ட அமைப்பு. இந்திய விலங்குகள் வதைபடுவதை தடுப்பதே, இதன் குறிக்கோள். 'பீட்டா யு.எஸ்.,' அமைப்பு, அதற்காக, அமெரிக்காவில் போராடி வருகிறது. கமல் கூறிய ... |
| பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார் டிரம்ப் Posted: 24 Jan 2017 12:08 PM PST
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். இதனை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி படுத்தின. அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்காவது நாளான நேற்று(ஜன., 24) இரவு இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க நேரப்படி பிற்பகல் 1 மணியளவில், இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச இருப்பதாக ... |
| காவல்துறையில் 5.42 லட்சம் காலி பணியிடங்கள்: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி Posted: 24 Jan 2017 01:55 PM PST புதுடில்லி: 'காவல் துறையில், அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. 'காவல் துறையில் காலியிடங்கள் அதிகமாக இருப்பதால் தான், நாட்டில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படுகிறது; நாடு முழுவதும், காலியாக உள்ள, 5.42 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்ற, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த ... |
| பள்ளி பாடத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை Posted: 24 Jan 2017 03:07 PM PST அஜ்மீர்: ராஜஸ்தான் மாநில பள்ளிப் பாடத் திட்டத்தில், ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை குறித்த பாடங்களை சேர்க்க, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில், ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்த பாடத்தை சேர்க்க, ராஜஸ்தான் பள்ளிக் கல்வித் துறையின் தலைவர், பி.எல்.சவுத்ரி அனுமதி அளித்துள்ளார். இதுகுறித்து கல்வித் துறை நிபுணர் ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின், 500 - 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 25,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |