Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முதன்முறையாக ஜெ., இல்லாமல் நாளை சட்டசபை...கூட்டம்!:பன்னீர் சொல்லுக்கு கட்டுப்படுமா ஆளுங்கட்சி?

Posted: 21 Jan 2017 06:07 AM PST

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலில், சட்டசபை கூட்டம், நாளை துவங்குகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கூடும் இந்த கூட்டத்திற்கு, அ.தி.மு.க., சசிகலாவின் அதிருப்தியாளர் என கருதப்படும், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கப் போவதால், ஆளுங்கட்சி இவருக்கு கட்டுப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், முதன்முறையாக, நாளை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடரில், சட்டசபை குழுக்கள் அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், குழுக் கள் அமைக்கப்படவில்லை. சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின், ...

முதல்வருக்கு முட்டுக்கட்டை போடும் சசி குடும்பம்! அரசு விழா ரத்து; அதிகாரிகள் அதிர்ச்சி

Posted: 21 Jan 2017 06:20 AM PST

சசிகலா குடும்பத்தினர் உத்தரவு காரணமாக, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கவிருந்த, அரசு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இது, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பிறகு, தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை முதல்வராக பணியாற்றியவர் என்பதால், அவர் முதல்வரானதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு எதிர்ப்பு ...

வணிக சந்தைக்குள் நுழைகிறது ஜல்லிக்கட்டு : 'பீட்டா'வுக்கு 'டாட்டா' காட்டும் பிரபலங்கள்

Posted: 21 Jan 2017 07:28 AM PST

ஜல்லிக்கட்டு போராட்டத்தால், வணிக நிறு வனங்கள், தங்கள் பார்வையை அதன் பக்கம் திருப்ப துவங்கியுள்ளன. 'பீட்டா' உறுப்பினர் களாக வலம் வந்த பிரபலங்களும், மாற துவங்கியுள்ளனர்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த, விலங்குகள் நல ஆர்வலர்கள் என, கூறிக்கொள்ளும், 'பீட்டா' போன்ற அமைப்புகளின் வழக்கால் தடை ஏற் பட்டது. அந்த அமைப்பு, ஜல்லிக்கட்டு குறித்த தவறான தகவல்களை, மத்திய அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் தெரிவித்து, தடை பெற்ற தாக, தமிழக மக்கள் கருதுகின்றனர். இதையடுத்து, 'பாரம்பரிய உரிமையை மீட்டு எடுக்க வேண்டும்' எனக் கூறி, ...

நாட்டையே உலுக்கிய போராட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தாக்கம் ஏற்படுத்துமா?

Posted: 21 Jan 2017 07:29 AM PST

நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ள, தமிழக போராட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய அளவில், 'நிர்பயா' விவகாரம் ஏற்படுத் திய, அதே தாக்கத்தை, ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக, தமிழகத்தில் இளைஞர்களின் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. தமிழக வரலாற்றில், விடுதலை போராட்டத் துக்கு பின், இத்தகைய எழுச்சி இருந்ததில்லை. கடந்த, 1960களில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத் தில், தமிழகத்தில் பெரும் எழுச்சி இருந்தது உண்மை. அதன் பின்னணியில், அரசியல் கட்சிகள் இருந்தன. ஆனால், தற்போது நடந்து வரும் இளைஞர்களின் ...

அமெரிக்காவின் புதிய அதிபர் பேச்சால் உலக நாடுகள்... அச்சம்! டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jan 2017 08:29 AM PST

வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், 70, பதவியேற்ற பின், பேசிய முதல் பேச்சு, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது;ஜப்பான், தென் கொரிய நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன. அதிபராக டிரம்ப் பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க அதிபராக இருந்த, ஒபாமாவின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், 2016, நவம்பரில் நடந்தது. இதில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட, தொழில் அதிபர் டொனால்டு ...

மெரினா போராட்டத்திற்கு வித்திட்டது தி.மு.க., : ஸ்டாலின்

Posted: 21 Jan 2017 09:18 AM PST

சென்னை:''தி.மு.க., நடத்திய அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னரே, மாணவர்களின் போராட்டம் வெடித்தது,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி, தி.மு.க., சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதில், ஸ்டாலின் பேசியதாவது:சுதந்திர போராட்டம், தொழிலாளர் போராட்டங் களை போல, மாணவர்களின் போராட்டம், 'மெரினா புரட்சி' என்ற பெயரில், வரலாற்றில் இடம் பிடித் துள்ளது. ஜன., 3ல், தி.மு.க., சார்பில், மதுரை, அலங்காநல்லுாரில், ஜல்லிக்கட்டுக்காக ஆர்ப்பாட் டம் நடந்தது. அதன்பின், மாணவர்கள் ...

புது கட்சி துவங்காவிட்டால்... தீபாவுக்கு ஆதரவாளர்கள் கெடு

Posted: 21 Jan 2017 09:22 AM PST

வேலுார்:'உடனடியாக தனிக் கட்சியை துவங்கா விட்டால், வேறு அணிக்கு சென்று விடுவோம்' என, தீபாவுக்கு, அவரின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, வேலுார் மாவட்டத்தில், அதிகளவு ஆதரவு உள்ளது. ஆம்பூரில் துவங்கப்பட்டுள்ள தீபா பேரவையில், இதுவரை, இரண்டு லட்சம் பேர் உறுப்பினர் களாக சேர்ந்துள்ளனர். கடந்த, 17ல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், தீபா தனிக் கட்சி துவங்குவார் என, அவரது தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தனிக் கட்சி துவங்காத தால் ஏமாற்றம் அடைந்தனர்.தீபா பேனர் வைத்தவிவகாரத்தில், தீபா பேரவை நிர்வாகிகள் ...

மோடி பெயரை 'டேமேஜ்' செய்த அதிகார மையம் கண்ணீருடன் ஆதாரம் கொடுத்த முதல்வர் பன்னீர்

Posted: 21 Jan 2017 09:26 AM PST

ஜல்லிக்கட்டு தொடர்பாக, டில்லி சென்றிருந்த முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமரின் பெயரை கெடுக்க, தமிழகத்தில் நடந்த சதித்திட்டங்கள் குறித்த ஆதாரங்களை மோடியிடம் கொடுத்துள்ளார்.

அதனால், தமிழக அரசில் அதிகார மையங் களாக செயல்படும், சிலர் மீது, அடுத்த சில நாட்களில் நடவடிக்கை பாயலாம் என, எதிர் பார்க்கப்படுகிறது.ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்க வலியுறுத்தி, சென்னை, மெரினா உட்பட, மாநிலத்தின் பல பகுதி களிலும் போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில், டில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, ...

ஜல்லிக்கட்டு தொடர்பான கவர்னரின் அவசர சட்டத்தை... 'ஏற்க மாட்டோம்!': நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட மாணவர்கள் முடிவு

Posted: 21 Jan 2017 09:40 AM PST

'ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி, தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, போராட்டத்தை தொடர்வோம்' என, போராட்ட களத்தில் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, 2014 மே, 7ம் தேதி, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, உரிய நடவடிக்கை எடுக்காமல், அரசியல் கட்சிகள், ஜல்லிக்கட்டை வைத்து, அரசியல் செய்யத் துவங்கின. அதனால், இரண்டு ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு தடை நீங்கி விடும் என்ற நம்பிக்கையில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ...

அலங்காநல்லூர்:காளைகளை கொண்டு வர கிராம மக்கள் அனுமதி மறுப்பு

Posted: 21 Jan 2017 10:42 AM PST

அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் காளைகளை கொண்டு வர கிராம மக்கள் அனுமதி மறுத்துள்ளனர்.அலங்காநல்லுாரில் இன்று (22-01-17)ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
‛ஜல்லிக்கட்டுக்காக அவரச சட்டம் என்பது ஏமாற்று வேலை, நிரந்தர சட்டம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டத்தை தொடர்வோம்' என கூறி அலங்காநல்லுாரில் போராட்டம் தொடர்கிறது. வாடிவாசல் பகுதியில் ஏற்பாடுகளை செய்ய வந்த அரசு ஊழியர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்குழுவினர் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியும் ...

ஜல்லிக்கட்டு தடைக்கு நான் காரணமல்ல: ராதா ராஜன்

Posted: 21 Jan 2017 11:38 AM PST

சென்னை: ''உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கும், எனக்கும் சம்பந்தமில்லை,'' என, பிராணிகள் நல ஆர்வலர் ராதா ராஜன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:நான், 24 ஆண்டுகளாக, பிராணிகள் நல அக்கறையில் ஈடுபட்டு வருகிறேன். 2008ல் இருந்து, 2014 வரை, ஜல்லிக்கட்டு போட்டியால், 43 இளைஞர்கள், நான்கு காளைகள் உயிர் இழந்துள்ளன. 5,000 பேர் காயம் அடைந்த நிலையில், 3,000 பேர் படுகாயமடைந்து உள்ளனர். மத்திய அரசு, 2011ல், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்தது. அதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ...

அலங்காநல்லூரில் கொட்டும் மழையால் ஏற்பாடுகள் தொய்வு

Posted: 21 Jan 2017 12:18 PM PST

மதுரை: அலங்காநல்லுாரில் மழை பெய்து வருவதாலும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பாலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.முன்னதாக, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:மக்கள் விரும்பும் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த தயாராக இருக்கிறோம். மாவட்ட நிர்வாகத்தின் விதிகளின் படி நடத்தப்படும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம கமிட்டியினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி, தேவையான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் ...

ஒடிசா மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து 12 பேர் பலி

Posted: 21 Jan 2017 01:25 PM PST

புவனேஷ்வர்: ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஓடிசா மாநிலம் ராஜகாடா அருகே ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் குலேரி ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் இது வரை 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜகாடா ரயில் நிலையத்தில் இருந்து மீ்ட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர். மொத்த சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™