Tamil News | Online Tamil News |
- வேதனை! :ஜல்லிக்கட்டிலும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சொதப்பல்: பிள்ளையாருக்கு பதிலாக குரங்கை பிடித்த கதை தான்
- பேரழிவை நாடு சந்திக்கும்! மன்மோகன் எச்சரிக்கை
- நில ஆவணங்கள் 'டிஜிட்டல்' மயம்: தெலுங்கானா அரசு திட்டம்
- ஏப்ரலில் ஜி.எஸ்.டி., அமல்? அருண் ஜெட்லி நம்பிக்கை
- எனக்கும் ரஷ்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப்
- மறைந்த முதல்வர் ஜெ., சொத்துகளை அரசு கையகப்படுத்தணும்!: நிர்வகிக்க நீதிபதியை நியமிக்க ஐகோர்ட் கிளையில் மனு: இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணை?
- சசிகலாவுடன் பன்னீர்செல்வம் மோதலா?:முதல்வர் நிகழ்ச்சி இடம் மாறியதால் சர்ச்சை
- சட்டசபை குழுக்கள் நியமனம் எப்போது: ஐகோர்ட் 'நோட்டீஸ்'
- தீபாவுக்கு குவியும் ஆதரவு: அதிர்ச்சியில் சசி வட்டாரம்
- ஜல்லிக்கட்டில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம்
- லாலுவுக்கு 'பென்ஷன்': பீஹாரில் வினோதம்
- மல்லையாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப கோர்ட் உத்தரவு
- இந்தியா - வியட்நாம் ஏவுகணை ஒப்பந்தம்: சீனா டென்ஷன்
- பஞ்சாப் முதல்வர் மீது ‛ஷூ' வீச்சு; தோல்வி பயம் காரணமா?
| Posted: 11 Jan 2017 09:28 AM PST அரசியலுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையாக இருக்க வேண்டியவர், எம்.பி.,க்களை திரட்டி வந்து, மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் செயல்படுவது தான், துணை சபாநாயகரின் பணியா' என்ற, பலத்த கேள்வி எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு விஷயத்தில், பிரதமரை சந்திக்க, முறையான அணுகுமுறையை பின்பற்றாமல், தமிழக நலனுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவது போன்ற தோற்றத்தை, அ.தி.மு.க.,வினர் ஏற்படுத்தியுள்ளதாகவும், டில்லியில் பேச்சு எழுந்துள்ளது.ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் வலுத்துவரும் நிலை யில், நேற்று, துணை சபாநாயகர், தம்பிதுரை தலைமையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு, ... |
| பேரழிவை நாடு சந்திக்கும்! மன்மோகன் எச்சரிக்கை Posted: 11 Jan 2017 09:32 AM PST புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு திட்டத் தால், நாடு மிக மோசமான பேரழிவை சந்திக்க உள்ளதாக, காங்., கட்சியைசேர்ந்த, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை கண்டிக்கும் வகையில், டில்லியில் நேற்று, காங்., மாநாடு நடத்தியது. இதில் பங்கேற்று முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் பேசியதாவது: 'செல்லாத நோட்டு திட்டத்தால், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்; எல்லா துறை களிலும் முன்னேற்றம் ஏற்படும்' என, பிரதமர், நரேந்திர மோடி கூறுவதில், உண்மை எதுவும் இல்லை. இந்த விஷயத்தில், பிரதமர் மோடி செய்துள்ள தவறுகளை ... |
| நில ஆவணங்கள் 'டிஜிட்டல்' மயம்: தெலுங்கானா அரசு திட்டம் Posted: 11 Jan 2017 09:34 AM PST தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, அனைத்து நில ஆவணங்களையும், 'டிஜிட்டல்' மயமாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, நிலங் களை மீண்டும் அளவிட, 'சர்வே' மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி அமைந் துள்ள தெலுங்கானா மாநிலம், ஆந்திராவில் இருந்து பிரிந்து, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.அரசு நிர்வாகத்தில், மின்னணு பயன்பாட்டை அதிகளவில் பயன்படுத்தி வரும் மாநிலங் களில், ஆந்திராவும், தெலுங்கானாவும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள, அனைத்து நிலங்கள் ... |
| ஏப்ரலில் ஜி.எஸ்.டி., அமல்? அருண் ஜெட்லி நம்பிக்கை Posted: 11 Jan 2017 09:36 AM PST காந்தி நகர்:''நிலுவையில் உள்ள, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டால், ஏப்., 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை, நாடு முழுவதும் அமல்படுத்துவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். குஜராத்மாநிலம்,காந்திநகரில் நடந்த,'விப்ரன்ட்' சர்வதேச மாநாட்டில், மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி பேசியதாவது:மாநில அரசுகளுடன்,ஜி.எஸ்.டி., தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்பட்டால், ஏற்கனவே ... |
| எனக்கும் ரஷ்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப் Posted: 11 Jan 2017 09:38 AM PST நியூயார்க்: அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வானதற்கு ரஷ்யாவின் மறைமுக உதவி இருப்பதாக குற்றசாட்டு வெளியாகி பரபரப்பாக பேசப்படும் நிலையில், ‛எனக்கும் ரஷ்யாவிற்கு எந்த தொடர்பும் இல்லை' என்று டிரம்ப் பேட்டியில் தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வான பிறகு முதல்முறையாக ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: நான் செலுத்திய வரி விபரங்களை தற்போது வெளியிடப்போவதில்லை. அது தற்போது தணிக்கையில் உள்ளது. எனது தொழில்களை எனது இரண்டு மகன்களும் கவனித்து ... |
| Posted: 11 Jan 2017 09:41 AM PST மதுரை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை பொது நல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர், ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா, சினிமா, அரசியலில் ஈடுபட்டார். சினிமாத் துறையில், பல கோடி ரூபாய் சம்பாதித்தார். 1989ல், அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, சட்டசபை தேர்தலில், முதன்முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, ... |
| சசிகலாவுடன் பன்னீர்செல்வம் மோதலா?:முதல்வர் நிகழ்ச்சி இடம் மாறியதால் சர்ச்சை Posted: 11 Jan 2017 09:46 AM PST முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா இருந்த வரை, அவரது நம்பிக் கைக்குரியவராக, முதல்வர் பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து, விலக நேரிட்ட போது, பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.அந்தளவுக்கு இவர், ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றது, சசிகலா குடும்பத்தினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியது.எனவே, பன்னீர்செல்வம் மீது, ஜெயலலிதா வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகை யில், பல்வேறு ... |
| சட்டசபை குழுக்கள் நியமனம் எப்போது: ஐகோர்ட் 'நோட்டீஸ்' Posted: 11 Jan 2017 09:49 AM PST சென்னை:சட்டசபை நிலை குழுக்களை அமைக்க கோரிய வழக்கில், சபை முன்னவர், சட்டசபை செயலர் பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்பும்படி, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தாக்கல் செய்த மனு: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில், 89 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்ட சபை விதிகளின்படி, 12 குழுக்களை, சபாநாயகர் நியமிக்க வேண்டும். மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்கு குழு, பொதுத் துறை நிறுவனங்கள் . குழு என, 12 குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களுக்கு என அதிகாரங்கள், செயல்பாடுகள், வரையறுக்கப்பட்டு உள்ளன.சட்டசபைக்குள், ... |
| தீபாவுக்கு குவியும் ஆதரவு: அதிர்ச்சியில் சசி வட்டாரம் Posted: 11 Jan 2017 09:52 AM PST முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவுக்கு, 60 சதவீத, அ.தி.மு.க., தொண்டர்களும், 50 சதவீத பெண்களும், தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள தாக, உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இதனால், கதி கலங்கியுள்ள, சசி வட்டாரம், மாவட்டம் தோறும் சமாதான முயற்சியை தீவிரப்படுத்த, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.சேலம், வேலுார், மதுரை, ஈரோடு, நெல்லை, துாத்துக்குடி உட்பட, தமிழகம் முழுவதும், தீபா பேரவை துவங்கி, உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. 'வாட்ஸ் ஆப்' வழியாகவும், ஆதரவு பெருகுகிறது.அ.தி.மு.க.,வில் பதவியில் உள்ளவர்கள், தலைமைக்கு ... |
| ஜல்லிக்கட்டில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம் Posted: 11 Jan 2017 09:56 AM PST சென்னை:'தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடைபெறுவதை, நிச்சயம் உறுதி செய்வோம்; எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஜல்லிக்கட்டு தொடர்பாக, பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக, 2014 மே, 7ல், உச்ச நீதிமன்றம், ஒட்டுமொத்த தடை விதித்தது.இதன் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த இயலாது. அதனால், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நடத்த, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியது.அதை ஏற்று, 2016 ஜன., 7ல், காளைகள், காட்சிப் ... |
| லாலுவுக்கு 'பென்ஷன்': பீஹாரில் வினோதம் Posted: 11 Jan 2017 11:14 AM PST
பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவிற்கு ‛பென்ஷன்' வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது சலசலப்பை உண்டாக்கியுள்ளது. போராட்டம்: பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மறைந்த தலைவர், ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில், 1974ல், பீஹார் வளர்ச்சியை முன்னிறுத்தி, சம்பூர்ண கிராந்தி போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். பென்ஷன் திட்டம்: மாநில ... |
| மல்லையாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப கோர்ட் உத்தரவு Posted: 11 Jan 2017 12:41 PM PST
புதுடில்லி: கோர்ட் உத்தரவுகளை மீறி, 273 கோடி ரூபாயை, தன் குழந்தைகளின் பெயருக்கு மாற்றியதாக, வங்கிகள் கூறிய புகார் குறித்து பதிலளிக்கும்படி, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டதை தொடர்ந்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றான், பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையா. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், வங்கிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில் ... |
| இந்தியா - வியட்நாம் ஏவுகணை ஒப்பந்தம்: சீனா டென்ஷன் Posted: 11 Jan 2017 01:47 PM PST ஹனோய்: வியட்நாம் இந்தியாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்க திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாக உள்ள ஏவுகணை ஒப்பந்தம் சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏவுகணை வாங்க திட்டம் பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வியட்நாமின் ஹனோய் நகருக்கு சென்ற போது வியட்நாமிற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தவிர வியட்நாம் கப்பல் படைகளுக்கு இந்தியா நீர் மூழ்கி கப்பல் பயிற்சியும் அளித்து வருகிறது. இந்நிலையில் வியட்நாம் இந்தியாவிலிருந்து ... |
| பஞ்சாப் முதல்வர் மீது ‛ஷூ' வீச்சு; தோல்வி பயம் காரணமா? Posted: 11 Jan 2017 03:17 PM PST
முக்த்சர் : எதிரணியினரின் தோல்வி பயம் காரணமாகவே தன் மீது ‛ஷூ' வீசப்பட்டதாக பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் குற்றம் சாட்டினார். ‛ஷூ' வீச்சு: பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டம், லாம்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, பஞ்சாப் முதல்வர் பாதல் மீது நேற்று ‛ஷூ' வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் பாதல், அங்கிருந்து வெளியேறினார். போலீசார் அந்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 12,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |