Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அ.தி.மு.க.,வில் குழப்பத்தால் முக்கிய பேச்சாளர்கள் அதிருப்தி! மாற்று கட்சிகளுக்கு 'வண்டி கட்டி'க் கிளம்புகின்றனர்

Posted: 03 Jan 2017 08:47 AM PST

ஜெயலலிதாவின் திடீர் மறைவு, பொதுச்செயலராக சசிகலா தேர்வு போன்ற காரணங்களால், அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், முக்கிய பேச்சாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில், நடிகர் ஆனந்தராஜை தொடர்ந்து, நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,விலிருந்து நேற்று வெளியேறினார். இவர்களைப் போல மேலும் பல அதிருப்தி யாளர்களும், மாற்று கட்சிகளுக்கு வண்டி கட்டி கிளம்ப, ஆயத்தமாகி வருகின்றனர்.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலாவும், சென்னை, போயஸ் தோட்டம் இல்லத்தில் வசித்து வந்தார். அவரைத் தொடர்ந்து, சசிகலாவின் அண்ணி இளவரசியும், போயஸ் தோட்டத்தில் தங்கினார். ...

பிப்., 1ல் பொது பட்ஜெட்: அமைச்சரவை முடிவு

Posted: 03 Jan 2017 08:51 AM PST

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட், வரும், பிப்., 1ல் தாக்கல் செய்ய, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர், ஜன., 31ல் துவங்கி, பிப்., 9 வரை நடத்தப்பட உள்ளது.

வழக்கமாக, பொது பட்ஜெட், பிப்., 28ல் தாக்கல் செய்யப்படும். அதற்கு முந்தைய தினம், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டுடன் இணைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டு, செப்டம்பரில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாகவே நடத்த முடிவு
மேலும், பட்ஜெட் அறிவிப்புகளை, நிதியாண்டின் ...

முலாயம் - அகிலேஷ் சமரச பேச்சு

Posted: 03 Jan 2017 08:53 AM PST

புதுடில்லி, : சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சி இரண்டாக உடைவதை தடுக்க, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர், முலாயம் சிங் மற்றும் அவரது மகனும், உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவ் சமரச பேச்சை துவக்கியுள்ளனர்.

முதல்வர் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான கட்சி வேட்பாளர்கள் பட்டியலை, கட்சித் தலைவர் முலாயம் சிங், சமீபத்தில் வெளியிட்டார். அதில், அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, கட்சித் தலைமை பொறுப்பை, அகிலேஷ் ...

ஆக்கபூர்வமான ஆராய்ச்சிக்கு உதவ மத்திய அரசு தயார்: பிரதமர் மோடி

Posted: 03 Jan 2017 08:55 AM PST

திருப்பதி,:''நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பத்தை அறிந்து, அதை பயன்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும்; ஆக்கபூர்வமான ஆராய்ச்சிக்கு அனைத்து வகையிலும் உதவ, மத்திய அரசு காத்திருக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில், நேற்று, தேசிய அறிவியல் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்; இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டின் வளர்ச்சியில், அறிவியல், தொழில்நுட்பம் பெரும் ...

சொத்து குவிப்பு வழக்கில் 10ம் தேதிக்குள் தீர்ப்பு?

Posted: 03 Jan 2017 09:05 AM PST

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், வரும், 10ம் தேதிக்குள், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என, கூறப்படுகிறது.

வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை, தமிழகத்தில் நடந்தால் நேர்மையாக இருக்காது எனக் கூறி, தி.மு.க., தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை ஏற்று, வழக்கு விசாரணையை கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றி, உச்ச ...

சசிகலாவுக்கு ஆதரவு பேனர்: தொண்டர்கள் வேதனை

Posted: 03 Jan 2017 09:13 AM PST

தஞ்சாவூர் : 'மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவிற்கு பயந்து தான், விருப்பம் இல்லாமல், சசிகலாவுக்கு ஆதரவாக பிளக்ஸ் வைத்து வருகிறோம்' என, அடிமட்ட தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சசிகலா பொதுச் செயலராக பதவி ஏற்றதிலிருந்து, வாழ்த்துகள் தெரிவித்து, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பெயரில் தான், அதிகளவில் பிளக்ஸ் பேனர்கள் முளைத்துள்ளன.
இருப்பினும், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களில் உள்ள, சசிகலாவின் படத்தின் மீது, அதிருப்தியாளர்கள் சாணம் வீசியும், ...

வளைக்கப்பட்ட 'சேகோ' ஆலைகள்: சேலத்தில் சி.பி.ஐ., தீவிர விசாரணை

Posted: 03 Jan 2017 09:22 AM PST

கறுப்பு பணத்தை மாற்ற, தனியார் பேருந்துகளை வாங்கி குவித்த வி.ஐ.பி.,க்கள், 'சேகோ' ஆலைகளையும் வளைத்து போட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள், சேலம், நாமக்கல் மாவட்டங்களில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அறிவித்த நிலையில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருந்த, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க., - வி.ஐ.பி.,க்கள் இருவர், அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, தனியார் வழித்தடங்களை, பேருந்துகளுடன், 1,000 கோடி ரூபாய்க்கு ...

ஜெ., சொத்து யாருக்கு?

Posted: 03 Jan 2017 09:24 AM PST

புதைத்ததைத் தோண்டுவதல்ல; மக்களுக்குப் பயனளிக்கும் எந்த உண்மையும், சமூகத்துக்குத் தெரியாமல் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம். ஜெ., இயற்கை எய்திவிட்ட நிலையில், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பும் விரைவில் வரவுள்ளது. இந்நிலையில், ஜெ., சொத்துக்கள் யாருக்குப் போகப் போகின்றன என்ற சாதாரண தொண்டனின் மனநிலையைப் பிரதிபலிப்பதே, இந்த கட்டுரை.

'அம்மா என்றழைக்காத உயிரில்லையே...அம்மாவை வணங்காது உயர்வில்லையே!'
இளைஞர் பாசறையில் சேர்ந்த இளைஞன் துவங்கி, ஜெ.,வுக்கும் மூத்த 75 வயது பழுத்த அரசியல்வாதி வரை, ...

ஜல்லிக்கட்டு விவகாரம்: தி.மு.க., மீது வீண் பழி; ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted: 03 Jan 2017 09:31 AM PST

மதுரை, :"ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தி.மு.க., மீது மத்திய அரசு வீண் பழி சுமத்துகிறது," என பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில், தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, தி.மு.க., தொடர்ந்து போராடுகிறது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் ஏற்கெனவே அறிவித்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் வாக்குறுதி ...

'ஆன்லைனில்' பணம் செலுத்தினால் 'காஸ்' சிலிண்டர் விலை குறையும்

Posted: 03 Jan 2017 10:05 AM PST

புதுடில்லி: 'சமையல், 'காஸ்' சிலிண்டருக்கான கட்டணத்தை, 'ஆன்லைன்' மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கு, ஐந்து ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தள்ளுபடி:
மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், 'பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்கள், மின்னணு முறையில் அதற்கான பணம் செலுத்தினால், 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
சிறப்பு சலுகை:
இந்நிலையில், ...

போயஸ் கார்டன் வீட்டுக்கு மீண்டும் போலீஸ் குவிப்பு!

Posted: 03 Jan 2017 11:50 AM PST

சசிகலா தங்கியுள்ள, சென்னை, போயஸ் கார்டன் வீட்டுக்கு, மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, போயஸ் கார்டன், வேதா இல்லத்தில் வசித்து வந்தார். அங்கு, தற்போது தோழி சசிகலா தங்கி உள்ளார். பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டதால், ஜெ.,வுக்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மாநில காவல் துறை, முதல்வர் பாதுகாப்பு பிரிவு உட்பட, தினமும், 500 போலீசார்,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
டிச., 5ல், ஜெ., மரண அறிவிப்பு வெளியானதும், மத்திய அரசு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பை திரும்ப பெற்றது. ஆனால், ...

தாவூத்தின் 15 ஆயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்தது யு.ஏ.இ., அரசு

Posted: 03 Jan 2017 12:54 PM PST

புதுடில்லி : நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பறிமுதல் செய்துள்ளது.
நிழலுலக தாதா:
மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான். கராச்சி நகரில் ரகசியமாக வசித்து வருவதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டை, பாக்., அரசு தொடர்ந்து ...

பிரதமரின் பாதுகாப்பில் அலட்சியம்; 23 போலீசார் ‛சஸ்பெண்ட்'

Posted: 03 Jan 2017 02:44 PM PST

பாட்னா : பிரதமர் மோடியின் பாட்னா வருகைக்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்புப் பணியில் அலட்சியம் காட்டியதாக 23 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அலட்சியம்:
பீகார் தலைநகர் பாட்னாவுக்கு பிரதமர் மோடி நாளை(ஜன.,5) வருகை தருகிறார். அங்குள்ள காந்தி மைதானத்தில், சீக்கிய மதத் தலைவர் குரு கோவிந்த் சிங்கின் 350-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக பாட்னா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™