Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஹீரோயினி மட்டுமே எனது டார்க்கெட் இல்லை! -ஜோதிஷா

Posted:

அம்புலி படத்தில் நடித்தவர் ஜோதிஷா. அதையடுத்து சமீபத்தில் வெளியான ஏகனாபுரம் படத்தில் அதிரடியான வில்லியாக நடித்திருந்தார். தற்போது பேய் இருக்கா இல்லையா, மாய மோகினி, கொலுசு சத்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களிலுமே நாயகியாக நடித்துள்ள அவர், பேய் இருக்கா இல்லையா படத்தில் நாயகி, அதிரடி பேய் என இரண்டு ...

தெலுங்கு படத்தில் அங்காடித்தெரு மகேஷ்!

Posted:

அங்காடித்தெரு, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், வேல்முருகன் போர் வெல்ஸ் உள்பட சில படங்களில் நடித்தவர் மகேஷ். மலையாளத்தில் லாஸ்ட் பெஞ்ச் என்ற படத்திலும் நடித்தார். ஆனபோதும், அங்காடித்தெருவுக்குப்பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கியே இருக்கிறார் மகேஷ். இந்நிலையில், தற்போது தெலுங்கில் ...

தடைக்கு காரணமானவர்களை வீட்டுக்கு அனுப்‛பீட்டா சந்தோஷம்: நடிகர் விஜய்

Posted:

ஜல்லிக்கட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.


நடிகர் விஜய் தனது வீடியோ பதிவில், ‛‛உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களின் கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கவே; பறிப்பதற்காக அல்ல. தமிழனின் அடையாளம் ...

டெம்பர் ரீ-மேக்கில் ரன்வீர் சிங்

Posted:

தெலுங்கில் 2015-ஆம் ஆண்டு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஆக்சன் படம் ‛டெம்பர்'. தற்போது இப்படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி ரீமேக் செய்ய இருக்கிறார். படத்தின் ஹீரோவாக நடிகர் ரன்வீர் சிங் நடிக்கயிருக்கிறார். சில தினகங்களுக்கு முன் நடிகர் ரன்வீர் மற்றும் இயக்குநர் ரோகித்தும் இணைந்து ...

சுனில் தத்தாக நடிக்கும் பரேஷ் ராவல்

Posted:

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தனது அடுத்த படமாக நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்கை வரலாற்றை படமாக இயக்கவிருக்கிறார். படத்தில் சஞ்சய் தத்தாக நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கயிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பை துவக்க உள்ளார் ராஜ்குமார். இந்நிலையில் சஞ்சய் தத் அப்பாவான சுனில் தத் ரோலில் நடிகர் பரேஷ் ராவல் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. ...

தமிழக அரசியலுக்கு வருகிறார் சிரஞ்சீவி ?

Posted:

'கைதி நம்பர் 150' படத்தின் மிகப் பெரும் வெற்றிக்குப் பிறகு அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார் சிரஞ்சீவி. காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தாலும் தீவிர அரசியலில் இறங்காமல் சற்று ஒதுங்கியே இருக்கிறார். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநில அரசியலும், இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு மிகவும் பரபரப்பாக உள்ளன. ...

'பைரவா' - 4 நாளில் 100 கோடி வசூலா ?

Posted:

ஹிந்தித் திரையுலகத்தை ஆட்டிப் படைத்து வரும் '100 கோடி கிளப்' பேராசை தமிழ்த் திரையுலகத்திலும் தற்போது அதிகமாகியிருக்கிறது. முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் என்றாலே எத்தனை நாளைக்குள் 100 கோடி ரூபாய் வசூல் என்று சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். 'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு ...

பிப்-10ல் பிருத்விராஜின் 'எஸ்றா' ரிலீஸ்..!

Posted:

பிருத்விராஜ் நடிப்பில் புதியவரான கே.ஜெய் என்பவர் இயக்கியுள்ள படம் தான் 'எஸ்றா'. இது நூறு சதவீதம் திகிலுக்கு கியாரண்டி தரும் அக்மார்க் ஹாரர் படம்.. முதல்முறையாக பிருத்விராஜுடன் இணைந்து நடிக்கிறார் என்பதுடன் மலையாளத்திலும் முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் தான் காலடி எடுத்து வைத்துள்ளார் பிரியா ஆனந்த். அதுமட்டுமல்ல தமிழ், ...

அமெரிக்க கொடியை கோவணமாக்கி எதிர்ப்பு தெரிவித்த மலையாள நடிகர்..!

Posted:

மலையாள திரையுலகில் தியேட்டர் ஸ்ட்ரைக் போல கடந்த ஒரு மாதமாக இன்னொரு விஷயமும் அவ்வப்போது விட்டுவிட்டு புகைந்துகொண்டு இருக்கிறது.. கடந்த மாதம் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாத சிலரை, அரங்கத்தில் நுழைந்து போலீசார் கைது செய்தனர். இதற்கு விழாக்கமிட்டியின் நிர்வாக ...

ஜல்லிக்கட்டு நடக்க தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து வருகிறேன் - விஷால்

Posted:

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஜல்லிகட்டிற்கு எதிராகவும், பீட்டாவிற்கு ஆதரவாகவும் விஷால் பேசியதாக சில தினங்களாக அவருக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் இதுப்பற்றி விஷால் மனம் திறந்துள்ளார். விஷால் பேசியதாவது... கிட்டத்தட்ட ஜனவரி 5-ம் தேதியில் இருந்து சமூக வலைதளங்களில் விஷால் ...

எங்களுக்கு முகவரி தந்தவர் எம்ஜிஆர்., - நாசர் புகழாரம்

Posted:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,-ன் 100வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ...

பண்பாட்டை அழிக்கும் எந்த முயற்சிக்கும் குரல் கொடுக்க வேண்டும் - சூர்யா

Posted:

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள் களமிறங்கிய பிறகு தமிழம் முழுக்க போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமீர், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட திரையுலகினரும் களம் இறங்க துவங்கிவிட்டனர். ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை ...

நூர்-ஐ முடித்த சோனாக்ஷி சின்ஹா

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். கடந்த நவம்பரில் இவரது நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‛போர்ஸ் -2'. தற்போது இயக்குநர் சுனில் சிப்பி இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் ‛நூர்'. இப்படத்தை பூஷன் குமார், விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் ஷிகா சர்மா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ‛நூர்' படத்தின் ...

விஷால் விலகல்... தொடரும் டுவிட்டர் விலகல்கள்

Posted:

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நட்சத்திரங்களுக்கும், அவர்களின் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை நேரடியாக அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது படங்களைப் பற்றி கருத்து சொல்ல ஆரம்பித்தனர். தங்கள் அபிமான நட்சத்திரங்கள் தங்களது பதிவுகளை லைக் செய்வார்கள், பதில் அளிப்பார்கள் என்ற ஆர்வத்தில் ...

பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்த ‛ஓகே ஜானு'

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‛ஓ காதல் கண்மணி' படம், ஹிந்தியில் ஓகே ஜானு என்ற பெயரில் ரீ-மேக்காகி கடந்தவாரம் வெளியானது. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் நடித்திருந்த இப்படத்தை ஷாத் அலி இயக்கியிருந்தார். படம் வெளியான முதல் நாளில் ரூ 4.08 கோடியும், இரண்டவது நாளில் ரூ 4.90 கோடியும், மூன்றாவது நாளில் ரூ 4.82 கோடியும், ...

கங்கனாவுடன் மோதல் இல்லை - சாகித் கபூர்

Posted:

இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் சாகித் கபூர், கங்கனா மற்றும் சைப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‛ரங்கூன்'. படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறது படக்குழு. சில தினங்களுக்கு முன், நடிகை கங்கனாவுடன் மோதல் என்றும், கங்கனா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சாகித் கலந்து கொள்ள போவது இல்லை என்றும் தகவல் ...

கேஸ்ட் ரோலிலும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சல்மான்

Posted:

வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். தற்போது வருண், இயக்குநரும், தந்தையுமான டேவிட் தவான் இயக்கத்தில் ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகமான ‛ஜூட்வா-2 படத்தில் நடிக்க இருக்கிறார். வருண் தவான், டாப்சி மற்றும் ஜாக்குலின் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். சஜித் தயாரிக்கிறார். ‛ஜூட்வா-2 படத்தில் ...

விவசாயிகள் தற்கொலை பற்றிய படம் இயக்குவேன்: வெற்றிமாறன்

Posted:

விசாரணை படத்திற்கு பிறகு தற்போது வெற்றி மாறன் வடசென்னை படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் விவசாயிகளின் தற்கொலை பற்றி படம் இயக்குகிறார். விவசாயிகள் தற்கொலை அதிமாகி வரும் இந்த நேரத்தில் வட சென்னையை தள்ளி வைத்து விட்டு விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுக்கலாமா என்றும் வெற்றிமாறன் திட்டமிட்டு வருவதாக ...

எம்.ஜி.ஆர்., வீடியோ ஆல்பம் வெளியிடுகிறார் பேரரசு

Posted:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை பாடலாக எழுதியுள்ளார் இயக்குனர் பேரரசு. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, சினிமா, அரசியல், மக்கள் சேவை, சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பாடலை எழுதியுள்ளார். அதற்குரிய காட்சிகளையும் இணைத்து வீடியோ ஆல்பமாக அதனை வெளியிடுகிறார். இசை அமைப்பாளர் சங்கர் (கணேஷ்) பேரன் ...

புரியாத புதிர் தள்ளி வைக்கப்பட்டது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

Posted:

விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த புரியாத புதிர் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்டது. பலவேறு பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகவில்லை. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.கே.சதீஷ்குமார் படத்தை வாங்கி டிசம்பர் 23ந் தேதி வெளிவருவதாக அறிவித்தார், ஆனால் வரவில்லை. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™