Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


1,500 போலீசார்! எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத அ.தி.மு.க., சசிகலாவுக்கு... எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்வைத்து அராஜகம் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார்

Posted: 17 Jan 2017 08:54 AM PST

எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்கு, பாதுகாப்பு அளிக்க, நேற்று, 1,500 போலீசார் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்வைத்து நடந்த, இந்த அராஜகத்தால், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக, புகார் தெரிவித்தனர்.

முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆருக்கு நேற்று நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த விழாவில் பங்கேற்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடான, சென்னை, போயஸ் தோட்ட இல்லத்தில் ...

உ.பி.,யில் அமைகிறது சமாஜ்வாதி - காங்கிரஸ்... கூட்டணி...! போட்டியை சமாளிக்க பகுஜன் - பா.ஜ., வியூகம்

Posted: 17 Jan 2017 08:59 AM PST

உத்தர பிரதேசத்தில், ஆளும் சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட, சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் முடிவுசெய்துள்ளன. இந்த போட்டியை சமாளிக்க, பா.ஜ.,வும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், புதியவியூகத்தை வகுத்துள்ளன.

உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைக்கான தேர்தல், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடக்க உள்ளது.இதில், உ.பி., மாநிலத் தேர்தல் முடிவுகளே, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், ஆளும் சமாஜ்வாதி, காங்கிரஸ், மாயாவதியின், பகுஜன் சமாஜ், பா.ஜ., ...

'மகாத்மா காந்தியின் படத்தை டாய்லெட்டில் பயன்படுத்தாதீர்!'

Posted: 17 Jan 2017 09:04 AM PST

புதுடில்லி, :'துாய்மை இந்தியா இயக்கத்தின் விளம்பரங்களில் பயன்படுத்தப்படும், மகாத்மா காந்தியின் படத்தை, பொதுக் கழிப்பறை மற்றும் அசுத்தமான இடங்களில் பயன்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐகோர்ட்டில் வழக்குதுாய்மை இந்தியா திட்டத்தின் சின்னமாக, மகாத்மா காந்தியின் படம் மற்றும் அவரது மூக்குக் கண்ணாடி உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. துாய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்த, பல்வேறு இடங்களில், காந்தியின் படமும், மூக்கு கண்ணாடியும் வரையப்படுகின்றன.'பொதுக்கழிப்பறை மற்றும் அசுத்தமான இடங்களில் மகாத்மா ...

ஜெ., பிறந்தநாளில் முக்கிய முடிவு: தீபா

Posted: 17 Jan 2017 09:18 AM PST

புதுக்கட்சியை துவக்குவது அல்லது அ.தி.மு.க.,வை இரண்டாக உடைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை ஜெ. தீபா நேற்று வெளியிடுவார் என, ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள் நேற்று அவரது வீட்டில் குவிந்திருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்புக்கும் உறுதி அளிக்கும் வகையில், தீபா, 'இன்று முதல் தமிழக மக்களுக்கு பணி ஆற்ற இருக்கிறேன்; அடுத்த மாதம் ஜெயலலிதா பிறந்தநாளன்று அடுத்தக்கட்ட அரசியல் பயணத்தின் முக்கிய முடிவை அறிவிப்பேன்; சசிகலாவுக்கு நான் பயப்படமாட்டேன்' என, ஆவேசமாக பேட்டி அளித்தார்.

தொண்டர்கள் திரண்டு வந்தனர்அ.தி.மு.க., பொதுச்செயலராக ...

'அடங்காநல்லூரானது' அலங்காநல்லூர் : இளைஞர்களை விடுவிக்க கிராம மக்கள் போராட்டம்

Posted: 17 Jan 2017 09:20 AM PST

அலங்காநல்லுார்: மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று முன்தினம் முதல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கைதான, அனைத்து இளைஞர்களையும் விடுவிக்க வலியுறுத்தி, அவர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டோரை, கலைந்து செல்லுமாறு, நேற்று காலை 6:15 மணிக்கு ஒலிபெருக்கியில் போலீசார் அறிவித்தனர். ஆனால் கலைந்து செல்லாததால், அங்கிருந்த 221 பேரை கைது செய்தனர்.அதில் ஒரு பிரிவினர் திருவேடகம், மற்றொரு பிரிவினர் வாடிப்பட்டி திருமண மண்டபங்களில் ...

எம்.ஜி.ஆர்., நினைவு தபால் தலை வெளியீடு 15 நிமிடங்களில் விழா நிறைவு

Posted: 17 Jan 2017 09:31 AM PST

சென்னை: எம்.ஜி.ஆர்., 100வது பிறந்த நாளை முன்னிட்டு, எம்.ஜி.ஆர்., நினைவு சிறப்பு தபால் தலை மற்றும் தபால் உறை வெளியிடப்பட்டது. இந்த விழா, 15 நிமிடங்களில் முடிந்தது.அ.தி.மு.க., நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான, எம்.ஜி.ஆரின், 100வது பிறந்த நாள், நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, எம்.ஜி.ஆர்., நினைவு சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், கடிதம் எழுதினார்.அதைத் தொடர்ந்து, மத்திய அரசு, எம்.ஜி.ஆர்., நினைவு சிறப்பு தபால் தலை வெளியிட, நடவடிக்கை மேற்கொண்டது. ...

சசிகலா நடராஜன் அதிரடி பேச்சு அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி

Posted: 17 Jan 2017 09:38 AM PST

'குடும்ப ஆட்சி நடத்துவோம்' என, சசிகலா நடராஜன் பேசியது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு, எதிராக வரிந்து கட்ட தயாராகி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க.,வை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஜெயலலிதா உடல், மக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தபோது, அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் சுற்றி நின்றனர்.இது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், ...

என்.எஸ்.ஜி.,யில் உறுப்பினராக இந்தியா தீவிர முயற்சி

Posted: 17 Jan 2017 09:48 AM PST

புதுடில்லி, :என்.எஸ்.ஜி., எனப்படும், அணுசக்தி வினியோகஸ்தர்கள் குழுவில் இடம்பெறுவதற்காக, அனைத்து நட்பு நாடுகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், விரைவில், நல்ல முடிவு கிடைக்கும் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

என்.எஸ்.ஜி.,யில் சேர, விண்ணப்பித்துள்ள இந்தியா, அதற்காக, நீண்டகாலமாக தீவிரமாக முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் முயற்சிக்கு, என்.எஸ்.ஜி., உறுப்பு நாடுகளில் ஒன்றான, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து, முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
சீனா கருத்து
சமீப காலமாக, இந்தியாவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக மாறியுள்ள அமெரிக்காவில், ...

'ஆதார்' தராத ரேஷன் கார்டு: முடக்கி வைக்க முடிவு

Posted: 17 Jan 2017 10:17 AM PST

'ஆதார்' விபரம் தராத ரேஷன் கார்டுகளை முடக்க, உணவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' எண் வாங்கப்படுகிறது. பலர், ஆதார் கார்டு விபரம் தராமல் அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது. இதனால், ஆதார் விபரம் பதியாத ரேஷன் கார்டை முடக்கி வைக்க, உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 93 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் ...

கடும் குளிரிலும் கட்டுக்கடங்காத போராட்டம்; முதல்வர் வராமல் கலையமாட்டோம்

Posted: 17 Jan 2017 10:57 AM PST

சென்னை: மெரினா கடற்கரையில் கடும் குளிரிலும் இளைஞர்களின் அனல் தகிக்கும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

தமிழகத்தில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னையில் நேற்று காலை சுமார் 7 மணிக்கு வெறும் 50 பேருடன் துவங்கிய போராட்டம் 18 மணி நேரத்ததை தாண்டி நள்ளிரவு தீவிரம் குறையாமல் உள்ளது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடியதற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க ...

ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும்: போராட்டக்குழு அறிவிப்பு

Posted: 17 Jan 2017 01:17 PM PST

சென்னை: ஜல்லிகட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டகுழு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அவசர சட்டம் கொண்டு வர ஜனாதிபதி, பிரதமருக்கு அழுத்தம் தரப்படும் எனவும் இதுகுறித்து முதல்வர் இன்று(ஜன.,18) அறிக்கை வெளியிடுவார் எனவும் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை நடத்த கோரி சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிகட்டிற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் உட்பட பலர் ...

தமிழகத்தில் இன்று கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்?

Posted: 17 Jan 2017 03:09 PM PST

சென்னை: ஜல்லிகட்டிற்காக தமிழகம் முழவதும் போராட்டம் தீவிரமாக பரவி வருகிறது. அலங்காநல்லூரில் துவங்கிய போராட்டம் அடுத்தடுத்து சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை, மதுரை, கோவை, நெல்லை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய போராட்டம் நடந்து வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை முடிந்து இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், ஜல்லிகட்டிற்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த வர வேண்டும் என சமூக வலைதளங்களில் அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இன்று மாணவர்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™