ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை?
- டிவிட்டரில் இது புதுசு: குடியரசு தின சிறப்பு எமோஜி!
- 18 வயது நிரம்பியவர்களுக்கு மோடி வேண்டுகோள் ‘வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்’
- குடியரசு தினம்: முதல் முறையாக தமிழக முதல்வர் கொடியேற்ற உள்ளார்
- இந்திய மூவர்ணத்தில் ஜொலிக்க போகும் ’புர்ஜ் கலிஃபா’ !
- ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்!
- கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!
- என் அறிமுகம்
- குரலை உயர்த்தாத சண்டைகள்!
- சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்திற்கு ஜனாதிபதி விருது
- பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி
- ரூ.5 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் மட்டுமே பான் கார்டை கட்டாயமாக்க வேண்டும்
- மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
- பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் –
- நான் ஹேமா !
- தொடர் விளைவுகள் - (Chain reactions..)
- பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- நதியில் நீந்தும் நிலவு
- வரலாற்றுப் பார்வை
- குழந்தைகளுக்கான குறும்படம்: பறக்க ஆசைப்படும் பெங்குயின்!
- பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
- ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
| அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Posted: 25 Jan 2017 03:52 PM PST தாய்மொழி தவிர்த்த பிறமொழிகளைக் கற்பதனால், மூளை தெளிவான அறிவுத்திறத்தைப் பெறுகின்றது. ஏனெனில் அவ்விதம் கற்கும் மூளையின் தகநெகிழ்விணக்கம் அதிகரிக்கின்றது. அத்துடன் தகவலைத் தனக்குரிய வகையில் சேமித்து வைத்துக் கொள்ளும் அதன் திறனும் அதிகரிக்கின்றது என்பது, ஒரு புதிய விஞ்ஞான ஆய்வில் தெரிய வந்திருக்கின்றது. எத்தனை அயல் மொழிகளை நாம் கற்கின்றோமோ அத்தனைத் திறனுடன் நமது மூளை பதில் கொடுக்கின்றது. நாம் பயிலும் செயலில் ஈடுபட்டிருக்கும் போது சேரும் டேட்டாக்களை அத்தனைத் திறனுடன் கையாளுகின்றது ... |
| டிவிட்டரில் இது புதுசு: குடியரசு தின சிறப்பு எமோஜி! Posted: 25 Jan 2017 03:38 PM PST - புதுதில்லி: நாளை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு எமோஜியை பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பொதுக் கொள்கை மற்றும் அரசு பிரிவுத் தலைவர் மஹிமா கவுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நாளை குடியரசு தினத்தை கொண்டாட உள்ள இந்தியர்களுக்கு, அது தொடர்பான உரையாடல்களை டிவிட்டரில் மேற்கொள்ளும் போது பயன்படுத்த புதிய எமோஜியை வழங்குவதில் மகிழ்கிறோம். இந்த எமோஜியானது இந்திய தேசிய கொடியை நினைவூட்டும் ... |
| 18 வயது நிரம்பியவர்களுக்கு மோடி வேண்டுகோள் ‘வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்’ Posted: 25 Jan 2017 03:30 PM PST புதுடெல்லி மக்களிடையே வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "தேசிய வாக்காளர் தினத்திற்காக அனைவருக்கும் வாழ்த்துகள். நமது ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேர்தல் கமிஷனுக்கு வாழ்த்துகளையும், வணக்கங்களையும் ... |
| குடியரசு தினம்: முதல் முறையாக தமிழக முதல்வர் கொடியேற்ற உள்ளார் Posted: 25 Jan 2017 03:30 PM PST சென்னை: குடியரசு தினத்தின்போது, ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குடியரசு தினத்தின் போது, முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகவும் உள்ள வித்யாசாகர் ராவ், அந்த மாநிலத்தில் கொடியேற்றவுள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அரசு சார்பில் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான சிறப்பு மேடைகள் மற்றும் ... |
| இந்திய மூவர்ணத்தில் ஜொலிக்க போகும் ’புர்ஜ் கலிஃபா’ ! Posted: 25 Jan 2017 03:24 PM PST உலகின் மிகப்பெரியக் கோபுரமான 'புர்ஜ் கலிஃபா', இந்திய குடியரசு தினத்திற்கு மூவர்ணத்தில் ஜொலிக்க போகிறது. ஆம் ஜனவரி 26ம் தேதி அன்று இந்திய தேசிய கொடி வண்ணங்களில் துபாயில் உள்ள புர்ஞ் கலிஃபா கட்டிடத்தை ஒளியூட்ட உள்ளனர். குடியரசு தின சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
| ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்! Posted: 25 Jan 2017 10:54 AM PST சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் எத்தனையோ கதவுகளைத் திறந்திருக்கிறது. அவற்றில் ஒன்று, இளைஞர்கள் மத்தியில் கோலா பானங்களின் மேல் ஏற்பட்டிருக்கும் அசூயை. அவற்றின் மீதான மோகம் தவறு என்கிற புரிதல் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தாகத்தைத் தணிக்கவும் உடலைக் குளுமைப்படுத்தவும் நம்மூர் பாரம்பர்ய ஆரோக்கிய பானங்கள் பல இருக்கின்றன. அவற்றை அன்றாடம் பருகினால் ஏற்படும் நன்மைகள் பல. பாரம்பர்ய பானங்களில் முக்கிய இடம் வகிப்பது பானகரம். கோயில் திருவிழாக்களில் கோடை காலத்தில் நீர்மோர், பானகரம் வழங்கும் ... |
| கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை! Posted: 25 Jan 2017 10:53 AM PST கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு. 1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்? 2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்? 3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது? 4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா? போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு. பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம். சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக ... |
| Posted: 25 Jan 2017 10:22 AM PST பெயர்: கார்த்திகா சொந்த ஊர்: செய்யாறு ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: Google பொழுதுபோக்கு: புத்தகம் வாசித்தல் தொழில்: இல்லத்தரசி மேலும் என்னைப் பற்றி: இயற்பியல் ஆசிரியை, தற்போது கோலாலம்பூரில் கணவருடன் வசித்து வருகிறேன்.... |
| Posted: 25 Jan 2017 10:17 AM PST ஒரு சில மனிதர்களுக்கு பிறக்கும் போதே, தொண்டையில் அலறும் ஒலி பெருக்கியும் இணைந்தே வந்து விடும் போல... எல்லாவற்றிற்கும், எட்டுக் கட்டையில் கத்துவர். இவர்கள், சாதாரணமாக பேசுவது கூட, யாரோ சண்டையிடுவதைப் போல் அடுத்தவர்களுக்கு தோன்றும். நான் விரும்புவதெல்லாம், சண்டை போடும் போது கூட, குரலை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இதில், ஒரு உண்மை என்னவென்றால், சம்பந்தமே இல்லாத யாரோ சண்டை போட்டால் கூட, நம்மில் பலருக்கு, பதற்றம் தொற்றிக் கொள்ளும்.நெருங்கிய இருவர் சண்டை போட்டாலோ, கேட்கவே வேண்டாம். ... |
| சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்திற்கு ஜனாதிபதி விருது Posted: 25 Jan 2017 10:16 AM PST புதுடில்லி : தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கான ஜனாதிபதி விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. இதில் 2016 ம் ஆண்டிற்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். விருது விபரம் : * தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கான விருதை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பெற்றார்.* தேர்தல் செலவினங்களை சிறப்பாக கண்காணித்ததற்காக ... |
| பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Posted: 25 Jan 2017 10:13 AM PST மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். கடற்கரையில் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டக் களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் அமைதி காத்தனர். மெரினாவுக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு அனைத்து வழிகளையும் போலீஸார் அடைத்தனர். இந்தச் சூழலை அறிந்த மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும் பெண்களும் ... |
| ரூ.5 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் மட்டுமே பான் கார்டை கட்டாயமாக்க வேண்டும் Posted: 25 Jan 2017 10:09 AM PST ' மத்திய அரசின் புதிய பட்ஜெட்டில், ரூ.5 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்குபவர்களுக்கு மட்டுமே நிரந்தர வருமான வரிக் கணக்கு எண் (பான்) சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று நகை வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அகில இந்திய நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைவர் நிதின் கண்டேல்வால் கூறியதாவது: ரூ.2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்குபவர்கள், தங்களது நிரந்தர வருமான வரிக் கணக்கு எண்ணை (பான்) சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையால் நகை வணிகத் துறை பின்னடைவைச் சந்தித்து ... |
| மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு Posted: 25 Jan 2017 10:07 AM PST புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள யானையை காட்டில் விட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். பீட்டா அமைப்பினர் கூறிய புகாரை அடுத்து இந்த உத்தரவை அவர் பிறப்பித்து உள்ளார். மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு மணக்குள விநாயகர் கோவில் யானை. புதுச்சேரி: புதுவை கவர்னர் கிரண்பேடி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து கூறினார். இது, ... |
| பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Posted: 25 Jan 2017 10:00 AM PST பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் என்று கூறி தேசிய பெண் குழந்தை தினத்துக்கு (ஜன.24) பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இருவேறு பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: பெண் குழந்தைகளின் அசாதாரண சாதனைகளை கொண்டாடுவதற்கு தேசிய பெண் குழந்தை தினம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகள் சிறந்து விளங்குவது நமக்கு பெருமை. பெண் குழந்தைகள் மீதான புறக்கணிப்பை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சமூகத்தில் ... |
| Posted: 25 Jan 2017 09:58 AM PST பெயர்: hema சொந்த ஊர்: cuddalore ஆண்/பெண்: female ஈகரையை அறிந்த விதம்: through browsing பொழுதுபோக்கு: books and music தொழில்: physiotherapist மேலும் என்னைப் பற்றி: |
| தொடர் விளைவுகள் - (Chain reactions..) Posted: 25 Jan 2017 07:30 AM PST "அவர் போய் SRMC யில் அட்மிட் ஆயிட்டாராமே?" - "SRM என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த கல்வித்தந்தை கேஸ் என்ன ஆச்சு?" - "அவருக்கென்ன ராஜா போல இருக்கார்!" - "ராஜா என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த 2G கேஸ் என்ன ஆச்சு?" - "கெணத்துல போட்ட கல்தான்." - "கல்என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த granite கேஸ் என்ன ஆச்சு?" - "அங்கே இங்கே நகராம மலையா நிக்குது." - "மலையா என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த மல்லையா கேஸ் என்ன ஆச்சு?" - "அவரே மனசு மாறனும் இந்தியா திரும்பனும்..அப்பால ... |
| பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை Posted: 25 Jan 2017 07:14 AM PST பெயர் வெளியிட விரும்பாத நபர்கள் மூலம் முக்கிய அரசியல் கட்சிகள், ரூ.7,833 கோடி நன்கொடை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.3,323 கோடி நன்கொடை கிடைத்திருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக பாஜகவுக்கு ரூ.2,125 கோடி கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது. அதேபோன்று மாநில அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை சமாஜவாதி கட்சிக்கு அறியப்படாத நபர்கள் வாயிலாக ரூ.766 கோடி நன்கொடையாகக் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட ... |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 25 Jan 2017 07:12 AM PST - - - |
| Posted: 25 Jan 2017 07:08 AM PST ![]() |
| Posted: 25 Jan 2017 07:08 AM PST வரலாற்றுப் பார்வை -1 திருலோக்கியும் கங்கைகொண்ட சோழபுரமும் -அண்ணாமலை சுகுமாரன் அண்மையில் முனைவர் திருமதி பத்மாவதி அவர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் நீண்ட வருடங்களுக்குப்பின் நடையேற இருக்கும் குடமுழுக்குப்பற்றி ஒரு கட்டுரை , தமிழ் ஹிந்துவில் வெளிவந்த செய்தியுடன்முக நூல் பக்கத்தில் எழுதியிருந்தார் . அதில் கங்கையில் இருந்து புனித நீர் குடங்களில் திருலோக்கி எனும் ஊருக்கு வந்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார் . கங்கையில் ... |
| குழந்தைகளுக்கான குறும்படம்: பறக்க ஆசைப்படும் பெங்குயின்! Posted: 25 Jan 2017 07:03 AM PST |
| பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு Posted: 25 Jan 2017 04:49 AM PST பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற ... |
| ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Posted: 24 Jan 2017 05:23 PM PST - தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுக்கு, அரிமா சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது புதன்கிழமை அளிக்கப்படுகிறது. அரிமா சங்கங்கள் இண்டர்நேஷனல் (மாவட்டம் 324-ஏ1) சார்பில் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தையொட்டி, அரிமா சங்கத்தின் சென்னை மண்டலம் 6-க்கான கூட்டம் எழும்பூர் ஹோட்டல் அம்பாசிடர் பல்லவாவில் புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு நடை பெறுகிறது. இதில், கல்வெட்டியியல் ஆராய்ச்சிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது ஐராவதம் மகாதேவனுக்கு வழங்கப்படுகிறது. விழாவுக்கு அரிமா சங்கத்தின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
.jpg)