ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஹாரிபார்ட்டர் புத்தகம் தேவை
- அறிமுகம் தேன்மொழி
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு
- தமிழக அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை கூடுகிறது
- பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றித் தராததால் ரிசர்வ் வங்கி முற்றுகை
- வரலாற்றின் வேர்கள்
- கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...!
- 'நண்பேண்டா' சந்தானத்துக்காக தீயாய் வேலை பார்த்த சிம்பு
- மிஸ்டர் கழுகு: “சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால்... அம்மா இருந்திருக்க மாட்டார்!”
- சிதறடிக்கும் ஜோக்ஸ்
- பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம்
- வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...
- ‛அனைவருக்கும் வீடு' திட்டம்; 44 லட்சம் பேர் பயன் அடைய வாய்ப்பு
- பீகார் முதல்வர் நிதிஷ், அமைச்சர்களின் சொத்து விவரம் வெளியீடு
| Posted: 03 Jan 2017 11:29 AM PST ஹாரிபார்ட்டர் புத்தகம் தமிழில் தேவை.ஈகரையில் கொடுத்துள்ள பழைய லிங்க் ஒர்க் செய்யவில்லை. புதிய லிங்க் இருந்தால் தரவும் pls |
| Posted: 03 Jan 2017 09:43 AM PST பெயர்:தேன்மொழி சொந்த ஊர்:சேலம் ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்:ஒரத்தநாடு கார்த்திக் வலைப்பக்கம் மூலம் பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது தொழில்: மேலும் என்னைப் பற்றி:bsc maths படிக்கின்றேன் |
| பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு Posted: 03 Jan 2017 08:55 AM PST பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: - அரிசிக்கான குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டைகளுக்கும் முகாம்களில் தங்கியுள்ள தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொங்கல் ... |
| தமிழக அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை கூடுகிறது Posted: 03 Jan 2017 08:49 AM PST தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 4-ம் தேதி) கூடுகிறது. தலைமைச் செயலகத்தில் காலை 9 மணி அளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் வறட்சி நிலை, விவசாயிகள் மரணம், ஜல்லிக்கட்டு விவகாரம், பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, விவசாயிகளைப் பாதுகாக்கும் கடமையை தமிழக அரசு செவ்வனே நிறைவேற்றும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். மேலும், ... |
| பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றித் தராததால் ரிசர்வ் வங்கி முற்றுகை Posted: 03 Jan 2017 08:48 AM PST - ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர மறுத்ததால் பொதுமக்கள் திடீரென முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறி விப்பை கடந்த நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டு களை வங்கியில் சென்று மாற்றிவந்தனர். இவ்வாறு மாற்றுவதற்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி இறுதி நாளாக அறி விக்கப்பட்டது. அதன் பிறகு ரிசர்வ் வங்கியில்தான் மாற்ற முடியும் என அறிவிக்கப் பட்டது. ... |
| Posted: 03 Jan 2017 07:59 AM PST அன்புடையீர் , எனக்கு சமீபத்தில் நடைபெற்ற இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருக்க நேர்ந்த கட்டாய ஓய்வுக்குப் பிறகு உடலுக்கும் மனதிற்கும் வல்லமைப் பெறவேண்டி இடை இடையே எழுதிய இந்தத் தொடர் வல்லமை மின் இதழில் தொடர்ந்து ஒவ்வொரு புதன் அன்றும் வெளிவரும் . நண்பர்களுடன் பகிர ஈகரையில் பதிவிடுகிறேன் படித்துத் தங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன் . அன்புடன் அண்ணாமலை சுகுமாரன் வரலாற்றின் வேர்கள் -1 -அண்ணாமலை சுகுமாரன் கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் ... |
| கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! Posted: 03 Jan 2017 06:33 AM PST 'கோபல்ஸ்' (Goebbels), வரலாற்றின் பக்கங்களை இருள் சூழவைத்த ஹிட்லரின் பரப்புரையாளன்; எந்தப் பொய்யையும் நயமாகச் சொல்லி, மக்களை நம்பவைக்கும் வித்தை அறிந்தவன்; ஒரு கருத்தியலை, மெல்லமெல்ல மக்களிடம் திணித்து... அதை, பொதுக் கருத்தாக்கி... அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைப்பவன்; பெரும் தந்திரக்காரன். அவன், பிரசாரத்துக்காக 19 யுக்திகளை வகுத்துச் சென்றான். அதை, அப்படியே சுவீகரித்துக் கொண்டு... அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, மிகத் தந்திரமாக காய்களைக் கட்சிக்கு உள்ளேயும், ... |
| 'நண்பேண்டா' சந்தானத்துக்காக தீயாய் வேலை பார்த்த சிம்பு Posted: 03 Jan 2017 04:47 AM PST சந்தானத்தின் 'சக்கப்போடு போடு ராஜா' படத்தின் பாடல்களை நடிகர் சிம்பு முடித்து விட்டதாக அறிவித்திருக்கிறார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம். நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட சிம்பு தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தானம் நடிப்பில் உருவாகவிருக்கும் 'சக்கப்போடு போடு ராஜா' படத்தின் இசையமைப்பாளர் சிம்பு தான். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் முடித்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து சிம்பு அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். ... |
| மிஸ்டர் கழுகு: “சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால்... அம்மா இருந்திருக்க மாட்டார்!” Posted: 03 Jan 2017 04:22 AM PST அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இருந்து கழுகார் அனுப்பிய தலைப்பு இதுதான். அடுத்த சில மணி நேரத்தில் அலுவலகத்தில் லேண்ட் ஆனார் கழுகார். ''இதுவரை அம்மா தி.மு.க-வாக இருந்தது. இனி, அது சின்னம்மா தி.மு.க. 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவி அம்மா வடிவில் கண்டோம். புரட்சித் தலைவி அம்மாவை மதிப்புக்குரிய சின்னம்மா வடிவில் கண்டு, கழகப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவோம்' என்று சூளுரைத்துள்ளார்கள். 'அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில்கொண்டு சின்னம்மா ... |
| Posted: 03 Jan 2017 12:12 AM PST ■■ சிதறடிக்கும் ஜோக்ஸ் !!! ■■ ******************************************************** ■ நர்ஸ் : பேஷண்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தாச்சு ஆனாஇ மயக்க மருந்து ஸ்டாக் இல்லை டாக்டர் என்ன செய்யறது? டாக்டர் : ஆபத்துக்குப் பாவமில்லை.. என் கால் சாக்ஸை அவர் மூக்குக்கிட்டே லேசா காட்டிடு! நர்ஸ் : ???????????? ■ டாக்டர் : உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது! ஒருவர் : அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்? டாக்டர் : ???????????? ■ ... |
| பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம் Posted: 02 Jan 2017 11:56 PM PST பல்லு முளைக்கிறதற்கு முன்பே தத்துவம் ரமணியன் நன்றி முகநூல் |
| வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Posted: 02 Jan 2017 11:11 PM PST பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாறில், புளியமரத்தில் மேஜர் பானர்மேன் துாக்கிலிட்டான். அப்போது அந்த மாவீரனின் வயது 39. அதன் பின் அந்த மாவீரனின் உடல் என்னவாயிற்று? என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கட்டபொம்மன் கடைசி காலத்தில் வைத்திருந்த ஆயுதங்கள் பற்றி தற்போது சில விபரங்கள் தெரியவந்துள்ளன.ஆங்கிலேயருக்கு வரி செலுத்தாததால் ஆங்கிலேய பிரதிநிதி மேஜர் பானர்மேன் 1799ல் பாஞ்சாலங்குறிச்சியை தாக்கினான். முதல் நாள் போரில் கட்டபொம்மன் வெற்றி பெற்றான். ... |
| ‛அனைவருக்கும் வீடு' திட்டம்; 44 லட்சம் பேர் பயன் அடைய வாய்ப்பு Posted: 02 Jan 2017 04:57 PM PST புதுடில்லி: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 44 பேர் லட்சம் பேர் பயன் அடைய வாய்ப்பு உள்ளதாக கிராமப்புற வளர்ச்சி செயலாளர் அமர்ஜீத் சின்ஹா தெரிவித்தார். இலவச கேஸ் மற்றும் குடிநீர் இணைப்பு: இதுகுறித்து டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனைடைய இருக்கும் அனைவருக்கும் இலவச வீடு மட்டுமின்றி, இலவச கேஸ் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. ... |
| பீகார் முதல்வர் நிதிஷ், அமைச்சர்களின் சொத்து விவரம் வெளியீடு Posted: 02 Jan 2017 04:54 PM PST பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் 28 அமைச்சர்கள் தங்களது சொத்து விவரத்தை வெளியிட்டனர். சொத்து விவரம்: பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். நிதிஷ் குமார் மற்றும் அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை நேற்று முன்தினம்(டிச.,31) வெளியிட்டனர். 4 மடங்கு அதிகம்: நிதிஷ் குமாரிடம் ரூ.16.49 லட்சம் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், டில்லியில் ரூ.40 லட்சம் மதிப்புடைய 1,000 ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |