ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சந்திரா என்றான சந்திரசேகர்!
- அரிய புத்தகங்கள்
- பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கி முற்றுகை
- பாலங்கள் அற்ற நதி!
- நொடியை வேண்டுகிறேன்
- வேற்றுக்கிரகவாசி போல பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட மறுத்த தாய்............
- என்னுடைய பெயர் ஹரிபிரியா !
- எவ்வாறு சமாளித்திருப்பார் ?
- வெந்துத் தணிந்தது சென்னை
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- நகைச்சுவைப்போம்
- நான் பார்த்த என் மழலைப்பருவம்
- நூல்கள் தேவையா !!!!!
- 10 விநாடியில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு வீடியோ
- நான் பிடித்த முயலுக்கு....
- சூபி கதைகள்
- வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
- சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
- ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
- நாடென்றால்………திருக்குறள்.
- மாணவர்கள் மீது தாக்குதல்: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு
- பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி:
- தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி
| Posted: 24 Jan 2017 11:55 AM PST - அந்த மூன்று சகோதரர்கள் மோகனூரிலிருந்து மூன்று கி. மீ. தினமும் நாமக்கல் நடந்து சென்று தமிழ் வழி பள்ளிக் கல்வி படித்து வந்தனர். முப்பது ஆண்டுகளுக்கு முன் அந்த சகோதரர்கள் சென்னையில் ஓர் அப்பார்ட்மெண்ட்டில் ஒன்றாகக் குடியிருந்து வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களிடத்தில் இருந்தது ஒரே ஒரு ஸ்கூட்டர் மட்டும்தான். இப்போது அந்த சகோதரர்களில், கடைசி சகோதரரான நடராஜன் சந்திரசேகரன் டாட்டா குழுமத்தின் தலைவராக சென்ற வாரம் பொறுப்பேற்றுள்ளார். கல்லூரி படிப்பு முடித்தவுடன், அப்பா சொன்னதன் ... |
| Posted: 24 Jan 2017 11:48 AM PST இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும் என்றும் அன்புடன் ஜெ.செந்தில்குமார் |
| பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கி முற்றுகை Posted: 24 Jan 2017 11:40 AM PST சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். பழைய ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதி வரை மாற்றலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் என்.ஆர்.ஐ. மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு பலகையில் ஒட்டியிருப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அறிவித்தபடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - -------------------------- தினகரன் |
| Posted: 24 Jan 2017 10:10 AM PST -- இரண்டு நாளுக்கு ஒருமுறை பிரேமா பேசுவாள். அவரது மருமகள். அப்புறம் போனை வாங்கி மகன் ரமணன் பேசுவான். அவருக்கு பிரேமாவுடன் பேசப் பிடிக்கும். "வேற ஒண்ணும் விசேஷம் இல்லியேம்மா?'' என அவர் கேட்பார். "இல்ல மாமா. இதோ இவர்கிட்ட குடுக்கறேன்'' என்றபடி ரமணனிடம் பிரேமா போனைத் தருவாள். சூட்சுமமான பெண்தான். நர்மதா இறந்தபோது திரும்ப ஒரு தனிமை அவரை அப்பியது. கொஞ்சம் பக்தி சிரத்தையான ஆள் அவர். நெற்றியில் திருநீறு இல்லாமல் அவரைப் பார்க்க முடியாது. காலை தினசரி குளித்து விட்டு சந்தியாவந்தனம் ... |
| Posted: 24 Jan 2017 10:06 AM PST – உன்னால் என்னை உணர்ந்து கொள்ள முடிந்த இந்த நொடி என் நினைவுகளை சிறைப்பிடிக்க நீ கற்றுக்கொண்ட இந்த நொடி – உன் வழிகளை மறைத்து நிற்காத என்னை நீ புரிந்து கொண்ட இந்த நொடி – என் உணர்வுகளைத் தூக்கி ஓடைக்குள் போட்டு சிரித்து நின்ற இந்த நொடி – என் நிமிடங்களை நாட்களாக நான் கடத்தியதிலிருந்து விடுதலை தந்த இந்த நொடி – வகை தொகையில்லாமல் காத்திருப்பில் என் மணித்துளிகளை உறிஞ்சி சிரிக்கும் இந்த நொடி – காலம் முழுதும் தொடரத்தான் வேண்டிக் கொள்கிறேன் தெய்வீக சுகமளிக்கும் இந்த நொடியை – ————————————– கமலி ... |
| வேற்றுக்கிரகவாசி போல பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட மறுத்த தாய்............ Posted: 24 Jan 2017 09:58 AM PST பீஹார் மாநிலத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில் விநோதக் குழந்தை பிறந்ததை அடுத்து, அக்குழந்தைக்கு அவரது தாய்ப்பால் கொடுக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலத்தின் பாட்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 28 வயது பெண் ஒருவருக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது. ஆனால், அந்த குழந்தை சத்துக்குறைபாடு காரணமாக விநோதமாகக் காணப்பட்டது. இதனால், அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட, அவரது தாய் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ஒரு மணி நேர்த்திற்குள் ... |
| Posted: 24 Jan 2017 09:50 AM PST என்னுடைய பெயர் ஹரிபிரியா அனைவருக்கும் வணக்கம் சுயதொழில் செய்து வருகிறேன். பிரின்டிங் தொழில் செய்து வருகிறேன் நண்பர்கள் ரகசியம் புத்தகம் தரவிறக்கம் செய்ய லிங்க் அனுப்பும்படி கேட்டு கொள்கிறேன் நன்றி |
| Posted: 24 Jan 2017 09:45 AM PST முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் , நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் ? ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிறைவேறி இருக்குமா ? போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறை நிகழ்வுகளை நடக்கவிட்டிருப்பாரா ? ஈகரை அன்பர்கள் ஆரோக்கியமாக அலசவும் ! |
| Posted: 24 Jan 2017 09:41 AM PST வெந்துத் தணிந்தது சென்னை எத்தனை தமிழ் சினிமா பார்த்திருக்கிறோம் , போலீஸ் வந்து விட்டாலே படம் முடியப்போகிறது என்று அர்த்தம் தாஹிர் மைதானம் போலவே மரினாவும் உலக வரலாற்றில் இடம் பெறும் இந்த ஒருங்கிணைப்பு மிகப்பெரிய செய்தியை விட்டுச் சென்றிருக்கிறது , வெற்றிடம் வெற்றிடம் என்று கூறிவந்தார்கள் , இனிமேல் அந்த வெற்றிடம் இங்கே இல்லை எழுச்சி பெற்ற இளைய சமுதாயம் அதை இட்டு நிரப்பி விட்டது ! தலை நிமிர்த்து நில் தமிழா ! அண்ணாமலை சுகுமாரன் 24/1/17 |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 24 Jan 2017 09:39 AM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 24 Jan 2017 09:24 AM PST நகைச்சுவை ப்போம் @marina: "ops ஒழிக! மோடி ஒழிக! peta ஒழிக! பங்கஜம் ஒழிக! பெப்சி ஒழிக!" "யோவ்!எல்லாம் ok. நடுல அது யாரு பங்கஜம்?" "என் wife சார், கண்டுக்காதீங்க" ------------------------------------------------------------------------------------------------------------------ ஆஹா வந்துட்டான்டல என் சிங்கம் ...வாயா பன்னீரு ஜல்லிக்கட்டு உரிமை வாங்கிட்டியாயா .??!!!!!!!!!!!! . . .அட போங்கடா நானும் டெல்லில எல்லா மார்கெட்டும் போயி பாத்தேன். கீரைக்கட்டு இருக்குங்றான்..புல்லுக்கட்டு ... |
| Posted: 24 Jan 2017 09:23 AM PST பொம்மைகள் அலுக்கத் தொடங்கிய போது அவரே பொம்மையாகி முதுகில் ஏற்றிக்கொண்டு சவாரிப் போகிறார் – இரண்டாவது தோசையையும் பிசைந்து கூழாக்கி ஒதுக்கியதை அமுதென்று அருந்துகிறார் – பெருமூச்சு வாங்கியபடி மூன்று சக்கர குட்டி சைக்கிளை பின்னாலிருந்து தள்ளிக்கொண்டு ஓடுகிறார் – கூர்ந்து கவனித்தால் உங்களுக்குப் புரியும் நான் அறியாத என் குழந்தைப் பருவத்தை எனக்கே என் மகன் மூலம் காட்டிக்கொண்டு சென்றார் என் அப்பா! – ——————————— நா.கோகிலன் கல்கி |
| Posted: 24 Jan 2017 09:19 AM PST நண்பர்களே கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன. எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன். இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில். நன்றி கி.ஸ்ரீநிவாசன் |
| 10 விநாடியில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு வீடியோ Posted: 24 Jan 2017 09:19 AM PST பெய்ஜிங்: சீனாவில் ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் 15 ஹெக்டேர் பரப்பளவில் உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இருந்து வந்த பழமையான 707 மீட்டர் உயரம் கொண்ட 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் 10 விநாடிகளில் இடிந்து தரைமட்ட மாயின. - தினமணி |
| Posted: 24 Jan 2017 08:59 AM PST நிலைமை சற்று கவலைக்கிடம்தான் ! நாலு வைத்தியரும் இனிமேல் நம்புதற்கு இல்லையென்றார் . பாலத்து ஜோசியனும் கிரகம் படுத்தும் என்று சொன்னான் . நாடி வைத்தியரோ நாட்கள் ஐம்பது சென்றால் நல்லது நடக்கும் என்றார் ஆனால் சிதம்பரத்துப் பட்சி ஜோசியரோ ஐம்பது நாட்கள் அல்ல ; ஐந்து மாதங்கள் ஆனாலும் தேறுவது கடினம் என்கிறார் . பஞ்சாப்பின் மௌனகுருவோ அழிவின் தொடக்கம் ஆரம்பமாகிவிட்டது என்கிறார் . தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள் ; ஆனால் அந்த தெய்வத்திற்கு வேலை வைக்காமல் நின்று நின்றே மக்கள் ... |
| Posted: 24 Jan 2017 08:07 AM PST பணம். ஒரு சூபி ஞானிக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பதற்காக செல்வந்தர் ஒருவர் வந்தார். ஆனால் ஞானி அதை வாங்கிக் கொள்ளவில்லை. அவர் சொன்னார். " எனக்கு உங்கள் பணம் தேவையில்லை. என்னிடம் ஒரே ஒரு நாணயம் இருக்கிறது ". செல்வந்தர் சொன்னார். " அந்த ஒரு நாணயம் உங்களுக்கு எத்தனை நாளைக்கு வரும். அது மிகவும் அற்பமான தொகை ". ஞானி பதில் சொன்னார். " என்னிடம் இருக்கும் இந்த ஒரு நாணயம் தீரும்வரை நான் உயிருடன் இருப்பேன் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? அப்படி உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் கொடுக்கும் ... |
| வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு! Posted: 24 Jan 2017 04:34 AM PST ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராடிய இளைஞர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். அவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். - சென்னையில் நேற்று போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுப்பட்ட போலீசார் மீது வழக்க்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் சென்னையின் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ... |
| சென்னை ஆணையர் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் Posted: 24 Jan 2017 01:31 AM PST சென்னை: தமிழர் பண்பாட்டுக்காக போராடியவர்களை தேசவிரோதிகள் என்று காவல் ஆணையர் கூறியுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் பேச்சை வன்மையாக கண்டிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தின் உன்னத நோக்கத்தை திசை திருப்பும் செயலில் காவல் ஆணையர் ஜார்ஜ் ஈடுப்பட்டுள்ளார் என்று ஸ்டாலின் கூறியுயள்ளார். தினகரன் |
| ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம் Posted: 23 Jan 2017 11:54 PM PST இன்று காலை நிலவரப்படி பார்த்தால், தற்போது 400 இளைஞர்கள் மெரினாவில் குழுமியுள்ளனர். அவர்களை அகற்றும் பணியில் தற்போது போலீசார் இறங்கியுள்ளனர். இந்த 400 பேரின் கோரிக்கை என்னவென்றால் நிரந்தர சட்டத்திற்கான நகல் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது, அது அரசாணையாக வெளியிடப்பட்டிருக்கிற விசயம் நகலாக கையில் கிடைக்க வேண்டும் என்பதும், அந்த நகலை நாங்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு அதற்கான ஒப்புதல் அளிக்கக்கூடிய அத்தாட்சியும் நாங்கள் ... |
| Posted: 23 Jan 2017 06:14 PM PST நாடென்றால்…………………… திருக்குறள். ![]() |
| மாணவர்கள் மீது தாக்குதல்: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு Posted: 23 Jan 2017 06:11 PM PST ஜல்லிக்கட்டு பிரச்னைக்காக போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவின் விவரம்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மாணவர்களும், இளைஞர்களும் அறவழிப் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக, சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் போராடிய இளைஞர்களைக் கலைக்க காவல் துறையினர் ... |
| பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி: Posted: 23 Jan 2017 06:06 PM PST - பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு கொண்டுவந்த மது விலக்கு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று 11,292 கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி அமைக்கப்பட்டது. இதில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்றனர். வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில், பிற்பகல் 12.15 மணிக்கு வண்ணமயமான பலூன்களை பறக்கவிட்டு மனித சங்கிலியை தொடங்கி வைத்தார் முதல்வர் நிதிஷ் குமார். அப்போது, நிதிஷுடன் ஒரு பக்கம் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும் மறு பக்கத்தில் சட்டப்பேரவை ... |
| தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி Posted: 23 Jan 2017 06:01 PM PST - பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்னாள் பாஜக எம்பி தருண் விஜய் உட்பட தமிழ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் - -------------------------------- பெங்களூருவில் நடைபெற்ற திருவள்ளுவர் தின தமிழர்- கன்னடர் ஒற்றுமை பேரணியில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பாக கடந்த 1991-ம் ஆண்டு அல்சூர் ஏரி அருகே திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
