Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அவசர சட்டம் வந்தால் வழக்கு: அடங்க மறுக்கும் 'பீட்டா'

Posted: 19 Jan 2017 08:55 AM PST

புதுடில்லி: ''சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப் பட்டுள்ள, ஜல்லிக்கட்டை நடத்து வதற்கு, அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடருவோம்,'' என, விலங்கு கள் நல அமைப்பான, 'பீட்டா'வின் செய்தித் தொடர்பாளர் மணிலால்வலியாதே தெரிவித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:
அனைத்து விலங்குகளுக்கு எதிரான வதையை எதிர்த்தே, நாங்கள் பிரசாரம் செய்து வருகி றோம். அது போல தான், காளைகளை வதைக் கக் கூடாது என, போராடுகிறோம். ஜல்லிக்கட்டு என்பதே, காளைகளை வதைப்பது தான்.
கடந்த, 1980களில், கலப்பின மாடுகள் பெருக்கத்தை அரசு ஆதரித்தது. அந்த காலத்திலும் ...

எங்கும் பிரச்னை மயம்: ஜனாதிபதி பிரணாப் கவலை

Posted: 19 Jan 2017 09:05 AM PST

டன்டன்: ''சமூகத்தில், நாளுக்கு நாள் கருத்து வேறுபாடும், பிரச்னையும் அதிகரித்து வருகிறது,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வேதனையுடன் கூறினார்.

மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிநடக்கிறது. மாநிலத்தில், நடந்த கிராமிய விழாவை நேற்று துவக்கி வைத்து, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பேசியதாவது: நாம், இன்று, நாகரிக சமூகத்தில் வாழ்கிறோம். ஆனால், சமூகத்தில் முன் நிலவிய ஒற்றுமை, அன்பு, சகோதர உணர்வு, ஒருமித்த கருத்து
ஆகியவை, இப்போது, குறைந்து வருவது கவலைஅளிக்கிறது. கருத்து வேறுபாடு, பிரச்னை ஆகியவை, சமூகத்தில் ...

கறுப்பு பணம் மாற்றித் தந்த கூட்டுறவு வங்கிகள்

Posted: 19 Jan 2017 09:12 AM PST

புதுடில்லி: 'செல்லாத நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில், பல கோடி ரூபாய் கறுப்பு பணம் மாற்றிக் கொடுக்கப் பட்டுள்ளது' என, ரிசர்வ் வங்கிக்கு, வருமான வரிதுறை அதிர்ச்சி அறிக்கை அனுப்பியுள்ளது.

கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக, மத்திய அரசு, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்த ஆண்டு, நவம்பரில் அறிவித்தது. இதையடுத்து, பழைய நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்து, மாற்றிக் கொள்ள அனுமதிஅளிக்கப் பட்டது.
போலி கணக்குகள் :
இதை பயன்படுத்தி, பல்வேறு கூட்டுறவு வங்கிகளில், கறுப்பு பண கும்பல், பழைய ...

முதல்வருக்கே தடை போட்ட துணை சபாநாயகர்: டில்லியில் 'தில்லாலங்கடி'

Posted: 19 Jan 2017 09:19 AM PST

''என்னைச் சந்திக்க நேரம் தராத, பிரதமர், நரேந்திர மோடியை, நீங்களும் சந்திக்க வேண்டாம்,'' என, துணை சபாநாயகர் தம்பி துரை தடை போட்டு, இம்முறையும் முதல்வர் பன்னீர்செல்வத்தை பாடாய் படுத்தியதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வறட்சி நிவாரண நிதி கேட்டு, ஒரு வாரத்திற்கு முன், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வியாழனன்று சந்திக்க வரும்படி பிரதமர் அலுவலகத்தி லிருந்து தகவல் அனுப்பப்பட்டது.முதல்வர் டில்லி கிளம்புகிறார் என்ற தகவல் தெரிந்ததும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா தரப்பும் சுறுசுறுப்பாகி, ஜல்லிக்கட்டு விஷயத்திற்கு, இந்த ...

சசி - பன்னீர் இடையே பனிப்போர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அம்பலம்

Posted: 19 Jan 2017 09:24 AM PST

முதல்வர், பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச் செயலர், சசிகலாவிற்கும் இடையே, பனிப்போர் நிகழ்ந்து வருவது, சசிகலா நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் அம்பலமாகி உள்ளது.

அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக் கப்பட, பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தார். சசிகலாவே, முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் என, லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை அறிக்கை வெளியிட்டார். அதற்கு, பன்னீர்செல்வம் எந்த பதிலும் தெரிவிக்க வில்லை.இந்நிலையில், தம்பிதுரை போன்றவர்களால், சசிகலாவுக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே, பனிப்போர் ஏற்பட்டு உள்ளது. பன்னீர் செல்வம் ...

'ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் தமிழக அரசு கொண்டு வரலாம்'

Posted: 19 Jan 2017 09:30 AM PST

புதுடில்லி: ''ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டாக கருதி, அதை நடத்த, தமிழக அரசுசட்டம் கொண்டு வரலாம்,'' என, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கி கூறினார்.

டில்லியில், அவர் கூறியதாவது: மாநில அரசின்அதிகாரத்துக்குட்பட்டது தான் விளையாட்டு. இதில் மத்திய அரசு தலையிட முடியாது. அதனால், ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டாக கருதி,
அதை நடத்த, தமிழக அரசுசட்டம் கொண்டு வரலாம். அதேநேரத்தில், இதுபோன்ற விளையாட்டுகளில், விலங்குகளை துன்புறுத்தும் செயல்கள் இடம் பெறக்கூடாது. விலங்குகள் நலனை கருத்தில் கொள்ளாமல், விளையாட்டை நடத்த அனுமதிக்க ...

அடக்குனா அடங்குற ஆளா நாங்கள்! வெகுண்டெழும் இளைஞர் போராட்டம்

Posted: 19 Jan 2017 09:35 AM PST

கல்லுாரிகள், பல்கலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் கட்டாயமாக வெளியேற்றப் பட்டுள்ளனர்.

மாணவர்கள் நடத்தி வரும், ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், அனைத்து கல்லுாரி, பல்கலைகளுக்கு கால வரையற்ற விடுமுறையும், மறு அறிவிப்பு வரும் வரை, கல்லுாரிகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விடுதியில் தங்கி, போராட்டத் தில் பங்கேற்க, மாணவர்கள் திட்டமிட்டிருந்த னர். ஆனால், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், கட்டாயமாக வெளியேற்றப் ...

உலகுக்கே எடுத்துக்காட்டாய் அமைதியாக போராடுபவன்... தமிழன்டா!:கலவரம், வன்முறையின்றி ஒன்று கூடிய இளைஞர்கள்:பாரம்பரியத்தை நோக்கி ஒற்றுமையுடன் வீர பயணம்

Posted: 19 Jan 2017 09:43 AM PST

'உலகுக்கே எடுத்துக்காட்டாய், அமைதியாக போராடத் தெரிந்தவன் தமிழன்' என்ற நற்பெயரை, ஜல்லிக்கட்டு போராட்டம், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் பெற்று தந்துள்ளது. கலவரம், வன்முறையின்றி, பாரம்பரியத்தை காக்க, ஒற்றுமையுடன் ஒன்றுகூடிய இளைஞர்களின் வீரப் பயணம், மூன்றாவது நாளை கடந்து, இன்றும் தொடர்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவால், தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த தடை உள்ளது. அதை நீக்கக் கோரியும், தடைக்கு காரணமான, 'பீட்டா' விலங்குகள் நல அமைப்பை தடை செய்யக் கோரியும், மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, ...

கை விரித்தார் மோடி

Posted: 19 Jan 2017 09:56 AM PST

புதுடில்லி:''ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், தற்போது உதவ இயலாது,'' என, பிரதமர் மோடி கூறி விட்டதால், தமிழக இளைஞர்கள் கொந்தளித் துப் போயுள்ளனர்.

தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த தடை ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, அதை நீக்கக் கோரி, கடந்த சில நாட்களாக, தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களிலும், லட்சக்கணக்கில் இளைஞர்கள், மாணவ, மாணவியர் குவிந்து, எந்தவித அசம்பா விதமும் இன்றி, ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இன்று, தமிழக ...

'தமிழுக்காக, தமிழ் கருவும் போராடும்' - போராட்டத்தில் களமிறங்கிய கர்ப்பிணி பெண்கள்

Posted: 19 Jan 2017 11:38 AM PST

சென்னை : கர்ப்பிணி பெண் ஒருவர், 'தமிழுக்காக, தமிழ் கருவும் போராடும்' என்ற பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரின் புகைப்படம், சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
ஜல்லிக்கட்டை ஆதரித்தும், 'பீட்டா' அமைப்புக்கு தடைவிதிக்க கோரியும், மாணவர்களும், இளைஞர்களும், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், கர்ப்பிணி பெண் ஒருவர், 'தமிழுக்காக, தமிழ் கருவும் போராடும்' என்ற பதாகையை ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம், போராட்டக்காரர்கள் சமூக வலைதளத்தில் ...

தமிழர்களின் அடையாளத்தை மீட்க முடியாத அரசு வழங்கிய எந்த அடையாள அட்டையும் வேண்டாம்

Posted: 19 Jan 2017 01:02 PM PST

சென்னை: தமிழர்களின் அடையாளமான ஜல்லிகட்டை மீட்க முடியாத மத்திய, மாநில அரசுகள் வழங்கிய எந்த அடையாள அட்டையும் எங்களுக்கு தேவையில்லை என ஜல்லிக்கட்டு பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் கூறிவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்தகோரி நேற்று(19ம் தேதி) முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதற்கு பிரதமர் ஜல்லிகட்டு வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் எதுவும் செய்ய முடியாது என கை விரித்துவிட்டார். எனினும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு ...

‛வழக்கு போட்டது நாங்க இல்ல‛ - பம்முகிறது பீட்டா

Posted: 19 Jan 2017 02:12 PM PST

சென்னை : தமிழகம் முழுவதும், 'பீட்டா' அமைப்பை தடை செய்யக் கோரி, போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், 'ஜல்லிக்கட்டுக்கு எதிராக, முதலில் வழக்கு தொடர்ந்தது, நாங்கள் அல்ல' என, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ள, 'பீட்டா' எனும், விலங்குகள் நல, அமெரிக்க அமைப்புக்கு எதிராக, தமிழக மக்களின் பார்வை திரும்பியுள்ளது. அதை தடை செய்யக் கோரி, ஆயிரக்கணக்கானோர் போராடி வருகின்றனர்.
நிலைமை விபரீதம் அடைவதை உணர்ந்த பீட்டா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாங்கள் சட்டத்தை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™