Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !

Posted: 21 Jan 2017 11:27 AM PST



இடுக்கண் வருங்கால் நகுக…………..மற்றவர் துன்பம் கண்டு சிரிப்பதல்ல,நம் துன்பம் மறக்க சிரிப்பது…….



பேராசிரியர் சண்முகவடிவேலுவின் அனுபவங்கள்.

நாடென்றால்………திருக்குறள்.

Posted: 21 Jan 2017 11:20 AM PST

நாடென்றால்…………………… திருக்குறள்.



சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ் எங்கம்மா? ஜல்லிக்கட்டில் கலாய்த்த பெண்.

Posted: 21 Jan 2017 11:08 AM PST

சின்னம்மா சின்னம்மா OPS எங்கம்மா?
வரசொல் வரசொல் OPS வரசொல்...

அடடடா – ஒரு கதை

Posted: 21 Jan 2017 06:51 AM PST

அப்படியா – ஒரு பக்கதை

Posted: 21 Jan 2017 06:07 AM PST

வாயில் இனிப்பு தடவும் அரசியல்வாதி…!

Posted: 21 Jan 2017 06:05 AM PST

திடீர் வெளிச்சம் சேரிகள் ஜொலிக்கின்றன தேர்தல்… – ———————— – நீரோடையில் முகம் பார்க்கும் நிலவு இரசிக்கும் இலைகள்… – ————————– – குருட்டு மக்கள் தரும் கொள்ளை லாபம் வாக்குகள்… – ———————— – வயிறு நிரப்ப மனமிலாதவன் வாயில் இனிப்பு தடவுவான் அரசியல்வாதி… – ————————– – கவர்ச்சி விளம்பரம் கடைகளில் கூட்டம் நடிகைகள் தயவு… – ———————— – துள்ளும் பிற மொழிகள் தூக்கத்தில் தமிழன் துக்கத்தில் தமிழ் – —————————- கவிஞர் சுடர் வருடும் முள் – தொகுப்பிலிருந்து

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நான் நேரில் தொடங்கி வைப்பேன்: முதல்வர் அறிவித்தார்

Posted: 21 Jan 2017 06:02 AM PST

சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நாளை காலை நான் நேரில் தொடங்கி வைப்பேன் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதனால், அலங்காநல்லூரிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் நாளையே (22.1.2017) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வை நாளை காலை 10 மணிக்கு நான் நேரில் தொடங்கி வைப்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ...

ஜெர்ஸி வகை காளைகள் இறக்குமதியின் நோக்கம்...

Posted: 21 Jan 2017 06:00 AM PST

டென்மார்க் நாட்டிலிருந்து 60 ஜெர்ஸி வகை காளைகள் தனிவிமானம் மூலமாக சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது . மேலும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் NDDB என்ற புராஜக்ட் நடந்துவருகிறது. இதன் நோக்கம்:- டென்மார்க்கிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள காளைகளின் விந்தணுக்கள் நமது நாட்டு மாடுகளுக்கு செலுத்தப்பட்டு அதன் மூலம் A1 என்ற வகை பால் பெறப்படவுள்ளது. இந்த பாலின் விபரீதம்:- இந்த A1 ரக பாலை தொடர்ந்து பருகிவந்தால் புற்றுநோய் விரைவில் தமிழகத்தில் பரவும் இதனால் என்ன பயன்? தற்போது சென்னை ...

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Posted: 21 Jan 2017 05:57 AM PST

அலங்காநல்லூர்: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு நடத்தும் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். நிரந்தர அனுமதி கிடைத்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அலங்காநல்லூர் மக்கள் முடிவு செய்துள்ளனர். மக்களின் அறிவிப்பால் நாளை ஜல்லிக்கட்டு நடக்குமா, இல்லையா என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. - ------------------------------------- தினகரன்

உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை: மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி

Posted: 21 Jan 2017 05:24 AM PST

--பிரியங்கா | கோப்புப் படம் ------------------------- உ.பி.யில் சுமார் 40 ஆண்டுகள் இருந்த தமது ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் களம் இறங்கியது. இக்கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், "உ.பி.யில் பிரியங்காவால் மட்டுமே காங்கிரஸை காப்பாற்ற முடியும்" என்று கூறியிருந்தார். பிரியங்காவை முதல்வர் வேட் பாளராக முன்னிறுத்தவும் அவர் ஆலோசனை அளித்திருந்தார். இதை கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை. என்றா லும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பிரியங்கா முதல்முறையாக தீவிரப் ...

குரங்கு – சிறுகதை

Posted: 21 Jan 2017 05:24 AM PST

ஒரு அரசன் தன் நந்தவனத்தில் ஒரு குரங்கு வளர்த்தார். அதற்கு நாள்தோறும் பழம் காய் போன்ற உணவினை ஊட்டி விடுவார். அதனுடன் சற்றுநேரம் விளையாடுவார், பின்னர் ஒரு குச்சியால் அதன் தலையில் மெல்ல இரண்டு அடி அடிப்பார். குரங்கு ஓடிச் சென்று அதன் இடத்தில் அமர்ந்து கொள்ளும். இதனை நாள்தோறும் மன்னரின் அமைச்சரும் வேடிக்கைப் பார்த்து கொண்டு இருப்பார். ஒருநாள் மந்திரி அரசரிடம் அரசை நீங்கள் நாள்தோறும் குரங்கிற்கு உணவு தருகின்றீர் அதனுடன் விளையாடுகின்றீர் ஆனால் அதனை குச்சியால் அடிக்கின்றீரே அவ்வாறு செய்யாமல் ...

சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்!

Posted: 21 Jan 2017 04:24 AM PST

சூர்யா, தன்னுடைய சிங்கம் 3 படம் வெளிவருகிற சமயத்தில் இந்தப் பிரச்னை குறித்துப் பேசி விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று பீட்டா நிறுவனம் விமரிசனம் செய்தது. இதையடுத்து பீட்டா அமைப்புக்கு சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரம் மற்றும் அலங்காநல்லூர் போராட்டம் குறித்து சில நாள்களுக்கு முன்பு சூர்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், ...

காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை நீக்கம்

Posted: 21 Jan 2017 04:19 AM PST

சென்னை: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம் மூலமாக காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் அடுத்த 6 மாத காலத்துக்கு அமலில் இருக்கும். ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த இதுவரை இருந்த தடை இந்த அவசரச் சட்டம் மூலம் தகர்ந்துள்ளது. இது நிரந்தரத் தீர்வாக இல்லாமல் இருந்தாலும், தமிழக மக்களின் ஒன்றிணைந்த குரலுக்குக் கிடைத்த முதல் மாபெரும் வெற்றி என்றே கருதலாம். தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த ...

ட்வீட்டரில் ரசித்தது --செம கலாய்ப்பு

Posted: 21 Jan 2017 03:53 AM PST

ட்வீட்டரில்  ரசித்தது --செம கலாய்ப்பு  தம்பிதுரை பார்த்தாரா இதை தெரியவில்லை  சென்னை: லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, தனது பதவிக்குரிய நிலையை விட்டு மாறி "அதிமுகவின் சின்னம்மா"வின் தீவிர பிரசாரகராக மாறி ரொம்ப நாளாகி விட்டது. அவரை டிவீட்டரில் ஒருவர் செமையாக கலாய்த்துள்ளார். தம்பித்துரை சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ லெட்டர்பேடில் "சின்னம்மா" சசிகலாதான் முதல்வராக வேண்டும். உடனடியாக அப்பதவியை அவர் ஏற்க வேண்டும் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ...

ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்!

Posted: 21 Jan 2017 12:59 AM PST

- காரைக்குடியில், ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். ஒரு நிகழ்ச்சிக்காக, மக்கள் திலகம், எம்.ஜி.ஆர்., வந்திருந்தார். எனக்கு பள்ளி விடுமுறை என்பதால், அம்மாவுடன் தலைவரைப் பார்ப்பதற்கு சென்றேன். கூட்டமென்றால், அப்படியொரு கூட்டம். ஆண்களும், பெண்களும் முண்டியடித்து, பரபரப்புடன் காத்திருந்தனர். மக்கள் திலகமும் வந்துவிட்டார். பேச ஆரம்பித்து, முடிக்கும் வரை, ஒரே கை தட்டலும், விசிலும் விண்ணைப் பிளந்தன. அவர் பேச்சை முடித்து புறப்பட தயாரானார். கூட்டத்தினரின் இடிபாடுகள் அதிகமானது. இதை ...

எல்லாரும் இந்நாட்டு மன்னர்!

Posted: 21 Jan 2017 12:09 AM PST

- 'எல்லாரும் இந்நாட்டு மன்னர்!' என்று சொல்வது தான், ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமை. அதை உறுதி செய்த தினம் தான், குடியரசு தினம். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு. நம் நாடு, ஜனவரி 26,1950ல் குடியரசானது. மதம், இனம், மொழி கலாசாரத்தில் வேறுபட்டு இருப்பதால், சுதந்திரத்திற்கு பின் காணாமல் போய்விடும், என நிறைய நாடுகள் கனவு கண்டன. ஆனால், 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற தத்துவத்தோடு, இன்றளவும் சிதறாமல் கட்டுக் கோப்பாக இருக்கிறது நம், 'பாரத நாடு!' எப்படி வந்தது ஜனவரி -26! கடந்த ,1947ல் சுதந்திரம் ...

பெட்டிக்குள்ளே…(சிறுவர் கதை)

Posted: 20 Jan 2017 11:50 PM PST

- முன்னொரு காலத்தில், மகத நாட்டை, யாழ்குமரன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு, விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார்; அவர் பெயர் முத்துக்கூத்தன். அரசர் யாழ்குமரன், எங்கு சென்றாலும், முத்துக்கூத்தனை அழைத்துச் செல்வார். முத்துக்கூத்தனின் ஆலோசனை படியே அனைத்தையும் செய்வார். இதனால், மந்திரி முத்துக்கூத்தனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக் கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். முத்துக்கூத்தன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் ...

ரூ.49 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்டதாக நடிகை ரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Posted: 20 Jan 2017 11:25 PM PST

மும்பை - நடிகை வீட்டில் சோதனை புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரதி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர். மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து ஒர்லி பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் சந்தேகத்தின்பேரில் நேற்று முன்தினம் மின்வினியோகம் செய்யும் நிறுவனமான 'பெஸ்ட்' கழக அதிகாரிகள் நடிகை ரதியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். ரூ.49 லட்சம் மின்திருட்டு இந்த ...

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன”

Posted: 20 Jan 2017 10:55 PM PST

- டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று நேற்று அறிவித்தார். முதல்-அமைச்சர் அறிவிப்பைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் நடக்கும் போராட்டம் கைவிடப்படும் என்று, போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "வாடிவாசலில் காளையை திறந்து விடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்று அறிவித்து விட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையில் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று அலங்காநல்லூர் வந்தார். ...

இன்றும், நாளையும் மழை பெய்யும்? 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்

Posted: 20 Jan 2017 08:34 PM PST

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து அருகே, உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தை நோக்கி, மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று, தமிழக கடலோர பகுதிக்குள் நுழையும் என,எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில், இன்று ...

ஜல்லிக்கட்டு போராட்டம் - இன்றைய புகைப்படங்கள்

Posted: 20 Jan 2017 07:03 PM PST

படங்கள்: கி.கார்த்திகேயன். க.ஸ்ரீபரத். இரா.கார்த்திகேயன். பி.ஜோதிராமலிங்கம். சந்தீப் சக்சேனா. எஸ்.குருபிரசாத். எஸ்.ஜேம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் - நன்றி- தி இந்து - - வானத்து நட்சத்திரக் கூட்டம் தரையிறங்கி வந்ததோ என்று வியக்கும்வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் நேற்று இரவு தங்களது செல்போன் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தி கோரிக்கை முழக்கமிட்டனர். -

அதிகாரிகள் மிடுக்காக உடை அணிய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுரை

Posted: 20 Jan 2017 06:18 PM PST

- உத்தராகண்டில் தேர்தல் ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, டேராடூனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி உடனிருந்தார்.படம்: பிடிஐ ------------------------------------------------------------------------------ - உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மிடுக்காக உடை அணியுமாறும் நேரம் தவறாமல் செயல்படுமாறும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது. உத்தரப் பிரதேசம், ...

துவங்கியது டிரம்ப் சகாப்தம்: அமெரிக்காவை மேலும் வலுப்படுத்தப்போவதாக உறுதி

Posted: 20 Jan 2017 06:05 PM PST

-- வெள்ளை மாளிகையில் இன்று(ஜன.,20) நடந்த பதவி ஏற்பு விழாவில் அமெரிக்காவின் 45- வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். துணை அதிபராக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு: பதவி ஏற்பு விழாவில் இந்திய தூதர் நவ்ஜேத் சிங்ஷர்மா, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அமெரிக்கர்களின் பலத்த கரகோஷத்திற்கிடையே ...

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைப்பு

Posted: 20 Jan 2017 04:47 PM PST



சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனத்தில்
இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு
நடைபெற இருந்தது.
-
அந்த தேர்வுகள் சூழ்நிலை காரணமாக இன்றும், நாளையும்
நடைபெறாது. தேர்வுகள் 28 மற்றும் 29–ந் தேதிகளுக்கு
தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு
அதிகாரி திருமகன் தெரிவித்துள்ளார்.
-
--------------------------------------
தினத்தந்தி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™