ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது....
- விதியே ! விதியே !
- கோவையைச் சேர்ந்த பொறியாளருக்கு ஆஸ்கர் விருது
- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடகர் வேல்முருகன் பாடிய பாடல்!
- பழையன கழித்து, புதியன புகவிடும் போகி பண்டிகை!
- தங்களுக்கு நேரும் அவலங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கும் பெண்களிடையே அன்னபூர்ணா ஒரு ஆச்சரியமே!
- "போகிப் பண்டிகை" (கவிப் பொங்கல்)
- டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம்
- இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat
- பாறைகளுக்கு பாலாபிஷேகம்…
- எப்படிலாம் யோசிக்கிறாங்க!
- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - தொடர்பதிவு !
- தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் விற்பதற்கு 2000 ரூபாய் நோட்டு டிசைனில் புதிய ரக சேலைகள் தயார்
- மறக்க முடியாத சிரிப்பு!
- 14ல் சபரிமலையில் மகரவிளக்கு : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- ‛தலாக்' சான்றிதழ் வழங்க தடை
- "நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்".
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- பூம் பூம் மாடுகளின் தலையாய பணி…
- யுகபாரதி கவிதைகள்
- தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
- தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
- நெகிழ வைத்த நிஜங்கள் - தொடர் பதிவு
- அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு...!
- ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்?
- திருவாதிரைக்கு களி ஏன்?
- திருவாதிரைக் களி
- வரலாற்றின் வேர்கள்
- உயர் அழுத்த மின் இணைப்புகளைப் பெற இணையதளம் மூலம் அனுமதி: மின்வாரியம் அறிவிப்பு
- மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
- அந்த ஓட்டல்ல என்ன தகராறு...?
- யாரோ ஒருவனுக்கான நேசம்!
| ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது.... Posted: 11 Jan 2017 08:26 AM PST ஜனவரி 12 முதல் 17 வரை ரெட் பஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என்று ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரெட் பஸ் ஆப் மூலம் ஜனவரி 12 முதல் ஜனவரி 17 வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என்று ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகளை தவிர்த்து தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்படும் முக்கிய இணையதளமாக விளங்குவது ரெட் பஸ் இணையதளம். இந்நிலையில் ஆம்னி பேருந்து சங்கத்தின் அறிவிப்பு ... |
| Posted: 11 Jan 2017 08:19 AM PST செந்தமிழ் நாட்டின் அரசியல் வானிலே ...சூழ்ந்ததே கருநிற மேகங்கள் ஐயகோ ! எந்தமிழ் நாட்டினை எம்தமிழ் மக்களை ...என்செய நினைத்தாய் விதியே ! விதியே ! தந்திர புருஷராம் மூதறிஞர் இராஜாஜி ...தன்னிகர் இல்லாத தலைவன் காமராஜர் மந்திரச் சொல்லாலே மயக்கிய அண்ணாவும் ...மாண்புறச் செய்த முதல்வர் பதவியை அடையவே துடிக்கின்றார் அரசியல் பாடத்தில் ...அரிச்சுவடி படிக்காத அற்ப மாந்தரெலாம் படைபலம் பணபலம் இவையிருந்தால் போதுமா ? ...பாராளும் அறிவிலே பூஜ்ஜியமாய் இருக்கின்றார் ! உடையிலே சடையிலே மாற்றங்கள் ... |
| கோவையைச் சேர்ந்த பொறியாளருக்கு ஆஸ்கர் விருது Posted: 11 Jan 2017 07:42 AM PST கோவை: கோவையைச் சேர்ந்த பொறியாளர் கிரண் பட் (41), நிகழாண்டுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விருதுக்குத் தேர்வாகியுள்ள கிரண் பட்டின் தந்தை கே.சீனிவாஸ் பட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை சாய்பாபா காலனியில் நான் வசித்து வருகிறேன். ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள பிர்லா அறிவியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ("பிட்ஸ்') மின்னியல், மின்னணுவியல் மற்றும் இயந்திரப் பொறியியல் துறையில் என் மகன் ... |
| ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடகர் வேல்முருகன் பாடிய பாடல்! Posted: 11 Jan 2017 07:38 AM PST -- -- ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக் கோரி பல்வேறு அமைப்பினரும் போராடி வரும் நிலையில் திரைப்படப் பாடகர் வேல்முருகன், தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரித்து தனது பங்களிப்பாக இந்த ஜல்லிக்கட்டு பாடலை வழங்கி இருக்கிறார். - -------------------------------------- "எங்களுக்கு வேணும் ஜல்லிக்கட்டு எங்களுக்கு வேணும் ஜல்லிக்கட்டு இளைஞர் உலகம் காத்திருக்கு துள்ளிக்கிட்டு இளைஞர் உலகம் காத்திருக்கு துள்ளிக்கிட்டு - பொங்கலுக்கு வேணும் ஜல்லிக்கட்டு- அட பொங்கலுக்கு ... |
| பழையன கழித்து, புதியன புகவிடும் போகி பண்டிகை! Posted: 11 Jan 2017 07:19 AM PST போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரித்து தமிழக மக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கு ஏற்ப, பழைய பொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் இன்று கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, ... |
| தங்களுக்கு நேரும் அவலங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கும் பெண்களிடையே அன்னபூர்ணா ஒரு ஆச்சரியமே! Posted: 11 Jan 2017 06:54 AM PST - சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன்னை பேருந்து நிலையக் காவல்பணியில் ஈடுபட்டிருந்த ஆண் காவலர்கள் சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தியதாக புகார் அளித்து பெங்களூரைச் சேர்ந்த ஆய்வு மாணவியான அன்னபூர்ணா இரு தினங்களுக்கு முன் ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானார். மாணவி அன்னபூர்ணா, அச்சமயத்தில் அங்கு செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இது குறித்து நேரடியாகப் புகார் தெரிவித்திருந்தார். அமைச்சரிடம் ... |
| "போகிப் பண்டிகை" (கவிப் பொங்கல்) Posted: 11 Jan 2017 06:44 AM PST - தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும் கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும் தையலை உயர்வு செய்திடல் வேண்டும் பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும் - புகைமிகு பாரதம் இனியும் வேண்டாம் பகைதரும் நட்பு துளியும் வேண்டாம் வாகை சூட இலவசம் வேண்டாம் வகைமிகு உணவுகள் வயிற்றுக்கு வேண்டாம் - தீவிரவாதம் தீயில் பொசுங்கிட வேண்டும் தீண்டாமைத் தீயை அணைத்திட வேண்டும் அன்பென்னும் அங்குசம் எடுத்திட வேண்டும் வன்மிகு யானையை அடக்கிட வேண்டும் சுத்தம் சுழன்று சுகம் தர வேண்டும் அசுத்தம் அகன்று விடை பெற வேண்டும் நித்தம் ... |
| டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம் Posted: 11 Jan 2017 06:21 AM PST புதுடெல்லி - ரயிலில் டிக்கெட்டுகளை மிகவும் விரைவாக முன்பதிவு செய்வதற்கு வசதியாக 'ரயில் கனெக்ட்' என்ற புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வேயில் ஆன்லைன் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவாகவும், மொபைல் போன் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு வசதியாக 'ரயில் கனெக்ட்' என்ற புதிய செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த மொபைல் ஆப் மூலம் செல்போன் மூலமாகவே ... |
| இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat Posted: 11 Jan 2017 06:08 AM PST 15 நவம்பர் 1962. இந்தோ - சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் தேசம், ... |
| Posted: 11 Jan 2017 06:07 AM PST - – அடடே! – பாறைகளுக்கு பாலாபிஷேகம்… கொட்டுகிறது அருவி! – கே.திருக்குமரன் – —————————– –தினத்தந்தி குடும்பமலர் |
| Posted: 11 Jan 2017 06:07 AM PST 2000 ரூபாய் நோட்டு டிசைனில் சேலை: எப்படிலாம் யோசிக்கிறாங்க!! ரூ.2000 நோட்டின் டிசைனில், சூரத்தில் சேலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அமோகமாக விற்பனையாகி வருகிறது. தற்போது புதிய ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் பிங்க் வண்ணத்தில் காட்சியளிக்கிறது. மேலும், இது மிகவும் எடை குறைவாக, சிறிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்கள் டிசைனில் சூரத் நிறுவனம் ஒன்று, சேலை ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த சேலை தற்போது சந்தைக்கு விற்பனைக்கு ... |
| ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - தொடர்பதிவு ! Posted: 11 Jan 2017 05:55 AM PST - மதுரை: ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள் தங்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மதுரையில் கடையடைப்பு போராட்டம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இருக்கும் தடையை நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தி மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ... |
| தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் விற்பதற்கு 2000 ரூபாய் நோட்டு டிசைனில் புதிய ரக சேலைகள் தயார் Posted: 11 Jan 2017 05:40 AM PST -- சூரத் - உத்தரபிரதேசம் உள்ளிட்ட தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் விற்பனை செய்வதற்காக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு டிசைன்களுடன் கூடிய புதுரக சேலைகளை குஜராத் ஜவுளி வியாபாரி சிவ்சைனி தயாரித்து வருகிறார். ரூ.160 க்கு விற்கப்பட உள்ள சேலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 504 முறை அச்சடிக்கடிப்பட்டிருக்கிறது. இது பற்றி அவர் கூறுகையில், ''தேர்தல்களின் போது கட்சிகளின் சேலைகள், வேட்டிகள் அதிகமாக தயாரிக்கப்பட்டு விற்கப்படும். தற்போது, உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களுக்காக அவை அதிகமாக ... |
| Posted: 11 Jan 2017 05:31 AM PST - -- முதல் படத்தில் இருந்து இன்று வரை சில பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏதுமின்றி பின்பற்றி வருகிறார் அஜித். அதில் ஒன்று, காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றதும் டைரக்டர் முதல் லைட் பாய்ஸ் வரை வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் விஷ் செய்வது. உடன் நடிக்கும் நடிகர்கள், அவர்கள் பெரிய ஸ்டாராக இருந்தாலும் சரி, சிறிய வேடங்களில் நடிக்கும் துணை நடிகர்களாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரி மரியாதையுடன் அவர்களை நடத்துவது என்று தனக்கென சில விதிமுறைகள் தலயிடம் உண்டு. 'எனக்கும் அஜித் தம்பிகிட்ட ... |
| 14ல் சபரிமலையில் மகரவிளக்கு : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Posted: 11 Jan 2017 05:25 AM PST சபரிமலை: சபரிமலையில், மகர விளக்குக்கு முன்னோடி யாக, சுத்திகிரியை பூஜை கள் நாளை துவங்குகிறது.சபரிமலையில், 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்க உள்ளது. இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சபரிமலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.நாளை திருவாபரணம், பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்படுகிறது. மகரஜோதி நாளில் அய்யப்பனுக்கு நடைபெறும் முக்கிய பூஜை, மகர சங்கரம பூஜை. இதற்கு முன்னோடியாக, சுத்திகிரியைகள் நாளை துவங்குகின்றன. மகரவிளக்குக்கு அதிக அளவில் பாதுகாப்பு ... |
| Posted: 11 Jan 2017 05:21 AM PST சென்னை: தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்' கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார். இந்த மனு இன்று, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் ... |
| "நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Posted: 11 Jan 2017 05:04 AM PST தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா??? 1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது 2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும் 3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும் 4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது 5. ஆயில் புல்லிங் 6. காம்பிளான் குடித்தால் வளரலாம் 7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா 8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா 9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ... |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 11 Jan 2017 05:02 AM PST - - - |
| பூம் பூம் மாடுகளின் தலையாய பணி… Posted: 11 Jan 2017 04:31 AM PST - யுகபாரதி நன்றி- விகடன் |
| Posted: 11 Jan 2017 04:22 AM PST ![]() |
| தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு Posted: 11 Jan 2017 02:24 AM PST சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 உச்ச வரம்பில் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ... |
| தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு Posted: 11 Jan 2017 02:07 AM PST -- நெல்லை: தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாள் இன்று தாமிர சபையில் நடராஜன் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவினாசியில் உள்ள லிங்கேஷ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவுக்கான காப்பு கட்டுதல் நிகழ்வு ... |
| நெகிழ வைத்த நிஜங்கள் - தொடர் பதிவு Posted: 10 Jan 2017 11:48 PM PST - குடும்ப மலர் |
| அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு...! Posted: 10 Jan 2017 11:43 PM PST நான் நண்பரது வீட்டு விழாவிற்கு சென்றிருந்தபோது ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது. நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன செய்திகளையே இங்கு தருகிறேன். "…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். வேடிக்கைக்காக எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன் கேளுங்கள். ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற சஞ்சீவி ... |
| ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Posted: 10 Jan 2017 11:26 PM PST - மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன திருவிழா கொண்டாடப்படுவது, ஒரு பெண்மணியின் தியாகத்திற்காக என்பது உங்களுக்குத் தெரியுமா! காவிரிப்பூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தார். அவரது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்குச் சென்றார். நாடகத்தில் நடித்த நடிகையின் அழகில் மயங்கி காதல் கொண்டார். அவள் வீட்டிற்குச் சென்று தங்கி விட்டார். அந்த நடிகை சாதுவனிடம் இருந்த பொருட்களைப் பெற்றுக் கொண்டதும் அவரை விட்டு ... |
| Posted: 10 Jan 2017 11:16 PM PST - ஜன., 11 – ஆருத்ரா தரிசனம் 'களி' எனும் சொல்லுக்கு மகிழ்ச்சி, நடனம் மற்றும் உணவுப் பொருள் போன்ற அர்த்தங்கள் உண்டு. இம்மூன்றுமே, ஆருத்ரா தரிசன நாயகரான, நடராஜருக்கு சொந்தமானது. அரிசி மாவு அல்லது உளுந்து மாவுடன், கருப்பட்டி மற்றும் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தயாராகும் களியை, வயதுக்கு வந்த பெண்களுக்கு, உடல் பலத்திற்காக செய்து கொடுப்பர். இன்றும் கூட, கிராமப்புறங்களில், பார்வதி தேவி, பூலோகத்தில் பிறந்த போது, வயதுக்கு வந்த நாளே, திருவாதிரை என்றும், அதன் காரணமாகவே, அவளுக்கு ... |
| Posted: 10 Jan 2017 11:12 PM PST திருவாதிரைக் களி இதை இன்று, (திருவாதிரை அன்று ) செய்வது ரொம்ப விசேஷம் . தேவையானவை: பச்சரிசிரவை – 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்க்ச்யில் பொடிக்கவும் ) பயத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் – 3 / 4 கப்* தேங்காய்துருவல் - 4 டேபிள் ஸ்பூன் நெய் – 3 டேபிள்ஸ்பூன் முந்திரி, கிஸ்மிஸ், ஏலப்பொடி செய்முறை: பருப்புகளை வெறும் வாணலி இல் சிவக்க வறுக்கவும். அரிசிரவையும் நன்கு வறுக்கவும். mixer grinder இல் பருப்புகளையும் ரவை போல் பொடிக்கவும். ... |
| Posted: 10 Jan 2017 10:57 PM PST அன்புடையீர் , எனக்கு சமீபத்தில் நடைபெற்ற இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருக்க நேர்ந்த கட்டாய ஓய்வுக்குப் பிறகு உடலுக்கும் மனதிற்கும் வல்லமைப் பெறவேண்டி இடை இடையே எழுதிய இந்தத் தொடர் வல்லமை மின் இதழில் தொடர்ந்து ஒவ்வொரு புதன் அன்றும் வெளிவரும் . நண்பர்களுடன் பகிர ஈகரையில் பதிவிடுகிறேன் படித்துத் தங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன் . அன்புடன் அண்ணாமலை சுகுமாரன் வரலாற்றின் வேர்கள் -1 -அண்ணாமலை சுகுமாரன் கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் ... |
| உயர் அழுத்த மின் இணைப்புகளைப் பெற இணையதளம் மூலம் அனுமதி: மின்வாரியம் அறிவிப்பு Posted: 10 Jan 2017 10:08 PM PST உயர் அழுத்த மின் இணைப்புகளைப் பெற இணையதளம் மூலம் அனுமதி: மின்வாரியம் அறிவிப்பு புதிய உயர் அழுத்த மின் இணைப்புகளை விரைவாகப் பெறுவதற்கு இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அழுத்த மின்சாரத்தின் புதிய இணைப்புகள், கூடுதல் மின்பளு அல்லது மின்பளு குறைப்பு ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் இந்தச் சேவை செவ்வாய்க்கிழமை ... |
| மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு Posted: 10 Jan 2017 05:54 PM PST - புதுதில்லி: மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை கிடையாது. பொங்கல் கொண்டாடும் நபர்கள் உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என ... |
| Posted: 10 Jan 2017 05:46 PM PST - வாரமலர் |
| Posted: 10 Jan 2017 04:22 PM PST - இடைவெளி விட்டு தொடுத்த பூக்கள் அழகாகத் தான் இருக்கின்றன! - விட்டு விட்டு தனித்து வரும் அலையில் எந்தக் குறையுமில்லை! - சிறகு விரித்து மிதக்கும் ஒற்றை பறவை உணர்த்துகிறது வாழ்வின் ரகசியத்தை! - ஊருக்கு வழிகாட்டி விலகி நிற்கும் மைல் கற்களில் புதைந்து கிடக்கிறது யாரோ ஒருவருக்கான நேசம்! - தனித்து ஒளிரும் நிலவை விடவும் வேறெதுவும் தோன்றவில்லை உலகில் அழகாய்! - இடைவெளிகள் தீர்மானிப்பதில்லை ஒருபோதும் நம் நெருக்கத்தை! - ----------------------------- - இ.எஸ்.லலிதாமதி, சென்னை. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
